திருவாளர் எடியூரப்பா – என்கிற ………….வியாதியை ….


இன்றைக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பாக, மோடிஜியும் அமீத்ஜீயும் பாஜகவின் தலைமைப் பொறுப்பிற்கு வரும் முன்னரே, மார்ச் 2012-ல் இதே வலைத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு இடுகை இப்போது மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது….

வாசக நண்பர்கள் எடியூரப்பா புராணங்களை படிப்பது, அவரது இன்றைய அரசியல் பின்னணியுடன் ஒத்துப்பார்க்க உதவும் என்பதால் அதனை, அப்படியே மீண்டும் கீழே பதித்துள்ளேன்…. இப்போதும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது….!

இந்த அசிங்கமான மனிதரை முதலமைச்சராக்குவதில் மோடிஜியும், அமீத்ஜீயும் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து, அவர்களது – தரத்தையும், ரகத்தையும் – வாசக நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.

இதற்குப் பின்னரும் சில விவகாரங்கள் வெளிவந்தன… இப்போதைக்கு இது போதுமே…!!!

——————————————-

எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை – வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை – பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன் ?
Posted on மார்ச் 21, 2012 by vimarisanam – kavirimainthan

———————

எடியூரப்பா -என்கிற அசிங்கமான வியாதியை –
வெட்டி எறிய வேண்டிய விஷச்செடியை –
பாஜக வளர்த்துக் கொண்டிருப்பது ஏன்  ?

சிவந்த நிறம், நெற்றியில் குங்குமப் பொட்டு,
வெள்ளை பேண்ட்-ஷர்ட்,

ஆனால் நிஜத்தில் ? –
கடைந்தெடுத்த  அயோக்கியர் !!
(மாறுதலான தோற்றத்துடன் புகைப்படத்தை
தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறேன் !)-


எடியூரப்பாவின் இன்றைய நிலை – செய்தியில்
அடிபடுகிறார் – அனைவருக்கும் தெரிந்ததே !
உடனடியாக என்னை முதலமைச்சராக்கு என்று
குதிக்கிறார்.  55 ஆதரவு எம் எல் ஏ க்களை
7 நட்சத்திர ஓட்டலில் கொண்டு போய் முகாம்
போட்டுக்கொண்டு இன்றைய முதலமைச்சரை
கவிழ்த்து விடுவேன் ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார்.

அவரது சரித்திரப் பின்னணி பற்றிய சிறு குறிப்பு –

வயது 70. கர்னாடகத்தில் மாண்டியா மாவட்டம்
லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்தவர்.
ஜாதி வெறியர் ! ஜாதி ஆதரவிலேயே
அரசியலில் வளர்ந்தவர்.  இளம் வயதில் அரிசி மில்
ஒன்றில் கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தவர்,
மில் முதலாளியின் மகளையே மணந்து கொண்டு
மில் முதலாளி ஆனார்.

முதலில் ஆர் எஸ் எஸ்,
பிற்பாடு ஜனசங்கம், பிஜெபி – என்ற்u தீவிர
அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகும் வரை
வளர்ந்தார்.

மனைவி தயவில் அரிசி மில் முதலாளியாக ஆனவரின்
சொத்து மதிப்பு 2008ல் 1.82 கோடியாக இருந்தது.
அதுவே 2010ல் 11 கோடியாக உயர்ந்தது.
(இரண்டு வருடங்களில் 500% அசுர வளர்ச்சி !)

அவர் மீது என்ன புகார் ?  

2 பிள்ளைகள்,3 பெண்கள். முக்கியமாக,
சுரங்க கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுத்து,
குடும்ப உறுப்பினர்களின்
பேரில் சொத்து சேர்த்ததாகப் புகார்.
அரசாங்க நிலத்தை பிள்ளைகளுக்கு மலிவு விலைக்கு
வாரிக் கொடுத்த்தாகப் புகார்.

கர்னாடகா லோகாயுக்தாவிற்கு அனுப்பப்பட்ட
புகாரை விசாரித்து அறிக்கை கொடுத்தார் நீதிபதி
சந்தோஷ் ஹெக்டே.

சுரங்க கம்பெனிக்கு சலுகைகள் காட்டுவதற்காக,
சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற
சுரங்க கம்பெனியிலிருந்து லஞ்சம் பெற்றிருக்கிறார்
என்று ஹெக்டே ரிப்போர்ட் கூறியது.

அவரது மகன் 40லட்சம் ரூபாய்க்கு விலைக்கு
வாங்கிய நிலத்தை, (விற்கின்ற சமயத்தில் சுமார்
ஒரு கோடி ரூபாய்  மார்க்கெட் வேல்யூ கொண்டிருந்த
அந்த நிலத்தை )- சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி
என்கிற சுரங்க கம்பெனி 20 கோடி ரூபாய் கொடுத்து
(அதற்கான தேவையே அந்த கம்பெனிக்கு இல்லாத
போது )விலைக்கு வாங்கிக் கொண்டது.
அந்த கம்பெனிக்கு
லைசென்சு கிடைக்க இவர் செய்த உதவிக்கு அந்த
கம்பெனி மறைமுகமாக கொடுத்த லஞ்சம் அது
என்பது புகார்.

கர்னாடகா லோகாயுக்தா இதை விசாரித்து
லஞ்சம் வாங்கப்பட்டதாக உறுதி செய்து இவர் மீது
FIR (முதல் தகவல் அறிக்கை)பதிவு செய்யப்பட்டது.
விசாரணை நடக்கும் முன்னரே, இதை எதிர்த்து
எடியூரப்பா உயர்நீதிமன்றம் போக,
அடடா இந்த அப்பாவிக்கு
பதில் சொல்ல வாய்ப்பு கொடுக்காமலே
FIR பதிவு செய்யப்பட்டு விட்டதே –
எப்பேற்பட்ட அநீதி என்று சொல்லி
FIRஐ ரத்து செய்ய உத்திரவிட்டது உ.நீ.ம.

இதை வைத்துக் கொண்டு தான் எடியூரப்பா
குதிக்கிறார் -மீண்டும் முதலமைச்சராக்கு என்று
பாஜக மேலிடத்தை வற்புறுத்துகிறார்.

FIR உடன் எந்த வழக்கும் நேரடியாக கோர்ட்டுக்கு
போவதில்லை. உரிய விசாரணை நடந்திருக்கும்.
இவர் தரப்பு வாதமும் நிச்சயம் கேட்கப்பட்டிருக்கும்.
முதல் தகவல் அறிக்கைக்கே இவ்வளவு ஆட்டம் !
இந்த வழக்கு இதோடு நிற்கப்போவதில்லை.
மேலே தொடரத்தான் போகிறது. இவர்
குற்றம் செய்யவில்லை என்று தீர்ப்பும் வரவில்லை.

இவர் செய்தது – செய்து கொண்டிருப்பது –
மக்களுக்கும் துரோகம் – கட்சிக்கும் துரோகம்.

பச்சை அயோக்கியர் என்பது வெளிப்படையாகத்
தெரிகிறது. கட்சியை மிரட்டுகிறார்.தன்னை
முதலமைச்சராக்கா விட்டால் தனிக்கட்சி ஆரம்பிப்பேன்
என்று வேறு பயமுறுத்துகிறார்.

பாஜக மேலிடம் தடுமாறுகிறது. இவரை அடக்கி
வைக்கவோ, தூக்கி எறியவோ கட்சித்தலைமைக்கு
ஏன் தைரியம் வரவில்லை ? என்ன

செய்ய முடியும்
இவரால் ? இப்பேற்பட்ட ஆளை வைத்துக் கொண்டு
ஒரு அரசு பிஜெபி க்கு தேவையா ? தூக்கி எறிய
வேண்டியது தானே ? ஆட்சி போனால் போகட்டுமே !
MORALITY தேவை இல்லையா ?
பிஜெபி க்கு அரசியலில்  நன்னெறிகளைப்பற்றி –     
MORAL VALUES பற்றி – கவலை இல்லையா ?

வாஜ்பாய், அத்வானி – ஆகியோருடன் பிஜெபி யின்
சரித்திரம் முடிவடைய வேண்டியது தானா ?

காங்கிரஸ் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறது –
பிஜெபி யின் தற்போதைய தலைவர் கட்காரிக்கும்
இதில் பங்கு உண்டு என்று !

அத்வானியும், அரசியல்  நன்னெறிகளில்
இன்னும் நம்பிக்கை வைத்துள்ள பிஜெபி யில்
உள்ள மற்ற மூத்த தலைவர்களும் -உடனடியாக
செயல்பட்டு –
இந்த விஷச்செடிகளை வெட்டி வீழ்த்தி,
இந்த ஆபத்து வளராமல்,
பரவாமல் – தடுக்க வேண்டும்.

இன்றைய தினம் தேசிய அளவில் –
காங்கிரஸ் கட்சிக்கு மாற்று –
பாஜக  தான் என்று இருக்கிற நிலையில்
நம்மால் பாஜக வைப்பற்றி கவலைப்படாமல்
இருக்க முடியவில்லை.

————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திருவாளர் எடியூரப்பா – என்கிற ………….வியாதியை ….

  1. Pingback: திருவாளர் எடியூரப்பா – என்கிற ………….வியாதியை …. – TamilBlogs

  2. புதியவன் சொல்கிறார்:

    ஜனநாயக அரசியலில், அதுவும் இந்தியர்களுக்கு அரசியல் அறிவு தாழ்ந்து, ஜாதி, சமய, பணத்தாசை வெறி உயர்ந்து நிற்கும்போது எடியூரப்பா போன்றவர்கள்தானே தலைவர்களாக வருகிறார்கள். மக்கள் ஆதரவு பெறும்போது அரசியல்கட்சிகளுக்கும் இந்தக் களைகளை வெட்டி எறியும் தைரியம் வராமல் போய்விடுகிறது.

    அரசியலே இப்போது Sales Levelக்குத் தாழ்ந்துவிட்டது. யார் மக்கள் ஆதரவைப் பெற முடியுமோ அவர்களை நிறுத்துவது என்று.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.