பிரமிப்பைத்தரும் பண வசூல்…. பாஜகவுக்கு – குவிகிறது கோடிகளில்……..!!!


Indian 2000 Rs Currency Note


இந்த இடுகையில் – முதலில் ஒரு செய்தி…
முற்றிலும் அதிகாரபூர்வமான சில தகவல்கள்…
அதன் பிறகு சில சந்தேகங்கள்…கேள்விகள்…!!!

2016-17-ஆம் நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017
வரையிலான காலகட்டத்தில், வெவ்வேறு அகில இந்திய அளவிலான
அரசியல் கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் நன்கொடைகள்
பற்றிய அதிகாரபூர்வமான தகவல் கீழே –


( குறிப்பு – இது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கும் பண வரவு.
இதைத்தவிர, அவ்வப்போது, உள்ளூர்களில் விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தும்போதோ, தலைவர்கள் வரும்போது, பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தும்போதோ – அப்படியே வசூல் செய்து, அப்படியே செலவு செய்யப்படும் தொகைகள் எதாவது இருக்குமேயானால் – அப்படிப்பட்ட
தகவல்கள் இதில் இல்லை….)

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது சம்பந்தமான
சட்டவிதிகளின்படி, 2000 ரூபாய் வரை தான் ரொக்கமாக பெற முடியும்.
அதற்கு மேற்பட்ட தொகைகளை காசோலை மூலமாகவே பெற முடியும்.

அதாவது 2000 ரூபாய்க்கு மேல், யாராவது நன்கொடை கொடுத்தால்,
அது செக்’காகவே கொடுக்கப்படும் என்பதால், யார் தருகிறார்கள்
என்கிற தகவல் அந்தந்த கட்சியின் ஏடுகளில் அதிகாரபூர்வமாக
பதிவு செய்யப்பட்டு, பின்னர் தணிக்கையும் செய்யப்பட்டாக
வேண்டும். ஆனால், தற்போதுள்ள சட்டவிதிகளின்படி, நன்கொடை
கொடுத்தவர்களின் பட்டியல் தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்படவோ,
வெளியிடப்படவோ வேண்டியதில்லை.
(ஆக, ரகசியம் காக்க முடியும்….!)

ஒரு சந்தேகம்….. மற்ற எல்லா கட்சிகளும், கிட்ட நெருங்கக்கூடாத
அளவிற்கு, பாஜகவிற்கு மட்டும் நன்கொடை வந்து குவிவது எப்படி…
ஏன்…?

இது எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தால், அதைப்பற்றி அதிகம்
யோசிக்க வேண்டியதில்லை… ஆனால், அந்த கட்சி ஆளும் கட்சியான
பிறகு, திடீரென்று நன்கொடை வசூல் பயங்கர உச்சத்திற்கு போனால்
அதற்கு என்ன அர்த்தம்….?

பாஜகவுக்கு ஏற்கெனவே நன்கொடை கொடுத்து வந்தவர்கள், இப்போது
தாங்கள் கொடுக்கும் தொகையை உயர்த்தி விட்டார்களா….?

அல்லது புதிதாக, பலர் பாஜகவுக்கு நன்கொடை கொடுக்கத் துவங்கி
இருக்கிறார்களா….?

இப்படி ஆளும்கட்சிக்கு எக்கச்சக்கமாக நன்கொடை கொடுப்பவர்கள்
தனிப்பட்ட மனிதர்களா… காண்டிராக்டர்களா… அல்லது
தொழிலதிபர்களா…?

உண்மையில், இப்படி கோடிக்கணக்கில் நன்கொடை கொடுப்பவர்களின்
நோக்கம் என்ன…? எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமலா பணம்
கொடுக்கிறார்கள்….?

நன்கொடை கொடுப்பவர்களில் – வாராக்கடன் வைத்திருக்கும்
தொழிலதிபர்களும், கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பெரும்
தொழிலதிபர்களும் உண்டு என்று உறுதிப்படுத்த முடியாத ஒரு
செய்தி வெளிவந்திருக்கிறது….

2000 ரூபாய்க்கு மேல் காசோலையாகத்தான் கொடுக்க முடியும் என்கிற
நிலையில், இவர்களது, பெயர், கம்பெனி – போன்ற விவரங்கள்
பாஜகவின் அலுவலக ஆவணங்களில் ஏற்கெனவே தயாராக இருக்கும்.

தங்கள் கம்பெனிகளுக்கு தேவையான சலுகைகளை, லைசென்சுகளை,
காண்டிராக்டுகளை பெற முயலும், தொழிலதிபர்கள்-காண்டிராக்டர்கள்
அதற்காக, கொடுக்கும் லஞ்சப்பணத்தை – நன்கொடை என்கிற பெயரில்
கொடுக்கிறார்களோ என்கிற பலத்த சந்தேகமும் பலருக்கு எழுவது
இயற்கை.

ஆட்சியில் இல்லாதபோது குறைவாகவும், ஆட்சியை பிடித்தவுடன்
எக்கச்சக்கமாகவும் நன்கொடை குவிந்தால், அதனைப்பற்றிய
இயற்கையான சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாது….

இந்த சந்தேகங்களை போக்கி, கட்சிக்கு நன்கொடை கொடுப்பவர்களைப்
பற்றிய விவரங்களை வெளிப்படையாக தெளிவுபடுத்துவது
ஆளும் கட்சியான பாஜகவின் கடமை.

பாஜக தலைமை – கட்சிக்கு நன்கொடை கொடுத்த
பிரமுகர்கள்/தொழிலதிபர்களின் பெயர் விவரங்களை வெளிப்படையாக
தெரிவித்து… மக்களின் சந்தேகத்தை போக்குமா…. ?

——————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

34 Responses to பிரமிப்பைத்தரும் பண வசூல்…. பாஜகவுக்கு – குவிகிறது கோடிகளில்……..!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  இடுகை கன்வின்சிங் ஆக இல்லை. நீங்கள் பாஜக வெகு நியாயமான கட்சி, தொண்டர்கள் முதல் தலைவர்கள்வரை காந்தியடிகள் க்ளோன்ஸ்தான் அந்தக் கட்சியில் உண்டு என்று நினைத்துக்கொண்டு இடுகை போட்டிருக்கிறீர்கள்.

  ஆட்சியில் இருப்பவர்களுக்கு வருமானம் மிக மிக அதிகம் என்பது இந்தியாவின் எழுதப்படாத சட்டம். இதுக்கு விதிவிலக்கு என்று யாரும், எந்தக் கட்சியும் கிடையாது. காங்கிரஸ் எப்போதும் பணத்தில் பாஜகவைவிட திளைத்திருந்தது. கூட்டணி ஆட்சியில் லாலூ, திமுக என்று லட்சம் கோடிகளில் திளைத்தார்கள். இப்போது பாஜக முறை என்ற அளவில்தான் இதைப் பார்க்கிறேன்.

  இந்தியாவில் இப்படி நடப்பது தவறுதான். அதனால்தான் பெரும்பாலானவர்களிடம் மனசாட்சி என்று ஒன்று இல்லை.

 2. Uli சொல்கிறார்:

  பாஜக, மக்களின் சந்தேகத்த போக்காது சார் அவங்கள ஆன்டி இந்தியன்னு சந்தேகப்படும்.

 3. Ram சொல்கிறார்:

  புதியவன், எது கன்வின்ஸ் ஆகவில்லை உங்களுக்கு ? பாஜகவை குறை சொல்வதா ? அதை நேரடியாக சொல்ல வேண்டியது தானே ?
  காங்கிரஸ் தலைவர்கள் “ஊழலை ஒழிப்பேன்” என்று சொன்னார்களா ?
  “நா காவூங்கா, நா கானே தூங்கா” என்று சத்தியப்பிரமாணம் செய்து பதவிக்கு வந்தார்களா ? காங்கிரஸ் செய்த தவறைத்தான் பாஜகவும் செய்கிறது என்றால்,
  காங்கிரசுக்கு கொடுத்த அதே ட்ரீட்மெண்டை பாஜகவுக்கும் கொடுப்பது தானெ சரி ?
  காங்கிரஸை ஊழல் கட்சி என்று அடித்து விரட்டியது போல் பாஜகவையும்
  பதவியை விட்டு அடித்து விரட்டலாம் என்று ஒப்புக்கொள்கிறீர்களா ?
  அதைத்தானே இந்த கட்டுரை மறைமுகமாக உணர்த்த வருகிறது. பின் ஏன் எதிர்ப்புவாதம் செய்கீறீர்கள் ?

  • tamil_alagu சொல்கிறார்:

   காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதே எப்படி ௨௦௦ கோடி வசூல் செய்தது. இது நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். ஒரு வேலை அவர்கள் ஆட்சியில் இருந்தால் இன்னும் எவ்வளவு வசூல் செய்திருப்பார்கள்.
   எனக்கு புரிந்த வரையில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பி.ஜெ.பி க்கு விளம்பரம் செய்து கொன்டே இருக்கிறார்கள். பிறகு எப்படி அவர்கள் ஆட்சியை பறிக்க முடியும்.உலகத்தில் யனேத மூலையில் எது நடந்தாலும் மோடி தான் கரணம் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். அதனால் தான் சட்ட மன்ற தேர்தல்களில் பி.ஜெ.பி யை யாரும் ஒன்றும் செய்ய முடிய வில்லை .இத்தனைக்கும் demonetization, GST என்று மீடியாயாக்கள் விமர்சனம் செய்தும் ஒன்றும் நடக்க வில்லை.

  • புதியவன் சொல்கிறார்:

   ஆமாம் ராம். இந்த விஷயத்தில் பாஜகவைத் தனிமைப்படுத்தி குறை சொல்வது சரியல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் (எல்லா… இதில் விதிவிலக்கான கட்சிகளே இருக்கமுடியாது) பணவசூல் செய்து கட்சி நடத்துகின்றன. எவையும் வெளிப்படையானவை இல்லை. ஆனால் பாஜக (சும்மா அவங்க தலைவர்கள் சொல்வதை மட்டும் வைத்து) தேவதூதர்கள் என்று நீங்க நம்பறீங்க. பாவம் நீங்க. ராடியா டேப்பெல்லாம் கேட்கலை போலிருக்கு. டாட்டாவும் ராஜாத்தி அம்மாளும் போட்ட டீல் எல்லாம் படிக்கலையா? (காங்கிரஸ் ஆட்சியில்…. வோல்டாஸ் பில்டிங்)

   ‘ஊழலை ஒழிப்பேன்’ என்று சொல்லாத, அதைக் கொள்கையில் வைத்துக்கொள்ளாத கட்சி இந்தியாவில் இருப்பதுபோல் தெரியவில்லை. பாஜக சொன்ன ‘நா காவூங்கா’வைத்தான் நாம எல்லோரும் அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்டோமே.

   என் ஸ்டேண்ட், இந்தியாவில் ஒழுங்காக மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் கட்சி எதாவது இருக்கா என்பதே சந்தேகம். இதில் காங்கிரஸ் என்ன பாஜக என்ன.

 4. Pingback: பிரமிப்பைத்தரும் பண வசூல்…. பாஜகவுக்கு – குவிகிறது கோடிகளில்……..!!! – TamilBlogs

 5. Ganpat சொல்கிறார்:

  ஒரே ஒரு யோசனைதான் எனக்கு தோணறது.சுமார் 25 ஆண்டுகளுக்கு திமுக அதிமுக என்று மாறி மாறி ஓட்டு போட்டு எப்படி மாநிலத்தை குட்டிசுவராக்கினோமோ,அதே வழியில் இனி காங்கிரஸ்,பிஜேபி என்று மாறி மாறி ஓட்டு போட்டு நாட்டை குட்டிசுவராக்குவோம்.

  • tamil_alagu சொல்கிறார்:

   எனக்கு புரிந்த வரையில் அடுத்து நிச்சயம் congress வரவே வராது.
   மோடிக்கு விளம்பரம் செய்பவர்கள் இருக்கும் வரையில் அவருக்கு அழிவு இல்லை.அநேகமாக கர்நாடகாவிலும் பி.ஜெ.பி ஜெயித்து தொலைத்து விட போகிறது. க.மை சார் க்கு கஷ்டம் தான்.
   இந்த தடவை வோட்டிங் மெஷினை குறை சொல்வதா அல்லது வழக்கம் போல் statistics வைத்து சப்பை கட்டு கட்டுவதா என்று?

 6. BVS சொல்கிறார்:

  நாட்டு நலனை, ஒற்றுமையைப்பற்றி கவலைப்படாத
  தேச விரோத சக்திகள் தான் பாஜகவை ஆதரிக்கின்றன.

 7. BVS சொல்கிறார்:

  பாஜகவை ஆதரிப்பவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள்.

  • tamil_alagu சொல்கிறார்:

   நாட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கெல்லாம் மோடி தான் காரணம் என்று அவர் புகழ் படுபவர்கள் தான் தேச பக்தி கொண்டவர்கள்.

   • புதியவன் சொல்கிறார்:

    தமிழ் அழகு – இங்கு மோடி தலைவராக இருப்பதாலும், வெளிப்படையாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் அவர் கருத்துத் தெரிவிக்காமல் கம்மென்று இருப்பதாலும்தான் அவர் பெயர் அடிபடுகிறது. ‘மாட்டுக்கறி’ என்ற டாபிக் வந்த உடனேயே, உணவு விஷயத்தில் அவர் அவர் தங்களுக்குத் தோன்றியதைச் சொல்லவேண்டாம் என்று சொல்வதற்கோ உடனே ட்வீட் செய்வதற்கோ ஏன் அவருக்குத் தோன்றவில்லை? அவர் மவுனம் தவறான சிக்னலை, சமூகத்தின் எதிரிகளுக்கு (இந்த மாதிரி பேசுபவர்களுக்கு, செயல்படுபவர்களுக்கு) கொடுக்கிறது.

    இதற்கும் தேச பக்திக்கும் சம்பந்தம் இல்லை.

    எனக்கு ‘காங்கிரஸ்’ போலி மதச்சார்பு பேசி இந்துக்களை அழிக்கிறது என்ற எண்ணம் மனதில் இருந்தது. என் சகோதரன், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, மிக அதிகமாக மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கிறது என்று சொல்றான். இப்படித்தான் எனக்கு நெருங்கியவர்கள் பலர் சொல்கின்றனர். அவைதான் உண்மையாக இருக்கும் என நான் நம்புகிறேன். (ஏனென்றால் அவங்க இங்கு இருப்பதால்)

 8. paamaran சொல்கிறார்:

  // அரசியல் கட்சிகளுக்கு RTI சட்டம் வேண்டாமாமே …. !!
  Posted on ஜூன் 12, 2013 by vimarisanam – kavirimainthan //

  // பாஜகவைத் தவிர – அனைத்து கட்சிகளின் பண பலமும் அழிக்கப்பட்டதா…?
  Posted on நவம்பர் 15, 2016 by vimarisanam – kavirimainthan // ..

  இந்த இரண்டு இடுகைகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் திரு. கா.மை . அவர்களால் பதிவிடப்பட்டவை .. இரண்டையும் படித்தால் அவரது நடு நிலை எல்லோருக்கும் புரியும் … அதேபோல நம்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பணம் ஈட்டும் முறையும் புரியும் … அதற்காக அவர்கள் சட்டத்தை கையாளும் முறைகளும் தெளிவாகும் …!

  படித்து முடித்தபின் ” எவன் நோக்கியன் ” என்கிற கேள்வியும் எழும் …!!!

 9. bandhu சொல்கிறார்:

  லஞ்சம் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் சட்ட பூர்வமாகிவிட்டது. அவ்வளவுதான்.

  அதே நேரத்தில், கட்சி நடத்த கோடிக்கணக்கான பணம் தேவைப் படுவதாலும் , யாருமே யோக்கியர் இல்லை என்பதால் நேர்வழியில் நன்கொடை (மனமுவந்து மக்கள் கொடுப்பது) வருவதற்கு வழியே இல்லை என்பதாலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை இதை ஒழிக்கும் வழி தெரியவில்லை.

  யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்கு அதிக நன்கொடை. அவ்வளவுதான்.

  என்னைப் பொறுத்தவரை மோடி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பிம்பம். அடுத்த தேர்தல் இல்லையேல் அதற்கடுத்தது காங்கிரஸ் தான்.

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  1) இது நான் முன் வைத்த கேள்வி –

  நன்கொடை கொடுப்பவர்களில் – வாராக்கடன் வைத்திருக்கும்
  தொழிலதிபர்களும், கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பெரும்
  தொழிலதிபர்களும் உண்டு என்று உறுதிப்படுத்த முடியாத ஒரு
  செய்தி வெளிவந்திருக்கிறது….

  பாஜக தலைமை – கட்சிக்கு நன்கொடை கொடுத்த
  பிரமுகர்கள்/தொழிலதிபர்களின் பெயர் விவரங்களை
  வெளிப்படையாக தெரிவித்து… மக்களின் சந்தேகத்தை
  போக்குமா…. ?

  2) இது நண்பர் ராம் முன்வைத்த கேள்வி –

  காங்கிரஸ் செய்த தவறைத்தான் பாஜகவும் செய்கிறது என்றால்,
  காங்கிரசுக்கு கொடுத்த அதே ட்ரீட்மெண்டை பாஜகவுக்கும் கொடுப்பது தானெ சரி ?
  காங்கிரஸை ஊழல் கட்சி என்று அடித்து விரட்டியது போல் பாஜகவையும் பதவியை விட்டு அடித்து விரட்டலாம் என்று ஒப்புக்கொள்கிறீர்களா ?

  ——————————

  அதென்னவோ தெரியவில்லை…

  பாஜக மீது எதாவது குறையை சொன்னால், பின்னூட்டத்தில்
  உடனே, காங்கிரஸ் இதைச் செய்யவில்லையா என்று கேள்வி எழுப்பப்படுகிறது…

  அப்படியானால், காங்கிரசுக்கு கொடுத்த ட்ரீட்மெண்டை
  பாஜகவுக்கும் கொடுக்கலாமா என்று கேட்டால் – பதில் இல்லை.

  ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்தால் –
  அதை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் –
  எதிர்க்கட்சிகள், நடுநிலை மக்கள்..

  பாஜக மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்
  போதெல்லாம், அதை மறுக்க முடியாமல் போகிறது…
  ஆனால், பதில் வாதமாக – காங்கிரஸ்
  செய்யாததையா பாஜக செய்கிறது என்று கேட்பது –

  பாஜக மீது சொல்லப்படும் குறைகள் உண்மை என்று தெரிந்தாலும்,
  ஏற்க மனம் இல்லை என்பதையே வெளிப்படுத்துவதாக
  நினைக்கிறேன்.

  – Anyway – என் கடமையை நான் தொடர்கிறேன்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • bandhu சொல்கிறார்:

   காங்கிரஸ் செய்யவில்லையா என்ற கேள்வியை நான் எழுப்பவில்லை. நான் எண்ணுவதை சரியாக எழுத இன்னும் பயிற்சி வேண்டும் என்று அறிகிறேன்.

   இது தான் நிதர்சனம் என்ற வெறுமை. அவ்வளவுதான்.

   யாரும் உத்தமரில்லை. நாங்கள் உத்தமர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிஜேபி அவ்வாறு சொல்லிக்கொள்ளாத காங்கிரசை விட எந்த விதத்திலும் மேலில்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    bandhu,

    என் பின்னூட்டம் உங்களுக்கானதல்ல…
    காங்கிரஸ் செய்யவில்லையா…? என்கிற வாதத்தை முன்வைத்தவர்களுக்கானது…

    பாஜக தவறு செய்கிறது…. காங்கிரசுக்கு கொடுத்த
    ட்ரீட்மெண்ட் தான் அதற்கும் தரவேண்டும் என்பதை
    ஏற்க மனம் இல்லாதவர்களுக்கு….!

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • bandhu சொல்கிறார்:

     நன்றி சார்.
     பிஜேபி க்கு காங்கிரஸுக்கு அளித்த அதே தீர்ப்பு வெகு விரைவில் கிடைக்கும். வளர்ச்சி வேறு வீக்கம் வேறு. பிஜேபி இருக்கும் நிலை வீக்கம். ஆதரவாளர் என்ற முகத்திரை அதை மறைக்கிறது சிலருக்கு. அவ்வளவுதான்.

 11. tamil_alagu சொல்கிறார்:

  அய்யா,
  உண்மையில் இந்த நன்கொடை விஷயம் அவ்வளவு பெரிய ஊழலாக மக்கள் நினைக்க மாட்டார்கள். அரசியல் கட்சி பெரும் இந்த நன்கொடை எல்லாம் யாருக்காக? அவை எல்லாம்ஓட்டு போட வாக்காளர்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை தானே. மக்கள் இந்த செய்தியால் நிச்சயம் சந்தோச பட மட்டுமே போகிறார்கள்.
  நீங்கள் பி.ஜெ.பி யை கவிழ்க்க போடும் செய்தியெல்லாம் அவர்களுக்கு சாதகமாக மட்டுமே உள்ளது.

 12. BVS சொல்கிறார்:

  //நீங்கள் பி.ஜெ.பி யை கவிழ்க்க போடும் செய்தியெல்லாம் அவர்களுக்கு சாதகமாக மட்டுமே உள்ளது.//

  Then why you are so much worried; and repeatedly putting excuses
  to safeguard your bosses ?

  • tamil_alagu சொல்கிறார்:

   i would like to say, its after all a very simple matter that people will easily ignore.
   But you think its an excuse to safe guard BJP. You are very innocent.
   Best of luck for the upcoming elections.

 13. Selvadurai Muthukani சொல்கிறார்:

  மாநிலத்தில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. மத்தியில் பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் இதைத்தவிர நமக்கு வேறே கதி இல்லை என்பதே நிதரிசனம்.

 14. Raj சொல்கிறார்:

  நான் பார்ப்பனனும் அல்ல பாஜக பின்னணி கொண்டவனும் இல்லை
  ஆனால்
  இப்போது வருடத்துக்கு 6000 பவுண்ட்ஸ் அனுப்பி வைக்கின்றேன் (பகுதிகளாக அனுப்பி வைப்பேன் )

  என்னைப்போல் எத்தனை பேர் இருப்பார்கள்

 15. அறிவழகு சொல்கிறார்:

  பாஜக கைகூலி ஒன்று இங்கு பாஜக/மோடியை பற்றி எவ்வளவு ஆதாரத்துடன் எழுதப்பட்டாலும் அவைகளெல்லாம் புகழ் பாடுவதாக கூவிகொண்டிருக்கு.

  இன்று தமிழ் ஹிந்து நாலிதழில்,

  ‘பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் மீது திட்டமிட்டு தாக்குதல்’: மவுனம் காக்கும் மோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு.

  http://tamil.thehindu.com/world/article23574390.ece?homepage=true

  -என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கு. இதுவும் மோடி புகழ் இல்ல…!

  பாஜக ஆதரவாளர்கள் இப்படியே காங்கிரஸோடு ஒப்பிட்டு தங்களை தாங்களே சொறிந்துவிட்டுக் கொள்ளுங்கள்.

  அடுத்த தேர்தலுக்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • அறிவழகு சொல்கிறார்:

   To days’s India trend and the great stand.

   #CashCrunch

   ATMs are Cashless
   Jaitley is Clueless
   RBI is Careless
   Modi is Speechless
   Bhakths are Brainless
   Citizens are Penniless

   • tamil_alagu சொல்கிறார்:

    தாங்களும் பி.ஜெ.பி தோற்கும் என்று குறைத்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.newyorktimes கட்டுரைகளை எடுத்து காட்டுகிறீர்கள்.
    கடவுள் மனது வைப்பாராக.
    newyorktimes கட்டுரைகளை படித்த இந்தியர்கள் நிச்சயம் கர்நாடகாவில் அவர்களை தோற்கடிப்பார்கள்.

    • அறிவழகு சொல்கிறார்:

     கூவுவது குரைப்பது உம்ம பொலப்பு.

     இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உருப்படியான பதில் சொல்ல திராணி இருக்கா. பின்னே சும்மா வந்து குலைத்து விட்டு போகமட்டும் அடிக்கடிவருகிறீர்.

     குலைத்துகிட்டே இருங்கள் பெரிய அடி காத்திட்டிருக்கு.

     • tamil_alagu சொல்கிறார்:

      எல்லா சட்ட மன்ற தேர்தலில்களும் பி.ஜெ.பி க்கு விழும் அடியை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.
      நீங்கள் கூறுவதை போல் demonetization,GST, ஊழல்களால் பாதிக்க பட்ட மக்கள் பயங்கர அடியை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

 16. Ram சொல்கிறார்:

  Mr.Tamil Alagu,

  ராஜஸ்தான், மத்திய பிரதேச இடைத்தேர்தல்கள்,
  உ.பி.யில் முதலமைச்சரின் தொகுதியே பறிபோனது –
  சவுகரியமாக இதையெல்லாம் மறந்து விடுகிறீர்களே.
  இங்கெல்லாம் மக்கள் யாருக்கு அடி கொடுத்தார்கள் ?

  • tamil_alagu சொல்கிறார்:

   நானும் ஆமோதிக்கிறேன்.
   மற்ற மாநிலலங்களில் பி.ஜெ.பி ஜெயித்ததை தவிர்த்து போயும் போயும் நீங்கள் குறிப்பிடும் இரண்டு இடை தேர்தல்களில் தோற்று போனதை எண்ணி பார்த்தால் மக்கள் பி.ஜெ.பி க்கு மரண ஆதி கொடுத்துள்ளார்கள் என்பதை ஒப்பு கொள்கின்றேன்.

  • BVS சொல்கிறார்:

   மொட்டையடிக்கப்பட்ட மொட்டை 🙂

   அவ்வளவு சீக்கிரம் ம-ற-ந்து விடுவார்களா என்ன ?
   Tamil Alagu புத்திசாலித்தனமாக ம-றை-க்க பார்க்கிறார் 🙂

   • tamil_alagu சொல்கிறார்:

    சட்ட சபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் இடை தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் உள்ள வித்தியாசம் புரிய வேண்டும்.
    இடை தேர்தல்கலீல் மூன்றாந்தர சுயேச்சை வெற்றுப்பாளர்கள் கூட எளிதாக வெற்றி பெறுவார்கள். அதற்காக நாளை அந்த சுயேச்சை வேட்பாளர்கள் தான் அடுத்த பிரதமர் ஆவார் என்று உலர கூடாது.
    பி.ஜெ.பி தோற்று போன மாநிலங்களையும் , வெற்றி பெற்ற மாநிலங்களையும் ஒரு தடவை நினைவு கூர்ந்து பார்க்கலாமே.

 17. paamaran சொல்கிறார்:

  இடுகையின் தலைப்பே மறந்து போய் — மாறிப்போய் — வெறுப்பு பின்னூட்டம் – சிரிப்பு பின்னூட்டமாவதும் இயல்போ …?

 18. தமிழ் திரட்டி சொல்கிறார்:

  தங்கள் பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.