வீடியோவில் சொல்லப்படுவதை – 100 % வரவேற்று ஆமோதிக்கிறோம்….


திரு.ரஜினிகாந்த், சற்று நேரத்திற்கு முன்பாக தனது இல்லத்திற்கு
வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய காணொளி கீழே –

ரஜினிகாந்த் அவர்கள் சொல்லி இருக்கும் கருத்துகளை
100 சதவீதம் இந்த விமரிசனம் வலைத்தளம் வரவேற்கிறது…
ஆதரிக்கிறது…!!!

….

—————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to வீடியோவில் சொல்லப்படுவதை – 100 % வரவேற்று ஆமோதிக்கிறோம்….

 1. புதியவன் சொல்கிறார்:

  20 வருஷத்துக்கு முன்னால வந்திருக்கக்கூடாதா? மனசு என்ன சொல்லுதோ அதைப் பேசுகிறார். செய்தியாளர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதைவிட என்ன வம்பு வளர்க்கலாம் என்பதிலேயே குறியாக இருக்காங்க (இவங்களுக்கு ஜெ டைப்தான் சரி)

  வாழ்த்துகள் ரஜினி சார்… உங்கள் ஆரோக்யம் 15 வருஷத்துக்கு நல்லா இருந்தா எங்களுக்கு உங்கள் 5 வருஷ ஆட்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையலாம்.

 2. Lala சொல்கிறார்:

  ரொம்ப சந்தோஷப்படாதீங்க.
  இப்ப சொன்னதை எப்ப வேண்டுமானாலும் அப்படியே மாற்றிச்சொல்லலாம்.
  அவரது பழைய வரலாறு அப்படி.

 3. Lala சொல்கிறார்:

  சொல்லி வாய் மூடவில்லை.
  அதற்குள் செய்தி வருகிறது.
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விடயத்தில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை , சற்று தாமதம் மட்டுமே செய்து வருகிறது என ரஜினி திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

  • BVS சொல்கிறார்:

   லாலா, ஏன் பொய் சொல்கிறீர்கள் ?
   மத்திய அரசு துரோகம் செய்தது என்று ரஜினி எப்போது கூறினார் ? இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட, மத்திய அரசு தேவையில்லாமல் கால தாமதம் செய்கிறது என்று தானே சொன்னர் ?

 4. Mani சொல்கிறார்:

  ரஜினி தெளிவாக, அளந்து பேசி இருக்கிறார்.
  எது அவசியமோ, அதை மட்டும் பேசி இருக்கிறார்.
  இத்தகைய தெளிவான மனிதர்கள் தான் இன்றைய அரசியலில் தேவை.
  கட்சி சார்பில்லாதவர்கள், ரஜினி அரசியலில் முழுமூச்சாக
  நுழைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

 5. venkat சொல்கிறார்:

  yes 100%, i agree with position.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திரு.ரஜினிகாந்த், பாஜகவின் ஆளுகைக்கு உட்படாமல்,
  அதே சமயம் மத்திய அரசுடன் தேவையின்றி சண்டையும் போட்டுக்கொண்டிராமல்,
  ஜெயலலிதா அவர்களைப்போல, சுதந்திரமாக செயல்படுவாரேயானால் –
  தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி அவர் வரவேற்கப்படவேண்டியவரே என்று என்று நான் கருதுகிறேன்.

  • அறிவழகு சொல்கிறார்:

   /// திரு.ரஜினிகாந்த், பாஜகவின் ஆளுகைக்கு உட்படாமல்……///

   ரஜினி எப்போதோ சொன்னதாக ஞாபகம், ‘பாஜக என் பின்னாடி இல்லை என்று. எடப்பாடியும் சட்டசபையிலேயே ‘எங்களுக்கு பாஜக கூட எந்த உறவும் இல்லை’ என்றார். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டையோ, இரண்டையும் யாரும் பொருட்படுத்தியதாகவோ தெரியவில்லை.

   ரஜினியின் செயற்பாடுகளில் இன்னும் நம்பிக்கை வராத காரணம்…

   பாஜக சம்பந்தமாகவோ காவிரி சம்பந்தமாகவோ இன்னும் அரிதாக அவர் சொல்லும் சில கருத்துக்களோ மற்றவர்கள் நிர்பந்தபடுத்துவதால் தான் சொல்கிறார். அவராக முன்வந்து சொல்ல இதுவரை முனையவில்லை.

   இவர் கருத்து சொல்லவே மற்றவர்களால் நிர்பந்தபடுத்தப்படும் நிலையில் மக்களுக்காக போராட எப்போது தன்னை தயார் படுத்திக்கப்போகிறாரோ தெரியவில்லை.

   மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம், அவர்களில் பலர் தவறானவர்களாகவே இருந்தாலும், தெருவில் வந்து போராடிக்கொண்டிருக்கும் போது ஒரு பேட்டிக்கே இங்கு நாம் புலகாங்கிதம் அடைகிறோம் என்றால்…

   தமிழர்களின் பூன்ஜை மனதை ரஜினி மாதரியானவர்கள் மிகச்சரியாகவே கனித்து காரியமாற்றுகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

   இன்னும் காலம் இருக்கு பார்க்கலாம். ஆனால், எவ்வளவு நாளைக்கு…!?

   திடீர் என்று என்னை முதல்வராக்குங்கள் என்று சொல்லும் வறையிலுமா…?

 7. Raghavendra சொல்கிறார்:

  K.M.Sir,

  You have rightly said. Let’s welcome and support Mr.Rajinikanth.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  “எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” – பழமொழி கேள்விப்பட்டிருக்கிறோம்…

  இப்போது, இங்கே, நேரில் –

  நேற்றைய நடிகர் சங்க போராட்ட களத்தில் “ராணுவம் வந்தாலும் பயப்பட மாட்டோம் ” என்று சொன்ன சத்யராஜுக்கு,

  தபாஜக தலைவர் மிரட்டல் விடுகிறார் –

  “அப்போ – வருமான வரி ரெய்டு வந்தால் பயப்படுவீர்கள் அல்லவா…?”

  ஆக, ‘வருமான வரி ரெய்டு’ என்கிற ‘அப்பன்’ பாஜக குதிருக்குள் தான் இருக்கிறார்…?

  ஆத்திரக்காரர்களுக்கு மட்டுமல்ல…. தபாஜக தலைமைக்கும் புத்தி…..!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.