மத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….!!!


மத்திய அரசு வேறு, உச்சநீதிமன்றம் வேறு தானே – என்று ஒரு சந்தேகம்
எழுந்திருந்தது சிலருக்கு…..

அந்த சந்தேகம் …… இன்று தெளிந்து விட்டது…!!!

——————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to மத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….!!!

 1. Pingback: மத்திய அரசு, உச்சநீதிமன்றம் – சந்தேகம் தெளிந்து விட்டது….!!! – TamilBlogs

 2. BVS சொல்கிறார்:

  புரிந்து கொள்ள முடிகிறது.
  இதைத்தவிர வேறேன்ன சொல்ல முடியும் ?

 3. Ram சொல்கிறார்:

  கேள்வியின் நாயகரே –
  இந்த கேள்விக்கு பதில் என்ன ?

  இரண்டு என்பது ஒன்றேயானால்,
  ஜனநாயகத்தின் நிலை என்னவாகும் ?
  இந்த நாட்டின் கதி என்னவாகும் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   இந்த நாட்டின் விதி, கதி எல்லாமே மக்களின் மதியில் தான் இருக்கிறது.
   விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொள்ளலாம்.

 4. Ram சொல்கிறார்:

  காவிரி – மிகுந்த ஏமாற்றம்.
  பாஜக அரசின் இந்த தொடர்ச்சியான துரோகத்தை
  தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நாமும் பார்ப்போமே… “இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்…?”
   இரவு முடிந்து தானே ஆக வேண்டும்… பகல் என்று ஒன்று வந்து தானே ஆக வேண்டும்…?

   • Venkat சொல்கிறார்:

    For those who are sleeping in the day,it will still be their night. They will never see day for they see only the night side of everything.

    Wake up….you will see DAY.

    • அறிவழகு சொல்கிறார்:

     But, your leader ‘chest of 56inch’ is not sleeping b’cas working hard for 24 hours have no time to sign. Then how this country would get to see a dawn.

    • Ram சொல்கிறார்:

     பாஜக அடிமைகளிடமிருந்து வேறு எத்தகைய கருத்தை எதிர்பார்க்க
     முடியும் ? கட்சியில் சேரும்போதே கண்களை மூடிக்கொள்ள வேண்டும்,
     காதுகளை பொத்திக்கொள்ள வேண்டும். மூளையை மொத்தமாக
     அடகு வைக்க வேண்டும். கட்சித்தலைமை சொல்வதை ஒலி பரப்பும் ஒரு
     லௌடு ஸ்பீக்கராக செயல்பட தயாராக வேண்டும்.

     அடிமைகளே, காலம் மாறும்.
     மக்கள் உங்கள் மூஞ்சியில் காரித்துப்பும் காலம் வரும்.

 5. LVISS சொல்கிறார்:

  What one could gather from newspaper-
  The center informed the court that the scheme for sharing water has been finalised but cited Karnataka elections –Karnataka has suggested that the authority should comprise of Irrigation ministers fo states instead of officials-A meeting of the chief secretaries was held in March and their views were taken in writing —
  Tamil Nadu has requested for framing a scheme for implementation of authority –
  There is going to be a new government in Karnataka a few days and let them take the responsibility of abiding by the scheme —

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நமது மூளை நாம் பயன்படுத்துவதற்காகவே உள்ளது. பாஜக தலை சொல்வதை அப்படியே பிரதிபலிப்பதற்காக அல்ல.

   முதலில் தேர்தல் முடியட்டும் என்று மத்திய அரசு சொன்னது. இப்போது கர்நாடகாவில் புதிய அரசு அமையட்டும் என்று புதிதாக இன்னொரு காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது…..

   எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கர்நாடகா அரசு மேலாண்மை வாரியத்திற்கு சம்மதிக்குமா…?

   இதில் மாநில அரசுகளின் சாய்சே கிடையாது. மாநில அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மாற்றி விடுமா…? அலலது மீண்டும் விசாரணையை துவங்குமா…?

   4 மாநில அரசுகளின் சம்மதத்தையும் கேட்டுக் கொண்டு தான் இதை நிறைவேற்ற வேண்டும் என்கிற அவசியமே இல்லை. சுப்ரீம் கோர்ட் போட்ட இறுதி உத்திரவை நிறைவேற்ற ஒரு நிரந்தர அமைப்பு வேண்டும். அரசியல்வாதிகளும், மந்திரிகளும் வருவார்கள் போவார்கள். நிரந்தரமல்ல.

   அதிகாரிகள் தான் நிரந்தரமானவர்கள். எனவே அந்த அமைப்பு அதிகாரிகளைத்தான் கொண்டிருக்க வேண்டும். கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட, இதர நதிநீர் மேலாண்மை அமைப்புகளும் இதே விதத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.

   கண்களைத்தான் சிலர் மூடிக்கொள்வார்கள். பாஜகவினரோ மூளையையே மூடிக்கொண்டு விடுகிறார்கள். தலைவன் எவ்வழி, தொண்டனும் அதே வழி… கண்களைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதி என்றால் குதித்து விடுவார்கள்.

   • அறிவழகு சொல்கிறார்:

    பாஜக காரர்களிடம் மூளை என்ற ஒன்று இருப்பதாக இன்னமுமா நம்புகிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு அதீத நம்பிக்கை தான்.

 6. paamaran சொல்கிறார்:

  // சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
  சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
  வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
  மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை // …. ஒரு பாடல் வரிகள் …!!
  ” எண்ணெய்வயல்களாக்கப்படும் நெல்வயல்கள் ” …!

  ” டெல்டா மாவட்டம் — பெட்ரோலிய மண்டலமாக ” மாற்றப்பட்டு காலங்கள் — காரியங்கள் நகர்ந்துக் கொண்டு இருக்கின்றன …! இன்னமும் இருக்கிறது – நம்பிக்கை …?
  ஒரு அதிகாரமற்ற காபந்து அரசிடம் – 4 – டி.எம்.சி தண்ணீர் உடனே திறந்து விடு என்று உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றத்தை மீண்டும் — மீண்டும் நம்புங்கள் … !!
  அந்த -“Care taker government ” . இங்கே தண்ணீர் இல்லை… இருந்தாலும் தற்போது தண்ணீர் விடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
  பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கப் படுவோமா — ? கர்நாடகா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றியென்று வந்து விட்டால் — காவிரியை நாம் சுத்தமாக ” மறந்து விடலாம் ” ..!! அப்படித்தானே …?

  • அறிவழகு சொல்கிறார்:

   அப்படியென்றால் பாஜக அங்கு வரக்கூடாது….? அப்படித்தானே …?

   அப்படியே ஆக இறைவன் நாடுவனாக.

  • புதியவன் சொல்கிறார்:

   @பாமரன் – பாஜக அதிக இடங்களில் வெற்றியென்று வந்து விட்டால் — காவிரியை நாம் சுத்தமாக ” மறந்து விடலாம் ” ..!! அப்படித்தானே …?

   ஒரு கேள்வி எனக்குத் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் 4 டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று சொன்னபோது, ‘தண்ணீர் இல்லை, விட முடியாது’ என்று சொன்னது காங்கிரஸ் (கடந்த இரு நாட்களுக்குள்). எய்தவன் காங்கிரஸ். திமுக மற்ற தமிழக கட்சிகள் ‘காங்கிரசை’ தனிமைப்படுத்தவேண்டும். ‘தண்ணீர்’ தர முடியாவிட்டால் நீ கூட்டணிக்கு வேண்டாம் என்று சொல்லணும்.

   இரண்டு, பாஜகவும் தமிழகத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடுகிறது. அப்படி என்றால் அவர்களையும் நாம் ஒதுக்கணும்.

   கர்நாடகாவில், காங்கிரஸ் வெற்றி பெற்றால் காவிரி தண்ணீரை மறக்க வேண்டியதுதான். பாஜக வெற்றி பெற்றாலும் அதே கதைதான்.

   பாஜக, காங்கிரஸ் செய்கின்ற துரோகத்துக்கு, இரண்டு கட்சிகளையும் பாராளுமன்றம், மற்றும் சட்ட மன்றத் தேர்தலில் தமிழக மக்கள், மற்றும் காவிரிக்காகப் போராடும் எல்லா தமிழக கட்சிகளும் ஒதுக்கவேண்டும். திமுக போல், காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டு, போலியாக பாஜகவை எதிர்ப்பதும், அதிமுக போல் பாஜகவுடன் உள் கூட்டு வைத்துக்கொண்டு காவிரிக்காக நேரடியாகப் போராடுவதுபோல் நடிப்பதும் தமிழக நலனுக்கு எதிரானது. ஸ்டாலின், தன் சொந்தத் தொழில்களுக்காக, கருணானிதி செய்ததுபோல் தமிழக நலனைக் காவு வாங்குவார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

 7. Ganpat சொல்கிறார்:

  இன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டுதான் உள்ளது எனும் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடியா ராகுலா என்பதே மக்கள் எடுக்கவேண்டிய முடிவு.எனவே இனி மோடிக்கு ஒட்டு அளிக்க கூடாது என்பதை விடுத்து ராகுலை பிரதமராக்குவோம் என்ற கோஷத்தை பரப்புவோம்.

  • அறிவழகு சொல்கிறார்:

   நல்லது. இதில் தவறு எதுவும் இருப்பதாக படவில்லை. நிச்சயம் நாடு எந்த வித பதட்டமும் இல்லாமல் இருக்கும். காங்கிரஸ் ஆட்சி திரும்பவும் வந்து ஆர்எஸ்எஸ்/பாஜக பயங்கர வாதிகள் குண்டுவைத்து கலவரங்கள் செய்யாது இருந்தால்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி …..

   மோடிக்கு ஓட்டு அளிக்கக்கூடாது என்று சொல்வது சரியா அல்லது
   ராகுலை பிரதமராக்குவோம் என்று சொல்வது சரியா….? 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    மோடிக்கு ஓட்டு அளிக்க கூடாது என்பது ஒரு விமரிசனம்/ கருத்து.ராகுலை பிரதமராக்குவோம் என்பது ஒரு செயல்/ திட்டம்.நான்கு ஆண்டுகளாக கருத்தை சொல்லி மக்கள் மனதை பண்படுத்தியாகி விட்டது இனி செயலை விதைப்பதே முறை.எனவே இனி ராகுலை பிரதமராக்குவோம் என்று சொல்வதே சரி.(என்பதே என் கருத்து)

  • அறிவழகு சொல்கிறார்:

   நன்ப கண்பத்,

   முதலில் செய்தி,

   2019 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார்: எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்கிறதா?- சிவசேனா கேள்வி.

   http://tamil.thehindu.com/india/article23835948.ece

   இந்த செய்தியில் தங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவான பகுதி,

   // ”கடந்த 2014-ம் ஆண்டில் பார்த்த ராகுல் காந்தி போல் இப்போது இல்லை. அவரிடம் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கு எதிராக, மிக வலிமையான மனவலிமை, புத்திக்கூர்மை உடையவராக ராகுல் வளர்ந்து வந்திருக்கிறார்.

   2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார். இது கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

   கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தனர். பிரதமர் மோடி கூட தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ராகுல் காந்தியை விமர்சித்தார். ஆனால், பிரதமர் மோடியை ஒருபோதும் தரக்குறைவாக ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை, பேசவும் இல்லை.

   ராகுல் காந்தி குறிப்பிட்ட தரத்தில், தரமான அரசியல் செய்கிறார் என்பதை அவரை எதிர்ப்பவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.” //

   நாடு விழித்துக்கொண்டு விட்டது.

 8. T.Thiruvengadam சொல்கிறார்:

  It is said unless supported by a coercive power of the state law is worthless.We see two governments have deliberately ignoring the orders of the SC. Tamilnadu should have brought this confrontation long ago when it’s voice was strong.It is no use bilaming the SC when itself is facing existential crisis.Democracy is based on votes and hence this dilatory tactics on one side and deliberate disobedience on the other.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.