“பெருச்சாளி – வாலா….!!! ” செகண்டு ரவுண்டு….!!!ரிலீசானபோது சுமாராக ஓடிய சில படங்கள், சில காலம் கழித்து, திடீரென்று மவுசு பிடித்து, பிய்த்துக்கொண்டு ஓடியதை நாம் பார்த்ததுண்டு…..

இந்த வலைத்தளத்தில், ஒரு பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட reference-ஐ சுமார் 4 மணி நேரத்திற்குள்ளாக எழுபது பேர் தேடியெடுத்து பார்த்திருக்கிறார்கள் என்றால்,

அது சுவாரஸ்யமான விஷயமாகத் தானே இருக்க வேண்டும்…?

நண்பர் செல்வராஜன் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட “பெருச்சாளி கவர்னர்” என்கிற தலைப்பில் இரண்டரை வருடங்களுக்கு முன் இங்கு எழுதப்பட்ட ஒரு இடுகையைப் பற்றி தான் மேலே கூறி இருக்கிறேன்…. அப்போது அது HIT ஆகாததற்கு காரணம், 2015-ல் நான் பாஜகவை குறைகூறி எழுதியிருந்ததை பலர் ரசிக்கவில்லை….

இப்போது…….???
அதை தோண்டியெடுத்து 4 மணி நேரங்களில் 70 பேர் பார்க்கிறார்கள் என்றால், அந்த சப்ஜெக்டுக்கு மவுசு…. வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்…!!! (தக்க சமயத்தில் அதன் தேவையை நினைவுபடுத்திய நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…!!! )

மக்கள் விருப்பமே… நம் விருப்பம்…!!!
தேடியெடுக்கும் சிரமத்தை நண்பர்களுக்கு கொடுக்கக்கூடாது என்று நினைத்ததாலும், நிறையபேர் புதிதாகவும் இதைப் படிக்க விரும்புகிறார்கள் என்பதாலும் கீழே –

“பெருச்சாளி – வாலா….!!! ” செகண்டு ரவுண்டு….!!!

( பெருச்சாளியின் திருமுகத்தை இரண்டு நாட்களாக எல்லாரும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள் –
என்பதால், நான் இங்கு அறிமுகப்படுத்தவில்லை….!!! )

——————————————————————————————————————–

பெருச்சாளி கவர்னர்…..
Posted on நவம்பர் 26, 2015
by vimarisanam – kavirimainthan

daulatram-contitutent-appending-signatures-jairamdas-

constitution-rajkumari_f1385c06-93ee-11e5-a684-0cefba74d473

ஒரு மிகப்பெரிய ஊழல் பெருச்சாளி கவர்னர் உருவத்தில்
வெளிப்பட்டிருக்கிறது…..

கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலா –

இவருக்கு ஆகும் செலவின வகைகள் கீழே –


– மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு,
மாதந்தோறும் 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது.

– மசாஜ் செய்வதற்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, மாதம், ஒரு லட்சம்

ரூபாய் செலவழிக்கப்படுகிறது….!!!

– கவர்னர் மாளிகையில், 161 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்;
அவர்களுக்கு மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் வரை ஊதியம்
வழங்கப்படுகிறது.

– கவர்னரின் உடல்நலத்தை கவனிக்க, ஒரு டாக்டர்,
மூன்று நர்ஸ்கள், ஒரு பார்மாசிஸ்ட் ஆகியோர் பணி
அமர்த்தப்பட்டுள்ளனர். ( 8 மணி நேரத்திற்கு ஒரு நர்ஸ்……,
தனியே ஒரு 24 மணி நேர டாக்டர், கம்பவுண்டர் – )

– அவர்களுக்காகும் சம்பளம் உள்ளிட்ட
செலவுகள் எவ்வளவு என்பது தெரியவில்லை….

– கவர்னர் மாளிகை சமையல் அறை
ஊழியர்களுக்காக, மாதந்தோறும், 2.94 லட்சம் ரூபாயும்,
( எத்தனை சமையல்காரர்களோ – 76 வயதான இவர்
அப்படி என்ன தான் சாப்பிடுவாரோ..! )

– ஏழு சலவை தொழிலாளர்களுக்கு, 1.01 லட்சம் ரூபாயும் ஊதியம்
வழங்கப்படுகிறது. (இவர் ஒருத்தர் துணியை ஏழு பேர் துவைக்கின்றனராம்….!!!)

முந்தைய காலத்தில் பாத்திரங்களை பயன்படுத்தும்போது,
‘ஈயம்’ பூசுவது வழக்கம். அந்த பணியை கவர்னர் மாளிகையில்
செய்வதற்கு, எட்டு ஊழியர்களுக்கு, மாதந்தோறும்,
1.16 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது….!!!
( இன்னமும் ஈயப்பாத்திரங்கள் – எந்த உலகில் இருக்கின்றன…? )

– கவர்னர் மாளிகை நுழைவாயிலில் இருந்து பத்திரிகைகள்,
கடிதங்கள் ஆகியவற்றை சேகரித்து, கவர்னர் அலுவலகத்தில்
சேர்க்கும் ஊழியருக்கு, மாதந்தோறும், 21 ஆயிரம் ரூபாய் சம்பளம்…..


( பங்களாவிற்குள் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு
கடிதங்களை கொண்டு போய் கொடுக்க ….!!!)

– கர்நாடகாவில் தற்போது கவர்னராக இருக்கும் வஜூபாய் வாலா பாஜக வைச்

சேர்ந்தவர். செப்டம்பர் 2014 முதல் அவர் இந்த
பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னர் மோடிஜி
குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் குஜராத்
சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜனவரி 2012 முதல்
ஆகஸ்ட் 2014 வரை பதவி வகித்திருக்கிறார்….!!!
( ஆக இவர் மோடிஜியின் நேரடி பார்வையில் வளர்ந்தவர்….!!!
)

சரி – இந்த பெருச்சாளியின் செலவின சமாச்சாரங்கள்
இப்போது எப்படி திடீரென்று வெளிவந்தன….?

-கர்நாடகாவில் கவர்னர் மாளிகை யில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்?
அவர்களின் பணிகள் என்னென்ன?
எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?’ என,
ஹலசூருவைச் சேர்ந்த

நரசிம்மமூர்த்தி என்பவர், ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்

தகவல் கேட்டிருந்தார்.

கவர்னரின் செயலர் கல்பனா தகவல் கொடுக்க மறுத்ததால்,

நரசிம்மமூர்த்தி, கர்நாடகா தகவல் கமிஷனிடம்
புகார் செய்தார். கல்பனாவுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்த
கமிஷன், உடனடியாக தகவலளிக்க உத்தரவிட்டது.
( கர்நாடகாவில் கவர்னர்- பாஜக….
முதலமைச்சரும், ஆளும் கட்சியும் – காங்கிரஸ்….!!!
எனவே கமிஷனின் உடனடி உத்திரவில்
அதிசயம் ஏதுமில்லையே….? )

அபராதத்தை செலுத்திய பின், கல்பனா கொடுத்த
பதில் மூலம் தான் மேற்கண்ட அதிசயங்கள்
வெளியாகி இருக்கின்றன…!!

உடனே – பார் பாஜக கவர்னரை
என்று காங்கிரஸ்காரர்கள் யாரும் குதிக்க முடியாது…!!!

காரணம் இதற்கு சற்றும் குறைகாண முடியாத
மத்திய பிரதேச “வியாபம்” ஊழல் புகழ் கவர்னர்
ராம் நரேஷ் யாதவை அவர்கள் பக்கம் வைத்துக் கொண்டு,
காங்கிரஸ்காரர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ள முடியாது…!!!

கவர்னர் பதவிக்கு இந்திய அரசியல் சட்டம் மிகுந்த
முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது. இன்று அரசியல் சட்டம்
உருவானதை கொண்டாடும் நாள்….
பார்லிமெண்ட் … தனக்கே உரிய விதத்தில்
இதை கொண்டாடிக் கொண்டிருக்கிறது…!!!

ஆனால், நடைமுறையில் இந்த கவர்னர் பதவி
எதற்கு, எப்படி, எத்தகையோரைக் கொண்டு நிரப்பப்படுகிறது…?

—- —

தேர்தலில் நின்று ஜெயித்து தீவிர அரசியலில்
ஈடுபட முடியாத நிலையில் உள்ள
வயதான ரிடையர்டு அரசியல்வாதிகள் …

எதாவது பதவியை கொடுத்து வாயை அடைத்தால் தான்
கட்சித் தலைமைக்கு நிம்மதி என்கிற நிலையில் உள்ள
வக்கிர அரசியல்வாதிகள்….

மாநில அரசியலிலிருந்து அகற்றப்பட்டே ஆக வேண்டும்
என்கிற நிலையிலுள்ள, ஆனால் ஓரளவு செல்வாக்குள்ள
அரசியல்வாதிகள் –

அதிகாரத்தில் இருக்கும்போது, ஆட்சியாளர்களுக்கு
சகல அத்துமீறல்களிலும் மிகவும் உதவியாகவும்,
அனுசரணையாகவும் இருந்த –
ஓய்வுபெற்ற உயர்பதவி அதிகாரிகள் -முன்னாள் நீதிபதிகள்…!!!

————

இன்று பெரும்பாலான கவர்னர்கள் இதே ரகம் தான் ….!
( விதிவிலக்காக, சில அருமையான
real பெரிய மனிதர்களும் உண்டு தான்…)

எனவே – வாருங்கள் நண்பர்களே –
இந்த பெருச்சாளி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து
நாமும் நமது ஜனநாயகத்தை கொண்டாடுவோம்…
இந்திய அரசியல் சட்டத்தை போற்றி மகிழ்வோம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “பெருச்சாளி – வாலா….!!! ” செகண்டு ரவுண்டு….!!!

  1. Tamilblogs சொல்கிறார்:

    கலியுகம்

  2. Pingback: “பெருச்சாளி – வாலா….!!! ” செகண்டு ரவுண்டு….!!! – TamilBlogs

  3. srinivasanmurugesan சொல்கிறார்:

    விதிவிலக்கானது அந்த real பெரிய மனிதர்களையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்தி பெருமை படுத்தலாமே….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s