எங்கே போயின 500 / 2000 ரூபாய் நோட்டுகள்…? ATM-கள் முடங்கக் காரணமென்ன …?


( இது முதலில் வந்த செய்தி…)

மத்திய பிரதேச முதல்வர் (பாஜக) திரு.சௌஹான்
புகார் சொல்கிறார் அவர் மாநிலத்தில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு
கடும் தட்டுப்பாடு என்று. அவரைத் தொடர்ந்து புகார் கூறுவது ஆந்திரா….

அண்மைக்காலங்களில், இந்த வியாதி, தமிழகத்திற்கும் பரவத் துவங்கி
விட்டது. பல ATM-கள் செயல்படவில்லை… செயல்படும் சிலவற்றில்,
கரன்ஸி பற்றாக்குறை….10,000-க்கு மேல் கொடுப்பதில்லை…..

இந்த செய்தியை பாருங்கள் –

Why Are Rs. 2,000 Notes Not Being Printed
Published: April 18, 2018

The country is suddenly faced with a new crisis – the
crisis of empty ATMs. We witnessed the outburst of the
Chief Minister of Madhya Pradesh the other day who
suspected that it was a conspiracy against the
government with some people deliberately hoarding
currency notes of Rs. 2,000 denomination. Does he have
proof of it? If he does, then why does he not act
against such hoarders?

The shortage of cash in the ATMs is not confined to a
particular region. It is fairly widespread. According
to reports, shortages were reported from states such as
Delhi, Uttar Pradesh, Telangana, Andhra Pradesh,
Maharashtra, Gujarat, Chhattisgarh, Bihar, Madhya
Pradesh, Karnataka, Rajasthan and Jharkhand. This
covers almost the entire country. And the shortage has
been with us for some time: upto two weeks in certain
areas.

According to Finance Ministry officials, this situation
has arisen on account of some “unusual demand” for cash
in recent weeks. The nature of the unusual demand and
the reason for it has not been clarified. If it is
seasonal, then it why was not anticipated? If it is not
seasonal, then it calls for immediate investigation.

https://www.ndtv.com/opinion/why-are-rs-2000-notes-not-being-printed-by-yashwant-sinha-1831785

சம்பந்தப்பட்டவர்கள், எல்லாரும் ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள்… ரிசர்வ்
வங்கி ஒரு பக்கம், எஸ்பிஐ இன்னொரு பக்கம். நிதியமைச்சகம் வேறோரு
கோணம்… அரசியல்வாதிகள் கர்நாடகா தேர்தலை காரணம் காட்டுகிறார்கள்…!!!

இது ஒரு மிகவும் ஆபத்தான விஷயம்….
அதி தீவிர தொத்துநோய் போல் இந்தியா முழுவதும் பரவக்கூடிய ஒரு
விஷவித்து…. இந்த செய்தியை மக்கள் சீரியசாக நம்ப ஆரம்பித்தால்,
வங்கியில் பணம் டெபாசிட் செய்வதை நிறுத்தி விடுவார்கள்…
இருப்பில் இருக்கிற பணத்தை வெளியில் விட மாட்டார்கள்.
பஞ்ச காலத்தில் உணவு தான்யத்தை மக்கள் பதுக்குவதைப்போல….
தட்டுப்பாடு, இன்னும் பலமடங்கு தீவிரமாகும்…

மத்திய அரசு இந்த விஷயத்தை மிகத்தீவிரமாக அணுக வேண்டும்…
பிரச்சினையின் உண்மையான காரணத்தை உடனடியாக கண்டுபிடித்து,
தட்டுப்பாட்டை போக்க, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் செயல்பட வேண்டும்…
உண்மையான நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும்.

இல்லையேல், இந்த தடவை செயற்கையாகவே ஒரு மோசமான
பணப்பஞ்சத்தை மீண்டும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எங்கே போயின 500 / 2000 ரூபாய் நோட்டுகள்…? ATM-கள் முடங்கக் காரணமென்ன …?

  1. அறிவழகு சொல்கிறார்:

    அதுக்கு தான் வெளிநாட்டு பயணம். Demonetisation-ஐ அறிவித்துவிட்டு ஜப்பானுக்கு ஓடினேன். அப்போ எல்லா பிரச்சனையும் தீர்ந்ததா. இப்பவும் வெளிநாட்டுக்கு போய்ட்டேன். பாருங்க. இந்த நாடே… இல்ல… இப்பவும் எல்லாம் தீர்ந்துடும்.

    லண்டன்ல நல்ல வரவேற்பாம்ல. இப்படியே எத்திக்கும் எங்கும் பரவட்டும்.

  2. Pingback: எங்கே போயின 500 / 2000 ரூபாய் நோட்டுகள்…? ATM-கள் முடங்கக் காரணமென்ன …? – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.