-ரெண்டரை …… பெத்த கவுடா, பிள்ளை கவுடா…!!!


துபாயிலிருந்து ஒரு நண்பரின் தொலைபேசி அழைப்பு….

” சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளிவைத்து விட்டு, ஒழுங்காக பதில் சொல்லுங்கள்… கர்நாடகாவில் யார் ஜெயிப்பார்கள்…? யார் ஆட்சியமைப்பார்கள்…? ”

“மில்லியன் டாலர் கேள்வியை இப்படி, இவ்வளவு சாதாரணமாக கேட்டால் எப்படி…? இதற்கு சரியான விடை தெரிந்தால், பெட்டிங் மார்க்கெட்டிலேயே லட்சக்கணக்கில் சம்பாதித்து விடலாமே…!”

“என்ன சொல்கிறீர்கள்…? இதற்கும் பெட்டிங் ஓடுகிறதா…? ”

“இதுவரை 3000 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடந்திருக்கிறது.”

“லேடஸ்ட் ரேட் என்ன…? எப்படி…? ”

” காங்கிரஸ், பாஜக – இரண்டுக்குமே தனி மெஜாரிடி கிடையாது என்பது நிச்சயமாகி விட்டது…. பாஜகவை விட காங்கிரஸ் 5 முதல் 10 வரை அதிகம் சீட்டுகள் பெற்று, தனிப்பட்ட பெரிய கட்சியாக வெளிவரும் என்று தெரிகிறது… பெட்டிங் மார்க்கெட்டில் காங்கிரசுக்கு 85-90 வரை சீட் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 80-85 சீட் கிடைக்கும் என்றும் மதிப்பீடு. ”

“அப்ப என்ன தான் முடிவு…? யார் அடுத்த முதலமைச்சர்….?”

“அதை முடிவு பண்ணப்போவது பெத்த கவுடா அல்லது பிள்ளை கவுடா தான்…!!!”

“எப்படி…? ”

“அவர்களின் ஜனதா தள் (எஸ்) கட்சிக்கு 25-30 சீட்டுகள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவர்களின் கட்சி யாருக்கு ஆதரவு தரப்போகிறதோ அவர் தான் அடுத்த முதலமைச்சர்….!!!” ( கர்நாடக சட்டமன்றத்திற்கான மொத்த
சீட்டுகள் -224; எனவே 113 சீட்டுகளுக்கு மேல் கையில் வைத்திருக்கும் கட்சி ஆட்சி அமைக்கலாம்…)

“சரி… அவர்கள் ஆதரவு யாருக்கு இருக்கும்….?”

“அவ்வளவு சீக்கிரம் வெளியில் சொல்லி விடுவார்களா…? அப்பர் (அப்பனுக்கு மரியாதை விகுதி….)
காங்கிரசுடன் பேரம் பேசி வருகிறார்….

பிள்ளை, அமீத் ஷாவுடன் பேரம் நடத்தி இருக்கிறார்…. (இருவரும் தனித்தனியே….!!! )

தேர்தல் ரிசல்டுகள் வெளியான பிறகு தான் இறுதி முடிவு எடுக்கப்படும்…. அப்பரின் பேரம், பிள்ளையின் பேரம் –
இரண்டில் எதில் அதிக லாபம் கிடைக்கும் – என்பதை பார்த்துக் கொண்டு, அப்பரும், பிள்ளையும் சேர்ந்து இறுதி முடிவை எடுப்பார்கள்….!!!”

” பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிக்கும் எங்கள் ஆதரவு கிடைக்காது என்று சொன்னார்களே…? ”

“அது மட்டும் தானா சொன்னார்கள் …? யார் முதலமைச்சர் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம்” என்றும் அப்பரும், பிள்ளையும் சொன்னார்களே…!!!

“அது மட்டுமல்ல… இப்பவும் அப்பர் பேரம் பிள்ளைக்கு தெரியாத மாதிரி காங்கிரசுடனும், பிள்ளையின் பேரம் அப்பருக்கு தெரியாது என்கிற மாதிரி பாஜகவுடன் நடித்துக்கொண்டு தான் பேரம் நடக்கிறது…. அப்பத்தானே விலை அதிகம் கிடைக்கும்….?”

பாஜகவுடன் பிள்ளையின் பேரம் முடிந்தால், ” பாஜகவுடன் கூட்டு சேர வேண்டாம் என்று சொன்ன என் சொல்லை கேட்காத என் மகனுடன் இனி எனக்கு ஒட்டும் கிடையாது…உறவும் கிடையாது …” என்று அப்பர் டிக்ளேர் செய்வார்…
( ஜூஜூபி… 2 மாத validity…!!!)

காங்கிரசுடன் அப்பரின் பேரம் முடிந்தால்,” தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ” என்று பிள்ளை டிக்ளேர் செய்துவிட்டு கப்சிப் என்று தந்தையின் முடிவை ஏற்றுக்கொள்வார்…!!!

“அய்யோ கர்நாடகாவின் தலைவிதி கடைசியில் இவர்கள் கையிலா…? ”

“கவலைப்படாதீர்கள்… காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் கூட, ஜனதா தள் கட்சியை தன் வசம் கொண்டு வந்து ஆட்சியமைக்கும் சாமர்த்தியம் அமீத் ஜீ -க்கு உண்டு….”

“அப்ப… பாஜக கூட்டணி ஆட்சி தானா…? ”

“அப்படியும் சொல்லி விட முடியாது…. பாஜகவுக்கு 80 சீட்டுக்கும் குறைவாக கிடைத்தால்…. அமீத்ஜீயின் சாமர்த்தியம் பலிக்காது…. ”

ஆனால், பாஜகவுக்கு 80 சீட்டுக்கு மேல் நிச்சயம் கிடைக்கும் என்றும், காங்கிரசுக்கு 85 சீட்டுக்கு மேல் நிச்சயம் கிடைக்கும் என்றும் சூதாட்ட மார்க்கெட் சொல்கிறது…. ( காங்கிரசுக்கு 85 சீட் என்று பெட் கட்டினால், ஒரு ரூபாய்க்கு 90 பைசா
தான்…. ஆனால் 90 சீட் என்று பெட் கட்டினால், 1.35 ரூபாய்….எனவே எதிர்பார்ப்பு – 85-க்கும் 90-க்கும் இடையில்….!!! ) இப்போதைக்கு இது தான் சரியான சர்வேயாக இருக்க முடியும்…!!!

” இதில், கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வழியுண்டா….? ”

” கடைசி நேரத்தில், மாயா(வதி)ஜி, மாயம் செய்தால் உண்டு….! ஜனதா தள், பாஜகவுடன் ரகசியமாக கூட்டணி வைத்திருக்கிறது…. எனவே அதனுடன் எங்கள் கூட்டணியை முறித்துக் கொள்கிறோம் என்று மாயாஜி அறிவித்தால் –
காங்கிரஸ் அதிக சீட்டுகளை பெற வாய்ப்பு இருக்கிறது….!!!””

…..

….

இன்றைய தேதியில் – இந்த அப்பரும் பிள்ளையும் தான் அடுத்த முதலமைச்சரை தீர்மானிக்கப் போகிறார்கள் என்பது தான் உண்மை…ஆக கர்நாடகத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தலையெழுத்தை இவர்கள் தான் தீர்மானிக்கப்போகிறார்கள்…
பாவம் கர்நாடகா மக்கள்…!!

ஆனால், மக்கள் இதை முன் கூட்டியே யோசித்துணர்ந்து, உணர்ச்சி வசப்படுவதை விட்டு விட்டு, புத்திசாலித்தனமாக யோசித்து, செயல்பட்டால், இந்த இரண்டு சகுனிகளின் தலையெழுத்தையும் தாங்களே எழுதி, அவர்களின் எதிர்கால அரசியலை ஒரு முடிவிற்கு கொண்டு வந்து விடலாம்….!!!

—————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to -ரெண்டரை …… பெத்த கவுடா, பிள்ளை கவுடா…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு காங்கிரஸ்தான் பெரும்பான்மை பெறும் என்று தோன்றுகிறது. காங்கிரசின் சீட்டுகள் 125க்கு மேல் போனாலும் ஆச்சரியம் இல்லை. சீத்தாராமையா அதிர்ஷ்டத்தால் பதவிக்கு வந்தவர். ஆனால் அவரின் செயல்களினால் பாப்புலராகிவிட்டார். உள்கட்சி சண்டைகளுக்கு வாய்ப்பு குறைவு.

  என்னை நம்பி பெட் கட்டி நீங்கள் நிறைய சம்பாதிக்க வாழ்த்துகள். (ஹா ஹா ஹா)

 2. BVS சொல்கிறார்:

  குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல், எதாவது ஒரு கட்சிக்கு மெஜாரிட்டியை
  கொடுப்பது தான் கர்நாடக மக்களுக்கு நல்லது. இல்லையேல் இந்த அப்பரும்,
  பிள்ளையும், துட்டை வாங்கிக்கொண்டு – நாடகத்தை துவக்கி விடுவார்கள்.
  ஆயாராம், கயாராம் ஆட்டமும் துவங்கி விடும். கர்நாடகா மக்கள் எந்த சனியனுக்கு
  வாக்களித்தாலும் சரி இந்த அப்பர் – பிள்ளைக்கு நிச்சயம் ஆதரவு கொடுக்க கூடாது.

 3. BVS சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  கர்நாடகா சுப்ரீம் கோர்ட்டில், தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறதே – இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மிக மிக நல்லது…
   கர்நாடகா எந்த வழிக்கும் வராது.. எந்த உத்திரவுகளையும் மதிக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கைகளில், அணைகளின்
   கட்டுப்பாட்டை ஒப்படைப்பது தான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று சுப்ரீம் கோர்ட்டில் அழுத்தமாக வாதாட நமக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.