திருவாளர் பியூஷ் – சுவாரஸ்யமான மிச்சக் கதை….!!!


திருவாளர் பியூஷ் … நல்லவரா…. கெட்டவரா…? இது ஊழலா … இல்லையா…???

என்கிற தலைப்பில் மே, 4-ந்தேதி ஒரு இடுகை வெளிவந்தது… அது முற்றுப்பெறாத நிலையில், அதனை முடிப்பதற்குள் இடையில் வேறு சில இடுகைகள் குறுக்கிட்டு விட்டன….. அந்த இடுகையின் மிச்சப்பகுதி இது…!!!

இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது காங்கிரஸ் கட்சி…

திருவாளர் பியூஷ் அவர்கள், மத்திய எரிசக்தித்துறை, நிலக்கரி, மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சராக – மே 26, 2014 அன்று பதவியேற்றுக் கொண்டார்….( தேதி முக்கியம்… )

சார்டர்ட் அக்கவுண்டண்டாகவும், தனிப்பட பல கம்பெனிகளை நிர்வகித்தும், சொந்தமாக நடத்தியும் வந்த அவர் மத்திய அமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தனது வர்த்தக தொடர்புகளிலிருந்து வெளிவர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

தற்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டானது –

———————

Midas Touch Minister Piyush Goyal sold another company
at huge profit
Published: Apr 28th 2018, 03.06 PM

——

Whatever the Union Minister touches seems to turn into gold. Yet another company he and his wife floated, nursed and sold
at huge profit turns the spotlight on deals politicians make with business Union Minister Piyush Goyal, a Chartered Accountant and a former treasurer of the Bharatiya Janata Party (BJP), is fast gaining a public reputation for his Midas touch.

Weeks after reports that he and his wife invested Rs 1 lakh in a company and raked in 30 crore in 10 years, comes another
report that suggests that Goyal and his wife invested 5 lakh in a company in 2000 and sold it in 2014 for 48 crore.

Goyal himself has not publicly reacted to the earlier reports.

And on Saturday, news portal The Wire reported that the minister had not responded to the questions sent to him before
publishing the latest report.

The latest report on Piyush Goyal in The Wire states: Goyal and his wife set up Flashnet Info Solutions (Pvt) Ltd
in the year 2000 with 50,070 shares of 10 each.Goyal and his wife together held 99.9% of the shares..

The shares were sold in September 2014 for 48 crore at a premium of 1,00,000% to Piramal Estates Pvt Ltd.While Goyal
disclosed his and his wife’s controlling interest in Flashnet in 2010, he made no mention of it in his asset declarations to
the PMO in 2014, 2015 and 2016.

The shares were sold four months after Goyal became Union Minister in May 2014. But he made no mention of it in his
declaration to the PMO made in July, 2014.His statements in subsequent years did not reflect the payment received by the
Goyals by selling their shares in Flashnet.

In both 2014 and in 2015, his declarations claimed the book value of Goyal’s ‘unquoted securities’ as exactly the same, ie
101,300 (rupees one lakh and three hundred only).However, the book value of the unquoted securies held by his wife in 2016
was shown as 33 crore.

The Wire story raises the question of ethics and conflict of interest because the Piramal group had diversified into power
and renewable energy sectors in 2013 – while Goyal was a Union Minister of State with independent charge of power and energy
when he sold his shares to Piramal.

Significantly, Flashnet showed a profit of 34 lakh in 2014. But in subsequent years Piramal Estates Pvt Ltd., which had
acquired and renamed the company, began showing losses in crores.

( https://www.nationalheraldindia.com/india/midas-touch-union-minister-piyush-goyal-and-wife-sold-another-company-at-huge-profit )

—————

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து, திருவாளர் பியூஷ், தனது முந்தைய வர்த்தக தொடர்புகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார்….

அமைச்சர், பிரதமர் அலுவலகத்திற்கு, தனது சொத்து சம்பந்தமான விவரங்களை ஜூலை 25, 2014 அன்று தான் கொடுத்தார்…. அந்த சமயத்தில், அவரது flashnet கம்பெனி ஏற்கெனவே விற்கப்பட்டு, அந்த தொகையும் அவரது சொத்துக் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டது.( அந்த கம்பெனி ஜூலையில் தான் விற்கப்பட்டது என்பதை பாஜகவும் ஏற்கிறது…!!!)

– என்று கூறுகிறது.

ஆனால், சில விஷயங்கள் இன்னமும் சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது…

1) அவர் எரிசக்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது மே 26, 2014 அன்று. சொத்து விற்கப்பட்டதாக கூறப்படுவது ஜூலை 2014-ல். எனவே, அவர் எரிசக்தித்துறை அமைச்சராக இருந்தபோது தான், அவரது கம்பெனி, எரிசக்தித்துறையில் வர்த்தகம் செய்யும் இன்னொரு கம்பெனிக்கு அதிக லாபத்திற்கு விற்கப்பட்டிருக்கிறது… என்கிற
குற்றச்சாட்டுக்கு இதில் பதில்/விளக்கம் இல்லை….!!!

2) பத்து ரூபாய் ஷேர் ஒவ்வொன்றும், 9,586 ரூபாய் என்கிற அசாத்தியமான விலைக்கு விற்கப்பட்டிருப்பது எப்படி…? – என்கிற குற்றச்சாட்டு குறித்து எதுவும் பதில் / விளக்கம் இல்லை…!!!

3) எரிசக்தி அமைச்சர், தனது துறையுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு கம்பெனிக்கு, தன் சொந்த கம்பெனியை ஏன் விற்றார்..? அதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும் –
என்பது குறித்த விளக்கமும் இல்லை. (conflict of interest…)

4) அமைச்சர் சொத்து விவரங்களை காட்ட வேண்டியது, அவர் அமைச்சராக பதவி ஏற்ற தினத்திலிருந்தா அல்லது, அவருக்கு சௌகரியமான வேறு ஒரு தினத்திலிருந்தா…? ( ஒருவர் அமைச்சராக பதவியேற்ற பின்னர் அவரது
சொத்துக்களில் எதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்பதை தெரிந்துகொள்ள தானே அந்த சொத்து அறிக்கையே சமர்ப்பிக்கப்படுகிறது…? )

5) குற்றச்சாட்டு உண்மையிலேயே மறுக்கப்பட வேண்டும் என்றால் –

சொத்து விற்கப்பட்ட தேதி…
வங்கியில் அவரது கணக்கில் பணம் பெறப்பட்ட தேதி…
அந்த சொத்தில் அவரது ஒரிஜினல் முதலீடு…
விற்பதால் கிடைக்கின்ற லாபம்…( அதாவது விற்ற விலை…!)
ஆகிய விவரங்களையும் தந்திருக்க வேண்டும்..

ஐந்து லட்சம் முதலீடு செய்து துவங்கப்பட்ட கம்பெனி, 48 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது போன்ற –

அந்த விவரங்களைத் தருவது, அவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பது தான் காரணமோ…?

பொதுவாகவே, கிரிமினல் மூளையுடைய, புத்திசாலி அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்களை சட்டத்தின் முன் நிரூபிப்பது மிகவும் கடினம். ஏனென்றால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும், அதன் நெளிவுசுளுவுகளையும் நன்கு தெரிந்துகொண்டு தான் அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவின் நம்பர் 2 சார்டர்ட் அக்கவுண்டெண்ட், மாட்டிக்கொள்கிற மாதிரியா தவறு செய்வார்…? எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்களை எந்த சட்டமும் எதுவும் செய்ய முடியாது. பின்னால் இருப்பவர்களின் துணையுடன் “ஹாய்”யாக தொடர்ந்து கொண்டே தானிருப்பார்கள்.

ஆனால், மக்கள் மனதிற்கு விஷயங்கள் புரிய, நீதிமன்றத்திற்கு தேவைப்படும் சாட்சிகள் எல்லாம் தேவையில்லை… நடந்திருப்பது என்ன என்பதை அவர்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறும் செய்திகளே போதுமானவை….. அவர்கள் வெகு சுலபமாக புரிந்துகொள்வார்கள்…!!!

—————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திருவாளர் பியூஷ் – சுவாரஸ்யமான மிச்சக் கதை….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  அரசியலுக்கு சேவை செய்ய யாரும் வரவில்லை (எக்செப்ஷன்ஸை காட்டாதீங்க, காமராசர், கக்கன் போன்று). முன்பு, காசு நிறைய தேத்தலாம், பதவியும் தேடி வரும் என்று நினைத்தனர். கடந்த 10-20 வருடங்களாக, பயங்கர கொள்ளை அடிக்கலாம் என்பதுதான் அரசியல்வாதியாக வருவதற்கான காரணம் என்று சிலர் சொன்னால், அதில் தவறு இருக்காது என்றே நினைக்கிறேன்.

  ஜேட்லி, பியூஷ்.. என்று எல்லாருமே இந்த லிஸ்டுதான். ஜனநாயகம் என்ற பெயரில் எலைட் குரூப் அளவுக்கதிகமான பணக்காரர் ஆகிறார்கள். அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் சொன்னதாக வாட்சப்பில் வந்துகொண்டிருக்கும் செய்தியை முழுவதும் படித்துப் புரிந்துகொள்வது நல்லது.

 2. Pingback: திருவாளர் பியூஷ் – சுவாரஸ்யமான மிச்சக் கதை….!!! – TamilBlogs

 3. Ramasubramanian சொல்கிறார்:

  எந்த விஷயமாக இருந்தாலும், மிக எளிமையாக, எல்லாருக்கும் சுலபமாக புரியும்படி எழுதுகிறீர்கள். முக்கியமாக இந்த கட்டுரை.
  இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும்
  கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

 4. BVS சொல்கிறார்:

  மனொகர் பர்ரிகருக்கு வந்துள்ள நோய்க்கு அனுதாபம் தெரிவிப்போம்.
  அதே நேரத்தில், மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்,
  சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும், தர்மத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது
  என்பதை உணர வேண்டும். கர்நாடகாவில் கொலைவெறி பிடித்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் பாஜக பெருந்தலைகள் இதை உணர வேண்டியது அவசியம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.