பாஜகவுக்கு முதலிடம் – அதிகாரபூர்வமான ஒரு தகவல்…பாஜக நண்பர்கள் பெருமை கொள்ள ஒரு செய்தி….. எந்த விஷயமாக இருந்தால் என்ன…பாஜக முதலிடம் பெறுகிறது என்றால் பாஜக நண்பர்களுக்கு மகிழ்ச்சி தானே…!!!

– இது ஒரு அதிகாரபூர்வமான தகவல்… இதில் என் விமரிசனம் எதுவுமே இல்லை… முழுக்க முழுக்க தினமணி நாளிதழின் செய்தி –

————

வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாரதீய ஜனதா முதலிடம்
By DIN | Published on : 25th April 2018 09:42 PM

நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாரதீய ஜனதா எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) (Association for Democratic Reforms ) ஆய்வில் 15 எம்.பி.க்கள் (மக்களவை) மற்றும் 43 எம்.எல்.ஏ.க்கள் என பதவியில் உள்ள 58 பேர், வெறுப்பு பேச்சு வழக்குகளில் சிக்கியுள்ளதாக தெரியவந்து உள்ளது.

சமூகத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளில் பா.ஜனதா முதலிடம் வகிக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது.

இதைத்தவிர அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளுக்கு தலா 6, தெலுங்குதேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த தலா 2 பேரும் இந்த வழக்குகளில்
சிக்கியுள்ளனர்.

அமைச்சர்களைப் பொறுத்தவரை மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் மந்திரி உமாபாரதி மற்றும் 8 மாநில மந்திரிகள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். அமைப்பு கூறியுள்ளது.

பாஜக முதலிடம் – தினமணி செய்தி …

…பின் குறிப்பு –

திருவாளர்கள் – S.V.சேகர், H.ராஜா போன்ற எந்த பதவியிலும் இல்லாத நபர்களின் பெயர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

.

———————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to பாஜகவுக்கு முதலிடம் – அதிகாரபூர்வமான ஒரு தகவல்…

 1. paamaran சொல்கிறார்:

  தினமணி மட்டுமா …! இதோ இன்னொன்று :— // Posted Date : 20:44 (25/04/2018) Last updated : 20:48 (25/04/2018)
  சர்ச்சைக்குரிய ‘ராவணன் – சூர்ப்பனகை’ கருத்து… மோடியின் எச்சரிக்கையை மீறிய பா.ஜ.க எம்.எல்.ஏ! // https://www.vikatan.com/news/india/123294-bjp-party-men-and-their-controversial-statements.html ….. இந்த செய்தியில் அனைத்தும் அடங்கியிருக்கிறது …!
  // முன்பெல்லாம் எப்போதாவது, யாராவது, ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லிச் சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம். ஆனால், இப்போதோ குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அடுத்தடுத்து சொல்லி, பிரபலமாகிவிடலாம் என்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதிலும், குறிப்பாக இந்த விஷயத்தில் பி.ஜே.பி. பிரபலங்களே முதலிடத்தில் உள்ளனர் என்றால், அது மிகையாகாது. // …… என்றும் … இவ்வாறு பேசுபவர்களையும் — கருத்து தெரிவிப்பவர்களையும் ” அன்பா கண்டிக்கும் ” விதத்தில் :–
  // பிரதமர் நரேந்திர மோடி, தன் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் செல்போன் செயலி வழியாகக் கடந்த சில நாள்களுக்கு முன் கலந்துரையாடினார். அப்போது அவர், “நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன்மூலம் ஊடகங்களுக்குத் தீனிபோட்டு வருகிறோம். ஊடகங்களின் கேமரா முன்பாக ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளைக் கொட்டுகிறோம். பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படுகின்றன. இதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நாம், நமது கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகிவருகிறது. எனவே, பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக ஊடகங்களை நாம் குறைகூறக் கூடாது” என்றார்.//

  அப்படி பிரதர் கூறியபின்னும் …. அதை பொருட்பாடுத்தாமல் …… // உத்தரப்பிரதேச பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங், “மேற்கு வங்கத்தின் சூர்ப்பனகை மம்தா பானர்ஜி.. ராவணன் காங்கிரஸ்” என்று கூறியுள்ளார். இது, நாடு முழுவதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தவறான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தும், அதை பி.ஜே.பி-யினர் பொருட்படுத்தாமல், வாய்க்கு வந்தபடி பேசிவருவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. // பாவம் … பிரதமர் …? கட்சி கட்டுப்பாடோடுதான் இருக்கிறது ….. ?

 2. Ram சொல்கிறார்:

  பிரதமர் “பேச்சு”க்கு அர்த்தமே வேறு சார்.

  அவர் பாட்டிற்கு அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்.
  அது நம்மைப்போன்ற listeners -க்காக. கட்சிக்காரர்களுக்காக அல்ல.

  ” பாஜக மக்கள்” தொங்கு தொய்வின்றி, தங்கள் ” கட்சிப்பணிகளை ”
  ஆற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும்
  தங்கள் “கட்சிப்பணி” என்பது என்ன என்பது. 🙂

 3. Pingback: பாஜகவுக்கு முதலிடம் – அதிகாரபூர்வமான ஒரு தகவல்… – TamilBlogs

 4. தமிழன் சொல்கிறார்:

  அப்படி என்றால், வழக்கு பதிவில் பாஜக அரசின் தலையீடு இல்லையா? இதுவே பாஜக அன்பர்களுக்கு ஒரு பாசிடிவ் செய்திதானே.. ஹா ஹா.

 5. Ram சொல்கிறார்:

  வழக்கு பதிவதோடு சரி…
  அதற்கு மேல் நகர்வது எங்கே ?

  • அறிவழகு சொல்கிறார்:

   நகர்ந்தாலும் அது தள்ளுபடி ஆகிவிடாதா என்ன?.

   சமீப காலமாக பல வழக்குகளில், குண்டு வெடிப்பு தீவிரவாத வழக்குகளில், இருந்து ஆர்எஸ்எஸ்/பாஜக பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு வருவது எதை காட்டுகிறது. நீ எதை வேண்டுமானாலும் செய் மகனே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதை தானே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.