அயோக்கியத்தனம்… பொறுப்பின்மை – இவர்கள் இந்த பதவிகளை வகிக்க லாயக்கற்றவர்கள்…. உடனடியாக அகற்றப்பட வேண்டும்….


எங்கும் இந்தி – எதிலும் இந்தி …

தமிழ்நாட்டிலிருந்து 17 வயது சிறுவர், சிறுமியர்களை, ராஜஸ்தானுக்கும், சிக்கிமுக்கும் ‘நீட்’ தேர்வு எழுத அனுப்பத்துணிந்ததும் அல்லாமல்,

இந்த நிமிடம் வரை அந்த தவறுக்கு எந்தவித மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத இந்த ராட்சஸர்கள் உடனடியாக பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட வேண்டும்…

மத்திய கல்வி அமைச்சர் – திருவாளர் பிரகாஷ் ஜவடேகர்

(கல்வியமைச்சர், இந்த நீட் தேர்வை மாநிலங்களின் தலையில் சுமத்துவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியில், அக்கறையில் – ஆயிரத்தில் ஒரு பங்காவது இந்த தேர்வு குறித்த முன்னேற்பாடுகளில் எடுத்துக் கொண்டாரா…? )

சிபிஎஸ்ஈ தலைவர் – திருமதி அனிதா கர்வால், IAS

ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள்…அதற்கு உரிய செண்டர்கள் நிச்சயிக்கப்பட்டு விட்டதா என்று கூட உறுதி செய்துகொள்ளாத இவர், இந்த பதவியில் ஏன் நீடிக்க வேண்டும்…? தண்ட சம்பளம் வாங்கவா…? இல்லை கிம்பளங்களை தொடரவா…?

டைரக்டர் ( நீட் தேர்வு ) – டாக்டர் சன்யம் பரத்வாஜ்

இந்த மிகப்பெரிய அவலத்திற்கு முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கூட கோராத இவர் ஏன் இன்னும் இந்த பதவியில் நீடிக்க வேண்டும்…?

இது, நீட் தேர்வை எதிர்த்ததற்காக, தமிழக மாணவர்களுக்கு இவர்கள் வேண்டுமென்றே கொடுத்த தண்டனையா…? அல்லது இவர்களால் என்ன செய்ய முடியும் என்கிற அலட்சியமா…?

13 லட்சம் மாணவர்கள் எழுதும் ஒரு பரீட்சைக்கான ஏற்பாடுகளை செய்யும்போது யோசித்து யோசித்து மிக கவனமாக எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை இவர்கள் எடுக்கத்தவறியது ஏன்…? எப்படி…?

அலட்சியமா, கவனக்குறைவா, பொறுப்பின்மையா – அல்லது வேண்டுமென்றேயா…?

இவர்களது அலட்சியத்தால், மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும், அல்லலுக்கும் ஆளாகியிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக இவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டாலும் ஆறுதலாகவாவது எதாவது இரண்டு வார்த்தைகளாவது சொன்னார்களா…?

தேர்வுக்கு சில மாதங்கள் முன்னதாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு விடுகிறது… அதுவும் ஆன்லைனில்…

ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்கிற தகவல், விண்ணப்பிக்க குறிப்பிடப்பட்ட கடைசி நாளன்றே கம்ப்யூட்டரில் தயாராக இருக்கிறது….

அந்த எண்ணிக்கைகளுக்கேற்ப தேர்வு மையங்களை(செண்டர்களை) நிர்ணயிப்பதில் இவர்களுக்கு என்ன சிரமம்….?

மையங்கள் அனைத்துமே பெரிய நகரங்களில் தான் இருக்கின்றன. இந்த நகரங்களில் வசதிக்கென்ன குறைச்சல்…?

சென்னையில், கோவையில், வேலூரில் இல்லாத கல்லூரி வசதிகளா…? ஆயிரக்கணக்கான மாணவர்களை இவற்றில் வெகுசுலபமாக எழுத வைக்கலாமே… இந்த கல்லூரிகள் ஏற்கெனவே லட்சக்கணக்கான மாணவர்களுக்கு
நுழைவுத்தேர்வு வைத்து, அனுபவம் பெற்றவர்கள்… அங்கு infrastructure அனைத்தும் தயாராக இருக்கின்றன.
இவை, CBSE டைரக்டருக்கு தெரியாதா…?

நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிகம் பேர் விண்ணப்பித்து விட்டார்கள் என்று சாக்கு கூறுகிறார்கள்…. எதிர்பார்த்து ஏன் வேலை செய்ய வேண்டும்…?
விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் மாலையே, சகலவித தகவல்களும், எண்ணிக்கைகளும், கம்ப்யூட்டரில் தயாராக இருந்தனவே…?

அந்த எண்ணிக்கையை பொறுத்து தானே தேர்வு மையங்களை தீர்மானிக்க வேண்டும். இவர்களாக ஏன் உத்தேசமாக தீர்மானிக்க வேண்டும்….?

முதலில் தேர்வுகள் முடியட்டும்….
சமூகத்தில் பொது ஆர்வலர்களுக்கு குறைச்சலில்லை….
இவர்கள் 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,
தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வைத்து –
இவர்களுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் –
இந்த தேர்வு குறித்த பல தகவல்கள் ஒளிக்கப்படுகின்றன….
இந்த தண்டனை தமிழக மாணவர்களுக்கு மட்டும் தானா…?
தமிழகத்திற்கு வெளியே வேறு எந்த மாநிலத்திலிருந்தும் எந்தவித
புகாரும் இதுவரை வெளிவரவில்லையே…? அது எப்படி…?

.
————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to அயோக்கியத்தனம்… பொறுப்பின்மை – இவர்கள் இந்த பதவிகளை வகிக்க லாயக்கற்றவர்கள்…. உடனடியாக அகற்றப்பட வேண்டும்….

 1. Pingback: அயோக்கியத்தனம்… பொறுப்பின்மை – இவர்கள் இந்த பதவிகளை வகிக்க லாயக்கற்றவர்கள்…. உடனடியாக அகற்ற

 2. BVS சொல்கிறார்:

  கே.எம்.சாரி,

  நினைவில்லையா – இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிபிஎஸ்ஈ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளின் போது பேப்பர் லீக்’கில் சம்பந்தமுடையவரும் இதே சிபிஎஸ்ஈ தலைவர் தானே ? மிக சீரியசாக கிளம்பிய அந்த விஷயத்தை என்னென்னவோ செய்து அப்போது அமுக்கி விட்டார்கள். குஜராத்திலிருந்து ஸ்பெஷலாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய’மானவர்களில் இவரும் ஒருவர் ஆயிற்றே.. இவரையெல்லாம் அவ்வளவு சுலபமாக அசைத்து விட
  முடியுமா ? யோசித்துப் பார்த்தால், இதை இவர் திட்டம் போட்டு செய்தவராக கூட இவர் இருக்கலாம் என்று தோன்றூகிறது.

 3. tamilmani சொல்கிறார்:

  இந்த தடவை பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஆன்லைன்
  அடிப்படையில் நடை பெற இருக்கிறது. ஏராளமான மாணவர்களும்
  பெற்றோர்களும் இதற்காக சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை.
  பயணச்செலவு, நேரம், சென்னையில் தங்கும் செலவு மற்றும் உணவு செலவு இல்லை. இந்த நடவடிக்கையை எடுத்த மாநில அரசை பாராட்ட வேண்டும்.

  அனால் மத்திய அரசு நீட் தேர்வின் சில மாணவர்களை வெளி மாநிலத்தில் தேர்வு எழுதவேண்டும் என்று நிர்பந்தம் செய்வது தமிழக மாணவர்களை எப்படியாவது வடிகட்டி வெளியேற்ற நடைபெற்ற ஒரு சூழ்ச்சி . இது சி பி எஸ் சி செய்த மாபெரும் தவறு. காவிரியில் வஞ்சித்த மத்திய அரசு இப்போது தமிழக மாணவர்களின் வாழ்க்கை பிரச்சையினிலும் வஞ்சித்து விட்டது. பி ஜே பி இனியும்
  தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதை கற்பனையிலும் நினைக்கவேண்டாம்.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Do you still trust the courts?

  • புது வசந்தம் சொல்கிறார்:

   இதேதான் எனது கேள்வியும்? அந்த நீதிமன்றங்கள் தானே இந்த முட்டாள்தனதிற்கு துணை போய்யுள்ளன ?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதுவசந்தம்,

    இப்போதிருக்கிற மத்திய அரசு வேறு நீதிமன்றம் வேறா நண்பரே…?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   வழக்கு மத்திய அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தால் எனது பதில்
   இல்லை.. இல்லை… இல்லவே இல்லை.

 5. kalakarthik சொல்கிறார்:

  ஆம் அண்ணா .
  எரிகிறது வயிறு.கொதிக்கிறது கோபம்.அதை விட யாருக்கும் உதவாமல் இருக்கும் கையறு நிலையும் வேதனை.உதவும் உள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆறுதல் பட்டுக் கொள்கிறேன்.
  கார்த்திக் அம்மா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   முக்கியமாக மனம் கொதிப்பது – அந்த பிஞ்சு உள்ளங்கள் படும் பதட்டத்தைப்பார்த்து தான்…

   பொதுவாகவே, பொதுத்தேர்வு என்றாலே பதட்டம் தான். தமது பள்ளியைத் தவிர, வேறு இடங்களில் தேர்வு எழுதுவது என்றால் பதட்டம் இன்னும் கொஞ்சம் கூடும்.

   திருநெல்வேலியில் வசிப்பவரை எர்ணாகுளத்திற்கு போகச் சொல்வதை கூட பொறுத்துக் கொள்ளலாம்.

   ஆனால், கண்காணாத வெளி மாநிலங்களில், அதுவும் ராஜஸ்தான், சிக்கிம் என்று இந்த பிஞ்சுகள் பார்த்தேயிராத இடங்களுக்கு போய் தேர்வு எழுதுவது என்றால்…?
   அதுவும் கடைசி நேரத்தில், ரிசர்வேஷனும் கிடைக்காமல், தொடர்ந்து 2 நாட்களுக்கு ரெயில் பயணம் மேற்கொண்டு – இவர்கள் எப்படி நிம்மதியாகப் படிப்பார்கள்… எழுதுவார்கள்…?

   அப்ளிகேஷனில், 3 choice கேட்டிருக்கிறார்கள். ராஜஸ்தானையும், சிக்கிமையும் – எந்த மாணவனும் கேட்கவில்லை. எனவே choice -ஐயும் மீறித்தான்
   போட்டிருக்கிறார்கள். இதற்கு அவசியம் நீதிமன்றம் போயே ஆக வேண்டும்… நீதிமன்றமே ஒரு கமிஷன் அமைத்து விசாரிக்கட்டும். எந்த மாணவர் ராஜஸ்தான் / சிக்கிம் கேட்டார் என்று இவர்கள் ஆதாரம் காட்டட்டும்.

   இதற்கு காரணமானவர்களை ஆண்டவன் மன்னிக்கவே மாட்டான்.

   இதற்கு பொறுப்பானவர்கள் எவராவது இதுவரை வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா…?
   இதற்கு காரணமானவர்கள் நம்ம ஊருக்கு வந்தால், மக்கள் அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும்.

   • N S Raman சொல்கிறார்:

    I fully agreed with you. For the failure in planning and suffering of students all top officials should be made answerable.

    Tamil Nadu Government AG should have appeared in SC for this case. If it had happened in Kerala all MP’s thrashed CBSE office. But here only statements are coming from slaves leaders.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கார்த்திக் அம்மா,

   இதில் பாராட்டத்தக்க வகையில் செயல்படுபவர் கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன்.
   உதவி என்று கேட்பதற்கு முன்பே, தானாகவே முன்வந்து உதவிக்கரங்களை நீட்டி, மிகவும் ஆறுதலாக இருக்கிறார். அவருக்கு நம் நன்றியையும், பாராட்டுதல்களையும் அவசியம் தெரிவிக்க வேண்டும். பொதுவாக, எப்போதுமே அவர் ஒரு இயல்பான மனிதாபிமானத்தோடு செயல்படுவதை பார்க்கிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  N S Raman,

  இங்கே இருப்பது கோழைகளையும், நூறுசதவீத சுயநலவாதிகளையும் கொண்ட அரசமைப்பு. மத்திய அரசுக்கு எதிராக தும்முவதற்கு கூட அச்சப்படுவார்கள்…
  மடி முழுவதும் கனம்…. பயம் இருக்கத்தானே செய்யும்…?

 7. LVISS சொல்கிறார்:

  Very badly managed — Could have been handled in a way as to not inconvenience the students Look at the explanation given —

  https://scroll.in/latest/877938/over-1000-students-from-tamil-nadu-to-travel-to-other-states-for-neet-exam

 8. paamaran சொல்கிறார்:

  ஒரு முறை திருச்சி சென்றிருந்தேன் — அங்கிருந்து ” உறையூர் ” செல்ல வேண்டும் .. விசாரித்ததில் ஒருவர் வழி காண்பித்தார் — செல்லும் போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி மீண்டும் அதே கேள்வியை கேட்டவுடன் — அங்கிருந்தவர் சார் இது ” துறையூர் ” போகிற வழி என்று கூறி நீங்கள் வந்த வழியே சென்று அங்கு விளக்கமாக கேட்டு செல்லுங்கள் என்கிறார் — !
  இதில் குழப்பம் எப்படி வந்தது …? முதலில் நான் கேட்டவர் உறையூர் என்பதை துறையூர் என்று புரிந்துகொண்டு வழி காட்டி விட்டார் போலும் என்று …. இந்த ஓரெழுத்து வித்தியாச மகிமையை உணர வைத்த மலைக்கோட்டை விநாயகரின் கருணை எண்ணி வியந்தேன் … !

  என் மாநிலத்தில் – என் மக்கள் பேசி பழகுகிற மொழியில் கேட்டதற்கே – இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றால் — திடிரென்று நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் செல்லும் மாநிலம் , அறிமுகம் இல்லாத இடம் . நம் மாணவர்கள் பேசும் மொழியும் அங்கே பேசும் மொழியும் வேறு வேறானவை … தேர்வு மையங்களை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம் ….
  இவ்வளவு சிரமங்களோடு அவஸ்தைகளோடு நம் இளம் வயது மாணவர்கள் பலநூறு கிலோமீட்டர் பயணம் செய்து, அந்த மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டு இருக்கிறார்கள் … வேண்டுமென்றே — ஒரு நோக்கத்தோடு தொடுக்கப்பட்ட செயலன்றி வேறில்லை …!

  எத்தனை தடைகள் வந்தாலும் — சிரமங்களை திணித்தாலும் அத்தனையும் உடைத்து முன்னேறி சென்று வெற்றியை கைக்கொண்டு — அதிகமான ” திறமை வாய்ந்த மருத்துவர்கள் ” ஆவார்கள் என்பது உறுதி — மற்றும் அந்த கயவர்களின் முகங்களில் கரியை பூசுவதும் திண்ணம் … !
  ஏனென்றால் அந்தக் காலத்தில் இதைவிட பல கொடுமைகளை எதிர்த்து போராடி அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்ற தலை முறை அவர்களின் முன்னோர்கள் — முன் நிற்பவர்கள் என்பதை யாரும் மறந்து விடவோ – மறுத்துவிடவோ .. முடியாது … !!

  கூட்டு சதி நீண்ட நாட்களுக்கு எடுபடாது என்பதை பின்பக்க வழியே உள்ளே நுழைய முயலுபர்கள் தெரிந்துக் கொள்வார்கள் — இவ்வளவு சிரமங்களை கொடுப்பதற்கு — ” நம் மாணவர்களின் அறிவின் மீதுள்ள பயம் தானே ” காரணம் … ! அந்த பயம் தொடரும் — தொடரட்டும் …!!!
  // உள்ளதை சொல்பவனே – உலகத்தில் பித்தனடி // என்பது ஒரு பாடலில் வரும் அடிகள் ….!

 9. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஆச்சரியமாக இருக்கிறது…..
  மகிழ்ச்சியளிக்கிறது…
  இத்தகைய செய்திகள்….

  ————-

  – கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கி ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.

  – தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையம் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என கேரள சிஐடியு, சிபிஎம் ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

  இத்தகைய சந்தர்ப்பங்களில் தான் மனிதாபிமானம் தழைத்தோங்குகிறது……!!!
  இத்தகைய நல்ல உள்ளங்கள் பல்கிப் பெருகட்டும்…!

 10. அறிவழகு சொல்கிறார்:

  கெடுவான் கேடு நினைப்பான். இதற்கு பின் இருப்பவர்களும் கெடுவார்கள்.

  • அறிவழகு சொல்கிறார்:

   1. தொடரும் நீட் அவலங்கள்…கோவையில் நீட் தேர்வு எழுதிய மாணவர் திடீர் மயக்கம்…

   2. நீட் தேர்வை எழுத எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமிக்கு திடீர் என மாரடைப்பால் மரணம்…..

   இந்த கொடூர சம்பவங்களுக்கும் காரணமானவர்களை இறைவா நீ பார்த்துக்கொள்(ல்).

   இந்த கொடுமை போதாதென்று,

   “நீட் தேர்வு எழுத சென்று இருக்கும் மாணவர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்ன தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்”.

   இவர்களை என்ன சொல்ல…?

 11. bandhu சொல்கிறார்:

  விநாச காலே விபரீத புத்தி! இனி வரும் தேர்தல்களிலெல்லாம் தோற்கும்போது மோடி அவர்களுக்கு இது புரியும்!

 12. kalakarthik சொல்கிறார்:

  நிச்சயம் அண்ணா .
  கேரளா முதல்வருக்கும்,அங்கு தங்க இடம் கொடுத்த
  முஸ்லிம்களுக்கும் ,இலவசமாக தேர்வு மையத்திற்கு கொண்டு விடுகிறோம் என்று சொல்லும் ஆட்டோ காரர்களுக்கும் என்று உதவி செய்யும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி
  .காத்திக் அம்மா

 13. paamaran சொல்கிறார்:

  அயாேக்கியத்தனம் என்று முடிவான பின் ….இன்னும் என்னென்ன கெடுக்கும்… தடுக்கும் செயல்கள் அரங்கேற காத்துக்கிடக்காே …தேர்வுமையங்களில் … ! ஏதாவது காரணங்களை கூறி தேர்வே எழுத முடியாமல் செய்யும் ..அதிகாரமும் அவர்கள் கையில் .! ஒரு முடிவில் இருப்பவர்கள் அல்லவா அவர்கள் …!!என்ன நடக்கிறது என்று பார்ப்பாேம்…!!!

 14. paamaran சொல்கிறார்:

  கையில் கட்டியுள்ள கயிறுகள் — மத சின்னமான பூணுல் போன்றவற்றை அறுப்பதும் — ஏகப்பட்ட கெடுபிடிகள் — மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை — காலில் உள்ள கொலுசு — மூக்குத்தி முதற்கொண்டு அகற்றி விட்டு –இருமல் வந்து சிறிதளவு சளி வந்தாலும் துடைக்க வழியில்லாமல் நடக்கும் ஒரு தேர்வு … ! இது தான் ஜன நாயகம் — உரிமைகள் மிக்க நாடு … ? வருங்காலத்தில் இனி ஆண் மாணவர்கள் ” பழனியாண்டி கோலத்தில் ” தான் தேர்வு எழுத வேண்டுமோ — என்னவோ … ?

 15. புதியவன் சொல்கிறார்:

  இதில் நான் பார்ப்பது, total mismanagement, done purposely. இந்தக் கஷ்டங்களைப் பற்றிப் படித்து, அடுத்த வருடம் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைத்து, அரசியல் ரீதியாக, பாஜக தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களைக் கொண்டுவந்தோம் என்று சொல்லிக்கொள்ள நினைக்கிறார்கள். தமிழர்களும், அப்பாடா… தேர்வு மையம் தமிழகத்திலேயே இருக்கே என்று சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள். நீட் எதிர்ப்பே காணாமல்போய்விடும்.

  இந்த மாதிரி முடிவுகள், தீர்மானங்கள் எடுப்பவர்கள் எப்படி கல்வியாளர்கள் என்ற பெயரில் இருக்கமுடியும்? பதின்ம வயது குழந்தைகளுக்கு தேர்வு சமயத்தில் மன உளைச்சலோ அலைச்சலோ கஷ்டமோ வரச் செய்யலாமா? குறைந்தபட்சம் 50% பேர்களாவது கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

  கல்வியாளர்களுக்கும் அலட்சியம். தமிழக எதிர்க்கட்சிகளுக்கு உடனே அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி, ஆளும் கட்சிக்கு செத்தவர்களுக்கு 3 லட்சம் கொடுத்து (லஞ்சம்தான்) விஷயத்தை அமுக்கும் எண்ணம். திமுக செயல்படுவதும் மோசம், அதிமுக செயல்படவே இல்லை.

  வேறொரு கோணத்தில், தமிழகத்தில் தேர்வு இருந்தால் எதிர்ப்பு கிளம்பலாம், அரசியல் கட்சிகள் போன்றவை போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறை கூறியிருக்குமோ? எப்படி இருந்தாலும் தமிழக மாணவர்களை அசாமுக்கும் ஜெய்ப்பூருக்கும் போய்த் தேர்வு எழுதச்சொல்வதைப் போன்ற கொடுமை வேறு எதுவும் கிடையாது. பாவம் மாணவர்கள். (இருபாலாரும்தான்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.