இன்று தமிழக அரசியல் “ஜோக்” தினம்….!!!


வழக்கமாக இங்கே சீரியஸான விமரிசனங்களையே படித்து,
நொந்துபோயிருக்கும் வாசக நண்பர்களுக்கு –
இன்று ஒரு வித்தியாசமான வரவேற்பு….!!!

தமிழக அரசியல் “ஜோக்கர்”கள்…!!!
——————-


ஜோக்-1 :இயக்குநர் பாரதிராஜா, காவல் ஆணையரை நேரில் சந்தித்து – ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
வெளியே வந்த அவர் கூறியது – “கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக நடைபெற்ற பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கவும்( …??? )

– நடந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு வருத்தம் தெரிவிக்க 🙂 -வும் வந்தோம்.

—————

ஜோக்-2 : நடிகர் சிம்பு – சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு போராட்டம் நடத்துவதற்காக நாங்கள் வரவில்லை.
மன்சூர் அலிகான், கடந்த வாரம் பல்லாவரத்தில் கைது செய்யப்பட்டிருந்த பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு –

தான் சிறுநீரக கல் நீக்க ஆபரேஷன் மேற்கொண்டிருந்தபோதிலும் மருத்துவ சிகிச்சை
டுயூப்களை எடுத்து போட்டு விட்டு 🙂 🙂

போராட்டம் நடத்தியுள்ளார். அவரை 7 நாட்களாக வைத்திருக்க காரணம் என்ன என கேட்டு வந்துள்ளேன் என்றார் சிம்பு. மன்சூரை கைது செய்தது எதற்கு, எந்த அடிப்படையில் என தெரியவில்லை. 🙂 🙂

நாம் போலீஸாருக்கு எதிரானவர்கள் கிடையாது. ஐபிஎல் போராட்டத்தின் போது நடந்த பிரச்சினையை வன்முறை என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால் காக்கி சீருடை அணிந்திருக்கும் நம்மை பாதுகாக்கும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை. 🙂 🙂

ஆனால் அதற்கு முன்னாடி என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸார் நினைத்திருந்தால் தாக்குதல் நடத்திய நபரை எப்படி வேண்டுமானாலும் தாக்கியிருக்கலாம். 🙂

ஆனால் அந்த நபர் காவிரி உரிமைக்காக போராடுகிறார் என்பதே உணர்ந்தே அந்த போலீஸ்காரர் அடி வாங்கியுள்ளார் என நான் நினைக்கிறேன். 🙂 🙂

கொசுறு – மன்சூர் அலிகான் கைது பற்றி விவரம் கேட்க நடிகர் சிலம்பரசன் இன்று கமிஷனர் அலுவலகம் வந்தார். அப்போது அவருடன் அனுமதியின்றி சில ரசிகர்களும் கமிஷனர் அலுவலகத்திற்குள் வந்துள்ளனர். இதையடுத்து அனுமதியின்றி கமிஷனர் அலுவலகத்திற்குள் கூட்டமாக ஒன்றுகூடியதற்காக,

– சிம்பு ரசிகர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்… 🙂 🙂

————–

ஜோக்-3 : திருமதி தமிழிசை சௌந்திரராஜன் – எஸ்.வி.சேகர் தான் பகிர்ந்த கருத்தை அகற்றியிருக்கிறார்….மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

-இருப்பினும் அதைமீறி- 🙂

அவருடைய கருத்து யார் மனதையாவது புண்படுத்தப்பட்டிருந்தால், அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி (..??? ) செய்துக் கொண்டிருக்கின்றேன்… 🙂 🙂

கொசுறு – நான் பத்திரிகையாளர்களிடம் உள்ளுணர்வுடன் பழகிக்கொண்டிருக்கின்றேன். எனக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்பானது அல்ல” என தமிழிசை தெரிவித்தார். 🙂 🙂

————

ஜோக்-4 – விகடனின் சீரியசான முயற்சி…. ‘ஹெச் ராஜாவை பி.ஜே.பி-யிலிருந்து பதவி விலக வைக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழிசை சௌந்தர்ராஜன்?’ என்ற பாலபாரதியின் கேள்வியைக் கேட்பதற்காக தமிழிசை சௌந்தர்ராஜனைத்
தொடர்புகொள்ள முயற்சித்தோம் – விகடன் நியூஸ்….! 🙂 🙂

அப்போது நமது அழைப்பை ஏற்ற அவருடைய உதவியாளர் ”மேடம் மீட்டிங்கில் இருப்பதால், தற்போது அவரால் பேச முடியாது” என பதில் அளித்து அழைப்பைத் துண்டித்தார். 🙂 🙂

——————————————————-

பின் குறிப்பு – (இன்று மட்டும்) வாசக நண்பர்களும், தங்கள் பங்கிற்கு பின்னூட்டம் மூலம் ஜோக்’குகள் கூற வரவேற்கப்படுகிறார்கள்… !!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இன்று தமிழக அரசியல் “ஜோக்” தினம்….!!!

 1. Tamil Us சொல்கிறார்:

  வணக்கம்,

  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

 2. BVS சொல்கிறார்:

  இது எமது பங்கு ஜோக்:

  ‘‘தலைநகரை மாற்றிவிடுங்கள்: மவுன பாபா நாட்டின் பிரச்சினைகளை வெளிநாடுகளில்தான் பேசுகிறார்’’ – மோடியை விளாசிய சிவசேனா

  -தமிழ் இந்து செய்தி –

  பிரதமர் மோடி இந்தியாவில் நடந்த பலாத்காரங்கள் குறித்து லண்டனில் பேசுகிறார்.

  இந்தியாவுக்கு அவப்பெயரைத் பெற்றுத்தரும் சம்பவங்களை ஏன் மோடி வெளிநாடுகளில் பேசுகிறார், உள்நாட்டில் அவரின் கருத்துக்களை கேட்க தவமிருக்கிறார்களே.

  இதேபோன்றுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உள்நாட்டில் அறிவித்துவிட்டு, பிரதமர்மோடி ஜப்பானுக்குப் பறந்துவிட்டார்.
  அங்கிருக்கும் இந்தியர்களிடம் கறுப்புபணம், ஊழல் குறித்து பேசினார்.

  இதுகுறித்துப் பேச மோடியின் ஆதரவாளர்கள் முன்வரமாட்டார்கள். மன்மோகன்சிங் கூட இதுகுறித்து எல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்,
  ஆனால், மோடி மவுனமாகிவிட்டார்.

  “பாஜகவுக்கு எதிராக விதியே எடுத்திருக்கும் பழிவாங்கும் நடவடிக்கை இது ”

  -தமிழ் இந்து –

 3. Raghuraman N சொல்கிறார்:

  அய்யா.

  துக்ளக்கின் ஒன்னறை பக்க நாளேடு படித்த திருப்தி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரகுராமன்,

   என்னால் அந்த உயரத்தை தொட முடியாது…!
   இருந்தாலும், உங்கள் பாராட்டு மகிழ்ச்சியளிக்கவே செய்கிறது.
   நன்றி நண்பரே.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: இன்று தமிழக அரசியல் “ஜோக்” தினம்….!!! – TamilBlogs

 5. tamilmani சொல்கிறார்:

  காவிரி மேலாண்மை வாரியமும் I P L எதிர்ப்பும் :

  மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம்
  காட்டுகிறது என்று தமிழகத்தில் உள்ள பல
  சிதறு தேங்காய் கட்சியினர் I P L எதிர்ப்பு நடத்தி சென்னையில் உள்ள போட்டிகளை
  பூனாவுக்கு மாற்றிவிட்டார்கள். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசுக்கு
  எதிர்ப்பு காட்டும் முக்கியமான எதிர்க்கட்சியான தி மு க அதில்
  பங்கேற்கவில்லை. திமுகவின் இந்த இரட்டை வேட நிலைப்பாட்டுக்கு
  முக்கிய காரணம் I P L போட்டிகளில் பங்கு பெறும் ஹைதெராபாத்
  “சன் ” ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்கள் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்கள்
  ஆவார்கள். இதை ஏன் திருமா , வைகோ, சீமான் ,அமீர் ,பாரதிராஜா மற்றும் உதிரிகள்
  கண்டு கொள்ளவில்லை? அல்லது தெரிந்தும் நடிக்கிறார்களா? மற்ற எல்லா போராட்டங்களுக்கும்
  கூட்டு சேரும் இவர்கள் I P L எதிர்ப்பில் மட்டும் ஒன்று சேர வில்லை .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.