மறக்க முடியுமா….?உணர்வோடும், உயிரோடும் இணைந்து விட்ட,
ரத்தத்தில் கலந்து விட்ட
இவர்களது நினைவுகளை நம்மிடமிருந்து பிரிக்க முடியுமா…?
இறுதியில் பிடிச்சாம்பல் ஆகும் வரை
இவர்கள் நினைவு நம்மை விட்டுப் போகாது….

பிறருக்காகவே வாழ்ந்த பிறப்புகள்…..
மீண்டும் காணும் வாய்ப்பும் நமக்கு கிட்டுமா … ?

————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மறக்க முடியுமா….?

 1. புதியவன் சொல்கிறார்:

  “மறப்பவன் மனிதனில்லை” என்ற பாடல்வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

  ‘அல்லக்கைகள்’, பிரபாகரன், தன் மனைவியையும் குழந்தையையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டார், அவரும் தப்பிவிட்டார் என்று புனைகதைகளைக் கூறி அரசியல் செய்தனர் (வேறு யாரும் இல்லை. சிகரட் உடம்புக்கு நல்லது, மது மிகவும் கொடியது, ஸ்டாலினுக்காக என்னை அநியாயமாக வெளியேற்றினார்… ஸ்டாலின் முதல்வராகும்வரை ஓயமாட்டேன் என்று சொன்ன வீராதி வீரர்களைப் போன்றவர்கள்தாம்).

  மக்கள் ஆதரவைக் கண்டு பிரமித்து, தயவுசெய்து என்னிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுங்கள், எம்ஜியார் திரும்பி வந்தவுடன், ஆட்சியை அவருக்கே கொடுத்துவிடுகிறேன் என்று முதலைக் கண்ணீர் வடித்து வாக்குக் கேட்ட தலைவர்களையும் இது ஞாபகப்படுத்துகிறது.

 2. Pingback: மறக்க முடியுமா….? – TamilBlogs

 3. Selvarajan சொல்கிறார்:

  இவர்களைப் பற்றி அறந்தவர்களால் மறக்க முடியாது ….! திரு எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்த பாேது பிரபாகரன் கூறியது……

  // “ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது.

  என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

  தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்…” // என்றார் … !!

  இந்தியாவை சேர்ந்த ஒரே ஒருவருக்கு தான் இலங்கையின் ஜாப்னாவில் சிலை இருக்கிறது …அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே …!!!

 4. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  பிறருக்காகவே வாழ்ந்து பிறருக்காகவே இறந்த பெரும்மனிதர்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.