திரு – – – ம் கஜானா சாவி ஒப்படைப்பு ….!!!

நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் –


..

நிதியமைச்சர் பொறுப்பு தற்காலிகமாக, திருவாளர் பியூஷ் கோயல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக
அறிவிப்பு வெளியாகி இருக்கிறது….!!!

————————————————

திரு.அருண் ஜெட்லி அவர்கள் சீக்கிரமே உடல் நலம் பெற்று, தனது வழக்கமான பொறுப்புகளை மீண்டும் ஏற்றுச்செயல்பட இறைவனை வேண்டுகிறோம்.

.
—————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திரு – – – ம் கஜானா சாவி ஒப்படைப்பு ….!!!

 1. Pingback: திரு – – – ம் கஜானா சாவி ஒப்படைப்பு ….!!! – TamilBlogs

 2. அறிவழகு சொல்கிறார்:

  நல்ல தேர்வு. எல்லாம் முறையாக நடக்கும், கவலைவேண்டாம்.

 3. paamaran சொல்கிறார்:

  // திரு- – – ம்… // …. சூப்பர் …! எவ்வளவாே செய்யறாங்க அதுல இதுவும் ஒன்று …திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறு… ஏது …?

  உதாரணத்திற்கு நமது பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பதவியில் உள்ளவர்களை பார்த்தாலே நன்கு புரியும் …அது பற்றி ஒரு செய்தி :

  // All the Prime Minister’s Men //
  https://thewire.in/government/all-the-prime-ministers-men …. இதுவும் ஒரு வகையில் நேர்மையான செயல்தானாே …? இருக்காதா பின்னே பரிச்சியமானவர்கள் ..பழக்கப்பட்டவர்கள் ..ஒத்தாசையா இருப்பவர்கள் … உடன் இருந்தால் பலம் தானே …என்பவர்களும் உண்டு …!!!

 4. BVS சொல்கிறார்:

  elviss will now come here to cover up this also.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மறைவு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது… இந்த வலைத்தள நண்பர்களின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை
  தெரிவித்துக் கொள்வோம்.

  • அறிவழகு சொல்கிறார்:

   ///மூளை சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்து கொண்டது: கவிஞர் வைரமுத்து இரங்கல். – தமிழ் ஹிந்து நாளிதழ்.///

   உண்மை.

   ‘மெர்க்குரிப் பூக்களி’ல் தான் எனக்கு பாலகுமாரன் அறிமுகம். வாசித்தபிறகு தேடித்தேடி மற்ற அவருடைய எழுத்துகளை வாசித்தேன். அதிகம் வார இதழ்களில் வந்த‌ தொடர்கள். எனவே அடைக்கலம் லைப்ரரி. அது ஒரு கனா காலம்.

   அவருடைய ஆரம்ப கால எழுத்து ‘ஜெயகாந்தனை’யும் ‘சுஜாதா’வையும் சம அளவில் கலந்தால் எப்படி இருக்குமோ அப்படி எழுதுவார்.

   அந்த காலத்தில் லைப்ரரி தான் எங்கள் சொர்க்கபுரி. இப்போதுள்ள வசதிகளோ புத்தக கண்காட்சிகளோ இல்லாத காலம். வாசிக்கனும் என்றால் லைப்ரரி தான் எல்லாம். அது செய்தி தாளாக இருந்தாலும் வார இதழ்களாக இருந்தாலும் சரியே.

   சோதனையாக எங்கள் ஊர் லைப்ரேரியன், முக்கியமான எழுத்தாளர்கள் புத்தகங்களை பெரிய தனி பீரோவில் பூட்டிவைத்துக்கொண்டு படுத்துவார். பல நாள் அலைந்த பிறகு பெரிய மனது பன்னி ஒரே நாளில் திருப்பிகொடுக்கனும் என்ற கண்டிஷனோடு தருவார். அப்படி எதுவும் லேட்டாகிவிட்டால் அடுத்த நல்ல எழுத்தாளர் புத்தகம் கிடைப்பது அனேகமாக‌ குதிரை கொம்பு தான்.

   சான்டில்யனின் ‘கடல்புறா’ 2 நாள்.

   கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ யார் எத்துனை நாளில் படித்திருப்பீர்கள்? ஐயோ..! மூன்ற‌ரை நாளில் முடித்தேன். எல்லா பாகமும்.

   இல்லையென்றால் ‘சிவகாமியின் சபதம்’ கிடைக்காதே. இந்த ஓட்டம் எப்போது வரை என்றால் அந்த ஹிட்லர் மாறிப்போகின்ற வரை. ஆனாலும் நல்லவர், நாளை வா இன்ன புத்தகம் தருகிறேன் என்றால் தந்துவிடுவார்.

   எங்கள் ஊர் லைப்ரரியோடு அப்படி இருந்த பந்தம், ஊர் நடுவில் இருந்ததை, வாடகை பிரச்சனயால், எல்லையின் ஓரத்தில் கொண்டுவைத்தார்கள். போவதற்கு சிரமமாக இருந்தாலும் அவசியம் கருதி போய் கொண்டிருந்தேன். நான் வெளியூர் செல்லும் வரை நீடித்தது. ஆனால் வாசிப்பு தொடரத்தான் செய்கிறது.

   எனக்கு நல்ல பல அருமையான புத்தகங்களை கிடைக்க செய்து நல்ல வாசிப்பனுப‌வத்தை ஏற்படுத்தி தந்தது லைப்ரரி தான் என்றால் அது மிகையாகாது.

   ஆனால், இன்று இருக்கும் தலைமுறைக்கு லைப்ரரியின் பயன்பாடும் அதன் அவசியமும் இல்லாதது கண்டு வருத்தமாக இருக்கு. ஏன் வாசிக்கும் வழக்கமே இல்லாதிருக்கிறார்கள்.

  • D. Chandramouli சொல்கிறார்:

   In the 1960s, when I was working in TAFE Sembiam, Balakumar joined the firm. He was sitting just behind me. He was the one who introduced me to the ‘last pakkam’ of magazine ‘ கணையாழி ‘. I remember he was a strongly-opinionated person on issues dear to him. During those days, I was hooked to Jayakanthan’s writings. Once Balakumar wrote a humorous poem narrating the quality of tea served from Simpsons’ Canteen. I never imagined that Balakumar would rise to such great heights in life. Alas, having moved abroad, I could speak to him on phone only once in the last three decades. May his soul rest in peace.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    சந்திரமௌலி,

    உங்களது பாலகுமாரனுடனான அனுபவம் தெரிய வந்தது…

    ஏறக்குறைய 40 வருடங்களாக நானும் அவரை கவனித்து வருகிறேன்.
    பாலகுமாரனது குணாதிசயங்கள், பிற்காலத்தில் மிகவும் மாறி விட்டன…
    வயது ஏற ஏற, அவர் மாறிக்கொண்டே இருந்தார்….!

    பாலகுமாரன் பற்றி தனியே ஒரு இடுகை போடுவதாக இருக்கிறேன்.
    நீங்களும் இன்னும் எதாவது எழுத விரும்பினால், அங்கே எழுதலாம்.

    (கணையாழி .. புரிந்து கொண்டேன்… மாற்றி விட்டேன்…)

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 6. LVISS சொல்கிறார்:

  It is an established practice that those who occupy a post temporarily cannot take major decisions —

 7. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  get well soon

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.