என்ன அநியாயம் – பாஜக தலைமை திரு.அருண் ஜெட்லியை இப்படி குப்பைத்தொட்டியில் தூக்கிப்போட்டு விட்டதே….!!!


அடப்பாவமே….! திரு.அருண் ஜெட்லியின் கருத்துக்கும், சட்ட ஆலோசனைக்கும் – பாஜக தலைமை கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் இவ்வளவு தானா…?

திரு.ஜெட்லி கூறிய கருத்து, சட்ட ஆலோசனை இது –

“ஒரு தொங்கு சட்டமன்றத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து, புதிதாக ஒரு கூட்டணியை ( கர்நாடகாவில் இப்போது அமைந்திருப்பது போல )

உருவாக்கினால் –

அப்படிப்பட்ட புதிய கூட்டணிக்கு மெஜாரிடி இருந்தால், அந்த மாநில கவர்னர் அவர்களின் தலைவரை அரசு அமைக்க அழைக்கவும், குறைந்த அவகாசத்தில் அவர்களது மெஜாரிடியை (சட்டமன்றத்தில்) நிரூபிக்குமாறு சொல்வதும் –

அரசியல் சட்ட விதிகளின்படி முற்றிலும் சரியானது….!!! ”

———-

இதைச் சொல்லும் – ஜெட்லி அவர்களின் ட்விட்டர் கருத்து கீழே –

..

..

திரு.அருண் ஜெட்லியின் ஆலோசனைப்படி, தொங்கு சட்டமன்றத்தின் புதிய கூட்டணியின் தலைவரான
குமாரசாமியை கூப்பிடாமல், அவரது சட்ட ஆலோசனையை தூக்கியெறிந்து விட்டு, பாஜக கர்நாடக கவர்னர்
மாண்புமிகு Vajubhai R. Vala – திருவாளர் எட்டியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க / ஆட்சியமைக்க அழைத்து –

அவர் தனது மெஜாரிடியை நிரூபிக்க – ஜெட்லிஜி குறைந்த அவகாசம் என்று சொன்னதற்கு மாறாக 15 நாள் என்று நீண்ண்ண்ண்ட கால அவகாசமும் கொடுத்திருக்கிறாரே…!!!

அவ்வளவு தானா மரியாதை… ஜெட்லி அவர்கள்
( சென்ற வருடம் 🙂 🙂 🙂 ) கொடுத்த ஆலோசனைக்கு …. ???

அப்படியென்ன, இப்போது கேட்டால் மட்டும் ஆலோசனையை மாற்றியா சொல்லி விடப்போகிறார் ஜெட்லிஜி ..?
– அன்றும், இன்றும், என்றும் ஒரே சொல் தானே… பாஜக தலைவர்களுக்கு….!!!

.
————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to என்ன அநியாயம் – பாஜக தலைமை திரு.அருண் ஜெட்லியை இப்படி குப்பைத்தொட்டியில் தூக்கிப்போட்டு விட்டதே….!!!

 1. Pingback: என்ன அநியாயம் – பாஜக தலைமை திரு.அருண் ஜெட்லியை இப்படி குப்பைத்தொட்டியில் தூக்கிப்போட்டு விட்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஒரு நண்பரிடமிருந்து வந்திருக்கும் கருத்து –

  In 2008, BJP won 110 seats in Karnataka. Without Narendra Modi.

  In 2018, BJP won 104 seats in Karnataka with the help of Modi, Shah, Union Ministers, Bellary Brothers, RSS Cohorts, Polarising Lies, WhatsApp, North Korean Media and Bags of Money.

  That’s the #ModiWave !😎

 3. M.Syed சொல்கிறார்:

  இப்ப பிஜேபி தலைமையிடம் ஜெட்லியின் கருத்தை பற்றி கேட்டால் அது அவர் சொந்த கருத்து என்று சொல்லி விட்டு போய் கொண்டேயிருப்பார்கள் KM சார்.

 4. selvarajan சொல்கிறார்:

  தங்களின் முந்தைய இடுகைகள் எடியூரப்பா பற்றி வந்தவை — தற்போதைய பின்னூட்ட நண்பர்கள் அதை கவனித்து இருந்தால் — அன்றைய சுமார் ஏழு வருடங்களுக்கு முன் இருந்த எடியூரப்பா … தற்போது யோக்கிய சிகாமணியாகிவிட்டாரா — பாஜகவில் என்கிற நடுநிலையான கேள்விகள் மனங்களில் எழுந்தே தீரும் — காலம் தான் கடக்கிறது … மீண்டும் – மீண்டும் தொடரப்போவது எது …?

  இடுகை 1 . // எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..
  Posted on ஜூலை 27, 2011 by vimarisanam – kavirimainthan //….. இந்த இடுகையில் சில ” ஹை லைட்டான வரிகள் ” :— //
  100 சுரங்க கம்பெனிகள், அனுமதி பெறாத
  வகையில் – சட்ட விரோதமாக,
  இரும்புத்தாதுவை தோண்டி எடுத்து கணக்கில்
  வராத வகையில் விற்ற வகையில்
  இந்த நாடு இழந்திருக்கும் தொகை இது.

  இந்த சுரண்டல், இந்த கொள்ளை, நடைபெற
  துணை போனவர்கள், இப்போதைய
  எடியூரப்பா, முன்னாள் குமாரசுவாமி,மற்றும்
  அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள்,
  ஒரு காங்கிரஸ் எம்பி மற்றும்
  சுமார் 600 அரசு அதிகாரிகள் !

  தமிழில் கெட்ட வார்த்தை சொல்ல
  மனம் வரவில்லை எனக்கு.
  ஆங்கிலத்தில் திட்டுவது சுலபம் -Bastards ! //

  // சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும்
  கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அவர்களது
  சொத்துக்கள் முடக்கப்பட்டு,அத்தனையும்
  நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு
  வரப்பட வேண்டும்.

  விரைவு நீதிமன்றத்தில் வழக்குகள்
  பதியப்பட வேண்டும். 6 மாதங்களில்
  ஆதாரங்கள் திரட்டப்பட்டு,
  ஒரு வருடத்துக்குள் விசாரணை முடிந்து,
  தீர்ப்பு கூறப்பட வேண்டும்.அவர்கள்
  சொத்துக்களை விற்று 16,000 கோடி
  ரூபாயை வசூல் பண்ண வேண்டும். நடக்குமா ? // …

  அன்றைய தங்களின் கேள்வி — இன்று அதே ஆட்கள் அப்படியே இருக்கிறார்கள் … ! இதில் ” எட்டியூரப்பா ” இன்று காலை மீண்டும் ‘ முதல்வராக ‘ அவசர கதியில் பதவி அவர்மட்டும் ஏற்றுள்ளார் … நல்ல முதல் மந்திரி தானே …?

  இடுகை 2 . // எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை – வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை – பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன் ?
  Posted on மார்ச் 21, 2012 by vimarisanam – kavirimainthan //…. இந்த இரண்டாவது இடுகையில் சில ” ஹை லைட்டான வரிகள் ” :—
  // எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை –
  வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை –
  பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன் ?

  சிவந்த நிறம், நெற்றியில் குங்குமப் பொட்டு,
  வெள்ளை பேண்ட்-ஷர்ட்,

  ஆனால் நிஜத்தில் ? –
  கடைந்தெடுத்த அயோக்கியர் !!
  (மாறுதலான தோற்றத்துடன் புகைப்படத்தை
  தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறேன் !)-

  எடியூரப்பாவின் இன்றைய நிலை – செய்தியில்
  அடிபடுகிறார் – அனைவருக்கும் தெரிந்ததே !
  உடனடியாக என்னை முதலமைச்சராக்கு என்று
  குதிக்கிறார்.//

  குதித்தது – அன்று …. முதலமைச்சராகவே ஆகிவிட்டார் இன்று …!! … இடுகையின் தலைப்பில் நீங்கள் கேட்டுள்ள கேள்வி — நல்ல கேள்வியைத்தான் …! அது பாஜக வினருக்கு மட்டும் தான் தெரிந்த விஷயமா … ஏன் மற்ற யாருக்கும் புரியாத விஷயமா …? …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   பழைய லிங்க்குகளை எடுத்து நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
   நண்பர்கள் சுலபமாகப் படிக்க அதில் ஒன்றை முதலில் மறுபதிவு போடுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.