பாஜகவினர், அனுதாபிகள் – மம்தா பேனர்ஜியின் இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்…!!!


மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள், பாஜக அரசை
நோக்கி சில வினாக்களை எழுப்பி உள்ளார்… பாஜகவினர், அனுதாபிகள்
யாராவது இதற்கு உரிய விளக்கம் கொடுப்பார்களா…?

இரண்டு கண்டிஷன்கள் –

1) சும்மா எதாவது லிங்க்-கை கொடுத்து விட்டு –
ஓடிப்போய் விடக்கூடாது ….( வழக்கமாக இங்கே ஒருவர் செய்வது
போல்…)

2) விளக்கம் தமிழில் தான் கொடுக்கப்பட வேண்டும்….

——————–

இனி மம்தா பேனர்ஜி அவர்களின் வினா –

—————————————-

கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில்
2.41 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ரத்து செய்யப்பட்டதாக
மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் கண்டனம்
தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,
வாராக்கடன் பெற்றவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட
வேண்டுமெனக் கூறியுள்ளார்.

2014 ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் மாதம் வரை, ( முழுவதும், பாஜக
ஆட்சியில் இருந்த / இருக்கும் – காலம்….! )

பொதுத்துறை வங்கிகளில் 2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, நேற்று முன்தினம் (ஏப்ரல் 3)
மத்திய இணையமைச்சர் சிவபிரசாத் சுக்லா எழுத்துமூலமாக
விளக்கமளித்தார்.

அதில், ”வங்கிகளின் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டாலும்,
கடன் வாங்கியவர்கள் இந்த தொகையைச் செலுத்தியாக வேண்டும்.
இது தள்ளுபடி அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வரவு செலவுக்

கணக்கில் இருந்து வாராக்கடன்களை நீக்குவது வங்கிகளின்
வழக்கமான நடவடிக்கை என்றும், அதேநேரத்தில் வங்கிகளில்
கடன் பெற்றவர்களின் முழுமையான விவரங்களை வெளியிட
ரிசர்வ் வங்கி அனுமதிக்காது என்றும் சுக்லா குறிப்பிட்டிருந்தார்.

”வாங்கிய கடன்சுமையைத் திரும்பச் செலுத்த முடியாமல்
விவசாயிகள் அழுதுகொண்டும் தற்கொலை செய்துகொண்டும்
இருக்கின்றனர். ஆனால், மத்திய அரசு அதனைக் கருத்தில் கொள்ளவே
இல்லை” என்று இந்த விளக்கத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

மேலும், கடன் ரத்து செய்யப்பட்டதற்கும் கடன் வாங்கியோர் பற்றிய
விவரங்களை மத்திய அரசு வெளியிடாததற்கும், அவர் கண்டனம்
தெரிவித்துள்ளார். “எதற்காக இந்த ரகசியம்? இதன் மூலமாக யாரைக்
காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது? ” என்று கேட்டுள்ளார்….

மூன்று கேள்விகள் –

1) இந்த கடன்களை ரத்து செய்ய அனுமதி கொடுத்தது யார்…?

2) ரத்து செய்யப்பட்ட கடன்கார பெருந்தகைகளின் பெயர்களை
ஏன் வெளியிடக்கூடாது…?

3) இது வழக்கமான நடவடிக்கை தான் என்று மோடிஜியின் மந்த்ரிஜி
கூறுகிறார்…. அப்படியானால், இதற்கு முன்னால் எப்போது இப்படி
கடன் ரத்து செய்யப்பட்டது…? எவ்வளவு தொகைக்கு….?
அந்த கடன்காரர்களிடமிருந்து, அதற்குப் பின்னர் அந்த கடன்
வசூலிக்கப்பட்டதா…? எப்படி….?

———————————————————————————

பின் குறிப்பு – நான் பாஜகவை விமர்சித்து இடுகை
போடும்போதெல்லாம் இங்கு வந்து குதிக்கும் பாஜக அனுதாபிகளுக்கு
எந்த அளவு விஷய ஞானம் இருக்கிறது என்பதையும் பார்ப்போமே…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பாஜகவினர், அனுதாபிகள் – மம்தா பேனர்ஜியின் இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்…!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  /// விளக்கம் தமிழில் தான் கொடுக்கப்பட வேண்டும்…. ///

  ஐயா,

  இந்த நிபந்தனை இந்த இடுகைக்கு மட்டுமல்லாமல் மொத்தமாகவே ஆங்கில பின்னூட்டங்களை தடுத்தால் என்ன. அப்படியே இடப்பட்டாலும் நீக்கினால் என்ன.

  பெரும் தொந்தரவாக இருக்கு.

 2. Pingback: பாஜகவினர், அனுதாபிகள் – மம்தா பேனர்ஜியின் இந்த கேள்விக்கு பதில் சொல்லலாம்…!!! – TamilBlogs

 3. jksm raja சொல்கிறார்:

  சரியாக சொல்லியிருக்கிறீர்கள் அறிவழகு அவர்களே

 4. bandhu சொல்கிறார்:

  வீட்டு லோன் கட்டாதவர்கள் படத்தை போட்டு விளம்பரம் செய்யும்போது வாராக்கடன் தள்ளுபடி செய்வதும், அவர்களின் பெயரை வெளியிடாததும் அநியாயம் / அட்டூழியம். வெளியிட்டே ஆகவேண்டும்!

  இந்த விஷயத்தில், மம்தா தீதியை பாராட்ட வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சொத்தை வாதத்தை வைக்காமல், கம்யூனிஸ்ட் எதிரி. அனால், பாஜாகா வும் எதிரி என்ற தெளிவு இருப்பது மிக நல்லது!

 5. LVISS சொல்கிறார்:

  I can write some thing on this in English Since I cannot type in Tamil I stand barred
  Those who have worked as field officer in a bank for few years wont be asking these questions —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   LVISS,

   பின்னூட்டம் எழுதுவதை “வெட்டி” வேலை என்று நீங்கள் கருதுவதால் இப்படி சொல்கிறீர்களா ? எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் – ரொம்ப சிம்பிள்…

   நான் என்ன பிறந்தது முதல் இதே வேலையா பண்ணிக் கொண்டிருக்கிறேன்…?
   64 வயதில் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு, அதன் பின்னர், தமிழில் டைப் பண்ணும் வழியையும் தெரிந்து கொண்டு தான் இந்த வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆர்வம் இருந்தால் எதுவும் சாத்தியமே…!

   தமிழில் பேசுகிற மாதிரி ஆங்கிலத்தில் டைப் பண்ணி, ட்ரான்ஸ்லிடெரேட் பயன்படுத்துங்கள்… முடிந்தது வேலை.

   மோடிஜியை ஆதரிப்பது என்றால் அவ்வளவு ஈசியாக இருப்பதால் தானே, திரும்ப திரும்ப கண்ட கண்ட லிங்க்கை
   எல்லாம் கொடுத்து எல்லாரையும் படிக்க வைத்து பனிஷ் பண்ணுகிறீர்கள்… 🙂 🙂

   விமரிசனம் தளத்தில் நான் இந்த இடுகைகளை எழுத எவ்வளவு முயற்சி, உழைப்பு, நேரம் – எடுத்துக்கொள்கிறேன்
   என்பதை இப்போதாவது உணர்வீர்கள் என்று நம்புகிறேன்…

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

  • Raghavendra சொல்கிறார்:

   எல்விஸ் :

   // Those who have worked as field officer in a bank for few years wont be asking these questions —//

   புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு நீங்கள் எழுதியிருப்பது மடத்தனமான பதில். வங்கியில் வேலை செய்தவர்களால், இந்த 3 கேள்விகளுக்கு நிச்சயம் பதில் கொடுக்க முடியாது. அது உங்களுக்கும் தெரியும். நீங்கள் எழுதவில்லை. பாஜக பக்தி உங்களை எழுத வைக்கிறது.

   //மூன்று கேள்விகள் –

   1) இந்த கடன்களை ரத்து செய்ய அனுமதி கொடுத்தது யார்…?

   2) ரத்து செய்யப்பட்ட கடன்கார பெருந்தகைகளின் பெயர்களை
   ஏன் வெளியிடக்கூடாது…?

   3) இது வழக்கமான நடவடிக்கை தான் என்று மோடிஜியின் மந்த்ரிஜி
   கூறுகிறார்…. அப்படியானால், இதற்கு முன்னால் எப்போது இப்படி
   கடன் ரத்து செய்யப்பட்டது…? எவ்வளவு தொகைக்கு….?
   அந்த கடன்காரர்களிடமிருந்து, அதற்குப் பின்னர் அந்த கடன்
   வசூலிக்கப்பட்டதா…? எப்படி….?

 6. Raghavendra சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் கொஞ்ச நாட்கள் முன்னதாகவே இத்தகைய ரூல்ஸ்’ஐ கொண்டு வந்திருந்தீர்கள் என்றால், நிறைய பேர் மகிழ்ந்திருப்போம்.
  நன்றி.

 7. புதியவன் சொல்கிறார்:

  மீண்டும் புரியாத வசனத்தை எழுதுவதற்குத் துணிகிறேன். நா காவூங்கா… மற்றவரையும் திருட விட மாட்டேன். இதில் “மற்றவர்கள்” என்பது 2,000-20,000 ரூ கடன் வாங்கி இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகள், மாணவர்கள் போலிருக்கு. 20 கோடிக்குமேல் கடன் வாங்கினால் நிச்சயம் தள்ளுபடிதான் போலிருக்கு (அதுல ஆளும்கட்சிக்கு கொஞ்சம் தள்ளினால்)

  மம்தா அவர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் சப்பைக்கட்டு கட்டினாலும் “நா காவூங்கா” வந்து பதில் சொல்லலாமே. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத பிரதமர், வானம் ஏறி வைகுந்தம், அதாவது ஒவ்வொரு வாக்காளருக்கும் வெளி நாட்டு கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்பேன் என்றுசொன்னாரே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s