“எங்கப்பன் குதிருக்குள் இல்லை…” என்று துணைவேந்தர் ஏன் துடியாய்த் துடிக்கிறார்…?” நிர்மலா தேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் இதைச் செய்துள்ளனர் ” –

விசாரண நடந்துகொண்டிருக்கிற வேளையில், துணைவேந்தர் இப்படி துடிப்பது ஏன்….?

—————
விகடன் செய்தி தெரிவிக்கிறது : –


தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி பட்டமளிப்புவிழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை கலந்துகொண்டார். விழா முடிந்ததும்
பத்திரிகையாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் செல்லதுரை,

“நிர்மலா தேவி பேசிய அந்த இரண்டு ஆடியோக்களில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் உங்களுக்கே உண்மை என்னவென்று தெரியும். பல்கலைக்கழகத்தின் பெயரைக் களங்கப்படுத்துவது புரியும். சம்பந்தப்பட்ட கல்லூரி ஒரு தன்னாட்சி பெற்ற கல்லூரி, அதற்குத் தேர்வு நடத்துவதும், தேர்வுத்தாள் திருத்துவதும் அதே கல்லூரிதான். அப்படி இருக்க,
பல்கலைக்கழகம் எப்படி அந்த மாணவிகளுக்கு மார்க் போட முடியும்?. மேலும், பிஹெச்.டி சீட் வாங்கித் தருகிறேன், ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுக்கிறேன் என்கிறார் நிர்மலா தேவி.

அந்த 4 மாணவிகள் இப்போதுதான் இளங்கலை படித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து முதுகலை படிக்க வேண்டும். அதில் 55 சதவிகித மார்க் வாங்க வேண்டும். அதன்பிறகு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிப்படி, நுழைவுத்தேர்வு எழுதி மதிப்பெண் வாங்கிய பிறகுதான் பிஹெச்.டி படிக்க முடியும். மேலும், ஸ்காலர்ஷிப் கொடுப்பது பல்கலைக்கழகம் இல்லை.
பல்கலைக்கழக மானியக்குழுதான் கொடுக்கும்.

அப்படி இருக்க, பல்கலைக்கழகத்துக்கும் அந்த ஆடியோவுக்கும்
அதைப் பேசிய நிர்மலாதேவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மோசடி செய்வதற்காகத் திட்டமிட்டு அந்த மாணவிகளைப் பேச வைத்துள்ளனர்.

அதற்குச் சட்டவிரோதமாகப் பல்கலைக்கழகத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நான் துணைவேந்தராகப் பதவியேற்றபோது பல்கலைக்கழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அனைத்தையும் சீர் செய்தேன். இது பல்கலைக்கழகத்தின் நலம் விரும்பாதவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனக்கு பல்வேறு சிக்கல்களைக் கொடுத்துக்கொண்டு
இருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பெரிய அளவில் அரசியலாக்குகிறார்கள். இல்லாத கெடுதல்களைச் செய்துவருகிறார்கள்.

அவர்களின் வேலையாக இது இருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது’’ என்றார் கொதிப்போடு.

( https://www.vikatan.com/news/article.php?aid=122918#rss )

————————————————————-

துணைவேந்தர் அந்த பல்கலைக்கழகத்திற்கு சேர்த்திருக்கிற புகழ் பற்றியெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவ்வளவு நாட்களாக, லஞ்சம்-ஊழல் மட்டும் தான் பேசப்பட்டு வந்தது. இப்போது “பாலியல்” புகழ் வேறு…. பல்கலைக்கழகம் இப்படி நாற்றமெடுத்துப் போனதற்கு துணைவேந்தரும் முக்கிய காரணம் இல்லையா…?

தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழக துணைவேந்தர்களை சந்திக்க வேண்டுமானால், இனி சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும் என்கிற அளவிற்கு இந்த பல்கலைக்கழகங்கள் நாசமாகிப் போயின…

அந்த அம்மையாருக்கும், பல்கலைக்கழகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்றால், அவர் அடிக்கடி பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்குவானேன்….? மார்ச் மாதத்தில் கூட ஒரு வாரத்திற்கு மேல் தங்கி இருந்திருக்கிறாரே…? கவர்னர் கலந்துகொண்ட பல்கலைக்கழக விழாவில் அந்த அம்மையார் தீவிர பங்கெடுத்துக் கொண்டது எப்படி …..?

சம்பந்தம் இல்லையென்றால் – ஆடியோ விஷயம் வெளிவந்ததும், கவர்னரைக் கூட கலந்தாலோசிக்காமல் – இவர் அவசர அவசரமாக தனக்கு வேண்டியவர்களை வைத்து விசாரணை கமிட்டி அமைத்தது ஏன்…? பின் கவர்னருக்கு தெரிய வந்ததும், கலைத்தது ஏன்…?

” மோசடி செய்வதற்காகத் திட்டமிட்டு அந்த மாணவிகளைப் பேச வைத்துள்ளனர்…” என்று இவர் சொல்வது மாணவிகள் பொய் சொல்கிறார்கள் என்கிற அர்த்தத்தை தரவில்லையா…?

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இப்படி வெளியில் பேசுவது முறையில்லை என்பது துணைவேந்தர் பொறுப்பில் இருப்பவருக்கு தெரியாதா…? இவர் பேச வேண்டியது, சொல்ல வேண்டியது எல்லாம் -அந்த கமிட்டியிடமும், காவல் துறையிடமும் மட்டும் தானே…?

விசாரணைக்குழு, எப்படிப்பட்ட அறிக்கையை இறுதியில் தந்தாலும் கூட, இந்த மனிதர், இத்தகைய உயர்பதவியை வகிக்க சற்றும் தகுதியற்றவர் என்பதை இவரது பேச்சே உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டிற்கு அவமானத்தை தேடித்தரும் இத்தகைய அசிங்கங்கள் முதலில் தூக்கியெறியப்பட வேண்டும்.

.
———————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “எங்கப்பன் குதிருக்குள் இல்லை…” என்று துணைவேந்தர் ஏன் துடியாய்த் துடிக்கிறார்…?

 1. Pingback: “எங்கப்பன் குதிருக்குள் இல்லை…” என்று துணைவேந்தர் ஏன் துடியாய்த் துடிக்கிறார்…? – TamilBlogs

 2. Ram சொல்கிறார்:

  இது குறித்து கூடுதல் செய்திகள் வெளிவந்துள்ளன:

  பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் உறுதியான போராட்டக்
  குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் இந்தக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர் ஒருவர், “24-ம் தேதி நடத்தப்படும் போராட்டத்தோடு இந்த விவகாரத்தை முடித்துவிட நாங்கள் விரும்பவில்லை.

  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில்தான் நிர்மலா வந்து தங்குவார். அவர் தங்கும் அறையில் வேறு விருந்தினர்கள் இருந்தாலும், அவர்களை உடனடியாக அங்கிருந்து கிளம்பச் சொல்லிவிடுவார்கள். அவரை யார் சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் பரம ரகசியம்.

  இதைக் கண்டறிய ஒரே வழிதான் உள்ளது. அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் நிர்மலா தங்கிய நாட்களில் அங்கிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தால், பல்கலைக்கழகத்தின் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள். சொல்லப்போனால், நிர்மலாவோடு பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்ந்து சந்தித்துப் பேசும் காட்சிகளும் அதில் இருப்பதாச் சொல்கின்றனர்.

  ஒரே ஒரு நிர்மலா தேவியோடு வழக்கை முடித்துவிடுவதற்கு சிலர் அவசரம் காட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக நடந்து வந்த பாலியல் வலையின் அனைத்து சிக்கல்களையும் ஆராய வேண்டியது அவசியம். கப்பலேறிய பல்கலை. மானம் இந்த விவகாரத்தால் பல்கலைக்கழகத்தின் மானமே போய்விட்டது.

  பொதுவாக, உயர்கல்வித்துறையின் மீது ஒரு புகார் வந்தால், அத்துடன் அந்த விஷயத்தை கமுக்கமாக முடித்துவிடவே விரும்புகிறார்கள். நிர்மலா விவகாரம் அப்படிப்பட்டதல்ல. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து முக்கியப் புள்ளிகளும் கைது செய்யப்பட வேண்டும். உயர்கல்வித்துறையை சீர்படுத்த வேண்டும். இதைவிட்டால், மாணவிகளைக் காப்பதற்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை. எனவேதான், உறுதியான பேராசிரியர்கள் தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் போக்கு திசைமாறினால், தெருவில் இறங்கிப் போராடுவதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்றார் உறுதியாக.

  Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-kamarajar-university-various-professor-organisations-formed-a-protest-committee/articlecontent-pf305296-317680.html?utm_source=spikeD&utm_medium=PR&utm_campaign=adgebra

 3. paamaran சொல்கிறார்:

  கவர்னர் ஐயா கூட இதில் மிகவும் அவசரம் காட்டி ஒரு நபர் கமிஷன் அமைத்தது புரியாத புதிர் … ! இரண்டு வித விசாரணை ..? எதன் மீது நடவடிக்கை ….? திரு. சந்தானம் கமிஷன் அறிக்கை மீதா … இல்லை சிபிசிஐடி யின் விசாரணையை வைத்தா ….? அதற்குள் துணைவேந்தர் செல்லதுரை! நடுவில் புகுந்து குழப்ப தாெடங்கி விட்டார் …! இது என்ன …..?

  இன்னும் பிரமாதமான பல்டிகள் வந்துக் காெண்டே இருக்கும் …! ஆளாளுக்கு அடிப்பானுங்க பாருங்க அந்தர் பல்டி … பார்க்க தமாஷா இருக்கும் …! கடைசியில் புஸ்வான பல்டின்னு ஒன்னு இருக்கு .. வழக்கு ..விசாரணை … ஜாமின் … வாய்தா என்று மாமூல் காரியங்கள் அரங்கேறும்….
  அதுக்கு காெஞ்சம் வருடங்கள் ஆகும் .. கடைசியில் தீர்ப்பை பார்த்து ….. ராெம்ப ஜாேரா நம்மளை அறியாமலேயே வாயில விரலை வச்சிக்குவாேம் …!!!

 4. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்.. இது tip of an iceberg. பொதுவா போலீஸ் எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கிறது என்று பார்த்தால், அதற்கு குற்றவாளிகளே உதவுவார்கள். குற்றமுள்ள நெஞ்சு தான் அகப்பட்டுவிடுவோமோ என்று பயந்து உடனே குற்றம் சம்பந்தமான தடயங்களை அழிக்கும் முயற்சியிலோ அல்லது குற்றம் சம்பந்தமாக என்ன முன்னேற்றம் நடந்திருக்கிறது என்று அறியும் முயற்சியிலோ ஈடுபடுவார்கள். உண்மை நிச்சயம் வெளியில் வரும், அரசியலாக்கப்படாமல் இருந்தால்.

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சிவகாசி ஜெயலட்சுமி கேஸ் சாதாரணமாக ஆரம்பித்தது .
  அப்புறம் ஏட்டய்யாவில் இருந்து எஸ் பி வரை மாட்டினார்கள் .
  ஒரு வழியாக படத்தை ‘சுபம் ‘ என்று டைட்டில் போட்டு முடித்தார்கள் .
  அருப்புக்கோட்டை நிர்மலா தேவி – என்ன ஆகும் ?

  இவர் படிப்பு முடித்து விட்டு வீடு குழந்தைகள் என்று இருந்தவர் .
  35 வயதுக்கு மேல் வேலைக்கு வந்திருக்கிறார் .
  சில ஆண்டுகளாக குடும்பத்துடன் இல்லை .இதுவே சொல்லப்படும் செய்திகள் .

  நிர்மலா இருந்தது சாதாரண பதவி – அப்புறம்
  அருப்புக்கோட்டை அவ்வளவு பெரிய ஊரும் இல்லை .
  கவனர் துரை , V C , CBCID டிஜிபி போன்றவர்கள் மெனக்கெடுகிறார்கள் .
  கல்வித்துறை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது .

  என்ன நடக்கிறது ? யார் கொடுத்த தைரியம் ?

  வி சி பற்றி சொல்லியே ஆகணும் .
  இவர் ப்யூன் வேலைக்கு கூட வர முடியாது – ஏன் ?
  செல்லத்துரை மேலே கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது .
  கிரிமினல் கேஸ் உள்ளவர் வழக்கில் இருந்து விடுவிக்கும் வரை
  அரசு வேலையில் சேர முடியாது ! I may be wrong in this .

  சத்யா மூவிஸ் கதை இலாகா ஞாபகம் வருது !
  எம் ஜி ஆரை வைச்சு எடுக்காட்டியும் , படம் கண்டிப்பா நல்லா ஓடும் !

 6. Ganpat சொல்கிறார்:

  உலகிலேயே மிகபெரிய அப்பாவிகள் இந்தியர்கள்தான்.ஆயிரக்கணக்கான வழக்குகள் என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில் இந்த வழக்கில் உண்மை வரவேண்டும் நினைப்பது எப்பேர்பட்ட அப்பாவித்தனம்!. குறித்துக்கொள்ளுங்கள்.இன்னும் சரியாக இரண்டுமாதத்தில் நிர்மலா தேவி என்ற ஒரு நபர் இருந்ததையே தமிழர்கள் மறந்திருப்பார்கள்.

 7. Ram சொல்கிறார்:

  சகலகலா வந்தால் நிர்மலா தப்புவார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.