திருவாளர் பியூஷ் … நல்லவரா…. கெட்டவரா…? இது ஊழலா … இல்லையா…???


பொதுவாக சார்டர்ட் அக்கவுண்டெண்ட் – என்றாலே புத்திசாலிகளாக இருப்பார்கள். இல்லையென்றால், அதற்கான பரீட்சையில் பாஸ் பண்ணவே முடியாது…
முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே, அகில இந்திய அளவில் 2-ஆம் ரேங்க் எடுத்து பாஸ் செய்தவர் என்றால், அவர் படுபுத்திசாலியாகவே இருக்க வேண்டும்….

இத்தகைய தகுதியுடையவர்கள், தங்கள் தொழிலில் நிறைய சம்பாதிப்பார்கள்… அனுபவம் கூடக்கூட, வருமானமும் கூடிக்கொண்டே போகும்….

லட்சக்கணக்கில் இந்த தொழிலில் சம்பாதிப்பதை விட்டு விட்டு, இத்தகைய புத்திசாலி சி.ஏ.ஒருவர் அரசியலுக்கு வந்தார் என்றால் என்ன அர்த்தம்…?

வெளியே, தனது தொழிலில் சம்பாதிப்பதை விட, அரசியலில் இறங்கினால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது என்று அர்த்தம்…. 🙂 🙂

ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் இருக்கிற, இந்தியாவிலேயே பணக்கார கட்சியான பாஜகவுக்கு ஒருவர் பொருளாளராக நியமிக்கப்படுகிறார் என்றால் என்ன அர்த்தம்….?

அவரால் கட்சிக்கும், கட்சியால் அவருக்கும் – நிறைய பயன் இருக்குமென்று அர்த்தம்…. 🙂 🙂 இந்தியாவில் எந்த கட்சி ஒரிஜினல் கணக்கு வழக்கு காட்டி நிதியறிக்கை சமர்ப்பிக்கிறது…?

சரி – விஷயத்திற்கு வருவோம்…..

முக்கியமான பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படும்போது, சம்பந்தப்பட்ட நபர் – அமைதியாக, நியாயமான காரணங்களுடனும், ஆதாரங்களுடனும் அது தவறு என்பதை எடுத்துச் சொல்லி, நிரூபிக்க வேண்டும்.

தகுந்த ஆதாரங்களை தர முடியவில்லையென்றால், பதவியிலிருந்து தானாகவே தற்காலிகமாக விலகிக்கொண்டு, தன்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிக்க, ஒரு நியாயமான விசாரணையை ஏற்பாடு செய்யும்படி, அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இதற்கு நேர் மாறாக, எதைச்செய்தாலும், ஆதரவு தர பின்னால் பிரதமர் இருக்கிறார் என்கிற தைரியத்தில், குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்து வாய்க்கு வந்தபடி “காம்தார்… நாம்தார்…” என்று உளறினால் என்ன அர்த்தம்…?

தான் செய்த தப்பு வெளிவந்து விட்டதே என்கிற எரிச்சல்…. பொய்யென்று நிரூபிக்க இயலாமை….!!!

————————-

அண்மைக் காலத்தில், இரண்டு விஷயங்கள் திருவாளர் பியூசுக்கு எதிராக சொல்லப்பட்டன….

முதலில், ஷிர்தி இண்டஸ்ட்ரீஸ் விவகாரம் –

புகழ்பெற்ற ஆங்கில செய்தி வலைத்தளமான ‘தி ஒயர்’ இணைய இதழும், மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சித்தலைவரான குலாம் நபி ஆசாத்’தும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள்….

நன்றி : the wire.in

மும்பையைச் சேர்ந்த ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் நிறுவனத்தின் இயக்குநராக திருவாளர் பியூஷ் – ஜூலை 2010 வரை இருந்திருக்கிறார்… அதாவது, அகில இந்திய பாஜகவின் பொருளாளராக நியமிக்கப்படும் வரை….

அந்த சமயத்தில் அந்நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் பலவற்றிடமிருந்து 650 கோடி ரூபாய்அளவிற்குக் கடன்கள் பெற்றுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டு, வாராக்கடன்காரர்களின் பட்டியலுக்கு போய் விட்டது… திருவாளர் பியூஷ் அதன் இயக்குநராக இருந்தகாலத்திலிருந்தே
தவணையை ஒழுங்காக கட்டாத நிலை துவங்கி விட்டது.

திருவாளர் பியூஷ் இதற்கு முன்பாக, இரண்டு அரசு வங்கிகளுக்கு அரசின் பிரதிநிதியாக இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார்.

வாஜ்பாய் அரசில், பரோடா வங்கியிலும், பின்னர் 2004-2008- ல் மன்மோகன்சிங் அரசில் பாரத ஸ்டேட் வங்கியிலும் பதவி வகித்திருக்கிறார்….

2008-இல், அவர் பாரத ஸ்டேட் வங்கியை விட்டு வெளியேறிய பிறகு, ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம் – 2010 முதல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பாஜக தேசிய கட்சியின் பொருளாளராகவும் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.

பின்னர் அதே ஆண்டில் அவர் நாடாளுமன்ற நிதிக் குழுவிற்கும் (parliamentary committee of finance) உறுப்பினராக, நியமிக்கப்பட்டிருக்கிறார்…. இந்தக் குழுதான் வங்கிகள் உட்பட பல அரசு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பினை வகிக்கிறது.

எனவே, மேற்படி திருவாளரின் செல்வாக்கினாலேயே ஷிர்தி நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அளவிற்கு வங்கிக் கடன்கள் கிடத்துள்ளன…. என்பது அடிப்படையான குற்றச்சாட்டு.

ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்திற்கு திருவாளர் பியூஷ், 2008 ஏப்ரலிலிருந்து ஜூலை 2010 வரை இயக்குநராக இருந்தார் என்பது ‘ரிஜிஸ்ட்ட்ரார் ஆப் கம்பெனிஸ்’க்கு அளிக்கப்பட்டுள்ள ரிடர்ன்- களிலிருந்து தெரியவருகிறது. 2009 செப்டம்பர் 30 வரை திருவாளர் பியூஷ் அதன் முழுநேர இயக்குநராகவே இருந்திருக்கிறார்.

அதன் பின்னரும் செயல்படா இயக்குநராக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். ‘ஷிர்தி’ நிறுவனம் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகைகள் எதையும் ஒழுங்காகச் செலுத்தவில்லை…

இந்த கம்பெனியின் மேற்படி பின்னணிகளால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கும்போதே பின்னால் திரும்பக் கொடுப்பதாக உத்தேசம் இல்லை என்கிற உத்தேசத்திலேயே கடன் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.

எனவே, இந்த நிறுவனம், பல விதிமுறைகளை கடைபிடிக்கவே இல்லை. தொழிலாளர்களின் பிராவிடண்ட் பண்ட் நிதியான 4 கோடியை செலுத்தவே இல்லை. பல அவசியப்பட்ட தொகைகளையும், வரிகளையும் கட்டவில்லை.

ஆனால், அதே காலக்கட்டத்தில், திருவாளர் பியூஷின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமான ‘இண்டர்கான் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு, ஷிர்தி நிறுவனம் எந்தவித பிணையும் இல்லாமல், 1.59 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்திருக்கிறது…. இந்த கடன் இன்று வரை திரும்பச்செலுத்தப்படவில்லை…
( வாராக்கடன் பட்டியலில் போகப்போகும் கம்பெனி தானே…யாருக்கு கடன் கொடுத்தால் என்ன…. எவ்வளவு கொடுத்தால் என்ன…? கடனுக்கான பிணை ஆவணங்களை பெற்றால் என்ன… பெறா விட்டால் என்ன…? ஆற்றோடு போகும் தண்ணீர்…. அம்மா குடி, அய்யா குடி… என்று ஆளாளுக்கு அனுபவித்திருக்கின்றனர்….!)

ஷிர்டி நிறுவனத்திற்கு திருவாளர் பியூஷ் மறைமுகமாக தனது செல்வாக்கை பயன்படுத்தி செய்த உதவிகளுக்காக, அவரது மனைவியும்,மகனும் ஷிர்தி நிறுவனத்திடமிருந்து இந்த பண ஆதாயத்தை பெற்றார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு….

இந்த செய்தி வெளிவந்தபிறகு, ஷிர்தி இண்டஸ்ட்ரிஸின் தற்போதைய உரிமையாளர்கள் இந்தக் கடன் மேற்படி‘இண்டர்கான் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு நட்பின் அடையாளமாகக் கொடுக்கப்பட்டதென்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். நட்பின் அடையாளமாக, கம்பெனி பணத்தை கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுப்பார்கள் போலும்…. இதே போல், அவர்களின் மற்ற நண்பர்களுக்கும் அள்ளிக்கொடுத்தார்களா…? தெரியவில்லை….!!! )

தன்னுடைய நிறுவனம் அரசாங்கத்தின் வங்கிகளுக்கு கடன்தொகைகளைத் திருப்பிச் செலுத்தாததற்கும், திருவாளர் பியூஷின் மனைவிக்கும் மகனுக்கும் சொந்தமான நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குக் கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்தாததற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அதன் தற்போதைய பொறுப்பாளர் அகர்வால் மறுத்திருக்கிறார்….

ஷிர்தி நிறுவனத்துடன், திருவாளர் பியூஸ் குடும்பத்திற்கு இருக்கும் நெருக்கம் பளிச்சென்று தெரிகிறது. பழைய ஆவணங்களை இப்போது மாற்றவும் முடியாது…..

எனவே, திருவாளர் பியூஷ் இயக்குநராக இருந்த நிறுவனம் 650 கோடிரூபாயை அரசாங்கத்தின் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாது இருப்பது தொடர்பாகவும்,

அவரது மனைவிக்கு அந்த நிறுவனம் அளித்துள்ள கடன் தொகை சம்பந்தமாகவும், பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்திட வேண்டும் என்றும் அமைச்சர் பொறுப்பிலிருந்து திருவாளர் பியூஷ் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, பவன் கேரா ஆகியோர் கூட்டிய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மேற்படி விவரங்களைச் சொல்லி உடனடியாக இந்த விஷயம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்…..

( ….தொடர்கிறது அடுத்த பகுதியிலும்….)
——————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திருவாளர் பியூஷ் … நல்லவரா…. கெட்டவரா…? இது ஊழலா … இல்லையா…???

 1. paamaran சொல்கிறார்:

  எப்பப்பா …. கில்லாடிகள் … தலை சுற்றி மயக்கம் ‘ வராது ‘ !! நமக்கு … ! சுதந்திர நாட்டில் – இது போன்ற பல போன்ற பலவற்றை பார்த்தும் — அதன் முடிவுகளை கண்டும் அலுத்து போனவர்கள் நாம் …. ஏப்ரல் மாதமே வெளிவந்த செய்தி — இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாது இருப்பது கூட — ” கர்நாடக தேர்தல் ” தான் காரணமோ – என்னவோ ..? ” தி ஒயர் பத்திரிக்கையில் படிக்க :– // In Selling Firm to Piramal Group as Minister, Piyush Goyal Pushes Ethical Boundaries
  From Flashnet to Shirdi, top Modi government minister hides details of key business dealings.// …..

  https://thewire.in/political-economy/in-selling-firm-to-piramal-group-as-minister-piyush-goyal-pushes-ethical-boundaries … ஆஹா … ஓஹோ .. பேஷ் … பேஷ் …!! தொடருங்கள் … தொடர்ச்சியையும் படித்து பரவசமடைய காத்திருக்கிறோம் …!!!

 2. அறிவழகு சொல்கிறார்:

  ///இந்த கம்பெனியின் மேற்படி பின்னணிகளால், வங்கிகளிலிருந்து கடன் வாங்கும்போதே பின்னால் திரும்பக் கொடுப்பதாக உத்தேசம் இல்லை என்கிற உத்தேசத்திலேயே கடன் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.///

  இது பாவம் இல்லையா…?
  இந்த பாவத்தை கண்டும் காணாமல் இருப்பவர்க்கும் பங்கு இல்லையா…?
  இதற்கு தன் கட்சி ஆள் தனக்கு வேண்டிய ஆள் என்பதற்காக சப்பகட்டு கட்டுபவர்களுக்கும் பங்கு இல்லையா…?
  கடைசியில் என்னத்த கொண்டு போகப் போகிறோம் என்ற பிரக்ஞை கொஞ்சமாவது இவர்களுக்கு இருக்காதா…!?

  இறைவா.

 3. tamilmani சொல்கிறார்:

  most of the politicians irrespective of their affiliations to their respective parties are cheaters to the core especially BJP AND CONGRESS. they have swinedled Nationalised banks. Their present assets should be attached by revenue recovery act and after adjusting the bank loans should confiscate the assets

 4. Pingback: திருவாளர் பியூஷ் – சுவாரஸ்யமான மிச்சக் கதை….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.