நமக்குள்ள பிரச்சினையே இது தான்….


சட்டங்களை உருவாக்குவதற்கும்,
அவற்றை செயல்படுத்துவதற்கும் -இடையே உள்ள gap –
எவ்வளவு பெரிய பள்ளம் என்பதை கேசவ்’- ன் இந்த கார்ட்டூன் காட்டுகிறது …

எத்தனை சட்டங்கள் போட்டென்ன பயன்…?
ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தினாலே
எத்தனையோ குற்றங்களை நிகழும் முன்னரே தவிர்க்கலாம்…

சில சமயங்களில், குற்றம் செய்தவனை, மக்களே, கையும் களவுமாக
பிடித்துக்கொண்டு வந்து, காவல் துறையிடம் ஒப்படைக்கிறார்கள்….
பல சமயங்களில், காவல்துறையே மிகச்சிறப்பாக செயல்பட்டு,
குற்றவாளியை கண்டுபிடித்து, கைது செய்து, சிறைக்கு அனுப்புகிறது….

ஆனால், பிறகு…..?

அடுத்த 15 நாட்களில், அவன் ஜாமீனில் வெளிவந்து விடுகிறான்….
நீதிமன்றம் அவனது முன் சரித்திரம், இதற்கு முன்னால் அவன்
மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள், அவனை வெளியே விட்டால்
அவன் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் –
இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் –

சட்டப்படி, ஜாமீனில் விடுவதற்கான சடங்குகள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா
என்று மட்டும் பார்த்து விட்டு வெளியே விட்டு விடுகின்றன…

சில வழக்குகளில், அதிருஷ்டவசமாக,
நீதிமன்றம் கடுமை காட்டி, ஜாமீனை மறுத்தாலும் கூட,
90 நாட்களுக்குள் சார்ஜ் ஷீட் (குற்றப்பத்திரிகை)
தாக்கல் செய்யப்படவில்லை என்றால் –

சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி –
அவர்களிடம் பணத்தை கறப்பதற்காகவே பிணந்தின்னி கழுகுகள் போல்
காத்துக் கொண்டிருக்கும் கிரிமினல் லாயர்களின் உதவியுடன்
அடுத்த அட்டாக்கிற்கு ரெடியாக வந்து விடுகிறார்கள்…

நிலவரம் இப்படி இருந்தால் –
இவர்களுக்கு எதிராக சாட்சியம் சொல்ல யார் முன்வருவார்கள்…?
சாட்சி சொல்ல முன்வருபவர்களுக்கு என்ன பாதுகாப்பு…?
யார் பாதுகாப்பு… நீதித்துறை இப்படி யந்திரத்தனமாக நடந்து கொள்ளும் வரை….. ?

இவற்றிற்கெல்லாம் மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்க முடியாது…
சட்டம், ஒழுங்கு – மாநில அரசின் பொறுப்பு;
குற்றவாளிகளை அடக்குவதும்,
குற்றச்செயல்கள் நிகழாது தடுப்பதும் மாநில அரசுகளின் பொறுப்பு தான்.
எனவே, மாநில அரசுகளின் ஈடுபாடும் – இதில் மிக அவசியம்.

பொதுவாகவே – இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட வழி என்ன
என்று யோசித்தால் –

உடனடி தண்டனை; மத்திய கிழக்கில், பல இஸ்லாமிய நாடுகளில்
இருப்பது போல், மிகக்கடுமையான- உடனடியான தண்டனை நிச்சயம் உண்டு
என்கிற அச்சம் குற்றவாளிகளுக்கும், நம்பிக்கை மக்களுக்கும் – இருந்தால்,
சட்டம் ஒழுங்கு நிச்சயம் சீர்படும்.

இப்படி உதவாக்கரை சட்டங்களை ஒவ்வொன்றாக இயற்றிக்கொண்டிருப்பதை விட,
எந்த வழக்கானாலும் சரி, 6 மாத காலத்திற்குள், விசாரிக்கப்பட்டு – தீர்ப்பு
சொல்லப்பட்டாக வேண்டும் என்று ஒரு சட்டத்தை உருவாக்கலாம்.
பல கட்ட மேல்முறையீடுகளை தவிர்க்கலாம்… குறைக்கலாம்.

எத்தனையோ திட்டங்களுக்காக அரசு நிதி ஒதுக்குகிறது.
இப்படி அவசியமானதொரு சட்டத்தை உருவாக்கி,
அதற்கான கூடுதல் நிதியையும் ஒதுக்கி –

அதனை நடைமுறை சாத்தியமாக்க தேவைப்படும் கூடுதல் / விரைவு

நீதிமன்றங்களையும், நீதிபதிகள் பதவிகளையும் உருவாக்கினால்
சமுதாயத்தில் ஒரு, நம்பிக்கையான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும்.

இதற்கும் அரசியல்வாதிகள் தான் மனம் வைக்க வேண்டும்…
ஆனால், பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும்
அதற்கான அழுத்தத்தை கொடுக்க முடியும்….

செய்வார்களா…?

.
————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to நமக்குள்ள பிரச்சினையே இது தான்….

 1. Pingback: நமக்குள்ள பிரச்சினையே இது தான்…. – TamilBlogs

 2. அறிவழகு சொல்கிறார்:

  /// பொதுவாகவே – இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட வழி என்ன
  என்று யோசித்தால் –

  உடனடி தண்டனை; மத்திய கிழக்கில், பல இஸ்லாமிய நாடுகளில்
  இருப்பது போல், மிகக்கடுமையான- உடனடியான தண்டனை நிச்சயம் உண்டு
  என்கிற அச்சம் குற்றவாளிகளுக்கும், நம்பிக்கை மக்களுக்கும் – இருந்தால்,
  சட்டம் ஒழுங்கு நிச்சயம் சீர்படும்.///

  நிச்சயம். ஆனால், இதை சொல்ல உங்களுக்கு எவ்வளவு மனத்துணிவு வேனும். இதையே தான் வேறு வார்த்தைகளில் அண்ணல் காந்தியடிகளும் ஏன் அத்வானியும் கூட சொன்னார்கள். அந்த வார்த்தைகளை சொன்னதற்காக அவர்கள் என்ன மாதரியான விமர்சனங்களை எதிர் கொண்டார்கள். உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்.

  இஸ்லாமிய நாடுகளில் உள்ள சட்டங்கள் போல் இங்கும் வேனும் என்று உங்களை மாதரி இந்நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் சொல்லும் போது எல்லாம் வருவார்கள் பாருங்கள் ஒரு பெரிய தடியை கொண்டு அடிக்க. அவர்கள் வேறு யாராகவும் இருக்கமாட்டார்கள். அவர்கள் கிருமினல்களாகவோ கிருமினல் பின்புலம் கொண்டவர்களாகவோ தான் இருப்பார்கள். அப்போது தானே இப்போதிருக்கிற சட்டங்களை கொண்டு தங்களை காத்துக்கொள்ள முடியும். இவர்களே நமக்கு தேச பக்தி பாடமும் எடுப்பார்கள்.

  அதாவது சாத்தான்கள் வேதம் ஓதுவது மாதிரி.

  இந்த நாடு இன்றைக்கு இருக்கின்ற நிலையிலிருந்து அமைதி பெற வேனும் என்றால் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று மனதளவில் நிம்மதியடைய‌ வேனும் என்றால் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சட்டங்கள் தான் ஒரே தீர்வு. உடனடி தீர்வுக்கு 6 மாதமெல்லாம் அதிகம். 3 மாதம் சரியாக இருக்கும்.

 3. Rajendra சொல்கிறார்:

  இஸ்லாமிய முறைப்படி
  சாதாரண களவு எடுக்கும் மனிதர்களுக்கு கையை வெட்டிடலாமா ?
  திருமணம் அல்லாத பாலியல் உறவு வைத்திருப்பவர்களை வெட்டி கொல்வோமா?

  இதுக்கு பதிலை இந்த பதிவை எடுத்திய அரிவு ஜீவி மைந்தனை கேட்க்கின்றேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராஜேந்திரா,

   நீங்கள் எழுதியுள்ள மற்ற 2 பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன….
   மத வெறுப்புணர்வையும், துவேஷத்தையும் கிளறி எழுதும் பின்னூட்டங்கள்
   இங்கே அனுமதிக்கப்படா என்பதை ஏற்கெனவே நீங்கள் அறிந்திருக்க வேண்டும்..
   இதுவரை அறியாவிட்டால், இனியாவது உணர்ந்து, அப்பேற்பட்ட வார்த்தைகளை,
   கருத்துகளை இங்கே எழுதுவதை நிறுத்திக் கொள்ளவும்…

   மீண்டும் எழுதினால், உங்கள் பின்னூட்டங்கள் இங்கே நிரந்தரமாக தடை செய்யப்படும்
   என்பதையும் அறியவும்…

   உங்களது பின்னூட்டங்களின் ஒரு சாம்பிள் மற்ற நண்பர்கள் பார்ப்பதற்காக
   இங்கே விட்டு வைக்கப்பட்டுள்ளது.

   .
   காவிரிமைந்தன்

   • Rajendara சொல்கிறார்:

    மேலே குறிப்பிட்டுள்ள என் கமெண்ட்க்கு உங்களிடம் பதில் உண்டா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     முதலில் ஒழுங்காக தமிழ் எழுத கற்றுக் கொள்ளுங்கள்….

     பிழையின்றி கேள்வி கேளுங்கள்…
     பதில் தன்னால் வரும்.

 4. jksm raja சொல்கிறார்:

  இதனுடைய ஹை லைட்டாக நான் பார்ப்பது என்போர்ஸ்மென்ட் பண்ணக்கூடிய இடத்தில் கழுதை நிற்பதுதான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.