லீசு”க்கு விடப்பட்ட கோட்டை கொத்தளத்திலா கொடியேற்றப்போகிறார் பிரதமர்….?


பழம்பெருமை மிக்க, பாரம்பரிய சின்னங்கள் பலவற்றை, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு 5 வருட ‘லீசு’க்கு மத்திய அரசு கொடுப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன….

இந்தியாவின் கடைசி மன்னர் மொகலாயப் பேரசர் பகதூர் ஷா (Bahadur Shah Zafar ). முதல் சுதந்திரப்போரின்போது , (சிப்பாய்க் கலகம்) ஆங்கிலேயரை எதிர்த்து துணிச்சலாகப் போரிட்டு, போரில் தோல்வியுற்று, கைது செய்யப்பட்டு, பர்மா சிறையில் அடைக்கப்பட்டு, சிறையிலேயே உயிரை விட்டார்.

அவரிடமிருந்து ஆங்கிலேயர்கள் 1857-ஆம் வருடம் கைப்பற்றிய டெல்லி செங்கோட்டை மீண்டும் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு 1947-ல் தான் நம் வசம் வந்தது.


ஒவ்வொரு சுதந்திரத்திருநாளன்றும், இந்தியப் பிரதமர், செங்கோட்டையின் உயரமான கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து, அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுவது சுதந்திரம் கிடைத்த 1947-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து
வந்திருக்கிறது.

செங்கோட்டை – சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதும், பாரம்பரியம் மிக்கதும் மட்டுமல்லாமல், ராணுவ முக்கியத்துவம் உள்ள இடமும் கூட. டெல்லியின் முக்கியமான ராணுவ கேந்திரமாகவும் இருக்கிறது இந்த கோட்டை…

பாரம்பரியம், முக்கியத்துவம் என்று மட்டும் இல்லாமல், உணர்வு பூர்வமாகவும் இந்தியரின் உள்ளத்தில் செங்கோட்டைக்கு தனியொரு இடம் உண்டு…. நேரில் இங்கு சென்று, கால் பதித்து வந்த ஒவ்வொருவருக்கும், இந்த செய்தியை
கேட்கும்போது ஏற்படும் ஒரு அவமான உணர்வை எடுத்துச் சொல்வது கடினம்.

வெறும் ஐந்து கோடிக்கு வக்கில்லாமலா லீசுக்கு விடுகிறது அரசு….?

இந்த கேடுகெட்ட திட்டத்தை உருவாக்கிய மதிகெட்ட மந்திரி
இவரைத்தவிர வேறு யாராக இருக்க முடியும் ….. ?

இது ஒரு ஜனநாயக நாடு….
எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்… போகலாம்…
ஆனால், ஆட்சி, அதிகாரம் கையிலிருக்கிறது என்கிற திமிரில்,மமதையில் – எதை வேண்டுமானாலும்
செய்யலாம் என்று நினைப்பவர்களை –

காலம் என்றைக்கும் மன்னிக்காது …
இந்நாட்டு மக்களும் கூட….!!!

———————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to லீசு”க்கு விடப்பட்ட கோட்டை கொத்தளத்திலா கொடியேற்றப்போகிறார் பிரதமர்….?

 1. Pingback: லீசு”க்கு விடப்பட்ட கோட்டை கொத்தளத்திலா கொடியேற்றப்போகிறார் பிரதமர்….? – TamilBlogs

 2. bandhu சொல்கிறார்:

  காசு தான் கடவுள் என்று வந்த பிறகு கோட்டை என்ன கோவில் என்ன? எதையும் விடுவோம் லீசுக்கு. காசு வந்தால் போதும்!

  இன்னும் என்னென்ன பார்க்கப் போகிறோமோ!

 3. paamaran சொல்கிறார்:

  நாட்டுப்பற்று …? இருண்ட தினம் என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார் …!
  செங்காேட்டையுடன் ஆந்திரா கடப்பாவில் உள்ள ” கண்டிகாேட்டா காேட்டையையும் சேர்த்தே டால்மியா குருப் எடுத்துள்ளது …!

  காேட்டையில் காெடியேற்ற வாடகை ஆள் எடுக்காமல் இருந்தால் நாம் புண்ணிவான்கள்… !!

  நமது தளத்தில் வந்த // காேட்டை , காெத்தளங்கள்..அரண்மனை கள் // என்ற இடுகை பதிவை அருமை மந்திரி பார்த்துவிட பாேகிறார் … அந்த லிஸ்டை வைத்து ஈசியா லீசுக்கு விட்டுடப் பாேறார் … ?

 4. Ram சொல்கிறார்:

  Elviss,

  Why give half information ?

  the discussion in the parliament sub committee is not yet over as per derek o brien statement –

  Derek O’Brien

  @derekobrienmp
  Wah! So here is acche din. Red Fort being ‘sold ‘? Now other national treasures ready to be auctioned to highest bidder. As Chairman Parliament Cmtee of Transport Tourism & Culture, can say matter was still being “discussed”. Pledge to stop this

  5:41 PM – Apr 28, 2018

 5. Ram சொல்கிறார்:

  The Dalmia Bharat Limited on Saturday won contracts to adopt
  the iconic Red Fort and the Gandikota Fort.

  The 77-year-old corporate conglomerate beat IndiGo Airlines
  and the GMR group to bag the contract worth Rs 25 crore
  spanning five years to maintain the fort.

  -So it is defenitely a Competitive Bidding.
  Who paid more ( to whom…?) gets the contract.

  In turn he is going to charge the visitors/public.
  Presently it is mere ten rupees; It may go anywhere near
  Rs.100/- once Dalmia Group takes over.

  ALL THE BEST ELVISS – better you buy some shares in Dalmia now itself
  before the share price shoots up.

 6. Tamilian சொல்கிறார்:

  This was decided during UPA regime by a committee headed by Derek O’Brien who is now questioning NDA government for implementing this decision,

 7. புதியவன் சொல்கிறார்:

  மேல் விவரத்துக்காகக் காத்திருக்கிறேன்.

  பொதுவா அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள் வெறும் சம்பளத்துக்காகத்தான் பணியாற்றுகின்றனர். தொல்பொருள் இலாகா வசம் உள்ள இடங்களின் லட்சணமே அதற்குச் சாட்சி. அதனால் தனியாரிடம் லீசுக்கு விடுவதில் தவறில்லை. ஆனால், தனியார், சம்பாதிப்பதற்காக (பெருமை, கவுரவம் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல்) இதனைச் செய்தால், என்ன மிஞ்சும் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது (ஒரு காலத்தில் விஜிபன்னீர்தாஸ், பழைய கோவில் சிலைகள், தூண்களைக் கடத்தி தன்னுடைய இடத்தில் கொண்டுபோய் வைத்துக்கொண்டதுபோல், இவர்களும் திருடாமல் இருந்தால் சரிதான்)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நோக்கம் நல்லதாக எனக்குத் தெரியவில்லை.
   tourist destination -களை பராமரித்து, அழகுபடுத்தி, promote செய்வது நோக்கமாக இருந்தால், அதற்கு, அதிகம் புகழ்பெறாத அல்லது வசதிகள் இல்லாத
   இடங்களை தேர்ந்தெடுத்து கொடுத்திருக்க வேண்டும்…

   RED FORT -இந்த தேசத்தின் நுழைவாயில். பல நூறாண்டுகளாக இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்த டெல்லியின் நினைவுச்சின்னம்.
   அதைக்கூட பராமரிக்க வக்கில்லையா என்ன இந்த அரசாங்கத்திற்கு.. ?

   நீங்கள் டெல்லி செங்கோட்டைக்கு சென்றிருக்கிறீர்களோ இல்லையோ தெரியவில்லை… நிஜத்தில் இந்திய ராணுவத்தின் ஒரு மிக முக்கியமான
   அலுவலகம் அங்கு செயல்படுகிறது…பல ராணுவ முக்கியத்துவம் பொருந்திய தகவல்கள் அங்கே சேகரிக்கப்படுகின்றன. அந்த இடத்தில் –
   ஒப்பந்தக்காரர்கள் / அவர்களிடம் பணி புரிகிறவர்கள் என்கிற போர்வையில் யார் வேண்டுமானாலும் வரலாம்… இரவு நேரங்களில் தங்கலாம்…

   எனக்கென்னவோ, இதெல்லாம் நல்ல விஷயமாகத் தெரியவில்லை. சில விஷயங்கள் வீம்புக்காகவே செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது.
   அடுத்த சுதந்திர தினத்திற்குள்ளாக ( ஆகஸ்ட் 15, 2018 ) இந்த கோட்டையை மாற்றிக் காட்ட வேண்டும் என்பது உத்தரவாம். புதிய தளத்திலிருந்து
   பிரதமர் பேச வேண்டுமாம்…. கோட்டை பூராவும் அதற்குள்ளாக, விசேஷ முறையில் illumination- உம் செய்ய வேண்டுமாம்.

 8. Ram சொல்கிறார்:

  // இவர்களும் திருடாமல் இருந்தால் சரிதான் //

  எதற்காக லீசு’க்கு எடுக்கிறார்கள் ? டூரிஸ்டுகளுக்கு வசதி பண்ணிக் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை காரணமாகவா ?

  அஞ்சு கோடிக்கு லீசு’க்கு எடுத்து, சில அடிப்படை வசதிகளையும், அலங்காரங்களையும் பண்ணிவிட்டு, இப்போது பத்து ரூபாய் நுழைவுக்கட்டணமாக இருந்தால், அதை ஐம்பது அல்லது நூறாக மாற்றி சம்பாதிக்கத்தானே ?

  மேலும் லீசுக்கு கொடுப்பவர்களுக்கும், லீசுக்கு எடுப்பவர்களுக்கும் ஏற்கெனவே
  ‘புரிதல் ஒப்பந்தம்’ ஆகி இருக்குமே; எதை எதை மாற்றலாம், எதைஎதை சுருட்டலாமென்று.

 9. Ram சொல்கிறார்:

  புதிது புதிதாக ” பிழைக்கும் வழி”களை உண்டுபண்ணும் சாமர்த்தியம் இவர்களிடம் நிறைய இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

 10. Ram சொல்கிறார்:

  எல்லாவற்றிற்கும் ஒரு justification காட்டி விடுவார்கள். அதை ஆதரித்து ஆமோதிக்கவென்றே ஒரு கூட்டம் தயாராக எப்போதும் காத்திருக்கும்.

  சாயங்கால டிவியில் விவாதங்களில் பார்க்கலாமே.

 11. அறிவழகு சொல்கிறார்:

  The Hindu today.

  http://www.thehindu.com/opinion/cartoon/cartoonscape-april-30-2018/article23721046.ece?homepage=true

  Anyone give guarantee that it won’t happen in future.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.