குற்றவாளிகளை தப்புவிப்பது யார் ……?இந்த நாட்டில், தண்டிக்கப்படும் குற்றவாளிகளை விட, சுதந்திரமாக வெளியே திரிந்துகொண்டு, மேலும் மேலும் – இன்னும் தீவிரத்துடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கும் ரெகுலர் குற்றவாளிகளே அதிகம்…

இதற்கு காரணம் என்ன….?
குற்றவாளிகள் சமுதாயத்தில் பெற்றிருக்கும் அந்தஸ்தா…?
அரசியல் செல்வாக்கா…?
அரசியல்வாதிகளின் ஆதரவா…?
பண பலமா…?
வரும்படி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அதி தந்திரமான, வக்கீல்களா…?
சமூகப் பொறுப்புணர்வு இன்றி செயல்படும் சில காவல் அதிகாரிகளா…?
மனசாட்சியின்றி செயல்படும் சில நீதிபதிகளா…?
நிதர்சன நோக்கின்றி கண்மூடித்தனமாக செயல்படக்கூடிய சில நீதிபதிகளா…?

நமக்கு இருக்கும் இத்தகைய சில உணர்வுகளை, பொதுவெளியில் தெரிவித்துள்ள ஒரு நண்பரின் கடிதத்தை கண்டேன். அவர் தன் பெயரை தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்…. எனவே நானும் முயற்சிக்கவில்லை.
நமக்கு செய்தி தான் முக்கியம்… நபர் அல்ல. நான் இந்த இடுகையை எழுத – அந்த கடிதமும் ஒரு காரணம்…!

காந்திஜியின் கனவுகளுக்கு நேர் மாறாய் ஆண்கள் கூட பாதுகாப்பாக செல்ல முடியாத அளவிற்கு நமது ஜனநாயகம் இன்று பாழ்பட்டு கிடக்கிறது.

இதற்கு புறையோடிப் போயிருக்கும் லஞ்சம் ஊழல் இவற்றுடன் தாமதிக்கப்படும் நீதியும் ஒரு காரணமாய் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பொழுதெல்லாம் நீதி மன்றத்திற்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் நீதி கிடைப்பதை தாமதப்படுத்தவே செல்கிறார்கள் என்பதே உண்மை.

ஒரு வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை ஒப்பந்தத்தின்படி மூன்று மாதம் நோட்டிஸ் கொடுத்து காலி செய்ய சொன்னால், குடியிருப்பவர் நீதி மன்றத்தை உடன் நாடுகிறார். நீதி மன்றத்தில் அவ்வழக்கு வாய்தாக்களில் இழுக்கடிக்கப்பட்டு மூன்று நான்காண்டுகளையும் தாண்டிக் கூட நடக்கிறது.

அதுவரை வாடகையை அவர் நீதி மன்றத்தில் செலுத்துவார். உரிமையாளர்குடியிருப்பவரை காலி செய்யவும் முடியாமல்,
வாடகையை உரிய காலத்தில் பெறவும் முடியாமல் திண்டாடுவார். என் நண்பர் ஒருவர் இத்தகைய சிக்கலில் மாட்டிக்கொண்டு மரணாவஸ்தை பட்டதை நேரில் பார்த்து, கையாலாகாதவனாக நானும் நின்றதுண்டு.

விளைவு – இப்பொழுதெல்லாம் பெரும்பாலானோர் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்து, நீதி மன்றங்களை புறக்கணித்து அடியாட்களையும் கூலிப்படைகளையும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

இதன் விளைவாக, அவர்களையும் அறியாமல், சமூகத்தில் குற்றவாளிகளும், கூலிப்படைகளும் பெருக பல சாதாரண பொதுமக்களும் காரணமாகிறார்கள். சட்டத்தின் ஆட்சி ஒழுங்காக நடந்தால் இது நிகழுமா…?

தனி பட்ட நபர்கள் என்ன….. அரசு வங்கிகளே கூட கொடுத்த கடனை சட்டப்படி வசூல் செய்ய கால தாமதம் ஏற்படுகிறது என்று எண்ணி தனியார் (அடியாள்) நிறுவனங்களிடம் தானே அந்தப் பொறுப்பை ஒப்படைக்கின்றன…?
ஆக, அடியாள் வைத்துக்கொள்வது – அரசே அங்கீகரித்த கொள்கையாகி விட்டது…!

தாமதிக்கப்படும் நீதியால் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதற்கு இது போன்று எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.

கொலை, கொள்ளை, அடிதடி என்று பல கிரிமினல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே ஐந்தாறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு தெரிந்த, ரெகுலர் குற்றவாளிக்கு – புதிதாக உருவாகும் ஆறாவது கற்பழிப்பு
வழக்கிலும் கூட, கொஞ்சம் கூட அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப்பற்றி யோசிக்காமல், நீதிமன்றங்கள் ஜாமின் வழங்குகின்றன.

அண்மையில், சில மாதங்கள் முன்பு கூட, சின்னஞ்சிறிய பக்கத்து வீட்டு சிறுமியை நாசப்படுத்திய ஒரு கொலகாரப்பாவிக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததன் விளைவு, வெளிவந்த மறுநாளே, அவன் தனது சொந்தத்தாயையே படுகொலை செய்துவிட்டு, பணம், நகைகளுடன் மாயமானான்… பத்திரிகைகளில் நீங்கள் கூட இந்த செய்தியை பார்த்திருப்பீர்கள்.

வழக்கமான குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் ஏன் ஜாமீன் கொடுக்கின்றன…?
இதை யார் கேட்பது…?
இதற்கென்றே சில நீதிவான்களும் – கிரிமினல் வக்கீல்களுமே
கூட்டணி வைக்கின்றனரே.
குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்கை முடித்து, தீர்ப்பு சொல்லியாக
வேண்டும் என்கிற கட்டாயமான ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டாலொழிய
இந்த பிரச்சினையிலிருந்து நமக்கு ஏது விடுதலை…?

நீதித்துறையில் நிலவும் ஊழல்களைப்பற்றி அதிகம் தெரிந்தவர்கள் அந்தத்துறையிலேயே இருப்பவர்கள் தான். அண்மையில், உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி ஒருவரே சொன்னார், நீதிமன்ற காரிடாரில் கொஞ்ச நேரம் நின்று கவனித்தால் உங்களுக்கே இந்த அவலம் புரியும் என்று.

நீதிமன்றங்களும் ஊழலில் இருந்து தப்பவில்லை என்பது உண்மை. பணம்பெறாமல் அளிக்கப்படும் தீர்ப்புகள் எத்தனை சதவீதம் ? அது நீதிவான்களுக்கும், வக்கீல்களுக்குமே தெரிந்த ரகசியம்….

தெரிந்தோ, தெரியாமலோ – ஒரு நண்பர் நேற்று இந்த வலைத்தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் 2ஜி, பிஎஸ்என்எல் போன்ற முக்கியமான வழக்குகள் தோற்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட “அதிகாரிகள்” தான் காரணம்… அய்யோ பாவம் பாஜக அரசு என்ன செய்யுமென்று எழுதி இருந்தார்……

நேற்றே, பின்னூட்டம் எழுதிய அந்த நண்பருக்கு நான் விளக்கம் அளித்திருந்தேன். முக்கியமான அரசு வழக்குகள் தோற்க
காரணம் அரசு “அதிகாரிகள்” அல்ல… அரசு “வக்கீல்”கள் தானென்று.

ஆட்சி மாறியவுடனேயே, அரசு வக்கீல்களும் மாற்றப்படுகிறார்கள். ஆளும் கட்சி சார்பான வக்கீல்களே, அனைத்து அரசு வக்கீல் பதவிகளிலும் (அட்வகேட் ஜெனரல், அட்டார்னி ஜெனரல் துவங்கி, பப்ளிக் பிராசிக்யூட்டர், ஸ்டேண்டிங்க் கவுன்சல் வரை …) நியமிக்கப்படுகிறார்கள்.
(தமிழகத்தின் பாஜக பெண் தலைவர் ஒருவரின் கணவர் என்பதற்காகவே
ஒருத்தர் சீனியர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது எவ்வளவு
பேருக்குத் தெரியும்….?)

இதில் ஒரு சிலருக்கு அடிப்படை சட்ட அறிவே இருப்பதில்லை. மற்றும் சிலர், பணம், செல்வாக்கு படைத்தவர்களுக்கு உதவி, தங்கள் நிதிநிலையை உயர்த்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

வேறு சிலர், தங்கள் political boss சொல்படி செயல்படுகிறார்கள். எனவே, பெரும்பாலும் அரசு வழக்குகள் தோல்வியடைய – இவர்களே காரணகர்த்தர்கள் ஆகிறார்கள்… எத்தனை வழக்குகள் தோற்றாலும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை…. அவர்கள் பாக்கெட் நிரம்பி விடுகிறது….!!!

இன்னொரு முக்கிய காரணம் – அரசு வக்கீல்கள்,
தகுதி அடிப்படையில் நியமிக்கப்படாமல் –
கட்சிப்பற்று, தொடர்பு காரணமாக நியமிக்கப்படுபவதால்…
அவர்களது சட்ட அறிவு வரம்பிற்குரியதே…..

ஆனால், எதிரே குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக வாதிடுபவர்கள்,
புகழ்பெற்ற, திறமையான வக்கீல்கள்….
இத்தகைய நிலையில் – அரசு வழக்கு எப்படி ஜெயிக்கும்….?

நான் இந்த மாதிரி இடுகைகள் எழுதுவதால் மட்டும், எந்தவித விமோசனமும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். ஆனாலும் எழுதுகிறேன்…எழுதிக்கொண்டே இருக்கிறேன்… ஏன்..?

என் வயது, உடல்நிலை – என் இயலாமை… என்னால் களத்தில் இறங்கி செயல்பட முடியாது.
ஆனாலும் என் உள்ளக்குமுறல்களை அடக்கி வைக்க நான் விரும்பவில்லை.
என் மனதில் தோன்றுவதை குறைந்த பட்சம் எழுத்தின் மூலமாவது
வெளிப்படுத்துவதால் எனக்கு ஓரளவு relief….!!!
நான் சொல்வதால் மட்டும் – எவரும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொண்டு விட மாட்டார்கள்… அத்தகைய அசட்டு நம்பிக்கை எதுவும் எனக்கு கிடையாது.

ஆனால் – இந்த வலைத்தளத்தை படிக்கும் ஆயிரக் கணக்கிலான நண்பர்களும் இத்தகைய கோணத்தில் சிந்தித்துப் பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த தளத்தின் மூலம் உருவாகிறது என்கிற திருப்தி எனக்கு போதுமானது.
அது தான் என்னை தொடர்ந்து செயல்பட வைக்கிறது.

இன்றில்லா விட்டாலும், நாளையாவது மாறும் அல்லவா…?

.
———————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to குற்றவாளிகளை தப்புவிப்பது யார் ……?

 1. Pingback: குற்றவாளிகளை தப்புவிப்பது யார் ……? – TamilBlogs

 2. venkat சொல்கிறார்:

  what you say is 100% correct. only solution for this is that we need IRON HAND to clean up the system. India needs to be on “sarvadhikaram” for next 10 years to bring that change and then we can go back to democracy.
  But our democratic mind set will not allow such “sarvadhikari” to emerge. I saw and continue to see Mode as that person. If we all rally behind such a person and give him freedom to execute such change can be brought out. Otherwise, we will keep wishing that things will change one day! that day will never come.

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை சாரின் இடுகையில் உள்ள கருத்துகள் முழுவதும் ஏற்கத்தக்கது. முன்பு, தென் மாவட்டங்களில் ஜாமீன் ஒருவர் பெயரிலும், வெளிவரும் குற்றவாளி (ஜாமீனில்) வேறு ஒருவராகவும் இருப்பார் எனவும், பல வழக்குகளில் போலி ஜாமீன் தயாரித்து ஆட்களை சிறையிலிருந்து வெளியே விடுகிறார்கள் என்றும் படித்திருக்கிறேன். நியாயம், சட்டம் போன்றவற்றை ஏழைகள், ஏதிலிகள் மீது மட்டும் பயன்படுத்துவதால் ஜனநாயகம் முன்னேற்றம் அடையுமா? நிற்க…

   வெங்கட் – நானும் பல சமயங்களில் நமக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டும் என்றே நினைத்திருக்கிறேன். ஆனால், ஒரு சர்வாதிகாரி சிஸ்டத்தை இன்னும் மோசமாக்கத்தான் முடியும். இப்போ, மோடியை அந்த மாதிரி நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவராகவே ஏற்றுக்கொள்வோம். சுஷ்மா, லலித்மோடிக்கு (அதாவது நாட்டிலிருந்து டிமிக்கி கொடுத்து லண்டனில் இருந்த) உதவி செய்தபோதே, சுஷ்மாவின் பதவியை அந்த சர்வாதிகாரியினால் பறிக்கமுடியவில்லையே? இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம். 2ஜி வழக்கில் சரியாக செயல்படாத அதிகாரிகள், வக்கீல்களை டிஸ்மிஸ் செய்திருக்கலாமே? அப்படி ஒரு சர்வாதிகாரி நமக்கு வேண்டுமென்றால், அதனை மேற்கத்தைய நாடுகளிலிருந்து, அதிலும் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்தால்தான் உண்டு (வாலிஸ் போன்றவர்கள்)

  • Ram சொல்கிறார்:

   இப்போது அவர் என்ன தகரக் கையா வைத்திருக்கிறார் ?
   இப்போதே ;ஆட்டம் தாங்க முடியவில்லையே;
   இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு 4 வருடங்களில் என்ன கிழித்தார் ? இந்த சர்வாதிகாரியின் (அவ)லட்சணத்தை பார்த்தது போதும்.
   வேறு ரோசனை இருந்தால் சொல்லும்.
   வியாதிக்கு மருந்து தேடினால், விஷம் கொடுக்கிறேன் என்கிறீரே ?

 3. T.Thiruvengadam சொல்கிறார்:

  I agree.Anna Hazare started a movement hoped all those who joined him were interested in cleaning the system and found that he was used as a stepping stone for their own political ambition.Most of the politicians use their political position to further interest.A British jurist said the Indian constitution was made by the lawyers for the lawyers and of the lawyers.Despite increase once in 10 years the salary the govt.servants always ask for more.Ambedkar said the constitution is good only we are vile.The last two decades has shown the truth of his opinion.Thiruvengadam

 4. sekarks7sekar சொல்கிறார்:

  மக்களின் மனநிலை மாறவேண்டும்.

 5. venkat சொல்கிறார்:

  In an democratic system where there are 100s of KM sir waiting to criticize, a leader’s hands are tied. With no majority in Rajya sabha legislatures cannot be passed effectively. one cannot fight too many battles in our current set up. of course actions can be stern on certain areas… for example i didn’t like the way the drug pricing issue was handled. The officer should have never been transferred.

  one should read Mein Kempf to understand how democracy should be precluded by few years of autocracy by an able leader.

  • Ram சொல்கிறார்:

   இப்போது இருப்பதே ஒரு அரை இட்லர் தானே ?
   உங்களுக்கு முழு இட்லர் கேட்கிறதா?
   யூ ட்யூபில் இட்லர் சினிமா கிடைக்கும். பார்த்து திருப்தி கொள்ளுங்கள்.

   • அறிவழகு சொல்கிறார்:

    ராம்,

    இப்போதிருக்கிற அரை ஹிட்லர் யாருக்கு. சிருபான்மையோர் தலித்துகள் பெண்கள் ஆகியோருக்கு.

    வெங்கட் மாதரியானவர்களுக்கு அவதார் ரட்ஷிக்க வந்தவர். ஆகவே, வெங்கட் விரும்பவே செய்வார்.

 6. T.Thiruvengadam சொல்கிறார்:

  Hitler was to make a country devastated by a world war and most outs ndustry was in shambles and he had infuse a feeling of self confidence among the people to which he utilized amythical origin of a superior race and provided the Jews as target to blame for all the ills.Ayub khan in Pakistan failed miserably when he practiced guided democracy.In India the politicians have not provide formula for unity but too many targets for hatred by political misalliance and most of them technically dictatorial in democratic skin.Thoruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.