அந்தரங்க தகவல்கள் இனி …?




– ஹல்லோ – ” கார்டன் பிஸ்ஸாவா (Gordon’s Pizza)..?

இல்லை சார்… இது கூகுள் பிஸ்ஸா (Google’s Pizza…).

– அப்படியானால் நான் தவறான எண்ணுக்கு டயல் செய்து விட்டேனா..?

இல்லை சார்.. இப்போது, கூகுள், பிஸ்ஸா ஸ்டோரை (pizza store)
விலைக்கு வாங்கி விட்டது…!!!

– ஓ அப்படியா… சரி நான் ஒரு ஆர்டர் கொடுக்கலாமா…?

ஓகே சார்… உங்களுக்கு வழக்கமானது தானே வேண்டும்…?
(you want the usual?)

– வழக்கமானதா…? நான் வழக்கமாக என்ன வாங்குவேன்
என்பது உங்களுக்கு தெரியுமா…?

எங்கள் வசம் இருக்கும் காலர் ஐடி-யின் படி (caller ID)
கடந்த 15 தடவைகளாக, நீங்கள் 12-slice with double-cheese,
sausage, and thick crust…க்கு ஆர்டர் கொடுத்திருக்கிறீர்கள்…!!!

– ஓகே – இந்த தடவையும் எனக்கு அதே தான் தேவை….

இந்த தடவை நீங்கள் வழக்கமான ஐட்டத்திற்கு பதிலாக
8-slice with ricotta, arugula, and tomato -க்கு ஆர்டர்
கொடுத்துப் பாருங்களேன்…!!!

– வேண்டாம்… நான் வெஜிடபிளை விரும்புவதில்லை..
(I hate vegetables )

ஆனால், உங்களுக்கு கொலஸ்ட்ரால் (கொழுப்பு) அளவு
அதிகமாக இருக்கிறதே…?

– அது உங்களுக்கு எப்படி தெரியும்…?

உபயோகிப்பாளரின் வழிகாட்டியை ( subscribers guide) பயன்படுத்தி,
உங்களது கடந்த 7 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனை
தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறோம்…!!!

– நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனாலும்
நீங்கள் சொல்லும் பிஸ்ஸா எனக்கு தேவை இல்லை. நான்
கொலஸ்ட்ராலுக்காக ஏற்கெனவே மருந்து சாப்பிட்டு வருகிறேன்…

இல்லை..நீங்கள் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்வதில்லை…
கடைசியாக நீங்கள் 4 மாதத்திற்கு முன்னால், உங்கள் வழக்கமான
மருந்துக்கடையிலிருந்து – 30 மாத்திரைகள் வாங்கியதோடு சரி…!!!

– இல்லை.. அதற்குப்பிறகு நான் வேறு கடையிலிருந்து
மாத்திரை வாங்கினேன்…

இல்லையே… அதற்கான தகவல்கள் உங்கள் க்ரெடிட் கார்டில்
பதிவாகவில்லையே…!!!

– நான் ரொக்கமாக கொடுத்தேன்..

ஆனால், உங்கள் வங்கி ஸ்டேட்மெண்ட்படி,
நீங்கள் அந்த அளவிற்கு ரொக்கப்பணம் எடுக்கவில்லையே…

– இல்லை… எனக்கு ரொக்கத்திற்கு வேறு வழி(source) இருக்கிறது..

உங்களது வருமான வரி அறிக்கையில்(ரிடர்னில்)
இந்த தகவலை காணோமே… அப்படியானால்,
வருமான வரி ரிடர்னில் மறைக்கப்பட்ட வருமானம் எதாவது
உங்களுக்கு இருந்தாலொழிய இது சாத்தியமில்லையே…!

– நீங்களும்.. உங்கள் பிஸ்ஸாவும்…எல்லாம் நாசமாய்ப் போகட்டும்…
இந்த கூகுள், ஃஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப், இன்டர்னெட், செல்போன் –
எதுவுமே இல்லாத, என்னை உளவு பார்க்க முடியாத ஒரு தீவுக்கு நான்
தொலைந்து போகிறேன்….

எங்களுக்கு உங்கள் நிலை புரிகிறது…
ஆனால், அதற்கும் உங்களுக்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறதே…
உங்கள் பாஸ்போர்ட் 5 வாரங்களுக்கு முன்னரே
expire ( காலாவதி)-ஆகி விட்டதே…!!!

———————————————————————–

பின் குறிப்பு –
ஆங்கிலத்தில் நான் படித்த ஒரு செய்தி,
இதை எழுத தூண்டுதலாக அமைந்தது…

இப்போதைக்கு இது கொஞ்சம் மிகைப்படுத்தலாக இருந்தாலும்,
எதிர்காலத்தில் இது போலெல்லாம் நடப்பதற்குரிய
எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன அல்லவா…?

——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அந்தரங்க தகவல்கள் இனி …?

  1. N S Raman சொல்கிறார்:

    Very true. Your smartphone is a spy instrument and Google to what’s app every one reading emails SMS photos and phone calls.
    But of our people putting everything
    On face book minute by minute to make their life simple.

  2. Raghavendra சொல்கிறார்:

    Super. Very Interesting.

  3. tamil_alagu சொல்கிறார்:

    ஐயா , தாங்கள் வழக்கம் போல் இதில் மோடியையும் இழுத்து விட்டிருந்தாள் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் , உங்கள் ரசிகர்கள் சந்தோச பட்டிருப்பார்கள்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      தமிழ் அழகு,

      நண்பரே, ” உங்கள் ரசிகர்கள் சந்தோச பட்டிருப்பார்கள்..” என்று நீங்கள் கூறுகீறீர்களே…
      உண்மையில் அதிக எண்ணிக்கையிலான என் வாசக நண்பர்கள் யார் தெரியுமா…?
      பாஜக அன்பர்கள் தான் இந்த வலைத்தளத்தை, என் எழுத்தை, மற்றவர்களை விட அதிகம் விரும்பி வரவேற்கிறார்கள்….
      நான் மோடிஜியை பற்றி எழுதாத நாளேல்லாம் அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள் – இப்போது நீங்கள்
      சொல்லி இருப்பதைப் போல…நான் இந்த இடுகையில் மோடிஜியை இழுக்காமல் விட்டது உங்களுக்கு
      ஏமாற்றமாக இருந்தது அல்லவா… ? அதைப்போல…!!!

      நானேன்ன செய்வது… நான் நீதி, நேர்மை, நியாயம் பார்ப்பவன். மோடிஜி /பாஜகவை கூட,
      உண்மையான காரணம் இல்லாமல் குறைகூற மாட்டேன் – என்பதை இப்போதாவது நீங்களும், உங்களைப்போன்ற மற்ற பாஜக நண்பர்களும் புரிந்துகொண்டால் சரி… 🙂 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. LVISS சொல்கிறார்:

    No exaggeration -mostly what is mentioned can happen – Most browsers track your browsing habits and create a profile about you – This is what is in the article -If you are interested to keep your browsing safe use search engines like startpage.com or duckcuckgo.com – I use an Indian browser called “epic” where all your searches are private -No need to go into private or incognito mode –It does not allow any trackers or third party cookies -It has its own private search engine –It does not store any history of your browsing — I rarely use other browsers —
    If at all I use other browsers it will be a portable browser in my USB —

  5. புதியவன் சொல்கிறார்:

    இது நிச்சயம் நடக்கும். இப்போதே நிறைய முன்னேற்றங்கள் இருக்கு. உங்கள் விருப்பத்தின்பேரில் அட்வர்டைஸ்மென்ட்ஸ் வரும். அதுவும்தவிர, உங்கள் பின்னூட்டங்களும் கண்காணிக்கப்படுகின்றன. (அமெரிக்கா போன்றவையால். ஆனால் அது நியாயமானவற்றிர்க்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டால் விசா மறுப்பு போன்று)

  6. Peace சொல்கிறார்:

    https://www.cnet.com/how-to/samsung-smart-tv-spying/
    In this day and age our every movement is tracked. This is not something we can avoid.

  7. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    very true

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s