அது ……..ரஜினிக்கும், தமிழகத்திற்கும் நல்லது…. !!!


..

நேற்றைய தினம் திரு.ரஜினிகாந்த், தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசனை செய்ததாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இதுகுறித்து, தமிழ் இந்து செய்தித்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் –

” பாஜகவுடன் நாம் கூட்டணி சேரப் போகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது….”

என்று ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினிகாந்த் கூறியதாக செய்தி வந்திருக்கிறது. ரஜினிகாந்த், இந்த செய்தியை தன்னுடைய மனதளவில் முடிவு செய்தால் மட்டும் போதாது….

அவரது கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்ற மிக முக்கியமான விஷயமே, ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்கிற ஒரு அபிப்பிராயம் தமிழக அரசியல் கட்சிகள் மனதிலும், தமிழக மக்களின் பெரும்பாலானோர் மனதிலும் பதிந்திருப்பது தான்.

தமிழகத்தைப் பொருத்த வரை – பாஜக ஒரு வெறுக்கத்தக்க கட்சி மட்டுமல்ல …அருவருத்தக்க கட்சியும் கூட. அதனுடன் யார் கூட்டு சேர்ந்தாலும், அது தற்கொலை முயற்சியே.

இதை ரஜினி நிச்சயம் உணர்ந்திருப்பதால் தான், கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில், பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று கூறி இருக்கிறார்.

ஆனால், ரஜினி இந்த கருத்தை வெளிப்படையாகச் சொல்லாத வரை – இந்த செய்தி தமிழக மக்களிடையே சென்று சேராது…..

கட்சி இன்னமும் அதிகாரபூர்வமாக துவங்கப்படாத நிலையில், ரஜினி அதிகம் பேச விரும்பவில்லை – புரிகிறது.

ஆனால், இது மிகவும் முக்கியமான விஷயம்… குறைந்த பட்சம் ஒரு ட்விட்டர் செய்தியின் மூலமாவது – தனது கட்சி, நிச்சயமாக பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்காது என்பதை தெரியப்படுத்துவது –

அவருக்கும்,
அவர் துவக்கப்போகும் கட்சியின் வளர்ச்சிக்கும்,
தமிழக மக்களுக்கும் – நல்லது.

பாஜகவினருக்கு மான, வெட்கம் எதுவும் கிடையாது. ரஜினியுடன் ஒட்டிக்கொண்டால், தங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்கிற வகையில் –

பாஜக அறிவுஜீவிகள் திரும்பத்திரும்ப, ” ரஜினியும், மோடியும் ஒன்று சேர்ந்தாஆஆஆஆஆஆஆ…….ல் ….” – என்று தமிழக மக்களை குழப்பிக்கொண்டே இருப்பார்கள்….

எனவே, ரஜினியின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு அவசியத் தேவை.

.
—————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to அது ……..ரஜினிக்கும், தமிழகத்திற்கும் நல்லது…. !!!

  1. Pingback: அது ……..ரஜினிக்கும், தமிழகத்திற்கும் நல்லது…. !!! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.