விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….!!!


இந்த பழக்கம் துவங்கும்போது, எல்லாருமே விளையாட்டாகத்தான்
துவக்குகிறார்கள்… விபரீதம் புரியும்போது…. விட முடிவதில்லை….

மனதில் வைராக்கியம் இருந்தால்….. நிச்சயம் விட்டு விட முடியும்.
சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்…!

இப்போதெல்லாம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகம் செய்யப்படுகின்றன…
எனவே, புதிதாகச் சேர்ந்துகொள்பவர்களின் எண்ணிக்கை முன்பவிட
கொஞ்சம் குறைவாக இருக்கிறது…

இருந்தாலும் ……இந்த தள வாசக நண்பர்கள் சிலரிடமும் இந்த பழக்கம்
இருப்பது எனக்கு தெரிகிறது…..

எனவே, இது அவர்களிடையே வைராக்கியத்தை உண்டுபண்ண …

———————————————————————————————————————-

பின் குறிப்பு –

நேரம் இருந்தால் இதையும் படியுங்களேன்….
.
.எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்…..

.
————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….!!!

 1. Pingback: விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்….!!! – TamilBlogs

 2. Selvarajan சொல்கிறார்:

  // பாஜக எம்.பி.யின் கண்டுபிடிப்பு – பல கோடிகள் பெறும்…!!!
  Posted on ஏப்ரல் 1, 2015 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2015/04/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/
  ” சிகரெட் ” பற்றி அதன் தீமைகள் குறித்து நிறைய இடுகைகள் தாங்கள் பதிவிட்டு இருந்தாலும் — மேலே உள்ளதில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது … ! அதில் :- //

  அனைத்து விவாதங்களும் முடிவடைந்த பின்
  ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அளித்த பரபரப்பான
  தீர்ப்பில் – தங்கள் குடிமக்களின் ஆரோக்கியமான
  வாழ்விற்காக, எத்தகைய சட்டத்தையும் கொண்டு வர
  அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்து
  விட்டது.
  உலகம் பூராவும் உள்ள – புகையிலை எதிர்ப்பாளர்கள் இதை
  மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்கள்..
  இது ஆஸ்திரேலியாவின் கதை….
  நம்ம ஊர் எப்படி …? // ….

  இப்படித்தான் : — // பாஜக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி
  ( இவரும் காந்தியாம் -) அவர்களைத் தலைவராக கொண்ட
  பாராளுமன்ற துணைக்குழு ( புகையிலை பயன்படுத்துதல் சட்டம்
  தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து, பரிந்துரை செய்ய
  அமைக்கப்பட்ட குழு ) –
  தனது இடைக்கால அறிக்கையில் –

  புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்று
  சொல்வதான ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தும் வெளிநாடுகளைச்
  சேர்ந்தவை.

  இந்தியாவில் இன்றுவரை இது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும்
  மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

  எனவே, இத்தகைய சூழ்நிலையில் மேற்குறித்த சட்டவிதிகளை
  இப்போது அவசர அவசரமாக ( ? ) அமுல்படுத்தத்தேவை இல்லை.

  தன் தலைமையிலான பாராளுமன்ற குழு நிதானமாக முழு
  விஷயத்தையும் ஆராய்ந்து-தெளிந்து, தன் இறுதி அறிக்கையை
  தரும்வரை –

  மத்திய அரசு –
  இந்த சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை
  காலவரையின்றி ஒத்திப் போட வேண்டும் என்று மத்திய
  அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது.

  எனவே – மத்திய அரசின் புகையிலை பொருட்கள் மீதான
  விளம்பரங்கள் குறித்த சட்டவிதிகள் இப்போதைக்கு நடைமுறைக்கு
  வருவதாகத் தெரியவில்லை….!!!.. //……… என்ன ஒரு விவரமான செயல் … இது போன்றவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள் …?

  அடுத்து — இந்த ஒரு இடுகைக்கு அன்று வந்த பின்னூட்டங்களும் — மறு மொழிகளும் — அதற்காக நண்பர்கள் பதிவிட்ட மேற்கோள்களும் அருமையான — ஆக்கபூர்வமான — அறிவு சார்ந்ததுமான விவாதங்களாக இருந்தது மட்டுமின்றி — சமூக அக்கறை — மனித நலன் சார்ந்து இருந்ததை பார்க்கும் போது — இந்த ” விமரிசனத் தளம் ” எத்தகைய முக்கியமான பொது நலத்திற்கு முதன்மை அளித்திருக்கிறது என்பது புலனாகிறது …. அந்த காலம் மீண்டும் வருமா …? அன்று பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களே — எங்கே இருக்கிறீர்கள் … மீண்டும் வாருங்கள் — !!!

  • புதியவன் சொல்கிறார்:

   //பாஜக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி//

   செல்வராஜன் – ஐடிசி விநியோக உரிமை யார் யாரிடம் இருக்கிறது என்று ஒரு லிஸ்ட் எடுத்துப்பாருங்கள். அப்போது தெரியும், ஏன் அரசியல்வாதிகள் புகையிலையை ஒழிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் என்று தெரியும்.

   தமிழ்நாட்டில், ‘நியாயம் பேசும்’ வீரர் வை.கோபாலசாமியிடமும், திமுகவின் துரைமுருகனிடமும் இன்னும் பலப் பல அரசியல்வாதிகளிடமும் இந்த விநியோக உரிமை இருக்கிறது.

   இதற்கு முக்கியக் காரணம், நம் அரசியல்வாதிகளின் ‘தகுதி’ மற்றும் நம் மக்களின் தகுதிதான். மக்களுக்கு எது முக்கியம், யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற சிந்தனை பெரும்பாலும் கிடையாது.

 3. BVS சொல்கிறார்:

  பாஜகவின் அடக்குமுறைக்கு பயந்து இருக்க வாய்ப்பில்லை.
  இங்கே எழுதுவதால் என்ன பெரிய விளைவு நிகழ்ந்து விடப்போகிறது
  என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.

 4. Selvarajan சொல்கிறார்:

  // ” சிகரெட் ” பற்றி அதன் தீமைகள் குறித்து நிறைய இடுகைகள் தாங்கள் பதிவிட்டு இருந்தாலும் — // என்பதிலேயே அனைத்தும் அடக்கம் … வை.காே.வின் மகன் விநியாேகஸ்தராக இருப்பதும் ..அது பற்றி நிருபர்கள் கேட்டபாேது அவர் பாெங்கியதும் கூட இருக்கிறது …!

 5. Kumaran சொல்கிறார்:

  நான் புகைப்பதில்லை
  ஆனால் தினமும் புகையை சுவாசித்து கொண்டிருக்கின்றேன்
  இப்போது மலேசியாவில் வேலை செய்கின்றேன் 99% சதவீத ஆண்கள் புகைப்பர் . இதில் இன வேறுபாடு இல்லை
  ஆனால் எங்கேயும் புகைப்பார்கள் .. உங்கள் முன்னால் இருந்து கொண்டு புகையை விட்டுக்கொண்டிருப்பார்கள்
  ( air conditioned restaurant, bus, train விதிவிலக்கு )
  சாதாரண உணவகங்கள் எங்கும் புகை மயம் தான்
  சொல்ல முடியாது … சொன்னால் மிதிப்பார்கள்
  .
  இதுக்கு முன் சிங்கப்பூரில் வேலை செய்தேன் .. புகைக்காதோருக்கு சொர்க்க புரி.. எந்த உணவகங்களிலும் புகைக்க முடியாதது .. புகைக்க தனியாக இடம் உண்டு
  புகைக்க அனுமதி உள்ள இடங்களில் நான் இருந்தாலும் அங்கே புகைக்க வருபவர்கள் என்னிடம் சொல்லிவிட்டு தான் புகைப்பார்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.