அ……..ம்……….மா…!!!


.
(1935-ல் அவரது 21வது வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போதே அவர் 3 குழந்தைகளுக்குத் தாய்…!)

நாளைக்கு தான் அன்னையர் தினம்…ஆனால், தோகா வங்கியின் CEO திரு.சீதாராமன் அவர்களின் கட்டுரை ஒன்றை
காலையில் படித்த பிறகு, இன்றே எழுதினால் என்ன என்று தோன்றியது… எழுதுகிறேன்.

அன்னை, தாய் என்றெல்லாம் சொல்வதை விட “அம்மா” என்று சொல்வது தான் எனக்கு பிடிக்கிறது. என் அம்மாவைப்பற்றி ஏற்கெனவே விமரிசனம் தளத்தில், கொஞ்சமாக ஒரு இடுகையில் எழுதி இருந்தேன்…. உண்மையில் அம்மாவைப்பற்றிய
அனைத்தையும் எழுத வேண்டுமானால், தனியே ஒரு புத்தகமே போடலாம். அத்தனை திருப்பங்கள், சுவாரஸ்யங்கள்
( துக்கத்தையும், துயரத்தையும் – சுவாரஸ்யம் என்று சொல்லலாமா…? ) நிறைந்தது…! ஆனால், அதில் பல தனிப்பட்ட குடும்ப விஷயங்களைப்பற்றி எல்லாம் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால்……….வேண்டாம்.

தனியாக சாப்பிடுவது எப்போதுமே எனக்கு பிடிக்காது…. எனவே, இரவு நேர ஆகாரம் நிச்சயம் மனைவி, குழந்தைகளுடன்
சேர்ந்து தான்… நான் அம்மாவை அடிக்கடி, முக்கியமாக, இரவு நேரங்களில்,ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நேரங்களில் நினைத்துக் கொள்வேன்… மனைவி, குழந்தைகளிடம் அம்மாவை பற்றிய நிறைய செய்திகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன். அம்மா இப்போது இருந்தால் எவ்வளவு சௌகரியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி வருத்தப்படுவேன். என் மனைவிக்கு, என் அம்மாவுடன் அதிக அனுபவம் கிடையாது. எங்கள் திருமணம் நடந்து 2 வருடங்களில் அம்மா மறைந்து விட்டார்.

என் துரதிருஷ்டம்….. அம்மா மறையும் வரையில், அவரை வசதியாக வைத்துக்கொள்ளும் நிலையில் நான் இல்லை…. சொல்லப்போனால், ரிடையர் ஆனபிறகு தான் நான் ஓரளவு வசதியாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்…
( முக்கிய காரணம் – தேவைகள் குறைந்து விட்டன…!!! )

கிட்டத்தட்ட, அவர் இருந்த காலம் முழுவதுமே சுகப்படாத அவரை, அவர் இன்று இருந்தால் – நாங்கள் அவரை எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொண்டிருப்போம் என்கிற ஆதங்கத்துடன் – என் எண்ணங்களை நிறுத்திக் கொண்டு –

இன்றைய தினம் நான் படித்த ஒரு சுவாரஸ்யமான “அன்னையர் தின” கட்டுரையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ( நன்றி – தினமலர் – பெண்கள் மலர்…! ) –

—————-


..

..

—————————————————————————————————————————–

 

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அ……..ம்……….மா…!!!

 1. Geetha Sambasivam சொல்கிறார்:

  மிக அருமையான கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி. உங்கள் தாயையும், தோகா வங்கி சீதாராமனின் தாயையும் வணங்குகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. அறிவழகு சொல்கிறார்:

  தங்கள் அம்மாவின் முகத்தை கொஞ்சம் உற்று பார்க்கும் போது எதோ ஒரு சோகம் படர்ந்திருப்பதை உணரமுடிகிறது. கூடவே தங்கள் இளமைக்காலம் எப்படி இருந்து இருக்கும் என்று நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்ளமுடிகிறது. அதோடு என் இளமைக்காலமும் இப்படி தான் என்று ஒப்பிட்டுக் கொள்கிறேன்.

  என்ன இருந்தாலும் அதிகமான வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த வறுமை வாழ்வு தந்த நிறைவு இப்போது எல்லா வசதிகள் இருந்தும் கிடைக்கவில்லை.

  அதற்கு நீங்கள் குறிப்பிட்ட வசதிகளை குறைத்துக் கொண்டால் சரியாகுமா? முயற்சிக்கனும். எவ்வளவு தூரம் சாத்தியம்! தெரியவில்லை.

  என் அம்மா இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் எங்களை விட்டு பிரித்தார். நாங்கள் இருந்த ஏழ்மையிலிருந்து இப்போது இருக்கும் வசதிகளோடு ஓரளவேனும் நல்ல விதமாகவே அவரை பார்த்துக கொண்டேன் என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள் பல.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அறிவழகு,

   // என்ன இருந்தாலும் அதிகமான வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த வறுமை வாழ்வு தந்த நிறைவு இப்போது எல்லா வசதிகள் இருந்தும் கிடைக்கவில்லை.//

   ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மை தான்.

   ஆனால், அதற்கு முக்கியமான காரணம்,
   அந்த காலத்தில் -வசதிகள் குறைவாக இருந்தாலும், மனித உறவுகளுக்கிடையே நல்ல நெருக்கம் இருந்தது;
   புரிதல் இருந்தது; பாசம், நேசம் இருந்தது. விட்டுக் கொடுத்தல் இருந்தது.
   உறவுகளுக்கு மதிப்பு இருந்தது….

   இப்போது – கிட்டத்தட்ட இவையெல்லாமே மிஸ்ஸிங்.
   பார்த்துப் பழகியவை எல்லாமே இன்று இல்லாமல் போவதால் –
   அந்த வெறுமை தான் பழைய மனிதர் பலரையும் வாட்டுகிறது.

   புதிய தலைமுறைக்கு, இந்த கஷ்டம் இல்லை. ஏனென்றால்,
   அவர்கள் அந்த அருமையை பார்த்ததே இல்லை… அனுபவித்ததே இல்லை.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Pingback: அ……..ம்……….மா…!!! – TamilBlogs

 4. paamaran சொல்கிறார்:

  அன்பு — அரவணைப்பு அந்த சுகங்கள் எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும் மீண்டும் கிடைக்குமா … ? முற்றும் துறந்தவர்களையும் — கட்டி இழுக்கும் வல்லமை பெற்றது – அம்மா … ! ஆதி சங்கரரையும் — பட்டினத்தடிகளையும் விட்டுவைக்காத அந்த தாயன்பு உற்று நோக்கத்தக்கது — ஆதி சங்கரரின் ” மாத்ரு பஞ்சகமும் ” — பட்டினத்தாரின் ” பத்து பாடல்களும் ” தாயை நினைத்துப் பாடிய பாடல்கள் — ஈடு இணையற்றவை — !! அந்தப் பாடல்கள் நம் ஒவ்வொருவரின் ” இதயத்திலும் பதிய வேண்டியவை …. !!!

 5. paamaran சொல்கிறார்:

  // ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்! // https://www.vikatan.com/news/india/124870-arthi-dogra-ias-transferred-jodhpur-turns-emotional.html ….

  உயரம் மூன்றரை அடி என்றாலும், பணியில் தீரம் மிகுந்தவர் ஆர்த்தி.ஐ .ஏ .எஸ் …… இந்த செய்தியில் : — // ஆர்த்திக்கு அவரின் தாயார்தான் சூப்பர் ஹீரோ. “எனக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நான் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்றபோது ஏராளமானோர் எங்கள் வீட்டுக்கு வந்து, என் அம்மாவிடம், `ஒரு மகன் செய்யவேண்டிய சாதனையை உங்கள் மகள் செய்துள்ளார்’ என்று வாழ்த்தினர். அவர்களிடத்தில், `என் மகள் ஒரு மகளாக சாதனை படைத்திருக்கிறாள்’ என்று என் அம்மா பதிலளிப்பார்” என, தன்னை ஆளாக்கிய தாயார்குறித்து பெருமைப்படுகிறார் ஆர்த்தி. // அம்மான்னா … அ……..ம்……….மா…!!!… தான் …!

 6. mekaviraj சொல்கிறார்:

  அருமையான பகிர்வு – அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளால் குடும்பங்களே பிரிந்து வாழ வேண்டிய சூழல் – ஒரு முடிவை எடுக்கும் போது அதனால் பாதிக்கப்படுவர்களுக்கு உரிய வழிவகை செய்திருக்க வேண்டும்.

  முடிந்தால் மூன்றாவது இமெஜ்-ஐ மாற்றவும், படிக்க கஷ்டமாக உள்ளது

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி மேகவிராஜ்.

  மூன்றாவது இமேஜ் – ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
  adjust செய்து கொள்வதைத்தவிர வேறு வழி இல்லை.

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.