இப்படியும் ஒருவர் மக்களின் அன்பைப்பெற முடியுமா…?யார் இவர்..?
குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் –
அத்தனை பேருக்கும் எத்தனை அன்பு இவர் மீது…!!!
இப்படி ஒரு பிரியாவிடை கொடுக்கிறார்களே…

பிரிந்து விடை பெற்றுச்செல்லும் அவர் முகத்தில் தான்
எத்தனையெத்தனை உணர்வுகள்…

யார் இவர்… அப்படி என்ன செய்து விட்டார்…?
முதலில் வீடியோவை பார்ப்போமே….!!!

….

தென் அமெரிக்க நாடான சிலி…
அந்த நாட்டின் ஜனாதிபதியான Ms.Michele Bechellet அவர்கள்
தனது பதவிக்காலம் முடிந்து, கடைசி நாளன்று வீடு திரும்பும்போது,
சிலி மக்கள் திரண்டெழுந்து அவர் மீதான தங்கள் அன்பைத்
தெரிவிக்கும் காட்சி தான் மேலே வீடியோவில் நாம் காண்பது.

சிலி நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, ஒருவர் தொடர்ந்து
4 ஆண்டுகளுக்கு மேல் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியாது.
இவர், முதலில் 2006 முதல் 2010 வரை ஜனாதிபதி பதவியில் இருந்து,
பின்னர் அடுத்த சில ஆண்டுகள் ஐ.நா.தொடர்புடைய சமூகப்பணியில்
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மீண்டும், 2014-ல் சிலியின் வரலாற்றிலேயே முதல் தடவையாக,
2-ஆம் முறை 62 % மக்களின் ஆதரவுடன், ஜனாதிபதியாக
தேர்வு பெற்று, மீண்டும் 4 ஆண்டுகள் பதவி வகித்து அண்மையில்
ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற அன்று அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையும், அன்பும், உலகில் வேறு எந்த தலைவரும்
தங்கள் மக்களிடம் இதுவரை பெறாதது.

அதற்கு முக்கிய காரணம், இவர் ஆட்சியில் இருந்த காலத்தில்,
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பல
நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், நலத்திட்டங்களை செயல்படுத்தியதும்,
சிறந்த கல்வித்திட்டதை நடைமுறைப்படுத்தியதும், முக்கியமாக –
தன் ஆட்சியில் ஊழலின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொண்டதும் தான்.

ஓய்வுபெறும்போது, இவருக்கு சொந்தமான
சொத்து என்று இருந்தவை –
ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டும், ஒரு மோட்டார் சைக்கிளும்
மட்டும் தான்…!!!

ஊம் ….பார்த்து, பெருமூச்சு விட வேண்டியது தான்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இப்படியும் ஒருவர் மக்களின் அன்பைப்பெற முடியுமா…?

 1. தமிழன் சொல்கிறார்:

  செல்லும்போது எதையும் கொண்டுபோக முடியாது. சொந்த பெற்றோரே ஆனாலும் அவரவர் கடைசிகால உடல் பிரச்சனைகளை அவரவரே பார்த்துக்கணும். சேர்த்த சொத்து, சம்பாத்யம் போன்னவற்றை வாங்கிக்கொள்ளும் மகன்கள், பாவத்தில் பங்கு கேட்க மாட்டார்கள்.

  தோல்வி அடைந்தபோதும் திரிபுரா முதன் மந்திரி மேன்மக்கள் தாம் (கம்யூனிஸ்ட்). ஜோதிபாசு போன்றவர்களுக்கும் காமராஜர் போன்றவர்களுக்கும் கலாம் போன்றவர்களுக்கும் இது பொருந்தும்.

  சிலி அதிபர் மக்கள் மனதிலும் எங்கள் மனதிலும் இருப்பார்.

 2. Pingback: இப்படியும் ஒருவர் மக்களின் அன்பைப்பெற முடியுமா…? – TamilBlogs

 3. LVISS சொல்கிறார்:

  Michelette Bachellette is a physician -She is fluent in English,French.German, Portuguese,and Italian –
  It is said that our ExPM Narasimha Rao could speak 17 languages –

 4. அறிவழகு சொல்கிறார்:

  இந்தியாவிலும் பதவி கால வரையறை கொண்டு வந்தால் என்ன. அண்மையில் இந்த கேள்வியை தேர்தல் ஆணைய‌த்திடம் ஒரு நீதிபதி கேட்டதாக ஞாபகம். என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

  பதவி மோகம்/பித்து பிடித்த இன்றைய ஆட்சியாளர்களோ மற்ற அரசியல் கட்சி தலைவர்களோ இதை விரும்ப போவதில்லை.

  நாட்டு நலனில் அக்கறை கொண்ட‌ வேறு யாராவது தான் முன்னெடுத்து செல்ல வேனும்.

  அப்படி ஒரு வரையறை அதாவது அமெரிக்காவில் உள்ளது போல் இரண்டு பதவிகாலம் அல்லது சிலி நாட்டில் உள்ளது போல் கொண்டு வந்தாலொழிய‌ இந்த பித்தம் தெளிந்து, இருக்க போவது குறிப்பிட்ட வருசம் தான் அதற்குள் கொஞ்சமாவது நாட்டுக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணமாவது இந்த பித்தர்களுக்கு வரும்.

  வருமா…!!?

  இப்போதிருக்கிற அதிகார மமதை கொண்டவர்களுக்கு வாய்பில்லை என்றாலும் பின் வரும் தலைமுறைக்கு வரும் என்று நம்பலாம். அதற்கு அந்த இரு நாடுகளும் முன்னுதாரணம்.

 5. SIVA சொல்கிறார்:

  இவரையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய அளவுக்கு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரு தலைவி தமிழ்நாட்டில் இருந்தார் என்பது மறந்துவிட்டதா? தற்போது காவிரி ஆற்று நீருக்காக கூட இல்லை, காவிரி ந‍தி நீர் ஆணையத்திற்கே மாநிலம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராடும் மக்கள், அந்த தலைவி பழிவாங்கும் விதமாக அளிக்கப்பட்ட தீர்ப்பினால் சிறை சென்றபோது, அந்த காவிரியை வைத்துக்கொள் கர்நாடகமே, அம்மாவைக்கொடு என போராடினார்களே? தங்களில் வாழ்வாதரமான ஆற்று நீரை விட தலைவிதான் முக்கியம், அவர் இருந்தாலே தம்மை வாழ வைப்பார் என்ற நம்பிக்கையை விதைத்த தலைவியை விட ஒரு ஒப்பற்ற தலைவி இந்த பாரினில் உண்டோ?

  • புதியவன் சொல்கிறார்:

   சிவா – உங்கள் கருத்து ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கது. சிறுமதி படைத்தவர்கள்தான் ஜெ.வின் குறைகளைப் பற்றிப் பேசுவார்கள். தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் எம்ஜியாருக்கு அடுத்து, ஏன் அதைவிட வலுவானவர் ஜெ. என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. அவர் தன்னுடைய, தன்னைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்காக ஒரு பொழுதும் தமிழ் நாட்டின் நலனை விட்டுக்கொடுத்தவர் இல்லை. தமிழ் நாட்டில் உள்ள எவரும் கருணானிதி, திமுக, ஸ்டாலினைவிட ஊழல் வாதிகளைக் கண்டிருக்கமுடியாது. ஊழல் என்பதைவிட, தன் குடும்ப நலனுக்காம மானில நலனைக் கைகழுவி விடுவதில் திமுக, கருணானிதி, ஸ்டாலின் போன்றவர்களை நாம் நம் வாழ் நாளில் மட்டுமல்ல இன்னும் பல டிகேடுகளுக்கு பார்க்க இயலாது. ‘தன் குடும்ப நலன்’, கைகழுவிய மானில நலன் இவற்றில் சந்தேகம் உள்ளவர்கள் என்னைக் கேட்டால் பெரிய லிஸ்ட் இங்கேயே எழுதுவேன். இதில் கேடி பிரதர்ஸுக்காக அவருடைய அப்பா கட்டிய கோட்டையும், ஆனாலும் அவர் உடல் நலமில்லாமல் இருந்தபோது, சொந்தப் பணத்தை செலவழிக்க மனமில்லாமல், அரசாங்கப் பணத்தை ஆட்டையைப் போட, பாஜகவிலேயே இருந்ததும், மாறன் மறைந்தவுடன், சூரியன் கிழக்கில் உதிக்கிறது போன்ற காரணத்தைச் சொல்லி பாஜகவை விட்டு வெளியில் வந்ததும் உண்டு.

  • நெல்லை பழனி சொல்கிறார்:

   ஆனால் அவர் நேர்மையா செயல்படவில்லையே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s