தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…?


“இஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது, அண்ணா பல்கலை.
துணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா…?

இது தபாஜக தலைவரின் கேள்வி..!!!சூரப்பாவையோ, வீரப்பாவையோ, வேறு யாரை வேண்டுமானாலும்,
தபாஜக தலைவர் பதவிக்கு வேண்டுமானால் நியமிக்கலாம்… துணை வேந்தர் பதவிக்கல்ல….

மைக் கிடைத்தால் போதும், காமிரா எதிரில் இருந்தால் போதும்…
எதை வேண்டுமானாலும் பேசலாம்; Logic தேவையே இல்லை;
கேட்டுக்கொள்ள வேண்டியது எதிரில் இருப்பவர்களின் தலைவிதி…!

இஸ்ரோ (Indian Space Research Organisation) என்பது மத்திய அரசின்,
Department of Space என்கிற, பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில்
(Directly under the Prime Minister’s Office) இயங்குகிற,
ஒரு அதிகாரபூர்வ மத்திய அரசாங்க பிரிவு.

இதன் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுபவர், தமிழரா, பெங்காலியா,
மலையாளியா என்று பார்த்து நியமிக்கப்படுவதில்லை…
தபாஜக தலைவரின் ரெகம்மண்டேஷனிலும் நியமிக்கப்படுவதில்லை…

தலைவர் பதவிக்கு அடுத்த கீழ் பதவியில் உள்ள –
மூத்த அரசு அதிகாரிகளின் பட்டியலிலிலிருந்து, Seniority cum Fitness
தகுதிப்படி, பதவி உயர்வு (promotion) மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் ஓய்வு பெறும் வயது வரும் வரையில் அந்த பதவியில்
நீடிப்பார்கள்.

ஆனால், பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி என்பது
(அந்தந்த பல்கலை விதிகளின்படி ) குறிப்பிட்ட காலத்திற்கானது..
(அண்ணா பல்கலை விதிப்படி 3 ஆண்டுக்காலம்….)

இந்த பதவிக்கு யாரும் பதவி உயர்வு பெற்று வருவதில்லை…
பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில
கவர்னருக்கு தான் உண்டு…

முதலில், உரிய நபரை அடையாளம் காண கவர்னருக்கு உதவிபுரிய
ஒரு சர்ச் கமிட்டி ( search committee ) நியமிக்கப்படுகிறது. அந்த கமிட்டி பரிந்துரைக்கும் 3 நபர்களில் ஒருவரை கவர்னர் இறுதியாக தீர்மானித்து நியமிக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக search committee – யில் கீழ்க்கண்டோர்
இருக்கின்றனர்….

1)ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் – தலைவர்.
2)மாநில அரசின் சார்பாக IAS அதிகாரி – சுந்தரதேவன்..
3)பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பாக –
MADRAS IIT Professor…திரு.ஆர்.ஞானமூர்த்தி –

இவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பட்டியலில் இருந்த
அனைவரையும்( 3 பேர் ), நேரில் கண்டு, உரையாடி விட்டு, இறுதியாக
கவர்னர் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பவர் தான் இப்போதைய துணை
வேந்தர்…!!!

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…?

 1. Pingback: தபாஜக தலைவர் இப்படி பேசலாமா…? – TamilBlogs

 2. BVS சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  கர்நாடகாவிலிருந்து துணை வேந்தரை இறக்குமதி செய்ததன் மூலம்,
  தமிழ்நாட்டை அவமதிக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கூறும்
  குற்றச்சாட்டைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   BVS,

   தனியே இடுகை வருகிறது. அதில் சொல்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.