சோழீஸ்வரம்….!!!


சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த இடத்திற்கு சென்றிந்தேன்…
ஏனோ… அதன் பிறகு செல்லவே முடியவில்லை… கூடிய விரைவில்,
மீண்டும் ஒருமுறை அங்கு சென்றுவர விரும்புகிறேன்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு இருக்கும் அதிருஷ்டம் இந்த கங்கை
கொண்ட சோழபுரத்திற்கு இல்லை…. பெரிய கோவில், மிகச்சுலபமாக
சென்று வரக்கூடிய இடத்தில், மெயின் லைனில் இருப்பதாலும்,
நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதாலும், அதிக மக்களை
கவர்கிறது. முன்னர், நான் திருச்சியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது,
சமயம் வாய்க்கும்போதெல்லாம், பவுர்ணமி இரவன்று தஞ்சை கோவில்
செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன்…

கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சைக்கு வடக்கே, அரியலூர் மாவட்டத்தில், கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம், 70 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

சரித்திரம் மிகச் சிறப்பாக சொல்கிறது…… ராஜராஜசோழனின் மகன்
ராஜேந்திர சோழனின் பெருமைகளை….

1000 ஆண்டுகளுக்கு முன்னரே, அவன், கங்கை வரை படையெடுத்துச்
சென்று, இடைப்பட்ட இடங்களை எல்லாம் ( இன்றைய கர்நாடகா,
ஆந்திரம், ஒரிஸ்ஸா, வங்கம்….) வென்று,
அங்கிருந்து கங்கை நீரைக்கொண்டு வந்து, தான் கங்கை கொண்ட
சோழபுரத்தில் புதிதாக வெட்டிய சோழ கங்கம் என்கிற ஏரியில் வார்த்ததை…!!!

சிதைந்த நிலையில்
பழைய கட்டிடங்கள்….

மாளிகை மேடு –
ஒரு காலத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்த இடம்….

அர்த்தநாரீஸ்வரர்….

புதைபொருட்களாக
கண்டு பிடிக்கப்பட்டவை…..

பழந்தமிழர் பெருமைகளை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொண்டே
இருந்தாலாவது, நம் மக்களுக்கு, கொஞ்சமாவது விழிப்புணர்வு,
தங்கள் பழம்பெருமைகளையும், புகழையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்
என்கிற ஆவல் ஏற்படுமா என்கிற ஆதங்கத்தின் விளைவு தான்
இந்த இடுகை…

கி.பி.1020-ல் துவங்கி, சுமார் 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட
இந்த பிரகதீஸ்வரர் கோயில் என்கிற சிவன் கோயிலை ஐக்கிய நாடுகள்
அமைப்பு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது
என்பது இதற்கான கூடுதல் பெருமை…..

கங்கை கொண்ட சோழபுரத்தைப்பற்றிய சில வீடியோக்கள் கீழே –

—————

kumbabishekam –

Thousands witness Gangaikondacholapuram temple consecration

கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்

mahabisegam

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to சோழீஸ்வரம்….!!!

 1. Pingback: சோழீஸ்வரம்….!!! – TamilBlogs

 2. தமிழன் சொல்கிறார்:

  எனக்கு சரித்திரம் படிப்பதில் விருப்பம் உண்டு. இந்தக் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்பது என் அவா. இன்னும் நிறைவேறவில்லை. தந்தையும் தனயனமும் செயற்கரிய செயல்களை (படையெடுப்பு, கோவில்கள் கட்டுதல் போன்று) செய்துள்ளார்கள். தனயன் வடநாடு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றுள்ளான். ஆனாலும்,

  1. 10 வருடங்களுக்கு உள்ளாகவே கிட்டத்தட்ட காப்பியடித்ததுபோல் ஒரு கோவில் ஏன் கட்டினான்?
  2. தன் தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (அப்பா புகழுடன் இருந்த ஊர். தனக்கான மரியாதையும் தன்னை அரசராக எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவன் இன்னொரு ஊரில் தலைநகரம் கட்டியிருக்கலாம்). பெரிய கோவில் தொடர்ந்து செயல்பட ஏதுவானவைகளைச் செய்திருந்தாலும், ஏன் வேறு ஒரு காப்பி அடித்த முறையில் கோவிலைக் கட்டினான்?
  3. நீங்கள் ஏற்கனவே பழைய படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். அதில் பெரிய கோவில் எப்படி புல், மரங்களால் பாதிப்படைந்திருந்தது என்பது தெரியவரும். இப்போதுள்ள நிலை கடந்த 70 ஆண்டுகளில்தான் (கொஞ்சம் நல்லா இருப்பது) என்பது தெரியவரும்.

 3. Avudaiappan Appan சொல்கிறார்:

  diravida katchikalin achiyil entha uthaviyum ellai

  • BVS சொல்கிறார்:

   ஆ.அப்பன்,

   இந்த கோவில் மத்திய அரசின், தொல்லியல் துறையின் கீழ்
   தான் இருக்கிறது. ஆக, உங்கள் பாஜக அரசு இந்த கோவிலுக்கு
   எந்த உதவியும் செய்யவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.