ஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம்….


இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் ஒரு சாதாரண
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தால், அது சுவாரஸ்யமான
செய்தி தானே….?


நான் இந்த இடுகையை ஒரு செய்தியாக மட்டுமே பதிவிடுகிறேன்…
என் விமரிசனம் எதையும் இதில் முன்வைக்கவில்லை என்பதை
நண்பர்களுக்கு – முக்கியமாக பாஜக நண்பர்களுக்கு முன்கூட்டியே
தெரிவித்து விடுகிறேன்…..

இந்த வீடியோவிலிருந்து என்ன கிரகித்துக் கொள்ள முடிகிறது
என்பது – வாசகர்களின் பார்வை, மற்றும் விருப்பத்தைப் பொருத்தது….!!!

————-

நேற்று மாலை, டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்
பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் சென்றபோது,
பிரதமர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்திருக்கிறார்.

அது குறித்த வீடியோவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியும் கீழே –

….

———————————————————————————
https://timesofindia.indiatimes.com/city/delhi/pm-modi-travels-by-delhi-metro-to-dedicate-ambedkars-memorial-to-nation/articleshow/63750182.cms
—————–

PM Modi travels by Delhi Metro to dedicate Ambedkar’s memorial to nation
Sidharatha Roy | TNN | Updated: Apr 13, 2018, 20:40 IST
—————–

NEW DELHI: Prime Minister Narendra Modi chose to travel by the
capital’s lifeline – Delhi Metro – on Friday to attend a public function.
The Prime Minister boarded a Metro train from the Lok Kalyan Marg metro
station of the Yellow Line (HUDA City Centre-Samaypur Badli) on
Friday evening during rush hour and travelled up to the Vidhan Sabha
station on the same corridor, a journey traversing 11 stations that took a
bout 20 minutes. PM Modi took the metro to visit 26, Alipur Road,
where he was scheduled to dedicate the Dr. Ambedkar National Memorial
to the nation.

Though the entire travel and the coach in which PM Modi travelled saw heavy
security, he talked to some co-passengers and even clicked selfies with some of
them. Most passengers couldn’t believe that the PM was travelling with them,

no one was allowed to stay for long near the Prime Minister by the Special
Protection Group commandoes.

“Prime Minister Shri Narendra Modi today travelled by Delhi Metro from Lok
Kalyan Marg station to Vidhan Sabha metro station from 5.41 pm to 6.01 pm,”
said a Delhi Metro Rail Corporation (DMRC) spokesperson. “Tokens were used
by PM and accompanying officials for travelling,” he said.

The Prime Minister travelled back from Vidhan Sabha metro station to Lok
Kalyan Marg station by Metro from 7:47 pm to 8:06 pm.

———————————————————————————

பின் குறிப்பு –

நண்பர்கள் சிலர் பின்னூட்டங்கள் எழுதும்போது,
கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்…
எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அவற்றை –
முகம் சுளிக்காத முறையில், கண்ணியமான வார்த்தைகளை
பயன்படுத்தி, எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்….!!!

வார்த்தைகளில் கடுமை இருக்கலாம்… ஆனால் கண்ணியமும்
கூடவே இருக்கட்டும்.

இந்த தளத்தின் பெருமையே, அதன் உண்மைத்தன்மையும்,
கண்ணியமான விமரிசனங்களும் தானே…? அதை தொடர்ந்து
பாதுகாக்கும் கடமையில், என்னோடு சேர்த்து, வாசக நண்பர்களுக்கும்
பங்கு உண்டல்லவா…???

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம்….

 1. Pingback: ஒரு சுவாரஸ்யமான செய்தி ….. பிரதமர் டெல்லி மெட்ரோவில் பயணம்…. – TamilBlogs

 2. stunt சொல்கிறார்:

  summa ithu oru stunt……. manithabimaanam ellaam kidaiyaathu..

 3. அறிவழகு சொல்கிறார்:

  வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது.

  “என் ஏரியாவுக்கு வா… வந்து பாரு….” இந்த காமெடி மிகவும் பிரபலம்.

  ஆக அவர் அங்கு தான் வீராதிவீரர். தமிழ் நாட்டிற்கு வந்தால்…..!!!

  ச்ச்சும்ம்மா…..!

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இதுவும் விமரிசனம் இல்லை….!!!

  இந்த வீடியோவை பார்த்த பிறகு மனதில் சில கேள்விகள்
  தோன்றின.. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் … அவ்வளவே…!!!

  1) இந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது…? உடனடி காரணமென்ன…?
  வழக்கமான முறையில் பயணம் செய்வது ஏன் மாற்றப்பட்டது…?
  அதுவும், முதல் நாள் சென்னையில் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு….?

  2) விவிஐபி பயணம் காரணமாக, சம்பந்தப்பட்ட மெட்ரோ ஸ்டேஷன்கள்,
  சில மணி நேரங்களுக்கு முன்பாகவே செக்யூரிடி கண்ட்ரோலுக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமே…..!

  3) வெள்ளிக்கிழமை- வேலை நாள் – மாலை/இரவு 6 – 8 மணி நேரங்களில் சாதாரணமாக ரெயிலில் கூட்டம் நிரம்பி வழியுமே…
  இங்கே எண்ணி 10-15 பேர்கள் தானே பயணிக்கிறார்கள்…
  புறப்படும், திரும்ப கிளம்பும் ஸ்டேஷன்களில், பிளாட்பாரங்கள் கூட
  காலியாகவே இருக்கின்றனவே…

  4) அதெப்படி, அது ஏன்… கூட சகாக்கள் யாரும் இல்லாமல், தனியாக பயணம்…? கட்சி ஆசாமிகள், அமைச்சர்கள் – வேண்டுமென்றே
  தவிர்க்கப்பட்டிருக்கிறார்களா ….? இயற்கையாக இல்லையே…!

  5) பயணத்தின் இடையில் அவ்வப்போது, யாராவது வந்து அருகே
  உட்காருவதும், பிறகு எழுந்து செல்வதும், வேறு யாராவது வந்து
  உட்காருவதும் இயற்கையாக இல்லையே… யாரோ guide /control பண்ணுவது போல் தோன்றுகிறதே…

  6) சில நடுத்தர வர்க்கத்து மனிதர்கள், சில பெண்கள்,
  ஒரு இஸ்லாமியர் – இன்னும் ஏதோ குறைவது போலிருக்கிறதே…..
  பாதிரியாரா…?

  7) எனக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை … என்று உணர்த்தவா…?

 5. புதியவன் சொல்கிறார்:

  இது வெறும் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஸ்டண்ட்தான். இதற்கு வேறு அர்த்தம் கண்டுபிடிக்கத் தேவையில்லை (ஒபாமா வரிசையில் நின்று மெக்டொனால்ட்ஸில் உணவு வாங்கினார் போன்ற செய்தி). ராகுல் குடிசை வீட்டில் உணவு அருந்தினார், மெட்’ரோ ரயிலில் பயணித்து ஸ்டாலின் பளாரினார், நமக்கு நாமேவில் ஹோட்டலில் அமர்ந்து வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டது போன்றது.

  இதையெல்லாம் ரிலேட் செய்யாமல் பார்க்கும் சாதாரண பொதுஜனம் ஒருவேளை வாயைப் பிளக்கலாம்.. அடடே பிரதமர் சாதாரணமாக நம்மைப் போலவே ரயிலில் பயணிக்கிறாரே என்று.

  உண்மையில் வெளிநாடுகளில் தலைவர்களும் மனிதர்கள்போல் நடந்துகொள்வார்கள். நம் நாட்டில்தான், ஒரு குவாலிபிகேஷனும் இல்லாதவர்கள் தேவதூதர் போல் நடந்துகொள்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.