அரசே மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கலாமா …..???நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் நேற்று கூறி இருக்கிறார் –

“பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரியில் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 13,000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். எனவே, எக்சைஸ் வரியை குறைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை….”

இது குறித்து மேலும் சில உண்மையான தகவல்கள் …

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளின் நிர்ணய கொள்கை தவறானது… மற்ற நாடுகளைப் போல் இங்கும் பெட்ரோல், டீசல் விலை, எண்ணைச்சந்தையோடு இணைக்கப்பட வேண்டும் என்று முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியிலிருந்தபோது சொல்லி வந்தது… ஆனால் செயல்படுத்தவில்லை.

பாஜக அரசு பதவிக்கு வந்த சமயத்தில், உலகச்சந்தை விலை மளமளவென்று இறங்கத் துவங்கியது. உடனே பாஜக அரசு, இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு, உலகச்சந்தை விலையின் அடிப்படையில் இங்கும் விலையை நிர்ணயிக்க
எண்ணை கம்பெனிகளுக்கு உரிமை அளித்தது.

அதனால், ஏப்ரல் 2014-ல் லிட்டருக்கு 73 ரூபாய் என்றிருந்த பெட்ரோல் விலை ஏப்ரல் 2016-ல் 60 ரூபாயாக குறைந்தது.

ஆனால், 2017-ல் உலகச்சந்தையில் எண்ணை விலை ஏற ஆரம்பித்தது. ஜூன் 2016-ல் பேரல் ஒன்றுக்கு 50 டாலர் என்றிருந்த விலை தற்போது 71 டாலராக உயர்ந்திருக்கிறது. அதனால், எண்ணை கம்பெனிகள், பெட்ரோல் விலையை
முன்பு லிட்டருக்கு 60-ஆக இருந்ததிலிருந்து படிப்படியாக கூட்டி, தற்போது 77 ரூபாயாக உயர்த்தி இருக்கின்றன.

-இது அரசு தரப்பிலிருந்து சொல்லப்படும் விளக்கம்…. இது உண்மையே…
ஆனால் இது உண்மையின் முதல் பகுதி….
சொல்லாமல் விடப்பட்ட அந்த 2-ம் பகுதி கீழே –

————

– இந்த விலை உயர்வுக்கு உலகச்சந்தை விலை மாத்திரம் காரணம் அல்ல. 2015-16-ல், மேன்மை தங்கிய மோடிஜி அரசு பெட்ரோல் மீதான கலால்(எக்சைஸ்)வரியை லிட்டருக்கு ரூபாய் 11.77 ஆக உயர்த்தியது. பிற்பாடு, விலையேற்றம் பற்றி
அதிகம் புகார்கள் எழுந்தவுடன், 2017-ல் இதில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் அளவிற்கு குறைத்தது….

ஆனாலும் 2014-க்கு பிறகு பெட்ரோல் மீது உயர்த்தப்பட்ட அதிக வரியான ரூபாய் 9.77 ( 11.77 மைனஸ் 2 ரூபாய் ) இன்னமும் அப்படியே தான் இருக்கிறது….

2014-ல் 105 டாலராக இருந்தது, 50 டாலருக்கும் கீழே குறைந்து, தற்போது மீண்டும் சற்று உயர்ந்து 71 டாலரில் நிற்கிறது உலகச்சந்தை விலை.

நியாயமாக இந்த 105-க்கும் 71-க்கும் இடைப்பட்ட விலை குறைவு கூட இன்னமும் மக்களுக்கு கிடைக்கவில்லை….
அதற்கு காரணம் இடையில் உயர்த்தப்பட்ட 11.77 ரூபாய் எக்சைஸ் வரி தான்…

இடையில் உயர்த்தப்பட்ட எக்சைஸ் வரியை அப்படியே மறந்து (மறைத்து..)விட்டு, உலகச்சந்தையில் எண்ணை விலை ஏறுவது தான் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறக்காரணம் என்று கூறுவது – புள்ளிவிவரங்கள் பற்றி எல்லாம் யோசிக்க இயலாத மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா…? இப்படி – அரசே மக்களை ஏமாற்றலாமா….?

இந்த உலகச்சந்தையில் எண்ணை விலை குறைந்ததை பயன்படுத்தி, மத்திய அரசு மக்களை ஏமாற்றி உயர்த்திய 11.77 எக்சைஸ் வரியின் காரணமாக, எதிர்பாராத வகையில் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கக்கூடிய வருமானம்
எவ்வளவு…. கொஞ்சம் கணக்கு போட்டு பார்க்கலாமா…?

அரசு அதிகாரியின் விளக்கத்தின் அடிப்படையில் – ஒரு ரூபாய் வரி அதிகரித்தால் அரசுக்கு ஆண்டுக்கு கிடைக்கக்கூடிய கூடுதல் வருமானம் – 13,000 கோடி ரூபாய்.

அப்படியானால், 11.77 ரூபாய் அதிகரித்ததற்கு….?
( 11.77 x 13,000 = ) 1,53,000 கோடி ரூபாய்கள்…
ஆண்டுக்கு 1,53,000 கோடி ரூபாய்கள் என்கிற அளவிற்கு ஏற்கெனவே பாஜக அரசு
மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கியாயிற்று…..

அரசின் பசி இன்னும் அடங்கவில்லையா…போதுமே அய்யா… கொஞ்சம் மக்களின் பசியையும் ஆற்றும் வழியை பாருங்களேன்…!!!

————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to அரசே மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கலாமா …..???

 1. Tamil Us சொல்கிறார்:

  வணக்கம்,

  http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..

 2. Pingback: அரசே மக்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கலாமா …..??? – TamilBlogs

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இதுவரை நடந்ததை ஒன்றும் செய்வதற்கில்லை…

  ஆனால், இனியாவது அரசு மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ளலாம்…
  எப்படி….?

  இந்த மீதி 9.77 ரூபாய் கூடுதல் எக்சைஸ் வரி சமனப்படும் வரையில் உலகச்சந்தையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை, அரசு தானே ஏற்றுக் கொள்ளலாம்.

  அதன் பிறகு ஏற்படக்கூடிய உயர்வை மக்களிடம் வசூலித்தால் – அதாவது உலகச்சந்தை விலைக்கேற்றவாறு உள்ளூர் விலை நிர்ணயம் – அது நியாயமானது. மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

  நான் இங்கு எழுதியிருப்பது பாஜக நண்பர்களுக்கும் சேர்த்த நியாயத்தை தான் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

  • அறிவழகு சொல்கிறார்:

   நியாயத்தை உணரும் நிலையிலெல்லாம் அவர்கள் இல்லை.

   ‘எதிர்ப்பவர்களை எதிர்க்கனும்’.

   அதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள assignment-ஆக இருக்கும். ஆகவே, நியாய அநியாயத்தை சிந்திக்கும் ஆற்றலெல்லாம் அவர்களுக்கு இல்லாதிருப்பது பெரிய ஆச்சரிய‌மில்லை.

   நான்கு வருடத்திற்கு,

   11.77 x 13,000 = 1,53,000 x 4 = ரூ.6,12,000

   இதில் 1 ரூபாய் குறைத்தால், 13,000 ரூபாய் வருடத்திற்கு குறையும். அதாவது ஏற்கனவே மக்களிடமிருந்து அடித்த கொள்ளையிலிருந்து குறையப்போகிறது. இதனால் இவர்களுக்கு என்ன நஷ்டம்.

   லிட்டர் ஒன்றுக்கு மக்கள் கொடுக்கும் விலையில் கிட்டத்தட்ட
   பாதித் தொகை அரசுக்கு சென்று சேரும் நிலயில் இது ஒரு இழப்பே அல்ல‌.
   அதாவது லாபத்தில் கொஞ்சம் கிள்ளிப்போடுவது.

   ஆனால்,

   பாமரன் குறிப்பிட்டுள்ள காமை ஐயா அவர்களின் அந்த இடுகையின் தலைப்பே,

   ”எங்கே போகிறது பெட்ரோலில் வரும் பணம்….?” என்பது தான்.

   இதற்கு அப்போதும் யாரும் பதில் சொல்லவில்லை. இப்போதும் எந்த பக்தர்களும் பதில் சொல்ல முன்வரப்போவதில்லை. இவர்கள் தான் இந்நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர்கள். நம்புவோம்.

 4. paamaran சொல்கிறார்:

  பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரி பற்றி : நீங்களும் 2016 – 17 – 18 என்று தொடர்ந்து வருடத்திற்கு ஒரு இடுகை பதிவிடுகிறீர்கள் … ஆனால் அவர்கள் கலாலை உயர்த்துவதை குறைத்தபாடு இல்லை …! அவர்கள் விலையை உயர்த்திக்கொண்டு இருப்பதும் – அரசியல் தலைவர்கள் ஒப்புக்கு குறையுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் ” ஒரு சம்பிரதாயமாக்கப் பட்ட ” நாடு இது …!
  விலையை உயர்த்துகிறவர்கள் உயர்திக் கொண்டே இருக்கிறார்கள் — உபயோகிப்பவர்கள் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் …! அப்போ நாடு சுபீட்சமாகத்தானே இருக்கிறது ? என்பது ஆட்சியாளர்களின் எண்ணம் …!!

  இதையே முன்பு ஒரு இடுகையில் :– // இரண்டு அவையிலுமே உறுப்பினர் அல்லாத ஒரு
  அறிவுப்பெருந்தகையை அமைச்சராக்கியதன் விளைவு
  அவர் செய்நன்றியை பிரதிபலிக்கும் விதமாக சில
  கருத்து முத்துக்களை இன்று தெரிவிக்கப் போய், அது
  கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது….

  அப்படி என்ன அள்ளி விட்டார் அவர்….?

  ” Somebody who has a car, bike;
  certainly he is not starving.
  Somebody who can afford to pay, has to pay,
  So we are going to tax people who can afford to pay.”

  – he said.

  காரிலும், ஸ்கூட்டரிலும் போகின்றவர்கள் மட்டும் தான்
  பெட்ரோல், டீசல் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்த
  “மந்த்ரிஜி” யின் விசால கண்ணோட்டம் போலும்…!!!

  பஸ்ஸில் போகிற சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்…? அவர்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பால் பொருட்கள்,
  மளிகை சாமான்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும்
  இந்த “ஹைக்” பொருந்துமே… அந்த காய்கறி, பால், மளிகை
  பொருட்களை வாங்குபவர்களும் – இந்த மந்தி(ரி)யின்
  பார்வையில் – வசதியானவர்கள் தானோ…?

  ஒரு விதத்தில் பார்த்தால், இவர்கள் இவ்வாறு உளறுவது
  நல்லது தான் என்று தோன்றுகிறது… இன்னமும் மயக்கத்தில்
  ஆழ்ந்திருக்கும் சிலரை விழிக்கச் செய்ய இவை உதவும்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன் // …..அதே நிலை தானே என்றும் தொடர்கிறது …. விடிவு …?

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பிரமாதம் பாமரன்…மிக்க நன்றி.

  நான் பழைய இடுகைகள் எதையும் பார்க்காமல் தான் இப்போது எழுதினேன்.
  நான் முன்பு எழுதியது என் நினைவில் நிற்பதும் இல்லை…. வயது…!!!

  நான் முன்பு எழுதியதை இப்போது பார்க்கும்போது, எனக்கே நல்ல இடுகை
  என்று தோன்றுகிறது….

  நம் கடமை… நம் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்துவோம்.
  நடப்பது நடக்கட்டும்.
  குறைந்த பட்சம் – மக்களாவது (பாஜக நண்பர்கள்….??? ) புரிந்து கொள்ளட்டும்.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 6. Dhamodharan Subramaniam சொல்கிறார்:

  excise duty in 2014 july – Rs 3.5
  excise duty in apr 2018 – Rs 19.5

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.