கருப்புக்கொடிக்கு பயந்து – திடீர் உண்ணாவிரத ப்ரோகிராமா…?


பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியது
எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்…
எத்தனை நாட்கள் வீணாயின…???

இரண்டே இரண்டு கட்சிகள் –
இரண்டும் பொடிக் கட்சிகள்….
ஒன்று ஆந்திராவிற்கு விசேஷ அந்தஸ்து
(Special Category Status) கேட்டு போராடியது…
இன்னொன்று காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கச் சொல்லி போராடியது…
இதற்காக பாராளுமன்றத்தையே 23 நாட்கள் முடக்குவதா…?

“அத்தனை நாட்கள் அவர்களை போராட விடாமல்,
அங்கேயே உரிய பதிலை சொல்லி, பாராளுமன்ற
நடவடிக்கைகளை தொடர்ந்திருக்கலாமே”…..
– கேட்பவர்கள் தேசத்துரோகிகள்…

“எந்த பதிலும் சொல்லாமல் அத்தனை நாளும்
மௌனம் சாதித்ததற்கு ஈகோ தானே காரணம்” –
– சொல்பவர்கள் அரசியல் அரிச்சுவடிகள்…

அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்ட வேண்டாமா…?
நாட்டு மக்களின் முன்னால், அவர்களின் முகத்திரையை
கிழித்துக் காட்ட வேண்டாமா…?

அதற்காகத்தான் இந்த – “உண்ணாவிரதம்” …

சரி அதற்காக ஏற்கெனவே போட்ட ப்ளானை கைவிடுவானேன்…
எவ்வளவு பெரிய நிகழ்ச்சி… எத்தனை வெளிநாட்டவர்
வருவார்கள்.. எத்தனை பெரிய ஏற்பாடுகள் எல்லாம்
செய்யப்பட்டிருக்கின்றன …

உண்ணாவிரதத்தை அன்றைய தினம் வைத்துக் கொள்வானேன்…?
ஒரு நாள் முன்னதாக அல்லது ஒரு நாள் பின்னதாக….?

கருப்புக்கொடி காட்டுகிற சாக்கில்
கலாட்டா, கலவரம் செய்யலாம், அவமானப்படுத்தலாம்
என்று காத்திருப்பவர்கள் முகத்தில் கரியைப்பூச
வேண்டாமா……??

அப்படியானால், கருப்புக்கொடிக்காக பயந்து
இந்த உண்ணாவிரத ப்ளான் இல்லையா…?

யாரைப்பார்த்து இந்த கேள்வி…?

தரை நிலவரம் சரியில்லை என்று
அறிக்கை ஏதும் வரவில்லையா…?

“ஒரே கல்லில் இரண்டு மாங்கா” –

சரி… ஒரு மாங்கா புரிந்தது…
அந்த இரண்டாவது மாங்கா என்ன…?

செந்திலை போய் கேளுங்கள்…!!!

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கருப்புக்கொடிக்கு பயந்து – திடீர் உண்ணாவிரத ப்ரோகிராமா…?

 1. அறிவழகு சொல்கிறார்:

  அகங்காரம், ஆங்காரம், தற்பெருமை, இறுமாப்பு, பொய், அதிகாரவேட்கை எந்த மனிதனையும் நாசமாக்கும். இதில் எந்த ஒரு குணமும் கடவுள் விரும்பாதது. இது அனைத்தையும் பெற்ற மனிதன் நல்லாயிருந்ததா சரித்திரம் இல்லை.

  கூடிய சீக்கிரம் அழிவு வரும்.

  • அறிவழகு சொல்கிறார்:

   இரண்டாவது மாங்கா நம்பிக்கையில்லா தீர்மானமோ அதையொட்டிய விவாதங்களோ இல்லாது போகுமோ…?

 2. Raghavendra சொல்கிறார்:

  இந்த பயங்கொள்ளித்தனத்தையும், ராஜதந்திரமென்று பாராட்டுபவர்ளும்
  இருக்கிறார்களே. வருகை கேன்சல் என்று சொல்லக்கூடாதாம்.
  அதைப்பற்றி அறிவிப்பே இல்லை. திடீரென்று உண்ணாவிரதம் என்று மட்டும் அறிவிக்கிறார்கள்.

 3. bandhu சொல்கிறார்:

  விநாச காலே விபரீத புத்தி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.