காலதாமதம் செய்வது முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதா…?

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில், மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கையை மே 3-ம் தேதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – ஏமாற்றம் அளிக்கும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இரண்டாவது குழு, இன்று அரியலூர்
மாவட்டத்தில் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பேரணியில்
கலந்துகொள்ள வந்த பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச்
சந்தித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, “உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 6-ம் தேதி அளித்த தீர்ப்பில் ஆறு வார காலத்தில் ஸ்கீம் என்ற அர்த்தத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னதாக அளித்த 6 வார காலத்தைக்
கிடப்பில் போட்டுவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரும் வகையில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
அமல்படுத்தாத மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு கேட்டுக்கொண்டதன்
அடிப்படையில் வரைவுதிட்டத்தை மே மாதம் 3-ம் தேதிக்குள் தாக்கல்
செய்யுங்கள் எனக் கூறியிருப்பது, அவர்கள் காலதாமதம் செய்வதை
முறைப்படி ஏற்றுக்கொள்வதாக நினைக்கத் தோன்றுகிறது.

இதனால், இத்திட்டம் பல மாதங்கள் இழுத்தடிப்பதற்கு சாதகமாக
அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாகப் பதிவு
செய்கிறது.

நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் எனக் கூறவில்லை. ஸ்கீம் என்றுதான் சொன்னோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது ?

தமிழகத்தின் உரிமைகளைத் தட்டிப் பறீப்பதற்கும் அதைக் காலில் போட்டு
மிதிக்கிற மத்திய அரசுக்கும் எல்லாவகையிலும் உச்ச நீதிமன்றம் துணைபோகிறதுபோல உள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 9-ம் தேதி விசாரணைக்கு வரும்போது, தமிழகத்துக்கு நிறைவான தீர்ப்பு கிடைக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதி முன்னதாக நம்பிக்கை கொடுத்தார். ஆனால், அவர் கொடுத்த நம்பிக்கைக்கு நேர்மாறாக இன்றைய உத்தரவு அமைந்துள்ளது.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி அன்றைக்கு ஒன்றும், இன்றைக்கு ஒன்றும் சொல்வது ஏன் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை”

https://www.vikatan.com/news/tamilnadu/121681-in-cauvery-case-supreme-
court-verdict-is-condemn-able-says-kbalakrishnan.html
Posted Date : 21:00 (09/04/2018)

———————————————————————————

தோழர் பாலகிருஷ்ணன் சொல்வதை
அப்படியே ஏற்று, வழிமொழிகிறேன்…

இன்னும் 23 நாட்கள் அவகாசம்… எதற்காக…?
தொடர்ச்சியான ஏமாற்றுதல்கள் ….வயிறு எரிகிறது….
ஆனால், எரிச்சலை பகிர்ந்து கொள்வதைத்தவிர –
நம்மால் வேறு என்ன செய்ய முடியும்…..?

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காலதாமதம் செய்வது முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதா…?

 1. அறிவழகு சொல்கிறார்:

  உங்கள் வயிறு எரிகிறது. என் வயிறும் எரிகிறது. இப்படி தமிழக மக்கள் அனைவரின் வயிறும் எரியும். வயிறு எரிவது என்பதே ஒரு பிரார்த்தனை தான். அது இதற்கு காரணமானவர்களை சும்மா விடாது.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஒரு வழியாக நான்கு வாரம் ஒட்டியாச்சு – அப்புறம் ?
  யோசி வேற எதுவும் பண்ணலாமா ?
  இருக்கவே இருக்கு – ஒரே ஒரு போடு !
  ஸ்கீம் அமைக்க நீர் வளத்துறைக்கு அதிகாரம் இல்லை .
  இது பாராளுமன்றம் கூடி முடிவெடுத்தால் மட்டுமே முடியும் !

  இது மாதிரிதான் சொல்லப்போறாங்க .

 3. புதியவன் சொல்கிறார்:

  ஆச்சு ஜூன் ஜூலை வரும்போது கொஞ்சம் மழையால் சத்தம் குறையும் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ.

  ஆனால் மத்திய அரசு செய்வது நியாயமானது அல்ல. நிச்சயம் தமிழகத்தில் அவர்களுக்கு எப்போதும் பின்னடைவுதான்.

  அதற்காக காங்கிரஸ், திமுக செய்வது வெறும் அரசியல். அவர்களுக்கும் காவிரி மேல் ஆசை இல்லை. பாஜக எதிர்ப்பு அரசியல் மட்டும்தான் ஆசை. இல்லாவிட்டால் திமுக ஏன் காங்கிரஸ் ‘காவிரி மேலாண்மை’ அமைக்க ஆதரவு தரவில்லை என்றால் கூட்டணியில் இடமில்லை என்று சொல்லக்கூடாது?

 4. Raghavendra சொல்கிறார்:

  You are Right.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.