ஊருக்குத் தான் உபதேசம்… உனக்கில்லையடி பெண்ணே…!!!


எவ்வளவு அசிங்கங்கள்…!!!
தேர்தலில் வெற்றி அவ்வளவு முக்கியமா..?
இவ்வளவு உயர்ந்த பதவியை வகிக்கும் ஒருவருக்கு
வெட்கம், மானம், ரோசம் – எதுவுமே கிடையாதா…?

ஒரு மாநில தேர்தலில், ஒரு தேசத்தின் பிரதமர் இந்த அளவிற்கு
கீழே இறங்கி, தரம் தாழ்ந்து பேசலாமா…?
கேவலமான தொனியில் ஒரு மாநில முதல்வரை ஏசலாமா…?

இதுவரை இந்திய சரித்திரம் காணாதது….

” நா காவூங்கா – நா கானே தூங்கா ” -வுக்கு
உண்மையான அர்த்தம் தெரியாத அந்த அப்பாவி இந்தியர்களுக்கு,
விகடனின் இந்த செய்தி அர்ப்பணம்…..!!!

——————————-

https://www.vikatan.com/news/tamilnadu/124061-pm-shares-stage-with-corruptioncharged-reddy-brother.html
FRIDAY, MAY 04, 2018 – செய்திகள்

நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சோமசேகர ரெட்டியுடன்
ஒரே மேடையில் பிரதமர் மோடி!

கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான காளி சோமசேகர ரெட்டி, பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்டியுடன் பிரதமர் மோடி

கர்நாடகத் தேர்தலையொட்டி பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெல்லாரியைச் சேர்ந்த காளி ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள்.

பி.எஸ். எடியூரப்பாவின் அரசில், காளி ஜனார்த்தனரெட்டி அமைச்சராகவும் இருந்தார்.

பெல்லாரி மாவட்டத்தில், பல ஆயிரம் கோடி அளவுக்கு கனிம வளங்களை சுரண்டியாக வழக்குகள் இவர்மீது பதியப்பட்டுள்ளன.

காளி ஜனார்த்தன ரெட்டி பதவி விலகினார். இந்தச் சமயத்தில், காளி ஜனார்த்தனரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி எம்.எல்.ஏ-வாக இருந்தார். சகோதரர் ஜனார்த்தன ரெட்டி மீதான புகாரை விசாரிக்கும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க
முயன்றதாக, சோமசேகர ரெட்டி மீது வழக்கு உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில், பெல்லாரி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டியின் இளைய சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு பாரதிய ஜனதா கட்சி சீட் வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்று பெல்லாரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பெல்லாரி ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில், காளி சோமசேகர ரெட்டி பொதுக் கூட்ட மேடையில் பிரதமருடன் கலந்துகொண்டார். பிரசாரத்தில் பேசிய மோடி, ஒரு வார்த்தைகூட லஞ்சம், ஊழல் ஒழிப்புபற்றிப் பேசவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா ,

”மோடியின் பெல்லாரி வருகைக்கு நன்றி.
பரப்புரை கூட்டத்தில் ஜனார்த்தன ரெட்டியின் 35,000 கோடி
ஊழல் குறித்து மறக்காமல் பேசவும்”

என்று ட்வீட் செய்திருந்தார்… 🙂 🙂 🙂

———————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஊருக்குத் தான் உபதேசம்… உனக்கில்லையடி பெண்ணே…!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  /// எவ்வளவு அசிங்கங்கள்…!!!
  தேர்தலில் வெற்றி அவ்வளவு முக்கியமா..?
  இவ்வளவு உயர்ந்த பதவியை வகிக்கும் ஒருவருக்கு
  வெட்கம், மானம், ரோசம் – எதுவுமே கிடையாதா…?

  ஒரு மாநில தேர்தலில், ஒரு தேசத்தின் பிரதமர் இந்த அளவிற்கு
  கீழே இறங்கி, தரம் தாழ்ந்து பேசலாமா…?
  கேவலமான தொனியில் ஒரு மாநில முதல்வரை ஏசலாமா…?

  இதுவரை இந்திய சரித்திரம் காணாதது….///

  இது இன்று அல்ல ஐயா. என்றுமே இருந்தது இல்லை.

  என்றைக்கு நாய் உதாரணம் கொடுத்தாரோ அன்றே தான் யார் என்பதை உலகிற்கு அறிவித்துவிட்டார். மக்கள் தான் இவரின் பொய்யுறைத்த வாய் ஜாலங்கள் கண்டு பரப்புறை செய்கிறார்கள். கூடிய சீக்கிரம் தெளிவாகிவிடுவார்கள்.

  • உண்மை விளம்பி சொல்கிறார்:

   இந்திரா காந்தி இறந்த போது 3000 சீக்கியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் கொலை செய்யபட்டனர் .
   அந்த படுகொலைக்கு ராஜிவ் காந்தியின் விளக்கம் தங்கள் அறிந்திருப்பீர்கள் .. அது பற்றி தங்கள் கருத்து

   • Ram சொல்கிறார்:

    மேற்படி பதிவில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாத முண்டங்கள் இப்படித்தான் சம்பந்தம் இல்லாமல் திசை திருப்புவார்கள்
    என்பதை நாங்கள் ஏற்கெனவே நிறைய பார்த்திருக்கிறோம்.

 2. paamaran சொல்கிறார்:

  ஒரு பாடல் பதிபக்தி படத்தில் … ” திண்ணை பேச்சு வீரரிடம் ” என்று தாெடங்கும் பாடலில் வரும் வரிகள்….
  // பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
  போக்கினில் அனேக வித்தியாசம்
  புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
  புவியை மயக்கும் வெளிவேஷம் _ // இடுகையை படித்தவுடன் நினைவுக்கு வந்தது …!!!

 3. BVS சொல்கிறார்:

  கர்நாடகாவில் பாஜக ஊழலைப்பற்றி வாயே திறக்க தகுதியற்ற நிலையில்
  இருக்கிறது. யெட்டி+ரெட்டி ஊழல் கூட்டு அங்கே நாறுகிறது. மீண்டும் யெட்டியை
  முதல்வராக்க அங்கே பாஜகவிலேயே பெரும்பாலானோர் விரும்பவில்லை. லிங்காயத்து ஓட்டுகளை பிடிக்க வேறு வழியின்றி பாஜக யெட்டியை நிறுத்தி இருக்கிறது. ஒருவேளை பாஜகாவுக்கு கவுடாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், யெட்டி கைகழுவப்படுவார். அப்போது இருக்கிறது இன்னும் நிறைய தமாசு.

 4. Pingback: ஊருக்குத் தான் உபதேசம்… உனக்கில்லையடி பெண்ணே…!!! – TamilBlogs

 5. Ram சொல்கிறார்:

  ஊழலைப்பற்றி பேச பாஜகவுக்கோ மோடிஜிக்கோ எந்தவித தகுதியும் இல்லை.
  வரிசையாக ஊழல் விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே
  இருக்கின்றன.இந்த புகார்களைப்பற்றீ எல்லாம் அவர் கையது கொண்டு, வாயது பொத்தி மவுனம் சாதிக்கிறார். கர்நாடகாவில் போய் தேர்தல் கூட்டங்களில்
  அடுத்த கட்சி ஊழல்களைப்பற்றி பேசும் அவர் தன் கட்சிக்காரர்கள் பற்றீ கூறப்படும்
  ஊழல் புகார்கள் குறித்து மவுனம் சாதிப்பதேன் ?

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  அவருக்கு தான் பிரதமர் என்பதே நினைவில் இருப்பதில்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.