குழந்தையா ….. வில்லனா…? இரண்டும் கலந்த கலவையா…?


இது அப்பாவிக் குழந்தையா…. ?
அல்லது குழந்தை மாதிரி தோற்றமளிக்கும் கொடூர வில்லனா….?
உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான ஆசாமி… !!!

கார் கூடவே அதன் வேகத்திற்கு தகுந்தாற்போல் ஓஓஓஓஓஓஓடும் செக்யூரிட்டி கமாண்டோக்கள்… பேண்டு வாத்தியங்களுடன் அரை கிலோமீட்டருக்கு மாப்பிள்ளை ஊர்வலம்….!!!

எல்லையில் நின்றுகொண்டு, நீங்கள் முதலில் என் மண்ணை மிதியுங்கள்… என்று இழுத்து, பின்னர் தென் கொரிய எல்லையில் கால் வைக்கும் சாமர்த்தியம்…

செடி, கொடிகளின் இடுக்குகளில் எல்லாம் செக்யூரிடி ஒளிந்து கொண்டு காவல் காப்பது….!

இதை சிரிக்காமல் பாருங்கள்……. முடிகிறதா….பார்க்கலாம்…!!

நமக்கு காமெடியாக இருக்கும் -நாம் சிரிக்கலாம்…. ஆனால், தென் கொரியர்களும், ஜப்பானியர்களும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்….

இதில் விசேஷம் என்னவென்றால், செயின் ஸ்மோக்கரான இந்த குழந்தை வில்லன், தன்னை விட 2 மடங்கு வயதானவர் தென் கொரிய அதிபர் என்கிற மரியாதையால், அவருடன் இருந்த நேரம் முழுவதும்
சிகரெட்டையே தொடவில்லையாம்… 🙂 🙂

எப்படியோ, இந்த பிராந்தியத்தில் அமைதி பிறந்தால் எல்லாருக்குமே மகிழ்ச்சி தான்.

…..

————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to குழந்தையா ….. வில்லனா…? இரண்டும் கலந்த கலவையா…?

 1. அறிவழகு சொல்கிறார்:

  நேற்றே இந்த செய்தியை டிவியில் பார்த்து விட்டேன். ஆனால், நீங்கள் கொடுத்துள்ள ‘குழந்தை வில்லன்’ அடைமொழி ஜோர்.

  சரி. இவ்வளவு காமெடி செய்தும் எந்த அசம்பாவிதமும் நடைபெறாதது ஏன்.

  ஏனெனில், வடகொரியாவில் கருப்பு தங்கம்(எண்ணெய்) என்ற உயிர் கொல்லி சமாச்சாரம் இல்லை. அது இருந்திருந்தால் வரலாறு இன்று வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

 2. Pingback: குழந்தையா ….. வில்லனா…? இரண்டும் கலந்த கலவையா…? – TamilBlogs

 3. Mahesh Thevesh சொல்கிறார்:

  வடகொரிய அதிபரை இன்றைய நரகாசூரனாக உலகம் முழுவதும் பிரசாரஞ்செய்தது உலகப்பயங்கரவாதியான அமெரிக்காவாகும்.கொரியாவின் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அமெரிக்கா கொரியா மேல் எத்தனை தடவை படைஎடுத்து எத்தனை லட்சம் கொரியர்களைக் கொன்று ஒழித்தது என்பது புரியும். வடகொரியா அணு ஆயுத பலம் பெற்றது தன் நாட்டையும் தன் மக்களையும் உலக பயங்கர வாதியான அமெரிகாவிடமிருந்து பாதுகாப்பதற்கே அல்லாமல் உலகைப் பயமுறுத்த இல்லை என்பது இன்று உலகத்திற்குத் தெரியும்.வெற்றுக்கூச்சலுடன் அமெரிக்கா நின்று கொண்டதற்கு வடகொரியாவிடமுள்ள அணு ஆயுதங்களே காரணம் என்பது உலகம் அறியும்.

  • அறிவழகு சொல்கிறார்:

   எத்தனை தடவை இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்தது. எனக்கு தெரிந்து 1950 வாகில் ஒன்று. அதுவும் வடகொரியா invaded into South with the support of the USSR tanks and arms then China also join hand. அமெரிக்கா தெற்குக்கு ஆதரவாக சென்று அதுவும் கனிசமான வீரர்களை இழந்துதான் திரும்பியது.

   சரி. ஏன் திரும்பியது. கேள்வி அது தான்.

   மத்திய கிழக்கு நாடுகளில் தளம் அமைத்து தங்கியது போல் தங்காமல் திரும்ப வந்ததற்கான காரணம் தான் என்ன.

   ஆமாம்! கோமாளியை கோமாளி என்று தானே உலகம் சொல்லும். கா.மை. ஐயா நல்ல அடைமொழி கொடுத்துள்ளார்கள. அமெரிக்கா தான் அவர்களை கொடுக்க சொன்னதோ…..!?

   அனு ஆயுதத்துக்கு பயந்தா…? அமெரிக்காவா…? அமெரிக்காவின் பலம் என்ன..? இந்த பச்சாவின் பலம் என்ன…?

   • Mahesh Thevesh சொல்கிறார்:

    அமெரிக்கா ஒரு தீர்ந்து போன பெருங்காயக்குண்டான் என்பதை
    அறிந்து கொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

    • அறிவழகு சொல்கிறார்:

     என் பின்னூட்டத்தின் மைய்ய கருவை உம்மால் உள்வாங்க முடியவில்லை. விட்டு விடுங்கள்.

 4. புதியவன் சொல்கிறார்:

  வட கொரிய அதிபர் தென் கொரிய அதிபரைச் சந்தித்தற்கு முக்கியக் காரணம், சகோதரர்களிடையே அமெரிக்கா நுழைந்து அரசியல் செய்வதைக் கட்டுப்படுத்தத்தான். ஆனாலும் அளவுக்கு அதிகமாக அமெரிக்காவிடம் மண்டி இட்டுவிட்ட தென் கொரியா, எவ்வளவு தூரம் வட கொரியாவை நம்பும் என்பது தெரியவில்லை. இந்தச் சந்திப்பு வெறும் செய்தி என்ற அளவில் நின்றுவிடவும் சாத்தியம் இருக்கிறது.

 5. புதியவன் சொல்கிறார்:

  வட கொரியா – திமுக, தென் கொரியா-அதிமுக, அமெரிக்கா-இந்திராவின் காங்கிரஸ் என்ற அளவில் ஒப்பு நோக்கினால், நாளை, வட கொரியா, திமுக காங்கிரசிடம் மண்டி இட்டதுபோல்-1980, அமெரிக்காவின் நட்பு நாடாகிவிட்டால், தென் கொரியா அம்பேலாகிவிடும்.

  காமை சார்.. இந்த ஒப்பீடு எப்படி இருக்கிறது?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   ஆனாலும், வட கொரியாவை – திமுகவுடன் ஒப்பிட்டு,
   நீங்கள் இப்படி அவமதிக்கக்கூடாது… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s