கொஞ்சம் வீடியோ – கொஞ்சம் சுவாரஸ்யம் – 1 ( எம்.ஜி.ஆர்+ கிருபானந்த வாரியார் சுவாமிகள் )


எம்.ஜி.ஆர். அவர்களை “பொன்மனச் செம்மல்” என்று முதன் முதலில் அழைத்தவர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் என்பது சென்ற தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்….

எம்.ஜி.ஆர். மற்றும் வாரியார் சுவாமிகள் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் வீடியோ அபூர்வம்… அத்தகைய காட்சி
ஒன்று கிடைத்தது… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே பதிந்திருக்கிறேன். ஒன்றரை நிமிடங்கள் தான்… இருந்தாலும்
மகிழ்ச்சியை தரக்கூடியது.
( நன்றி – சினிமா பொக்கிஷம் )

….

………………

இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இதே விமரிசனம் வலைத்தளத்தில், திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் பற்றி ஒரு இடுகை வெளிவந்தது. அதில் இந்த குடிலின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் வாரியார் சுவாமிகள் காட்டிய அக்கறை பற்றியும் எம்.ஜி.ஆர். அவர்கள் உதவியது பற்றியும் செய்தி வந்தது……

அதில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்கு என்னவாக இருந்தது – ? எம்.ஜி.ஆர்., அவர்கள் வாரியார் சுவாமிகளின் மீது எத்தகைய பற்றும், அபிமானமும் கொண்டிருந்தார் …

எம்.ஜி.ஆரை, வாரியார் சுவாமிகள் ஏன் “பொன் மனச்செம்மல்” என்று அழைத்தார்..?

-என்பதைப்பற்றியெல்லாம் இந்த வீடியோ கூறுகிறது…..

————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கொஞ்சம் வீடியோ – கொஞ்சம் சுவாரஸ்யம் – 1 ( எம்.ஜி.ஆர்+ கிருபானந்த வாரியார் சுவாமிகள் )

 1. Pingback: கொஞ்சம் வீடியோ – கொஞ்சம் சுவாரஸ்யம் – 1 ( எம்.ஜி.ஆர்+ கிருபானந்த வாரியார் சுவாமிகள் ) – TamilBlogs

 2. paamaran சொல்கிறார்:

  எவ்வளவோ செய்திகள் எம்.ஜி.ஆர். பற்றி படித்தும் – கேள்விப்பட்டும் இருப்பீர்கள் …! ஒரு வீட்டு வேலைக்கார சிறுமிக்கும் — அவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தாலும் — சிறுமியிடம் அவர் பேசும் போதும் அவருடைய வார்த்தைகளில் உள்ள கண்ணியம் –அக்கறை உற்று நோக்கத்தக்கது … அந்த உரையாடல் :–
  ” ஹலோ.. யாருங்க பேசறது?” இது வேலைக்காரச் சிறுமி.
  ” நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்”
  அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!
  “அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க”
  “நீங்க யார் பேசறது?”
  ” நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.”
  “உங்க பேரு என்ன?”
  “லச்சுமி”
  “எந்த ஊரு?”
  “தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் “
  “இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”
  “மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்”
  “அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?”
  “அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.”
  “உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?”
  “ம்ம்ம்… நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க”
  “சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?”
  “ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..”
  “உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?”
  “ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.”
  “எப்ப ஊருக்குப் போகப்போற?”
  “எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..”
  “சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு”
  “உங்க பேரு என்ன சொன்னீங்க?”
  “எம்.ஜி..ராமச்சந்திரன்”
  “மறுபடி சொல்லுங்க….”
  “எம்.ஜி.ராமச்சந்திரன்”
  அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை! …
  இந்த உரையாடல் வலம்புரி ஜான் வீட்டு வேலைக்கார சிறுமிக்கும் — எம்.ஜி.ஆருக்கும் நிகழ்ந்தது …
  இரவு வீட்டுக்குத் திரும்பிய வலம்புரி ஜானிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள். ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

  அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பியிருக்கிறாள்.! .. என்று ” தாய் ” வார இதழில் உதவி ஆசிரியராக பணி புரிந்த திரு . கல்யாண்குமார் பதிவு செய்த்திருக்கிறார் …!!!

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ” ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
  பேரறி வாளன் திரு …”

  ஊருக்கு நடுவே, பொதுவாக இருக்கும் கிணற்றில் நிரம்பி இருக்கும் நீர், ஊர்ப்பொது மக்கள் அனைவருக்கும் பயன்படுவது போல், வள்ளல்களிடம் சேரும் செல்வம் – அனைவருக்கும் உதவியாக இருக்கிறது.

  குறைகள் இல்லாத மனிதர் யார்…. இவரிடமும் குறைகள் சொல்பவருண்டு…
  ஆனாலும் -நம் காலத்தில் நிஜத்தில் பார்க்க முடிந்த ஒரு கொடை வள்ளல் எம்.ஜி.ஆர். என்பதை எல்லாருமே ஏற்பர்.

 4. புதியவன் சொல்கிறார்:

  எம்ஜியார் அவர்கள் இயல்பான நல்ல குணம், ஏழைகளின்பால் இரக்கம் (தான் சிறுவயதில் உணவுக்குக் கஷ்டப்பட்டதை நினைத்து), உதார குணம், மிகுந்த மரியாதை அளிப்பது என்று நிறைய நல்ல குணங்களின் இருப்பிடமாய் இருந்தவர். தான் கதாநாயகனாக ஆனபின்பு, பிறருக்குக் கொடுத்தே வாழ்ந்தவர், யாரிடமும் எதையும் தனக்காக வாங்கிக்கொண்டவர் அல்லர். அவரை நினைக்கும் தோறும், அவரைப் பற்றிப் படித்த நிறைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

  1. கறுப்பு ஃபிலிம் ஒட்டிய காரில் (வெளியே உள்ளவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் தெரியாது) எம்ஜியார் செல்லும்போது, மக்கள் அவர் கார் எண்ணைப் பார்த்து கை கூப்பும்போது, எம்ஜியார் உள்ளே இருந்து தொடர்ந்து கைகூப்பிக்கொண்டே வருவாராம்.
  2. ஓசூர் பக்கம் சென்றுகொண்டிருந்தபோது, வெயிலில் ஒரு வயதான பெண் விறகு சுமந்துசெல்வதைப் பார்த்து, தன் மனைவியின் செருப்புகளை அவருக்குக் கொடுத்தார்.
  3. வலம்புரிஜானை காலை 7 மணிக்குத் தன்னைத் தோட்டத்தில் சந்திக்கச் சொன்னபோது, (அப்போது வலம்புரி, எம்ஜியாரிடம் உதவி எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்), எம்ஜியார் ‘சாப்டீங்களா’ என்று முதல் கேள்வியாகக் கேட்க, ‘சாப்பிட்டுவிட்டேன்’ என்று வலம்புரி சொன்னார். நீங்க உங்க வீட்டுலேர்ந்து இங்க வரவே ஒரு மணிக்கு மேலாகும். எந்த வீட்டில் 6 மணிக்கு முன்னால சாப்பாடு ரெடி பண்ணுவாங்க என்று சொல்லி, முதலில் கீழ்த்தளத்தில் சாப்பிட்டுவிட்டு வாங்க பிறகு பேசலாம் என்று மனிதநேயத்தோடு சொன்னவர் எம்ஜியார்.
  எத்தனையோ நல்ல குணங்கள், நிகழ்வுகள். அவர் என்றும் ஏழைகளின் மனதில் வாழ்வார்.

  குறைகள் இல்லாதவர் ஒருவரும் கிடையாது, இறைவனைத் தவிர. மனிதனாகப் பிறந்தால் குறைகள் இருக்கும். ஆனால் எத்தனை சதவிகிதம் நல்ல குணம் இருக்கிறது என்றுதான் பார்க்கணும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.