பிரமிக்க வைக்கும் ஒரு சீன டூரிஸ்ட் அனுபவம்…!!!
..

..

சீனாவில், கட்டுமானத்துறை படைக்கும் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. டூரிஸ்டுகளை கவர, அவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அபாரம்….

முன்பு கம்யூனிஸ்ட் சீனா எந்த அளவிற்கு இரும்புத்திரையால் மூடப்பட்டிருந்ததோ அதே அளவிற்கு இப்போது டூரிஸ்டுகளுக்காக சுத்தமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, உலகம் முழுவதுமிருந்து பார்வையாளர்களை காந்தமென கவர்ந்திழுக்கிறது சீனா….

அண்மையில் அவர்களது லேடஸ்ட் படைப்பாக, தரையிலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் (சுமார் 4000 அடி உயரம்) டியன்மென் மலைச்சிகரத்தில் ஒரு கண்ணாடிப்பாலத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

மலைச்சிகரத்தில், பயணிகள், பல கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று சிகரத்தைச் சுற்றிலும் உள்ள அற்புதமான இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இந்த பாதைகளின் இடையே பல சுவாரஸ்யமான வளைவுகள் வேறு ….

இந்த அனுபவங்களை எல்லாம் நேரில் காண ஒரு சிலருக்கே வாய்ப்பு கிடைக்கலாம். எனவே, நேரில் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் வீடியோவிலாவது காண ஒரு சாம்பிள் காட்சி கீழே –

….


—————————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிரமிக்க வைக்கும் ஒரு சீன டூரிஸ்ட் அனுபவம்…!!!

 1. Ram சொல்கிறார்:

  ஆமாம் சார். நிஜமாகவே பிரமிக்க வைக்கும் அனுபவம் தான்.
  சீனா எங்கோ போய் விட்டது; நாம் அண்ணாந்து பார்க்க வேண்டிய தூரத்திற்கு
  போய் விட்டது போலிருக்கிறதே ?

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ராம்,

  இதெல்லாம் பெரிய சாதனைகள் தான்… இதைப்போல பல Engineering Marvels-களை நிகழ்த்தி இருக்கிறது.l… சீனா எல்லாவற்றையுமே பிரம்மாண்டமாகச் செய்கிறது…
  பிரமிக்க வைக்கிறது.. இந்தியா இதன் கிட்டத்திலேயே இல்லை…

  ஆனால், இந்தியாவின் புராதன பெருமைச் சின்னங்கள் போல் உலகைக் கவர
  சீனாவில் அதிகம் இல்லை- மிகப்பழமையான சரித்திரம் அதற்கு இருந்தாலும் கூட.. அதனாலோ என்னவோ, புதிது புதிதாக படைத்து உலகைக் கவர்கிறது.

  ஆனாலும், கவலைப்படாதீர்கள். சீனாவின் வளர்ச்சி அதன் அனைத்து பகுதிகளிலும்
  சீராக இல்லை. சில பகுதிகள் மட்டும் தான் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.
  வீக்கம் மாதிரி…. (சந்தோஷம் தானே…!!! )

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. புதியவன் சொல்கிறார்:

  சீனா அதன் வளர்ச்சியில் நாம் தொடமுடியாத தூரத்தில் இருக்கு. அவர்களுக்கு நிறைய வரலாற்றுச் சிறப்புடைய இடங்கள் இருந்தபோதும் நிறைய முன்னேற்றங்களும் நடந்திருக்கிறது. டூரிசத்தில் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.

  அதன் வளர்ச்சி எல்லாப் பகுதிகளிலும் சீராக இல்லாவிடினும் இன்னும் பல வருடங்களில் ஒவ்வொரு பகுதியாக முன்னேற்றிக்கொண்டே வந்து முழு நாடும் மிக வளர்ச்சி பெற்றிருக்கும். இதனைப்பற்றிப் படிக்கும்போதும் பார்க்கும்போதும் இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும், ஆட்சியாளர்களைப் பற்றியும் வெகு சுமாரான அபிப்ராயம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. இந்திய ஜனநாயகம் அதன் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே சாதகமாக இருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s