காவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொல்வது….?) வெளிப்படுகிறது….!!!



இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி வாரியத்தின் உத்தேச நகலை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கிறது.

14 பக்கங்கள் கொண்ட இந்த நகல் அதிகாரபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக்கு மட்டும் பிரதிகள் கொடுக்கப்பட்டு, நாளை மறுநாள் (மே, 16… ) மேற்கண்ட 4 மாநிலங்களும் தங்கள் அபிப்பிராயத்தைச்
சொல்ல வேண்டும் என்று உத்திரவு பிறப்பித்திருக்கிறது உ.நீ.மன்றம்.

நகல் வெளியிடப்படவில்லையென்றாலும், சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 10 பேர் இருப்பார்கள் என்றும், அதில் தலைவரும், இரண்டு உறுப்பினர்களும் மத்திய அரசிலிருந்து நியமிக்கப்படுவார்கள் என்றும், சம்பந்தப்பட்ட
4 மாநிலங்களும் ஆளுக்கு ஒர் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதி (10 – 3+4 …? )
3 உறுப்பினர் யார் என்பது தெரியவில்லை….!!!

கர்நாடகாவிலிருந்து தன் மீது எந்தவித குற்றச்சாட்டுகளோ / கெட்ட பெயரோ வந்து விடக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

– இந்த அமைப்பிற்கு – “Board, Authority or Committee…” என்கிற 3 பெயர்களில் எந்த பெயரை சூட்ட வேண்டும் என்பதை உ.நீ.மன்றமே சொல்லட்டும் என்கிறது….( இதில் எந்தவித சட்ட சிக்கலும் இல்லை… பின் ஏன் உ.நீ.மன்றத்திடம்
இந்த பொறுப்பை விட வேண்டும்…?- கர்நாடகாவில் தனக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது……!!! )

– இந்த அமைப்பின் அலுவலகம் – கர்நாடகாவின் பங்களூருவில் அமையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ( இதில் தவறேதும் இல்லை… அப்படித்தான் இருக்க முடியும்..)

– அணைகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

– அமைப்பின் ஆலோசனைப்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களே அணைகளை – திறக்கும் – இயக்கும் என்று சொல்கிறது.

– வேண்டுமென்றே சில சந்தேகங்கள் உண்டாக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அமைப்பின் ஆலோசனைப்படி, அணைகளை திறக்காமல், சாக்கு-போக்கு சொன்னால், இந்த அமைப்பு – அதை மத்திய அரசிடம்
தெரிவிக்குமாம்… பின் என்ன செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானிக்குமாம்.

ஏன் இந்த வழ-வழா, கொழ-கொழா…குழப்பம்…?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விகிதங்களின்படி தண்ணீர் விடப்படுவதை உறுதி செய்வதற்காகத்தான் இந்த அமைப்பே உருவாக்கப்படுகிறது… அதைச் நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து அதிகாரங்களும், இந்த அமைப்பிற்கே
கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து – எதற்காக மீண்டும் மீண்டும் மத்திய அரசுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும்….?

சம்பந்தப்பட்ட மாநில அரசு, இந்த அமைப்பின் உத்திரவுப்படி அணையை திறக்க மறுத்தால், அணையின் கட்டுப்பாட்டை இந்த அமைப்பே எடுத்துக்கொள்ள அதிகாரம் கொடுப்பது தானே முறையாக / சரியாக இருக்கும்…?

மத்திய அரசு முழுமனதோடு – ஒரு நிரந்தரமான தீர்வை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படுவதாகத் தெரியவில்லை. கர்நாடகாவிற்கு தன்மீது எந்தவித குறையும் இருக்கக்கூடாது என்கிற உத்தேசத்தில் செயல்படுவது
மட்டுமே வெளிப்படுகிறது.

ஒரே ஒரு ஆறுதல் –

உச்சநீதிமன்றம் ஒரு விஷயத்தை இன்று தெளிவுபடுத்தி இருக்கிறது….

தான் மீண்டும் ஒரு ரவுண்டு இதிலுள்ள குழப்பங்களை பற்றி எல்லாம் எழுப்ப அனுமதிக்கப் போவதில்லை என்றும் –

நாளை மறுநாள் (16-ந்தேதி), மீண்டும் விசாரிக்கும்போது – முன்னதாக, உச்சநீதிமன்றம் பிப்ரவரி,16-ந்தேதி அளித்த தீர்ப்பை செயல்படுத்தக்கூடிய வகையில், இந்த வாரிய அமைப்பு இருக்கிறதா – இல்லையா… என்பதைப்பற்றி மட்டுமே விவாதிக்கப்போவதாகவும், மாநில அரசுகள் அது குறித்து தங்கள் கருத்துகளை அன்றைய தினம் தெரிவிக்கலாம்
என்றும் கூறி இருக்கிறது….

இத்தகைய சூழ்நிலையில், வழக்கின் அடுத்த கட்டம் – தமிழக அரசும் அதன் வழக்குரைஞரும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், சமயோசிதமாகவும் யோசித்து செயல்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறது… தமிழக வழக்குரைஞர் திரு.சேகர் நாப்டே அவர்கள் இதுவரை மிகவும் திறம்பட வாதிட்டிருக்கிறார்…. இப்போதும் அவரது
புத்திசாலித்தனம் நமக்கு மிகவும் உதவும் என்று நம்புவோம்.

ஆனால், என்ன தான் முயன்றாலும் – நமது தலையெழுத்து மாட்சிமை தங்கிய
உ.நீ.ம. தலைமையிடம் தான் இருக்கிறது ….

அது உறுதியான, இறுதியான – குழப்பமில்லாத தீர்ப்பாகவும் இருக்கலாம்…
மத்திய அரசு உத்தேசித்துள்ள – வழ-வழா, குழ-குழா- வாகவும் இருக்கலாம்…

அது இந்த இரண்டில் எதுவாக இருக்கும் என்பதை நமது கடந்தகால அனுபவங்களை
வைத்து யூகிக்காமல் –

– நம் பக்கம் இருக்கும் நியாயம் வெல்லும் –
“சத்தியம் ஜெயிக்கும்” என்று நம்புவோமாக….!!!

————————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to காவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொல்வது….?) வெளிப்படுகிறது….!!!

  1. அறிவழகு சொல்கிறார்:

    இறைவன் தமிழகத்திற்கு அருள் புரிய வேண்டும்.

  2. LVISS சொல்கிறார்:

    http://www.thehindu.com/news/national/centre-submits-cauvery-draft-scheme-in-supreme-court/article23879456.ece

    Salient features—The supreme court will examine whether the scheme is in consonance with their judgement -If it okays the draft thats it – 2)Reservoirs would be operated in integrated manner under the overall guidance of the authority -(One state cannot do anything unilaterally)
    3)The authority would monitor storage ,apportionment,regulation and control of cauvery waters One state cannot arbitrarily decide the storage level ,apportionment etc Regulation and control of cauvery rests with the Authority and not one state – 4) The authority ,not any one state ,will decide on the distress formula –

    • சொரணையுள்ளவன் சொல்கிறார்:

      சிலர் இப்படி கண்கள் இருந்தும் குருடராக இருப்பது ஏன் ? .
      சிந்திக்கத் தெரிந்தும் அடிமையாக இருப்பது ஏன் ?
      இவ்வளவு விளக்கம் சொல்லும் அதிபுத்திசாலிகள்
      எதாவது ஒரு மாநிலம் ஆலோசனையை ஏற்க மறுத்தால் என்ன செய்ய
      வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதைப்பற்றி எதுவும் சொல்லாமல் ஊமைகளாக இருப்பது ஏன் ? ஒவ்வொரு பிரச்சினைக்கும் மீண்டும் மத்திய அரசிடம் சொல்லி தீர்வு பெற வேண்டுமென்றால், கமிட்டி ஏன் ?
      பத்து மெம்பர் கமிட்டியா ? ஒன்பது மெம்பர் கமிட்டியா ? ஆளாளுக்கு
      ஒவ்வொன்று சொல்வது ஏன் ? அவர்கள் என்ன எலெக்ஷனா நடத்தப் போகிறார்கள். அந்த கமிட்டியில் ஒவ்வொரு முண்டத்துக்கும் ஓட்டு ஏன் ?
      இது எந்தவிதத்தில் நிரந்தரத் தீர்வு ?
      முண்டங்கள் யோசிக்குமா ? இல்லை இப்படித்தான் பினாத்துமா ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      திரு.எல்விஸ்,

      நீங்கள் தந்திருக்கும் hindu reference -லிருந்தே, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு
      கொஞ்சம் விளக்கம் எடுத்துத் தாருங்களேன்….

      1)‘Centre open to any nomenclature’
      He said it could be “Board, Authority or Committee.”

      – பெயர் வைப்பது என்ன பெரிய சட்டப்பிரச்சினையா…?
      இவ்வளவு தூரம் திட்டம் தயாரித்துக் கொடுத்தவர்கள், அதற்கு பெயர் வைக்கும் பொறுப்பை நீதிமன்றத்திடம் தள்ளி விட்டது ஏன்…?

      “பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் ” வேலையா…?
      கர்நாடகாவை திருப்திப்படுத்தும் வேலை தானே ?

      2)The authority would have four part-time members from the States who are administrative secretaries in the water resources departments of the four States.

      – சரி, இந்த நான்கு உறுப்பினர்களுக்கு தலைமை தாங்க, மத்திய நீர் வளத்துறை செயலரை மத்திய அரசு நியமிக்கும். இதுவும் சரி….. இது வரை சரி.

      பிறகு, அந்த பத்து (அல்லது ஒன்பது…? ) உறுப்பினர்கள் இதில் ஏன் வந்தார்கள்…? யார் அவர்கள்…? எதற்காக இங்கே அவர்கள்…?அவர்களுக்கு ஓட்டுரிமை எதற்கு…? இந்த கமிட்டியில் ஓட்டு போட வேண்டிய அவசியம் எப்படி வருகிறது ? 4+1 = 5 பேர் கொண்ட கமிட்டியாக இருந்தால், 3 பேர் மெஜாரிடி சேர்ந்து எடுக்கும் முடிவு அனைவராலும் ஏற்கப்பட வேண்டும்.

      அதன் பிறகு இங்கே dispute எப்படி வரும்…? ஓட்டு எப்படி வரும்…?
      ஓட்டு போடுவதற்காகவே மீதி 4-5 உறுப்பினர்களா…?

      3) If any State did not cooperate with the Cauvery Tribunal or Supreme Court’s February 16 judgment, the authority could approach the Centre, whose decision would be final and binding on the States.

      சுப்ரீம் கோர்ட் உத்திரவுப்படி அமைக்கப்பட்ட கமிட்டியை மீறி,
      உத்திரவை ஏற்க மாட்டேன் என்று ஒரு மாநிலம் சொல்வதை ஏன்
      அனுமதிக்க வேண்டும்…?

      அதற்காக ஒரு வழியையும் ஏன் புதிதாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்…?
      சுப்ரீம் கோர்ட் சொல்வதையே கேட்காத மாநிலம், மத்திய அரசு
      சொன்னால் மட்டும் கேட்டு விடுமா…?

      ஆர்டரை மீறும் மாநிலத்தை என்ன செய்வார்கள்…?
      காலில் விழுந்து வணங்கி, தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்பார்களா..?

      சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களில், எந்த மாநிலம் உத்திரவை ஏற்காமல் மறுக்க
      வாய்ப்பு இருக்கிறது…? கர்நாடகா மட்டும் தானே…?
      எனவே, மீண்டும் கர்நாடகா யாருக்கும் அடிபணியாமல் இருக்கத்தானே இந்த வழி…?

      இத்தனை குழப்பங்களை மத்திய அரசு இப்போது மீண்டும் உண்டுபண்ணுவது ஏன்…? நரித்தனம் தானே…?

      பிறகு ஏன் மத்திய அரசு ஏதோ பிரமாதமான proposal-ஐ உருவாக்கி விட்டது போல் எழுதுகிறீர்கள்…?

      கொஞ்சமாவது மனசாட்சியுடன் யோசியுங்கள்.

      • LVISS சொல்கிறார்:

        If the supreme court approves the draft all the questions get answered – If the court modifies and makes it better it is to be welcomed –Will wait and see —

  3. LVISS சொல்கிறார்:

    If as per wishes of some people in T Nadu there is a change of govt in the centre in 2019 the mantle will go to a headless tailless kichadi government–Appozhuthu avargal thiramaiyaga indha prachnayil evvalavu kazhattapogirargirargal enbathayum parthidalamey – – –

    • சொரணையுள்ளவன் சொல்கிறார்:

      ஆக, உங்கள் மோடி சர்க்கார் அவ்ளோ தானா ?
      நீங்களே அதை நம்பறீங்களா ?

    • அறிவழகு சொல்கிறார்:

      ///Appozhuthu avargal thiramaiyaga indha prachnayil evvalavu kazhattapogirargirargal enbathayum parthidalamey – – –///

      இது அயோக்கியதனம். அப்ப நீங்கள் நியாயம் செய்ய போவதில்லை. வேறு அரசு வந்து தான் கலட்டனும். நீங்கள் கலட்ட போவதில்லை. அப்ப நீங்கள் தமிழர்களின் துரோகிகள் தான் என்று சொல்வதில் என்ன தவறு.

      • சொரணையுள்ளவன் சொல்கிறார்:

        LVISS – இது தமிழ்நாட்டு பெயர் இல்லையே. நீர் எந்த ஊர்க்காரர் ? கன்னடியரா ? உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் எட்டப்பனா ?
        தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழருக்கே துரோகமா?
        இந்த மாதிரி தறிகெட்டவர்களை தேடிக்கண்டுபிடித்து முதலில்
        துரத்தியடிக்க வேண்டும். பாஜக மத்தியில் ஆட்சியில் அமவ்ர்ந்த பிறகு
        தமிழ் நாட்டில் இந்த மாதிரி துரோகிகளின் நம்பர் அதிகரித்து விட்டது.

        • LVISS சொல்கிறார்:

          Sandhegame vendam -Pirandhu, valarndhu ,velai seidhu ippo kizhavanaga vazhvadhum idhay tamizh nattil dhan –
          ungal karuthukku othu pogavillai enral udanay goojakkal , drogigal ,thari kettavargal appadithaney —
          Lviss ennudaya punai peyar –

  4. paamaran சொல்கிறார்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது: 05-2-2007… அதன்பிறகு பல சட்டப் பாேராட்டங்கள் நடத்தி ஒரு வழியா
    அரசிதழில் வெளியிடப்பட்டது: 19-2-2013 …
    ஆனால் இன்று வரை … இழு பறி …?

    அதுவே …நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையம், அரசிதழில் வெளியிடப்பட்டது: டிசம்பர் 1979… ஒரு வருட காலத்திற்குள்
    அமைக்கப்பட்டது : டிசம்பர் 1980 .. … அக்கறை ..வேகம் அங்கே மட்டும்…! அடுத்து…

    கிருஷ்ணா, கோதாவரி நடுவர்மன்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது: 28-5-2014
    மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது: 29-5-2014 …அரசிதழில் வெளியான ஒரே நாளில் வாரியம் … ஆகா..ஓகாே ..படு ஸ்பீடு …!
    இளிச்சவாயன் தமிழனுக்கு அரசிதழில் வெளியிட்ட பின்னும் அந்தப் பெயரை வைக்க கூட மனமில்லாமல் .. மீண்டும் .. மீண்டும் … வஞ்சகம் புரிவதாேடு மட்டுமில்லாது ..சும்மா ஒப்புக்கு மனம் பாேன பாேக்கில் கிறுக்கி அளித்திருக்கும் ஒரு அறிக்கை … அப்படித்தானே …? நல்லா இருப்பாேம் ..நாம எல்லாேரும் நல்லா இருப்பாேம் ….!!!

  5. Pingback: காவிரி வாரியம் – மீண்டும் மீண்டும் மத்திய அரசின் நரித்தனம் (cunningness -க்கு என்ன சொல்வது….?) வெளிப்பட

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.