ஒரு பிரதமராகப்பட்டவர் எத்தனை “இன்ச்” வரை பொய் சொல்லலாம்….?


பிரதமர் பதவியில் அமர்ந்து 4 வருடங்களுக்குப் பிறகும், சகட்டு மேனிக்கு பொய் பேசும் பழக்கம் இன்னும் போகவில்லையென்றால் –

பொய் என்பது அந்த ரத்தத்தில் எந்த அளவிற்கு ஊறிக் கலந்திருக்க வேண்டும்…?

அந்த பிரதமர் பதவியை பிடிப்பதற்காக எத்தனை பொய், – என்னென்ன பொய்களெல்லாம் சொல்லி
இருக்க வேண்டும்…. ???

இந்தியர்கள் பாவம் … அப்பாவிகள்…. ( என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் – ஆனால் நான் சீக்கிரம் விழித்துக் கொண்டு விட்டேன் …) நிஜத்திற்கும், பொய்க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத்தெரியாத அப்பாவிகள்…

ஒருவர் உணர்ச்சி பொங்க, முகத்தில் நவரசங்களும் சொட்டோ சொட்டென்று சொட்ட – உரத்த குரலில் பேசினால் –
வாயில் எச்சில் வழிவது கூடத்தெரியாமல் அதைப் பார்த்து அடடா…. எப்பேற்பட்ட மனிதர்… இந்த தேசத்தை உய்விக்க ஆண்டவனால் அனுப்பப்பட்ட தேவதூதர் அல்லவா இவர் என்று பரவசப்பட்ட மனிதர்கள்…..

2014 பாராளுமன்ற தேர்தலின்போது, அம்பானி செலவில், அடானி செலவில்
விமானங்களில் பறந்து, இந்தியா முழுவதும் இரண்டே மாதங்களில் 400 பேரணிகளில்

பேசியது அத்தனையும், டிஜிடல் மாய்மாலங்களையும், மெய்யென்று நம்பி ஓட்டுப் போட்டது அத்தனையும் பொய்யென்று தெரியும்போது …

அடடா…., ஒரு சின்னப்பெண், கிழி கிழியென்று கிழித்து, துவைத்து, பிழிந்து, தொங்கவிடுகிறார்…வீடியோவில்…!!!

வெட்கம், மானம், ரோசம் இருக்கிறவர்கள் – இதைப் பார்த்த பிறகு அடுத்த தடவை மேடையில் ஏற மாட்டார்கள்……

ஆனால் ……அதெல்லாம் மான ரோசம் பார்ப்பவர்கள் செய்வது….
இங்கே கதையே வேறு… முகத்தில் விழுந்ததை கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்டு
அடுத்த சப்ஜெக்டுக்கு போய் விடுகின்ற டைப்……..!
கவுண்டமணி கதை தான்….!!!

………….

.( வழக்கமாக, நான் அவர்களது கடவுளைப்பற்றி எழுதியவுடன், துள்ளியெழுந்து ஓடி வருகிற பக்தர்கள் இந்த பெண் கேட்பதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள, மற்ற வாசக நண்பர்களைப்போல, நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்…..!!! )

பின் குறிப்பு –


இந்த வீடியோவை முதல் தடவை பார்த்த பிறகு, இந்த இடுகையை எழுதி, இதில் பதிப்பிக்கும் வரை, இதை 5 தடவை பார்த்து விட்டேன். இருந்தாலும், ஒவ்வொரு தடவையும், அவர் தலையில் அந்த மைசூர் தலைப்பாகையுடன், வீராவேசமாக எதையோ கண்டுபிடித்து விட்டது போல், உணர்ச்சிகரமாக, ஆவேசமாகப் பேசுவதை ( sorry – நடிப்பதை) பார்க்கும்போது, பொத்துக்கொண்டு வரும் சிரிப்பை அடக்க முடியவில்லை…. ஏனோ தெரியவில்லை…இப்போது கோபம் வருவதில்லை….
(மரத்துப் போய் விட்டது….? ) ….!!!
.
———————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஒரு பிரதமராகப்பட்டவர் எத்தனை “இன்ச்” வரை பொய் சொல்லலாம்….?

 1. paamaran சொல்கிறார்:

  // வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே…// http://tamil.thehindu.com/india/article23832587.ece

  என்ன செய்வது எழுதிக் கொடுப்பவர்கள் ” கத்துக்குட்டிகளோ ” என்னவோ — இல்லை…. அந்த பகுதியில் பேசும் போது அங்கிருந்து நாட்டுக்கு பாடுபட்டவர்கள் லிஸ்ட் தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பமா … ? ” தேர்தல் பேச்சு – முடிந்தால் போச்சு ”
  என்கிற எண்ணமா…? நமோவுக்கே – வெளிச்சம் … !!

 2. Pingback: ஒரு பிரதமராகப்பட்டவர் எத்தனை “இன்ச்” வரை பொய் சொல்லலாம்….? – TamilBlogs

 3. LVISS சொல்கிறார்:
 4. mekaviraj சொல்கிறார்:

  Two comments from Video 😉

  I wish he explains to the voters the benefits of Demonetization and GST. Perhaps even Beti Bachao. BTW, people of Karnataka, beti bachao!

  His professor can’t be upset because he never attended college!

 5. mekaviraj சொல்கிறார்:

  By the way, where are the modi fans are – Nowadays so much silence due to Cauvery issue..once the centre issues some notification they will come with new vigor 🙂 🙂

 6. அறிவழகு சொல்கிறார்:

  2019 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார்: எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்கிறதா?- சிவசேனா கேள்வி.

  http://tamil.thehindu.com/india/article23835948.ece

  இந்த செய்தியில் முக்கியமாக நான் கருதுவது,

  // ”கடந்த 2014-ம் ஆண்டில் பார்த்த ராகுல் காந்தி போல் இப்போது இல்லை. அவரிடம் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கு எதிராக, மிக வலிமையான மனவலிமை, புத்திக்கூர்மை உடையவராக ராகுல் வளர்ந்து வந்திருக்கிறார்.

  2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார். இது கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தனர். பிரதமர் மோடி கூட தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ராகுல் காந்தியை விமர்சித்தார். ஆனால், பிரதமர் மோடியை ஒருபோதும் தரக்குறைவாக ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை, பேசவும் இல்லை.

  ராகுல் காந்தி குறிப்பிட்ட தரத்தில், தரமான அரசியல் செய்கிறார் என்பதை அவரை எதிர்ப்பவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.” //

  நன்ப கன்பத்,

  தங்களின் முந்தய ராகுல் சம்பந்தப்பட்ட பின்னூட்டத்திற்கு இதில் பதில் இருப்பதாக‌ நினைக்கிறேன்.

  • அறிவழகு சொல்கிறார்:

   ஆனால் திரு மோடி அவர்களின் கர்நாடக தேர்தல் பரப்புறையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு உண்டான பதில் அது என்பதை நினைவு கூறுவோம்.

 7. செ. இரமேஷ் சொல்கிறார்:

  எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. சுதந்திரத்துக்கு முன்னாள் நடந்ததை இன்னும் எத்தனை நாட்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறாரோ? பழைய வரலாற்றுக்கே நம்மை இழுத்துக்கொண்டு ஒன்றுபட்ட நாடாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறாரா? 500 + நாடுகளின் ஒன்றுபட்ட வடிவம்தான் இந்தியா. இன்னும் பாபர், அக்பர், திப்பு என்று சும்மா இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்னம் இருந்த கதையை எத்தனை நாட்கள் இவர் பேசிக்கொண்டே இருப்பாரோ? திம்மய்யா, கரியப்பா இவர்களைப் பற்றி இப்போது பேசுவது இந்த தேர்தலுக்கு எவ்வாறு பொருந்துமோ…
  தன் திட்டத்தை பற்றி கூறி ஒட்டு கேட்பதை விட்டு விட்டு ஒரு பிரதமர் இவ்வளவு தரம் தாழ பேசுவது……..
  வடிவேலு ஒரு டயலாக் “நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன், தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?”
  இதுதான் அவரின் நிலைமை.. அவருக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அப்படிதான் போல..

 8. Alathur Giri சொல்கிறார்:

  ஹா ஹா ஹா ஹா…
  தலையில் அந்த மைசூர் தலைப்பாகையுடன், வீராவேசமாக எதையோ கண்டுபிடித்து விட்டது போல், உணர்ச்சிகரமாக, ஆவேசமாகப் பேசுவதை ( sorry – நடிப்பதை) பார்க்கும்போது, பொத்துக்கொண்டு வரும் சிரிப்பை அடக்க முடியவில்லை….

 9. knvijayan சொல்கிறார்:

  என்ன இருந்தாலும் அண்ணா துரையை டூப் அடிப்பதில் பீட் அடிக்க இன்னும் எவனும் பொறக்கலை.மறக்க முடியுமா அந்த ரூபாய்க்கு மூணு படியும்,திராவிட நாடும்.

 10. BVS சொல்கிறார்:

  knvijayan

  அவர் பதவிக்கு வருவதற்கு முன் “டூப்” அடித்தார் என்றால் –
  இவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டே “பயங்கர டூப்”
  விடுகிறாரே. அது பரங்கிமலை என்றால் இது இமயமலை. 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.