பிரகாஷ் ராஜ் – சுப்ரமணியன் சுவாமி – ஒரு சுவாரஸ்யமான வாக்குவாதம்…


இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு வெகு சுவாரஸ்யமான விவாதம் ஒன்று, கர்நாடகா தேர்தலை முன்னிட்டு,
டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மோதியவர்கள் திரு.பிரகாஷ் ராஜூம் திரு.சுப்ரமணியன் சுவாமியும்…

பாஜகவுக்கு சாதகமான ஆடியன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது….!!!

சுப்ரமணியன் சுவாமி, வழக்கமான, சாதுரியமான, தேர்ந்த பேச்சாளர்… தொழில்முறை அரசியல்வாதி, ஹார்வர்டில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.. ஆங்கிலத்தில் சகஜமாக லெக்சர் அடிக்ககூடியவர்…
சப்ஜெக்ட் அவர் எப்போதும் கையாளும் அதே சப்ஜெக்ட் தான். எனவே அவர் பேசியது எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை….

ஆனால், பிரகாஷ் ராஜ் ஒரு பேச்சாளரல்ல…
ஒரு அரசியல்வாதியும் அல்ல….
தொழில்முறையில் ஒரு நடிகர்.
ஆங்கிலத்தில் நல்ல புலமை கிடையாது.

அதுவும் சுப்ரமணியன் சுவாமியைப் போல், ஆங்கிலத்தில் அதிகம் பேசிப்பழகி விவாதங்களில் கலந்து கொண்டவர் அல்ல…

விவாதங்களூடே, திரும்பத் திரும்ப, சு.சுவாமி – பிரகாஷ் ராஜை ஒரு நடிகர் என்றும் வில்லன் என்றும் கிண்டல்
செய்து வெறியேற்ற முயற்சி செய்தார்…..
இருந்தும், சுப்ரமணியன் சுவாமியின் தந்திரங்களுக்கு முன்னால், பிரகாஷ் ராஜ் அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்தது அதிசயமாகத் தான் இருந்தது….

அந்த விவாதத்திலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகள் கீழே –

விவாதங்கள் ஒளிபரப்பான மறுநாள், பிரகாஷ்ராஜ் அந்த விவாதம் குறித்து
தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்… கீழே –

.
———————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பிரகாஷ் ராஜ் – சுப்ரமணியன் சுவாமி – ஒரு சுவாரஸ்யமான வாக்குவாதம்…

 1. John சொல்கிறார்:

  People like prakash raj win hearts.

 2. அறிவழகு சொல்கிறார்:

  Well done Prakash Raj. I am very impressed on your recent days activities. Keep going my dear ‘Villain’ for BJP.

 3. புதியவன் சொல்கிறார்:

  பிரகாஷ்ராஜ் சரியாக விவாதிக்கவில்லை. சு.சுவாமியை மடக்க இன்னும் நல்லா பேசத் தெரிந்த விவரமானவர்களை ஏற்பாடு செய்திருக்கலாம்.

  சு.சுவாமி brilliant என்பதில் சந்தேகம் இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   சு.சுவாமியை brilliant என்று கூறுவதை விட, நரி என்று கூறுவது தான் பொறுத்தமாக இருக்கும். அவர் என்றைக்குமே நேர்மையாக நடந்து கொண்டதில்லை… அவர் இந்த விவாதத்தில் முன்வைத்திருக்கும் கருத்துகளில் எதுவுமே புதியதில்லை. அவர் திரும்பத் திரும்பக்கூறி வருவது தான்.

   அவருடன் யார் மோதினாலும் சர், அவர் இதையே தான் சொல்லிக் கொண்டிருப்பார்.

   வாதத்தில் கலந்துகொண்டவர்கள் சமபலம் உடையவர்கள் அல்ல …. சில சமயங்களில், பிரகாஷ்ராஜ் தவறினாலும் கூட, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட
   பாஜக ஆடியன்ஸ் எதிரே துவளாமல், கோபம் கொள்ளாமல், கடைசி வரை தனக்கு தெரிந்த அளவிற்கு வாதாடினார் என்கிற வகையில் என் பாராட்டுகள்
   பிரகாஷ் ராஜுக்கு தான்….!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    Brilliance வேற.. நேர்மை வேற… நல்லதுக்குப் பயன்படாத அறிவினால் ஒருவனுக்கோ அவனைச் சார்ந்தவனுக்கோ உபயோகமில்லை என்பது என் எண்ணம்.

    பிரகாஷ்ராஜ் நல்லா வாதாடினமாதிரி எனக்குத் தோணலை. கொஞ்சம் சம பலம் உடையவரைக்கொண்டு வாதாடினால் பார்க்க நிறைவா இருந்திருக்கும். எனக்குத் தோன்றியது, நடுவில் உள்ளவரும் பாஜக சார்பாகத்தான் இருந்தார் என்று. (பிரகாஷ்ராஜ் இப்போ கேட்பதை 2010ல் ஏன் கேட்கலை என்பதுபோல கேள்விகள் எழுப்பினார்).

 4. BVS சொல்கிறார்:

  //சு.சுவாமி brilliant என்பதில் சந்தேகம் இல்லை.//

  எதிலே ? அயோக்கியத்தனத்திலா ? விதண்டாவதத்திலா ? மதவெறீயை தூண்டி விடுவதிலா ? சந்தர்ப்பத்தீற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதிலா ?

  கற்பழிப்பு, கொலைகார ஆசாராமை ஆதரித்து வாதாடியவர் பிரில்லியண்டா?

 5. Pingback: பிரகாஷ் ராஜ் – சுப்ரமணியன் சுவாமி – ஒரு சுவாரஸ்யமான வாக்குவாதம்… – TamilBlogs

 6. paamaran சொல்கிறார்:

  // (hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!
  Posted on நவம்பர் 18, 2010 by vimarisanam – kavirimainthan // … சிலதுக்கு மட்டும் …? ” சாமியின்…சாகசங்கள் …” …கணக்கில் அடங்காதவை … !!!

 7. LVISS சொல்கிறார்:

  One new thing that came to light in the debate is that the Right to vote is not a fundemental right but a legal right and a person can be disenfranchised –The debate was on expected lines and nothing new came out of it —
  Swamy is well grounded on constitutional laws –There was a debate on Article 370 where he clashes with Ram Jethmalani and two others and gives them a lesson on interpreting the article –
  There is also another interesting interview by karan thapar of Sawmy —
  Though one cannot agree with all his views he sounds interesting whenever explains legal points —

 8. LVISS சொல்கிறார்:

  Swamy also spoke about the partition debate in British Parliament –
  There was another person who tried to pin down Prakash Raj as an actor — He was not allowed to speak —

 9. Nalini சொல்கிறார்:

  Prakash Raj is a very decent person unlike Subramanya swami who is cunning and manipulative, in fact all BJPs and RSS people. Prakash Raj will do better in upcoming debates. Gowri Langesh who got killed by BJP goons was his family friend I believe, That’s why he is against BJP.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.