“எது நடுநிலை…?” – துக்ளக் ஆசிரியர் சோ விளக்கம்…!!!


சில பாஜக அபிமானிகள் என்னை தொடர்ந்து குறை சொல்கிறார்கள்..
நேற்று கூட ஒரு நண்பர் என்னை சாடி இருந்தார்…
நடுநிலையாளன் என்று சொல்லிக் கொண்டு நான் பாஜகவை
குறை சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று…

நான் பாஜகவை மட்டும் குறை கூறி எழுதினால், அவர் கூறுவது
ஓரளவு பொருந்தக்கூடும். ஆனால், பாஜகவுக்கு நேரெதிரான
காங்கிரசையும், மற்ற கட்சிகளையும் கூட நான் விமரிசனம்
செய்கிறேன் என்கிற நிலையில், அவரது குற்றச்சாட்டு எப்படி
பொருந்தும்….? ஆட்சியில் இருப்பவர்களைப்பற்றி, அதிகம் விமரிசனம்
எழுவதும் இயற்கை தானே…?

பாஜக அன்பர்கள், தங்கள் தலைவர்களை விமரிசனங்களுக்கு
அப்பாற்பட்ட தெய்வப்பிறவிகளாக பாவிக்கிறார்கள்… எனவே,
பாஜக அரசையோ, பாஜக தலைவர்களையோ குறைகூறுபவர்கள்
அவர்களால், தேசத்துரோகிகளாக கருதப்படுகிறார்கள்…!

நான் விமரிசனம் செய்யும் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும்
இவ்வாறு குறை சொல்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்த விமரிசனம் தளத்தை இயக்க –
எனக்குள்ள தகுதிகளாக நான் கருதுவது –

பொதுவாக நான் பொய் சொல்வதில்லை…
இங்கே பொய்யான செய்திகள் எதையும் பதிவதில்லை…
இந்த தளத்தை துவங்கிய காலத்திலிருந்து இன்று வரை –
இந்த தளத்தில் வந்த செய்தி எதையும், யாரும் பொய் என்று
சொன்னதில்லை…

( செய்தி வேறு; கருத்து சொல்வது வேறு…
நான் சொல்லும் கருத்துக்கள் சிலருக்கு ஏற்புடையதாக
இல்லாமல் இருக்கலாம்.
அதற்காக, நான் சொல்வது பொய் ஆகி விடாது..)

நான் எந்த கட்சியையும் சாராதவன் –
சுயநலன் கருதி இங்கே நான் எதையும் எழுதுவதில்லை…

அவ்வளவு தான்…!
இது போதாதா…ஒரு வலைத்தளத்தை நடத்த…?

எந்த சுயநலனும் இல்லாமல் –
என் மனசாட்சி சொல்வதைத்தான் நான் எழுதுகிறேன்….
தவறை, தவறு என்று சொன்னால் -அது நடுநிலை இல்லையா…?

“எது நடு நிலை” என்பதை ஆசிரியர் சோ அவர்கள்
மிக அருமையாக விளக்கி இருக்கிறார் இந்த பேட்டியில்….
( நன்றி – புதிய தலைமுறை தொலைக்காட்சி…) இனியாவது பாஜக
நண்பர்கள் என் நடுநிலையை பற்றி, குறைகூறுவதை நிறுத்துவார்கள்
என்று நம்புகிறேன்.

…………………..

————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “எது நடுநிலை…?” – துக்ளக் ஆசிரியர் சோ விளக்கம்…!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  “நான் வியாபாரம் தான் செய்கிறேன். சேவை செய்யவில்லை.” – சோ.

  அந்த வகையில் இந்த தளம் துக்ளக் பத்திரிகையை விட ஒரு படி மேல் என்று சொல்லலாம்.

  சோ சொல்லும் அந்த நடுநிலையில் இருந்து சந்தர்ப்பங்களில் நழுவி இருக்கிறார். அவர் இல்லை இப்போது, ஆகவே, அது இப்போது வேணாம்.

  ஆனால் இப்போது….?

  முழுக்க பாஜகவின் ஊதுகுழலாக இருக்கு.

 2. Pingback: “எது நடுநிலை…?” – துக்ளக் ஆசிரியர் சோ விளக்கம்…!!! – TamilBlogs

 3. புதியவன் சொல்கிறார்:

  காணொளியை ஐபேடில் பார்க்க முடியவில்லை. நடுநிலை என்று ஒன்று கிடையாது. பொதுவா என் அபிப்ராயத்துல நடுநிலைனா, 100 ரூ என்னிடமிருந்து இவன் திருடிட்டான் என்று குற்றம் சுமத்தும்போது 100 ரூபாயை மீட்டு ஆளுக்கு 50 ரூ கொடுத்து நீதி சொல்வது நடுநிலை. ஆனால் விமர்சனத்தில் எது தர்மம், நியாயம் என்று பார்த்து அந்தப் பக்கம் ஆதரவு தருவது.

  காமை சாரின் இடுகைகளில் பெரும்பாலும் குற்றம் இல்லை. அபூர்வமாக அவர் பின்னூட்டத்தில் சிறிது bias இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தொடருங்கள் உங்கள் விமர்சனத்தை காமை சார்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  // காமை சாரின் இடுகைகளில் பெரும்பாலும் குற்றம் இல்லை. அபூர்வமாக அவர் பின்னூட்டத்தில் சிறிது bias இருப்பதைப் பார்த்திருக்கிறேன்..//

  என்ன செய்வது… அவரும் பாவம் மனிதர் தானே…!!!
  மன்னித்து, பெருந்தன்மையோடு விட்டு விடுவோம்… 🙂 🙂 … !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.