பிரதமரிடம் என்ன குறை….??? கரன் தாப்பர் சொல்கிறார் …..


புகழ்பெற்ற செய்தியாளர் (journalist) கரன் தாப்பர் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கிறது.

விருப்பு, வெறுப்பு இல்லாமல், தன் உள்ளத்தைத் திறந்து – அதன் பாதிப்பை வெளிப்படுத்துகிறார்…. நம் விமரிசனம் தள நண்பர்கள் இதை அவசியம் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இதை ஆங்கிலத்திலேயே படிப்பது தான் சிறப்பாக இருக்கும் என்பதால், அப்படியே கீழே தந்திருக்கிறேன் –
(நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்….)

பாஜக நண்பர்கள் பலபேர் இந்த தளத்திற்கு வருகிறார்கள். என் எழுத்தை விரும்பி படிக்கிறார்கள்…(அதற்கு என் நன்றிகள்…).. ஆனால், நான் சொல்லும் எந்த கருத்தையும் ஏற்க மறுக்கிறார்கள்… நான் எழுதுவதைப்பற்றி, சிந்திக்கவே
மறுக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்… ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே ஒரு தீர்மானத்துடன் தான் படிக்கவே வருகிறார்கள்….

கரன் தாப்பர் ஒரு சுதந்திரமான சீனியர் ஜர்னலிஸ்ட்… அட்லீஸ்ட் அவர் சொல்வதையாவது, அந்த நண்பர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

——————-

A moral leadership deficit
The response to Kathua and Unnao highlights an absence

-Written by Karan Thapar |
Updated: April 20, 2018 8:34:33 am

This may sound like a rhetorical question but I would strenuously argue it’s not. Indeed, at the moment, for
us in India, it’s a particularly pertinent and relevant one. What is the most important responsibility of a
head of government?

I can foresee a multiplicity of answers. You could say it’s to ensure economic growth and improve the living
conditions of the people. Some would say it’s to protect national security and the sovereignty of our
borders. Others might opt for giving the country a comprehensive vision of development and then taking the
necessary steps to realise it. None of these answers is wrong. It’s just that they don’t go far enough. The
problem is they are limited to the obvious tasks any prime minister has to fulfill.

My answer is different. At a time when a country is troubled, in anguish and even in a state of self-doubt,
the primary duty of a prime minister is to articulate a national response around which we can all rally. This
is more than political or economic leadership, it’s moral or ethical leadership. In fact, it’s an attempt
to salve wounds, heal hurt and pain, restore confidence and rebuild our belief in ourselves.

Let me add, this is an aspect of leadership that is most necessary when a country faces a crisis. History
has many convincing examples. I would say this is the quality that made Winston Churchill a great leader
during World War II, Franklin Roosevelt at the time of the recession, Deng Xiaoping after the Cultural
Revolution and Nelson Mandela after the end of apartheid. Each of them gave voice to the spirit that
became the binding force of their countries at a time of difficulty and doubt. In doing so, they gave their
people the strength and conviction which otherwise might have been missing. Their moral leadership made a
critical difference.

Today, after the ghastly Surat, Unnao and Kathua rapes, India is a troubled country. In fact, I would go
further. We face a moment of crisis, of grave self doubt. We’re more than shaken and disgusted. “How could
we have done this?”

This is the question we keep asking but cannot answer. This is why we needed the prime minister to take a
moral stand we could rally around.

Eventually he did but only in generic terms. The specific and horrific details of Kathua and Unnao were
not mentioned. More importantly, by the time he spoke, it seemed it had been forced out of him. It didn’t feel
like leadership. More like proof of his vacillation, even indifference.

The sad truth is this is not the first time he has failed to rise to the challenge. It happened when
Christians felt threatened in 2014 and 2015 and, again, when gau rakshaks were running riot attacking Muslims
and Dalits in 2016 and 2017. On each occasion, we waited to hear the prime minister take a stand but he
took so long to do so that when, at last, he spoke many took it not as a mark of his moral leadership but,
paradoxically, of his unconcern. It seemed to underline his unwillingness to lead from the moral front. In
these matters timing is critical whilst Narendra Modi’s delays seemed deliberate.

My conclusion is stark but simple. It’s this moral dimension of leadership — often the most critical of
all — that Modi either doesn’t believe in or cannot rise up to. Whatever his other achievements — and, let
me be honest, there are many — this lapse is why many criticise him whilst not a few who voted for him are
today disappointed and dismayed. For me it’s the paramount problem with the prime minister’s leadership.

The writer is president, Infotainment Television.
(http://indianexpress.com/article/opinion/columns/kathua-unnao-rape-case-modi-silence-bjp-govt-5144317/ )

————————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to பிரதமரிடம் என்ன குறை….??? கரன் தாப்பர் சொல்கிறார் …..

 1. Pingback: பிரதமரிடம் என்ன குறை….??? கரன் தாப்பர் சொல்கிறார் ….. – TamilBlogs

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:
  • மெய்ப்பொருள் சொல்கிறார்:

   முக்கியமான பகுதி இதுதான் :
   The fear is that, if the economy falters, Mr Modi will try to maintain his popularity by stirring up communal tensions. That, after all, is how his Bharatiya Janata Party first propelled itself to government in the 1990s. Mr Modi himself was chief minister of Gujarat in 2002 when rioting there killed at least 1,000 people, most of them Muslims. To this day, he has never categorically condemned the massacre or apologised for failing to prevent it.

 3. tamil_alagu சொல்கிறார்:

  every politician make use of the situation when there is a communal violence.i remeber when a communal violence broken out in west bengal, mamta ji just watching, just without taking any actions against the rioters.
  All politicians are same, no difference i guess
  Bull shit politicians

 4. T.Thiruvengadam சொல்கிறார்:

  Kindly recall Karan Thar interview with Modi Acouple of years ago.The problem moral deficit has been building up n the country because the country is torn by individual leaders and their personal political agenda and vote bank politics.It is shameful to put blame on one person when the entry country is in the hands of persons whom Winston Churchill Calle d “thighs,freebooters and rascals”at the time of transfer of power.Thiruvengadam

 5. Ram சொல்கிறார்:

  T.Thiruvengadam
  since I am finding for the first time a person in you who praises Winston Churchil –
  the Enemy of India, Hope you belong to those group of persons referred to by him

 6. அறிவழகு சொல்கிறார்:

  Acheivements of Fancy Dress Baba [Modi]…..

  1) Failed Foreign Diplomacy
  2) Extreme Fuel Prices
  3) Looting by Banks
  4) Unemployment
  5) Increase in Number of Crimes against
  5.a) Women 5.b) Minorities 5.c) Dalits
  6) Failed Reforms
  7) Foolish International Defence contracts
  8) Demonitisation
  9) Surveillence of citizens
  10) Nepotism towards PETs
  11) Creating unnecessary fear [even in judiciary] among citizens etc…..
  12) Lack of moral leadership
  The list is endless…..!!!!

  • tamil_alagu சொல்கிறார்:

   அறிவழகு ஐயா,
   இன்னும் நீங்கள் கீழ் காணும் பிரச்சினைகளையும் சேர்த்து விடுங்கள்.மோடி பதில் சொல்லட்டும்.

   13 ) உங்கள் வீட்டில் காலையிலிருந்து கரண்ட் இல்லை
   14 ) உங்கள் வீட்டில் காலையிலிருந்து தண்ணீர் வரவில்லை
   15 ) பல வருடங்களாக மழை இல்லை
   16 ) வெயில் அதிகமாக அடிக்கிறது
   17 ) இளநீர்விலை ஏறி விட்டது
   18 ) உங்கள் மண்டையில் முடி கொட்டுகிறது

   etc etc
   இவை எல்லாவற்றிற்கும் மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    tamil_alagu,

    உங்களிடம் கருத்துப் பஞ்சம் இருப்பது தெரிகிறது.
    ஏட்டிக்குப் போட்டி எதையாவது எழுதி வைப்பதில் பயனில்லை.
    அது உங்களது பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
    முடிந்தால், அறிவழகு கூறுவது எந்த விதத்தில் தவறு என்பதை
    விளக்கிக்கூற முயலுங்கள்… இல்லையேல் – அடக்கமாக இருப்பது நல்லது.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • tamil_alagu சொல்கிறார்:

     ஐயா,
     கீழ் காணும் பட்டியலில் தாங்கள் உதாரணத்துடன் மோடி எவ்வாறு சம்பந்த பட்டுள்ளார் என்று விளக்கம் தர முடியுமா

     1) Failed Foreign Diplomacy
     3) Looting by Banks
     6) Failed Reforms
     9) Surveillence of சிடிஸின்ஸ்

     அல்லது ஏதோ வாய்க்கு வந்த பட்டியலா?

     • Ram சொல்கிறார்:

      tamil_alagu,

      நீங்கள் எழுதியதற்கு, உங்களுக்கே விளக்கம் தெரியாமல் மற்றவர்களை
      கேட்கிறீர்களே.. சரியாகத்தான் எடை போடப்பட்டிருக்கிறீர்கள்.
      இதற்கு கே.எம்.சார் எதற்கு ? நான் போதுமே;

      1) இந்தியாவைச் சுற்றியுள்ள இத்தனை நாடுகளில் எந்த நாடு நமக்கு நெருங்கிய நட்புறவுடன் இருக்கும் நாடு ? எதாவது ஒன்றையாவது சொல்ல முடியுமா ?

      2) வங்கிகளில் தொடர்ந்து நடந்த கொள்ளைகளுக்கும், இப்போதும் வெளி வந்துகொண்டிருக்கும் திருட்டுகளுக்கும் நிர்வாக ரீதியாக எந்த அரசு
      பொறுப்பு ? பாகிஸ்தான் அரசா அல்லது சீன அரசா ?

      3) கடந்த 4 ஆண்டுகளில், எந்த ஒரு திட்டமாவது உருப்படியாக நிறைவேறி இருக்கிறதா ? கற்பழிப்புகளும், கலவரங்களும் அதிகமானதைத்தவிர
      வேறு எது முன்னேறி இருக்கிறது ?

      4) உங்களைப்பற்றிய அத்தனை அடிப்படை தகவல்களும் இன்று அரசாங்கத்திடம் இருக்கின்றன. அது உங்களுக்கே தெரியாது.
      இதற்குப் பெயர் தான் சர்வைலன்ஸ் ஆஃப் சிடிசென்ஸ்.

      பாஜக பக்தர்களை கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள்
      என்று சிலர் வர்ணிப்பதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
      ஒருவர் அறிவு குறைச்சலாக, சிந்திக்கும் திறன் குறைச்சலாக இருந்தால் அதில் தவறு இல்லை. ஆனால், மற்றவர்கள் எடுத்துக் காட்டினாலும்,
      அதனை ஏற்றுக்கொண்டு அடக்கமாக இல்லாமல், மீண்டும் மீண்டும் தன் அறிவீனத்தை பறைசாற்றிக்கொண்டே இருப்பவர்களை என்னவென்று அழைப்பது ? சம்பந்தப்பட்டவரே சொல்லலாம்.

 7. Ram சொல்கிறார்:

  அறிவழகு,

  உங்கள் பட்டியலின் அடுத்த பகுதியையும் சீக்கிரமே வெளியிடுங்கள்.
  தங்கள் ‘கடவுள்’ என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று அவரது
  பக்த’ர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

 8. தமிழன் சொல்கிறார்:

  கரன் தப்பர் சொல்வது சரியாகத்தான் தெரிகிறது.

  இருந்தாலும், 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி என்ன என்ன விதத்தில் மோடி அவர்களின் ஆட்சியைவிடச் செய்தது, 4 வருடத்தில் என்ன அவர் செய்யவில்லை என்று சொல்வதுதான் சரியான விமரிசனமாக இருக்கும்.

  வேலையில்லாத் திண்டாட்டம், வங்கியின் வாராக்கடன்கள், பெட்ரோல் விலையேற்றம், வெளிநாட்டுக் கொள்கை போன்று எல்லாமே மோடியின் திறமைக்குறைவு என்று சொல்வது வெறுப்பினாலே தவிர விமர்சனத்தினால் அல்ல.

  மோடி செய்யாததாக நான் நினைப்பது, firm quick reaction when major crime happens, that was initiated by BJP. டிமானிடைசேஷன் எதிர்பார்த்த பலன் தரவில்லை. குற்றம் செய்தவர்கள்மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குமேல், குற்றவாளிகளுக்குத் துணைபோன சம்பவங்கள் நிறைய இருக்கு (லலித்மோடிக்கு இன்னொரு தேசத்துக்கான விசா போன்று பல சம்பவங்கள்… இதற்கு கட்டுச்சோத்தில் பெருச்சாளியான கிரிக்கெட் சம்பந்தமுள்ள ஜெட்லியும் காரணமாக இருக்கக்கூடும்). ஒரு தலைவர் உடனே ரியாக்ட் செய்யும்போதுதான் அவர்மீது மதிப்பும் மரியாதையும் பிறக்கும். இல்லையெனில், எப்படி காங்கிரசை வெறுத்து மோடி அவர்களுக்கு ஆதரவு பெருகியதோ அதேபோல், இன்னொரு புதியவர் நம்பிக்கை கொடுத்தால், மோடிக்கும் காங்கிரஸுக்கு நேர்ந்த கதிதான் நடக்கும்.

  மற்றபடி அறிவழகு கொடுத்துள்ளதுபோன்ற லிஸ்டுகளில் உண்மை இல்லை. மோடி வெறுப்பு மட்டும்தான் இருக்கிறது.

  வெளிநாட்டு டிப்ளமசி எதில் தோல்வியுற்றது? எந்த விதத்தில் தோல்வி? அப்போ, காங்கிரஸ்+திமுக, விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் அழிக்க உதவியது foreign diplomacy victoryயா?

  Extreme fuel price – இந்திய அரசுக்கு வருமானம் பல்வேறு வழிகளில் வராது, கருப்பு எகானமியாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் காரணம். அதனால்தான் பெட்ரோல் விலையேற்றம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு முழு முதல் காரணம் காங்கிரஸ். 4 வருடங்களில் மோடி அரசு இதற்குத் தீர்வு காணவில்லை. இப்போதுதான் 60% டாகுமெண்டட் டிரான்சாக்‌ஷன் நடக்கிறது. மோடி அரசு இதில் தோல்வி என்று சொல்லவேண்டுமென்றால், காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில், பெட்ரோல் விலை, மற்ற நாடுகளைப்போன்று ஆக்குவோம், லிட்டர் 40 ரூபாய்க்குக் கொடுப்போம் என்று சொன்னால், பாஜகவுக்கு வாக்களிக்காமல் காங்கிரசுக்கு வாக்குகள் செல்லும். அரசியல் கொஞ்சம் தெரிந்தவர்களுக்குத் தெரியும், இந்தியாவில், தங்கம் விலை குறைந்தது மொரார்ஜி தேசாய் ஆட்சியில் மட்டும்தான்.

  Looting by Banks – இதனை ஏற்க முடியாது. மோடி அரசு என்ன செய்யவேண்டும் என்று சாதாரண மக்கள் நினைப்பது, யார் அந்தக் கடன்களுக்கு கையெழுத்திட்டார்களோ அவர்கள் அனைவருக்கும் பென்ஷன் கிடையாது, உடனடிச் சிறை என்பதுபோன்று ஆக்‌ஷன் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறோம். கண்ணுக்குத் தெரிந்த 500+ தொலைக்காட்சி கனெக்‌ஷன் ஊழலுக்கு, கோர்ட், ஊழல் நடக்கவே இல்லை என்று சொல்கிறது. இப்படிப் பட்ட நாட்டில் ஒரே இரவில் எவ்வாறு மோடி ஆக்‌ஷன் எடுக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தக் கடன்கள் 90% காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டவை. இல்லை, இது வேறுவகையான ஊழலைக் குறிக்கிறதா என்பதற்கு விளக்கம் இல்லை.

  தில்லியில் மருத்துவர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது (பேருந்தில்) எந்த அரசு நடந்தபோது? அதுதான் வெளிப்படையாகத் தெரிந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஆரம்பம் (அல்லது கோயமுத்தூரில் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றம்). மைனாரிட்டிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன என்று சொல்லும்போதே, மோடி அரசில் மைனாரிட்டிகளில் டெரரிசம் (மன்மோகன் சிங் ஆட்சியில் நடைபெற்றதுபோன்று) நடந்திருக்கிறதா என்று மோடி ஆதரவாளர்கள் கேட்கக்கூடும்.

  இதைப்போன்றே ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் விளக்கம் சொல்லலாம். நாட்டில் நடக்கும் அனைத்துக்கும் மோடிதான் காரணம் என்று சொல்வது ‘வெறுப்பை உமிழ்வது’. ஆனால், நமக்குக் கண்ணுக்குத் தெரிந்த தவறுகளில் மோடி அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதும் உண்மை. அதனால்தான் மோடியின்மீதான நம்பிக்கை மக்களிடம் குறைந்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

  • tamil_alagu சொல்கிறார்:

   வாய்க்கு வந்த படி பட்டியல் தயார் செய்துள்ளார்,
   பட்டியலுக்கு விளக்கம் கேட்டால் , நாம் ஏட்டிக்கு போட்டியாக உளறுகிறோம் என்று பட்டம் சூட்டுகிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தமிழன்,

   கரன் தாப்பர் எழுதியிருப்பதை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்….நீங்கள் எழுதியிருப்பதில், 95 % அதற்கு சம்பந்தமில்லாததாக இருப்பது – உங்களுக்கே இப்போது தோன்றக்கூடும்……!!!

   அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது….. சரி தானா…? 🙂

   மோடிஜி ஆதரவாளராக கருதப்பட்டு விடுவோமோ என்று தயக்கமாக இருக்கிறது…. அதே சமயம், மோடிஜி அபிமானம் – விட்டுக் கொடுக்கவும்
   மனமில்லை.

   மன்மோகன் சிங் அதிகாரத்தை விட்டு, ஆட்சியை விட்டுப் போய் ஒரு மாமாங்கம் ஆகி விட்டது… இன்னமும் கூட, மன்மோகன் சிங் ஆட்சியில்
   நடக்கவில்லையா…. மன்மோகன் சிங் செய்தாரா…? மன்மோகன் சிங் ஏன் செய்யவில்லை… என்று மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மீது குற்றம் சொல்லத்தான் மனம் வருகிறதே தவிர, ஆமாம்… நிர்வாகம் சரியாக இல்லை தான் என்று கூற மனம் இல்லை…. உம்ம்ம்ம்…புரிகிறது…. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை…. 🙂 🙂

   கடந்த 4 ஆண்டுகளாக யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள் தான் நிர்வாக சீர்கேடுகளுக்கு முழுபொறுப்பு…. அவர்களைத்தான் மக்கள் கேள்வி கேட்பார்கள்… அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்… ஆட்சி மாறி 4 ஆண்டுகள் ஆனபிறகும், இதெல்லாம் overnight மாறி விடுமா என்கிற கேள்வி எப்படி பொருந்தும்…?

   தொடர்ந்து சிபிஐ வழக்குகள் எல்லாம் தோல்வியில் முடிவதற்கு அரசாங்கம் காரணமில்லை என்று சொல்வது வெட்கக்கேடு… கையாலாகாதத்தனம். தோல்விக்கு காரணம் அரசு வக்கீல்கள்… அந்த வக்கீல்கள் அனைவரும் பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட – கட்சி சார்ந்த வக்கீல்கள்… அரசாங்கம் விரும்பியதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள்…

   டிமானடைசேஷன் பற்றி நான் எதிர்த்து எழுதியபோது, நீங்கள் மிகத்தீவிரமாக டிமானடைசேஷனை ஆதரித்தீர்கள்…
   இப்போது உங்கள் கருத்து …..?

   Anyway – உங்கள் கருத்து -உங்களுக்கு… You are free and entitled to have your own opinion…. அதை நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
   ஆனால், நீங்கள் எழுதியதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமல்லவா – அதனால் தான் இவ்வளவு விவரமாக எழுதுகிறேன்.

   இவ்வளவு எழுதுகிறேனே தவிர, 2019-ல் –
   நீங்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம் மீண்டும் இதே ஆட்சி தான் வரும்
   என்பதில் – எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை… 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • அறிவழகு சொல்கிறார்:

    இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில்,

    // நடிகர் பிரகாஷ்:

    காங்கிரஸ் அரசு ஊழல் செய்ததாக கூறி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    ஆனால், இந்தியாவில் மிகப்பெரிய புற்றுநோய் போன்று வகுப்புவாதம் வளர்ந்து வருகிறது. முதலில் அதைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்பின் ஊழலை ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கலாம்.

    என்னைப் பொறுத்தவரை பாஜக என்பது புற்றுநோய்; ஆனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் சளித்தொல்லை போன்றவைதான். சளிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் புற்றுக் நோய்க்கு சிகிச்சை இல்லை. மரணம் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்’’ எனக்கூறினார். //

    என்று செய்தி வந்துள்ளது.

    உண்மை. உண்மை. உண்மை.

    இந்த மாதிரி இன்னும் அதிகம் வலிமையான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    இந்த ஆர்எஸ்எஸ்/பாஜக என்ற புற்றுநோய் இந்த நாட்டையே அழித்து ஒழிக்கும் அளவுக்கு படுபயங்கரமான நிலையில் வளர்ந்து நிற்கிறது. இப்படியே விட்டோம் என்றால் படு நாசம் நிகழ்வது தின்னம்.

    ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் இவர்களை தடுத்து நிறுத்தும் வலிமையான சக்தி தென்படவில்லை.

    ஆனாலும், நான் நம்பிக்கை இழக்கவில்லை, இறைவன் தீயவைகளை அதிக நாள் விட்டு வைப்பதில்லை என்று. என்னுடைய பிரார்த்தனை,

    “இறைவா இந்த விஷச் செடிகளை நான் இருக்கும் போதே அழித்து ஒழிப்பாயாக”.

  • அறிவழகு சொல்கிறார்:

   மோடிக்கு திறமை குறைவா…!? ச்சே ச்சே. அப்படி எல்லாம் சொன்னா அது அதிகப்பிரசங்கித்தனம். ரொம்ப கூடுதலாக இருக்கு. அது தான் பிரச்சனை.

   கல்லுளிமங்கத்தனம், தன்னை தானே மோகித்தல், பொய், ஏற்றிவிட்ட ஏணி போன்றவர்களை எட்டி உதைக்கும் குணம் இன்னும் கொலை காரர்களுக்கு ஆதரவு ப்லா… ப்லா….இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மோடியை விரும்பனும்.

   வேலையில்லாத் திண்டாட்டம், வங்கியின் வாராக்கடன்கள், பெட்ரோல் விலையேற்றம், வெளிநாட்டுக் கொள்கை எல்லாத்துக்கும் காங்கிரஸ் தான் காரணம். மோடிக்கு இதில் எந்த பங்கும் இல்லை. இது என்ன ஒரு கையாலாகாத் தனம்.

   பாஜக காரர்களின் அதே தீய்ந்து போன பல்லவி.

   கருப்பு பொருளாதாரம் இப்ப மட்டும் தான் இருக்கா? காங்கிரஸ் காலங்களில் இல்லையா? Fuel price இப்படி தான் வின்னை தான்டி அப்போதெல்லாம் சென்றதா?

   டிமானிடைசேஷன் எதிர்பார்த்த பலன் தரவில்லை….. குற்றவாளிகளுக்குத் துணைபோன சம்பவங்கள் நிறைய இருக்கு….. நமக்குக் கண்ணுக்குத் தெரிந்த தவறுகளில் மோடி அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதும் உண்மை…..! ம்….! மற்றவர்கள் சொன்னால் உண்மை இருக்காது. ம்…!?

   ஏன் இந்த பசப்பு வார்த்தைகள்.

   இதற்கெல்லாம் மறு பெயர் என்ன?

   அப்பட்டமான தோல்வி இல்லையா?

   மைனாரிட்டிகள் டெரோரிசம் அவர்கள் பெயரில் நடத்தியதே ஆர்எஸ்எஸ்/பாஜக அதன் தீவிரவாத அமைப்புகள் தானே. மோடி ஆட்சியின் போது எப்படி நடக்கும்.

   காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக அதன் தீவிரவாத அமைப்புகள் இந்நாட்டின் சாபக்கேடுகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.