திருவாளர் ஸ்டாலினின் boomerang….!!!


அல்லது ஸ்டாலினுக்கு – திருமா வைத்த ‘செக்’ (check)….

( boomerang = backfire, recoil, reverse, rebound,
come back, bounce back, spring back, return, )

மூன்றாவது அணிக்கு சிக்னல் கொடுத்து, ஆதரிப்பது போல் பூடகமாகப் பேசி – காங்கிரஸ் கட்சியை மிரட்டி, அடக்கி வைக்க வேண்டும்….. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு கொடுக்கிற குறைந்தபட்ச சீட்டை வேறு வழியின்றி அவர்கள் வாங்கிக்கொண்டு போக வைக்க வேண்டுமென்கிற திட்டம் ஸ்டாலின் அவர்களுக்கு ….

திமுக தங்களை கூட்டணியில் வைத்திருப்பது போல் பாவலா செய்து விட்டு, கடைசி நேரத்தில் ஸ்டாலின் கழட்டி விடுவாரோ என்கிற சந்தேகம் திருமாவளவனுக்கு…. ஏற்கெனவே நிகழ்ந்தது தானே…!

மம்தா பானர்ஜியின் தலைமையில் 3-வது அணி உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க நினைக்கின்றன மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரசும்…. அவை இரண்டும் சேர்ந்து செயல்படக்கூடிய சூழ்நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக்குழு ஏற்கெனவே அங்கீகாரம் தந்து விட்டது.

மம்தா பேனர்ஜியுடன் பேச்சு வார்த்தை…
சந்திரசேகர் ராவுக்கு – பிரியானி, மீன்வருவல், விருந்து….
கூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்வோம் என்று
பந்தாவாக பேட்டி….

– என்று இஷ்டம் போல், காய்கள் நகர்த்திக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு – திடீரென்று ஒரு ‘செக்’ (check..) – கொடுத்திருப்பது, விசிக திருமாவளவன், இடது கம்யூனிஸ்ட் கட்சி சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி…..ஆகியோரின் உறுதியான கூட்டணி…..!!!

திருமாவளவன் டெல்லி சென்று தனியே ராகுல் காந்தியை சந்திப்பாரென்று ஸ்டாலின் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்….!!! யாராவது சொல்லி இருந்தால் கூட இது சாத்தியமென்று நம்பியிருக்கக்கூட மாட்டார். அவ்வளவு சுலபமான விஷயமா இது…?

ஸ்டாலின் விட நினைத்த அதே பாணத்தை, அதே ஆயுதத்தை – இப்போது, அவர்கள் 3 பேரும் சேர்ந்து கையிலெடுத்து விட்டார்கள்.

ஸ்டாலின் இனியும் “ஷோ” காட்டினால், திமுக தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை கூட தமிழகத்தில் உருவாகலாம் – என்று இப்போது அவர்கள் ‘ஷோ” காட்டி இருக்கிறார்கள்….!

திருமா, ஸ்டாலினை விஞ்சி விட்டார் ….
….. என்று தான் சொல்ல வேண்டும் …!!!

.
—————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to திருவாளர் ஸ்டாலினின் boomerang….!!!

 1. Pingback: திருவாளர் ஸ்டாலினின் boomerang….!!! – TamilBlogs

 2. Tamilian சொல்கிறார்:

  திருமா தமிழ்நாட்டில் பிறபடுத்தபட்டவரகளின ஒட்டுமொத்த தலைவர் என காட்டிக்கொளகிறாரா? அது உண்மையில்லை என்பது தலைவர்களுக்கு தெரியும் . May be to show that they are aware of Stalin’s game, they have played along. If Stalin aligns with Thiruma, it may cost him in votes in rural areas.

 3. paamaran சொல்கிறார்:

  நாம பார்க்காத மூன்றாவது அணியா …? இந்த மூன்றாவது அணி என்றவுடன் யாரோ கிச்சு -கிச்சு மூட்டி சிரிக்க வைக்கும் தேவையில்லாமல் — தானே வரும் ஒரு சிரிப்பு …! ஜனநாயகத்தை காப்பாற்றத் துடிக்கும் ஓட்டுக் கட்சிகள் அனைத்திற்கும் உள்ள பிரச்சினை… மக்களிடம் எந்த முகமூடியை போட்டுக்கொண்டு ஓட்டு பிச்சையெடுப்பது என்பதுதான் …. !

  மக்களின் வெறுத்துப்போன இவர்களின் செயல்பாடுகளின் மூலம் கட்சிகள் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்ல; அதை மறைப்பதற்கு உரிய வார்த்தைகள் கிடைக்காமலும்தான்…. ! ஜனநாயகம் குறித்த மாயைகளை பரப்புவதற்கு கொள்கை சார்ந்து நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இவர்கள் ” மத சார்பு — சார்பற்ற ” என்கிற வெத்துக் கோட்பாட்டை கையில் எடுத்து நடித்துக்காட்டுகிறார்கள் –. ஆனால் இதையே எத்தனை தலைமுறையாக நடிப்பது?

  2014 மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக — 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் 25.02.2014 அன்று துவங்கப்பட்டதாக பத்திரிகைகள் அனைத்தும் செய்தி போட்டு …. பரபரப்பு — கருத்துக் கணிப்பு — விவாதம் என்று களைகட்டி கடைசியில் .. ? ஒருவேளை இந்த அணி அதிக இடங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் பதவிக்குரிய சண்டை,தூள் பறக்கும் என்பதிலும் முக்கியமா பிரதமர் யார் என்பதில் ஏற்படுகிற சிக்கல் என்று பிசுபிசுத்து போனது வரலாறு …! கடைசியில் ” பக்காவான மதவாத கொள்கை ” கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தே விட்டது …! அவர்களின் செயலாற்றலை இந்திய மக்கள் நன்கு நுகர்ந்துகொண்டு இருக்கிறார்கள் … !!

  மீண்டும் வருகிறது தேர்தல் திருவிழா — ! வழக்கம் போல மூன்றாவது அணி — வினோத கூட்டணி — விபரீத கூட்டணி — சிரிப்பு கூட்டணி — அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் — 25 லட்சம் ஒவ்வொரு குடிமகனின் கையில் { விலைவாசிக்கேற்ப } என்று வாயால் வடை சுடுவது — குதிரை — கழுதை பேரங்கள் — பெட்டிகள் கைமாறுவது — வாக்கை விற்பது — அதிக விலைக்கு வாங்குவது — என்று கேலிக்கூத்தாகி — களைகட்டும் — வாழ்க ஜன நாயகம் … !! இதில் ஸ்டாலின் — திரு.மா. எல்லாம் …. ???

 4. புதியவன் சொல்கிறார்:

  தலித்துகளை முன்னிறுத்தும் (அத்தோடு கடுமையான இஸ்லாமிய ஆதரவு, பாஜக எதிர்ப்பு என்பதையும் காட்டும்) திருமா, எத்தனை காலம்தான் அடிமையாகவே காலம் கழிப்பது (திமுகவுக்கு). கருணானிதி இருந்தபோது அழையா விருந்தாளியாகச் சென்று கருணானிதி புகழ் பாடி சில்லறை சேர்த்தவர் திருமா. ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணிப்பதால் வேறு வழியில்லாமல் காங்கிரசை சரண் புகுந்திருக்கிறார். அப்போது, ‘தமிழன், இலங்கைத் தமிழர்கள், இன மானம்’ போன்ற கேசட்டுகளை உள்ளே வைத்துவிட்டு, ‘மதச்சார்பின்மை’ என்ற கேசட்டை வெளியே எடுக்க வேண்டியதுதான்.

  எனக்கு மனதில் எப்போதும் உதிக்கும் எண்ணம், என்னதான் கருணானிதி ஸ்டாலினை எப்போதும் தூக்கிப் பிடித்தாலும், ‘முதலமைச்சர்’ என்ற பதவி அவருக்கு கிடைப்பது மிகுந்த சந்தேகம்தான். வெறும் பேச்சு வெட்டிக் கூட்டம் என்றுதான் தமிழர்களில் பலர் (கட்சி சார்பில்லாமல் வாக்களிப்பவர்கள்) திமுகவைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் நினைப்பார்கள் என்று தோன்றுகிறது.

  திருமா இப்போது செய்த வேலையை, கருணானிதி ஆக்டிவாக இருக்கும்போது செய்யத் துணிந்திருக்கமாட்டார். கருணானிதி முகத்தில் புன் சிரிப்பைக் காண்பித்து தகுந்த வேளை வரும்போது கழுத்தை அறுப்பதில் மன்னனல்லவா?

 5. புதியவன் சொல்கிறார்:

  வரும் நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு மிகவும் கடினமாக இருக்கும். மோடி அவர்கள் ‘என்ன செய்தேன்’ என்பதைச் சொல்லும் நேரம். பொது ஜனங்களுக்கு நேரடியாகப் பயனுள்ள விஷயம் எதுவும் செய்தமாதிரி எனக்குத் தோன்றவில்லை.

 6. paamaran சொல்கிறார்:

  மன சாட்சி உள்ளவர்கள் இது அடுக்குமா … மக்களை என்னவாக நினைத்து இது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று அங்கலாய்ப்பது தவறாகுமா … ? ….. // இதுதான் ஸ்வச் பாரதமா?.. ரயில் கக்கூஸில் தயாராகும் டீ, காபி.. உயிருக்கு உலை வைக்கும் ரயில்வே! //
  Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/railway-vendor-uses-water-from-toilet-fill-tea-urn-318610.html … ” தூய்மை இந்தியா ” எங்கோ சென்றுகொண்டு இருக்கிறதா ..? கோடிக்கணக்கில் செலவு செய்து படோடாபமான விளம்பரத்த்தோடு சரியா … ? வார்த்தைகளில் மட்டுமே … செயலில் …?

  • paamaran சொல்கிறார்:

   // உள்ளம் என்பது ஆமை
   அதில் உண்மை என்பது ஊமை
   சொல்லில் வருவது பாதி
   நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி // நல்ல பாடல் ் வரிகள் ….!!

 7. புதியவன் சொல்கிறார்:

  இன்னொரு சந்தேகம் கா.மை சார்.. ஒருவேளை திமுக, பாமகவை உள்ளே கொண்டுவர நினைக்கிற்தோ? அப்படி இருந்தால், ஆட்டமேடிக்காக திருமா கழற்றப்படுவார். அதற்காகத்தான் முந்திக்கொண்டு காங்கிரஸ் பந்தியில் திருமா இடம் பெற பாடுபடுகிறாரோ? திருமாவுக்கு வாக்கு வங்கி என்று தனியாகக் கிடையாது, அவர் கூட்டணியில் இருந்தால், அந்தக் கூட்டணிக்கு வாக்குகள் குறையும். (மற்ற சாதி வாக்குகள் குறைவதால்). இன்னொன்று திருமா எப்போதும் நம்பிக்கைக்கு உரியவர் அல்லர். அவர் பச்சோந்தி.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஆனால், திருமா கெட்டிக்காரர்….!! ……ஸ்டாலினை விட…..!!!

 9. Ansari Muhammad சொல்கிறார்:

  செயல் தலைவருக்கு செக் வைக்க திருமாவுக்கு என்ன தகுதி இருக்கு ?
  தராதரம் பார்த்து பேசுங்கள்

  • BVS சொல்கிறார்:

   Ansari Muhammad,

   K.M.சார் சொன்னதை இப்போது அறிவாலயமும் வழிமொழிகிறது:
   இதற்கு என்ன சொல்வீர் ?

   Vikatan.com
   Posted Date : 16:07 (02/05/2018)
   Last updated : 17:09 (02/05/2018)

   ‘ஸ்டாலின் மீது ஏன் பாய்ந்தார் விஜயகாந்த்?’ –
   ராகுல், திருமாவளவன் சந்திப்பு பின்னணி
   ————
   ‘இப்படியொரு திடீர் சந்திப்பு ஏன்’ என்ற கேள்விக்கான விடை, அறிவாலய நிர்வாகிகளுக்குத் தெரிந்திருக்கிறது.

   ‘மூன்றாவது அணி முயற்சி வெற்றிபெற்றால், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும். அதன் முன்னோட்டமாக

   -ஸ்டாலினுக்குச் செக் வைக்கும் வகையில் திருமாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ராகுல்’ என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

   உங்கள் தலைமையகத்தில் போய்க்கேளுங்கள் ஏன் சொன்னீர்களென்று.

 10. BVS சொல்கிறார்:

  என்ன தகுதி வேண்டும் ?

  திருமாவுக்கு என்ன தகுதி இல்லை ?

  • Mani சொல்கிறார்:

   நிறைய நிறைய தகுதிகள் வேண்டும்.
   அவற்றில் ஒன்று கூட இல்லை திருமாவிடம்;

   தந்தை கட்சியின் தலைவராக இருக்கிறாரா ?
   சகோதரி எம்.பி.யாக இருக்கிறாரா ?
   மாமன் மகன் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறாரா ?
   அண்ணன் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறாரா ?
   மகன் இளைஞர் அணி தலைவராக இருக்கிறாரா ?
   மருமகன் விளம்பர இலாகா பொறுப்பாளராக இருக்கிறாரா ?
   கட்சியில் எத்தனை பேர் அவரைச் சுற்றி இருக்கிறார்கள்.
   திருமா இதுபோல் யாராவது ஒருவரையாவது தனக்கு துணையாக
   காட்ட முடியுமா ?
   போங்க சார்; போய் தகுதிகளை வளர்த்துக்கிட்டு வர சொல்லுங்க.

 11. BVS சொல்கிறார்:

  கடந்த ஒரு வருடமாக
  10 நாளைக்கு ஒரு தடவை
  இந்த ஆட்சி இன்னும் 10 நாளீல் போய்விடும்
  உடனே திமுக தான் ஆட்சி என்று
  சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
  ஆட்டவும் முடியாது; அசைக்கவும் முடியாது என்று
  எடப்பாடி சொல்கிறார்.
  ஆட்டவோ, அசைக்கவோ தகுதி இல்லாதவர்
  10 நாளைக்கு ஒரு தடவை ஏன் சங்கு ஊத வேண்டும் ?

 12. அறிவழகு சொல்கிறார்:

  இதுவெல்லாம் ஆரம்ப களேபரங்கள்.

  ”பாஜகவை திரும்ப வரவிடக்கூடாது” என்ற அந்த புள்ளியில் அனைத்து கட்சிகளும் ஒன்றினையும் என்று எதிர்பார்க்கலாம். எப்படி இன்றைய சூழ்நிலை கருதி கம்யூனிஸ்ட்கள் தங்கள் கொள்கையில் சிறிது தளர்த்தியுள்ளார்களோ போலவே மற்ற கட்சிகளும் காங்கிரஸை விட இன்றைய பயங்கரம் பாஜக தான் என்ற தெளிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

  வேறு என்ன சொல்ல.

 13. அறிவழகு சொல்கிறார்:

  this scam is not got much attention by many and our ”silent samiyaar” kept his mouth tight as usual.

  http://www.thehindu.com/news/national/rahul-goyal-lock-horns-on-twitter/article23741016.ece?homepage=true

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இது மட்டும் அல்ல. இன்னொரு ஊழலும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்
   வெளி வந்தது…. அது குறித்து இன்னும் கொஞ்சம் விவரம் எதிர்பார்த்து,
   அதை ” காத்திருப்போர் பட்டியலில் ” வைத்திருந்தேன்.

   அண்மையில் இதுவும் வெளிவந்தது… நேரடியான பதில் சொல்ல “தில்” இல்லை. மோடிஜியின் பின்னால் போய் பதுங்கிக் கொள்கிறார். அலசலாம்…
   இரண்டையும் சேர்த்தே அலசலாம்.

   பொதுவாக, மோடிஜி இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் வாயே
   திறப்பதில்லை…. கொஞ்ச நாட்கள் குலைப்பார்கள்… பின்னால் தானாகவே
   அடுத்த அவலம் வெளிவந்ததும், இது அடங்கி விடும் என்கிற நம்பிக்கை
   அவருக்கு….. அதற்கேற்றாற்போல் – வரிசையாக புதிது புதிதாக விஷயங்கள்
   வெளிவந்து கொண்டே இருக்கின்றன… பழயவை பின்னால் போய் விடுகின்றன…

   • அறிவழகு சொல்கிறார்:

    என்னா ஒரு நம்பிக்கை…தன் அவலங்களின் மீதான அதீத நம்பிக்கை. ஆனால், 2019 தேர்தலின் போது எல்லா அவலங்களும் ஒன்று திரண்டு வரிசை கட்டி நிற்கும். அது ஒரு மாநில தேர்தலை சந்திப்பது மாதரியோ அல்லது 2014 தேர்தலில் பொய்களை மட்டுமே முதலீடாக்கியது போலவோ இருக்காது. அல்லாமல் மக்கள் சற்று விழிப்படைந்து இருப்பார்கள் என்று நம்புவோம்.

 14. BVS சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இது நீங்கள் ஏற்கெனவே மேலே கூறி இருப்பது :
  // ஸ்டாலின் இனியும் “ஷோ” காட்டினால், திமுக தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை கூட தமிழகத்தில் உருவாகலாம் – என்று இப்போது அவர்கள் ‘ஷோ” காட்டி இருக்கிறார்கள்….! //

  இது இப்போது விகடன் கூறி இருப்பது:
  // :தமிழ்நாட்டில் காங்கிரஸ், தினகரன், தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி என வலுவான அணி அமைவதற்கான சூழல்கள் கனிந்து வந்துள்ளன. இப்படியொரு முயற்சி வெற்றிபெற்றால், வரும் காலங்களில் தி.மு.க இருந்தால்தான் அந்த அணி வெற்றி பெறும் என்ற பிம்பமும் உடைபடும்.//

  உங்கள் கணிப்புடன் இது ஒத்துப்போகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.