இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…


அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – பாஜகவின் மூத்த தலைவர்
திரு.இல.கணேசன் அவர்கள்.

தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனுபவசாலியான, புத்திசாலியான, நல்ல மனிதரான – இல.கணேசன் அவர்கள் திண்டாடுவது ஏன் …?

தர்மம் இல்லையே,
நியாயம் இல்லையே,
நீதி இல்லையே,
நேர்மை இல்லையே –
– இந்த தடவை இவை எதுவுமே அவர் பக்கம் இல்லையே…! எவரெவரோ செய்யும் தவறுகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கும் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார் அவர்…..

தங்கள் தரப்பு பலவீனத்தை உணர்ந்து, இந்தப் பேட்டியை தவிர்த்திருக்க வேண்டும் திரு. இல.கணேசன் …

தர்மத்திற்கும், நியாயத்திற்கும் எதிராக செயல்படுபவர்களுடன் சேர்ந்து கொண்டு அதற்கு வக்காலத்து வாங்கும் இந்த பேட்டியால் அவரது மதிப்பும், மரியாதையும் படுபாதாளத்தில் வீழ்ந்தது தான் மிச்சம்………..

மனம் நிறைய பாராட்டுவோம் – இளம் செய்தியாளர் அசோக வர்ஷினி அவர்களை… மிகச்சிறப்பாகத் செயலாற்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவோம்…!

நேற்றிரவு (சனிக்கிழமை, மே -19 -ந்தேதி) ஒளிபரப்பான,
தந்தி டிவியின் – அந்த
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் வீடியோ கீழே –

….

—————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…

 1. Pingback: இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்… – TamilBlogs

 2. Sharron சொல்கிறார்:

  Really superb. We have to appreciate that girl.

 3. Selvarajan சொல்கிறார்:

  பேட்டியில் பாவம் இல . கணேசன் …? எங்கே அதிக இடங்களை கைப்பற்றிய மற்ற கட்சிகள் ” கோவா, மணிப்பூர், மேகாலயா, பீகாரில் ஆட்சி அமைக்க உரிமை ” கேட்டு விடுவார்களோ .. கேட்டால் தன் பிடிக்குள் இருக்கும் மாநிலங்களின் எண்ணைக்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ — என்று எண்ணித்தான் — கர்நாடகா ஒன்று போனாலும் பரவில்லை மற்ற நான்கும் நிலைக்கட்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்தது — பா.ஜ . க என்பது தான் உண்மை — !!! அதனால் தான் பெரிய கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினார் – எடியூரப்பா …!!

  இதே கருத்தை முன்பு இல . கணேசன் கூறியது : — // நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் .//
  — அதனால் தான் எடியூரப்பாவும் — கர்நாடகா மாநிலத்தையும் தியாகம் செய்து இருக்கிறார்கள் … இனி நாடு நலம் பெரும் தானே ….?

 4. BVS சொல்கிறார்:

  இல.கணேசன் தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்தாலும்,
  பாஜக என்னும் பிசாசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதால், அதன் வீச்சு தான் அவரிடமும்
  இருக்கிறது. அவரது நல்ல குணங்கள் வெளிவருவதற்கு பதில், திசை திருப்பல்,
  மழுப்பல், ஏமாற்றல், என்று அசிங்கங்கள் அவரை ஆக்கிரமிப்பித்திருப்பது
  தான் தெரிகிறது… அரசியல்வாதிகளால் நேர்மையாக இருக்க முடியாது என்பதை
  இவர் மீண்டும் நினைவுபடுத்துகிறார்.

 5. jksm raja சொல்கிறார்:

  இல. கணேசன் நல்லவர் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை. இப்படித்தான் அண்ணா நல்லவர் நல்லவர் என்று சொல்லி தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் கும்பலிடம் ஆள கொடுத்தோம். நாடு வளர்வதற்கு தமிழ் நாட்டை பலிகொடுக்கலாம் என்று சொல்கிறவன் நல்லவனா ? இவர்கள் எல்லாம் நல்லவர் வேஷம் போடுகிற நன்றாக நடிக்க தெரிந்த படு பயங்கர அயோக்கியர்கள்

 6. புதியவன் சொல்கிறார்:

  எங்கு தவறை நியாயப்படுத்த முடியாதோ, அப்படி நியாயப்படுத்தினால் தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுமோ (நற்பெயர் என்பதை உதாரணத்துக்குத்தான் சொல்லியிருக்கிறேன். இல.கணேசன் உண்மையான முகம் எனக்குத் தெரியாது.. சில புத்தகங்களில் படித்தது அவ்வளவு சிலாக்கியமாக இல்லை), அங்கு வம்படியாகச் சென்று நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

  கர்நாடகாவில் மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் (தேர்தல் முறைப்படி). ஆனால் தேவையான சீட்டுகள் இல்லை. அதனால் அவர்கள் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்திருக்கக்கூடாது.

  காங்கிரஸ் பாஜகவை விட அதிக வாக்குகள் பெற்றது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. காங்கிரசுக்கே, மக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள் என்று தெரியும். அதனால்தான் அவர்களுக்கு, ‘முதலமைச்சர்’ ஆக ஆவதற்கான தார்மீக உரிமை இல்லை. நல்லவேளை ம.ஜ.தக்கு 35+ சீட்டுகள் கிடைத்தன. அவர்களுக்குப் பதிலாக, ‘கொள்ளையர்கள் கூடாரம்’ என்ற கட்சிக்கு இத்தனை சீட்டுக்கள் கிடைத்திருந்தால், அந்தக் கட்சித் தலைவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கும் காங்கிரஸ் தயங்கியிருக்காது.

 7. Selvarajan சொல்கிறார்:

  ” வடை பாேச்சே ” எனபதை பாேல … கர்நாடகா ஆட்சிக்கு ஆசைப்பட்டு ..இரண்டு நாடாளுமன்ற எம்.பி .எண்ணிக்கை குறைந்தது தான் மிச்சம் …! எடியூரப்பாவும் ..ஸ்ரீ ராமுலுவும் ராஜினாமாசெய்ததால் பாஜக 273. ல் இருந்து 271 ஆக சுருங்கிவிட்டது… !!

 8. bandhu சொல்கிறார்:

  நன்றாக மடக்குகிறார் அசோக வர்ஷினி. சட்டம் / தர்மம் என்று ஜல்லியடிக்கிறார்.

 9. அறிவழகு சொல்கிறார்:

  தார்மீகம் என்றால் என்ன?

  அது இருவகைப்படும். பாஜக தார்மீகம், காங்கிரஸ் தார்மீகம் என்று சமயத்திற்கு தகுந்தாற்போல் அது மாறுபடும்.

  அப்படி என்றால்?

  அதாவது எனக்கு வந்தால் இரத்தம், உனக்கு வந்தால் அது தக்காளி சட்னி.

  ஓ…..!

  ஐயா நீங்கள் நல்லவரா கெட்டவரா?

  கா.மை. ஐயா போன்றவர்களை எல்லாம் நம்பவைத்துள்ளேனே அப்ப நான் யார்?

  ஙே……!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   அறிவழகு,

   // ஐயா நீங்கள் நல்லவரா கெட்டவரா?
   கா.மை. ஐயா போன்றவர்களை எல்லாம் நம்பவைத்துள்ளேனே அப்ப நான் யார்? //

   ——

   – நேரில் பார்த்து பழகாதவர்களைப்பற்றி அபிப்பிராயம் சொல்வது எளிது. ஆனால், நேரில் அறிமுகமானவர்களைப்பற்றி சொல்லும்போது – நமது மனசாட்சியுடன் தீர ஆலோசித்து விட்டு தான் சொல்ல வேண்டும்.

   இல.கணேசன் அவர்களுக்கு அரசியலைத்தவிர, இலக்கியவாதி என்கிற ஒரு பக்கமும் உண்டு…. தமிழில், இலக்கியத்தில் – நிறைய ஆர்வம் உடையவர் அவர். சென்னையில் ஒரு இலக்கிய மன்றத்திற்கு தலைமை தாங்கி இயக்கி வருகிறார்… அதன் பல கூட்டங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்…. சமயங்களில் கணேசன் அவர்களுக்கு பக்கத்து இருக்கையில் – ஒரு பொது மனிதனாக…. அமர்ந்து அவருடன் பேசியும் இருக்கிறேன்…. தனிப்பட்ட முறையில் எங்களிடையே அறிமுகம் கிடையாது….!

   தமிழ் ஆர்வலர், இலக்கியவாதி, எளிமையானவர். கர்வமற்று பழகுபவர், நீண்ட காலமாக பொது வாழ்க்கையில் இருந்தாலும் – கெட்ட பெயர் வாங்காதவர்.
   எனவே நான் இவரை நல்லவர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது….?

   – என்னுடைய இந்த விளக்கத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை இடுகையை படித்துப் பாருங்கள்…

   – நான் என் மனசாட்சிக்கு விரோதமின்றி இந்த இடுகையில் அவரைப்பற்றி எழுதி இருக்கிறேன் என்பதை – இப்போது புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   – வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • சூர்யா சொல்கிறார்:

    பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது!

    காவிரிமைந்தன் அய்யா அவர்களுக்கு,
    நெடு நாட்களாகவே அறிவழகன் இடும் பின்னூட்டங்களை படித்து வரும் தங்கள் வெகு கால வாசகர்கள் அனைவருக்கும் இது தெரிந்த விஷயமே! தாங்கள் தற்போது எழுதி வரும் கருத்துக்கள் பெரும்பாலும் பா ஜ க விற்கு எதிராகவே இருப்பதால், அறிவழகும் (அவரைப் போன்ற இன்னும் சிலரும்) வெகு ஆரவாரமாக ஆமோதிக்கிறார்கள். தாங்கள் தப்பித் தவறி அவர்கள் எதிர்பார்க்கும் கருத்துக்கு ஒவ்வாத வண்ணம் பதிவிட்டால் உடனே தங்கள் மீது பாய்கிறார்கள். அறிவு நாணயத்தை அறிவழகு போன்றோரிடம் எதிர்பார்ப்பது தவறே!

    • அறிவழகு சொல்கிறார்:

     சூர்யா,

     கா.மை. ஐயாவிடம் நான் எங்கு பாய்ந்தேன்.

     என்னுடைய கற்பனையில் உள்ளார்ந்த பொருளாக நான் வைத்தது இம்மாதிரியானவர்கள் வேடதாரிகள் என்பதை தான்.

     இதற்கு எங்கும் போகவேண்டியதில்லை. இந்த வீடியோவே சாட்சி.

     அசோக வர்ஷினியின் கேள்விக்கு நீங்கள் கவர்னரை நீதிமன்றத்தை கேள்வி கேட்கிறீர்களா என்று எகிரும் இல.கணேசன், கோவா, பீகார், மணிப்பூர், மேகாலயா மாநில அவலம் பற்றிய வர்ஷினியின் எதிர் கேள்விக்கு அடிக்கிறார் பாரும் அந்தர் பல்டி. அங்கு நிற்கிறார் உம்ம தலைவர்.

     ஆக நீர் இந்த தளத்தை தொடர்ந்து படிக்கிறீர் என்பதை இந்த உமது பின்னூட்டத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

     இங்கு இடப்படும் எழுப்பப்படும் பாஜக சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு என்றைக்காவது பதில் சொல்ல முனைந்தீரா? இப்படி எதற்கும் வராமல் இல்லாத நடவாத ஒன்றிற்காக தனி ஒருவனை தாக்க வந்ததில் இருந்து உமக்கு அந்த திராணி இல்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்.

     இது தான் நீரும் உம்ம கூட்டமும்.

     நாணயத்தை பற்றி நீர் பேசுகிறீர். அதை தான் காவிரி விவகாரத்தில் தமிழ் நாடே பார்க்கிறதே.

     நாணயம், தார்மீகம், தேசப்பற்று பற்றி பேச இன்னுமா உம்ம கூட்டத்திற்கு வக்கு இருக்கு.

     வெட்க கேடு.

     • சூர்யா சொல்கிறார்:

      அறிவழகு!
      // கா.மை. ஐயாவிடம் நான் எங்கு பாய்ந்தேன்//

      இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்?
      //கா.மை. ஐயா போன்றவர்களை எல்லாம் நம்பவைத்துள்ளேனே அப்ப நான் யார்?

      ஙே……!//

      //அசோக வர்ஷினியின் கேள்விக்கு நீங்கள் கவர்னரை நீதிமன்றத்தை கேள்வி கேட்கிறீர்களா என்று எகிரும் இல.கணேசன், கோவா, பீகார், மணிப்பூர், மேகாலயா மாநில அவலம் பற்றிய வர்ஷினியின் எதிர் கேள்விக்கு அடிக்கிறார் பாரும் அந்தர் பல்டி. அங்கு நிற்கிறார் உம்ம தலைவர்//

      இல.கணேசன் என் தலைவர் என்று நான் எப்போது சொன்னேன்?

      //இங்கு இடப்படும் எழுப்பப்படும் பாஜக சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு என்றைக்காவது பதில் சொல்ல முனைந்தீரா? இப்படி எதற்கும் வராமல் இல்லாத நடவாத ஒன்றிற்காக தனி ஒருவனை தாக்க வந்ததில் இருந்து உமக்கு அந்த திராணி இல்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்//

      ஓகோ! “யார் தமிழர்” என்று ஒரு கும்பல் தமிழ் நாட்டில் சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டு திரிகிறது போல நீர்தான் காவிரிமைந்தன் அய்யாவின் வலைத்தளத்தில் பின்னூட்டம் இட யாருக்குத் திராணி இருக்கிறது என்று சர்டிபிகேட் கொடுக்கும் சட்டாம்பிள்ளையோ?

     • அறிவழகு சொல்கிறார்:

      சூர்யா,

      //கா.மை. ஐயா போன்றவர்களை எல்லாம் நம்பவைத்துள்ளேனே அப்ப நான் யார்?//

      இது உம்ம தலைவரோட இரட்டை வேடத்தை காட்ட கையாலாப்பட்டது. அதாவது உம்ம தலைவருக்காக எழுதப்பட்டது.

      கா.மை. ஐயா அவர்கள் சரியாக புரிந்து கொண்டு கொடுத்த விளக்கம் கீழே உள்ளது.

      உம்ம மாதிரியானவர்களிடம் மேல் மாடி காலி என்பதால் புரிந்து கொள்ளமுடியாது.

      இன்னும் எவ்வளவு காலம் இப்படியே நான் அந்த தலைவரை ஆதரிக்கவில்லை, பாஜக இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள். பாஜக காரன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது என்றால் ஏன் அதற்கு சார்பாக வந்து குதிக்க வேண்டும். இப்படி தான் இன்னும் சிலரும் செய்கிறார்கள்.

      வெட்கமாக, கேவலமாக இருக்கிறது என்றால் வெளியே வாருங்கள். குரைந்த பட்சம் இப்படி பாஜகவை ஆதரிப்பதற்காக மட்டும் வந்து நின்னு பின்னூட்டமிடாமல் இருங்கள்.

      உமக்கு திராணி இல்லை என்பதை நான் தனியாக சொல்லனுமாக்கும். அத தான் நீரே நிரூபத்துக் கொண்டு இருக்கிறீரே.

      நான் என்ன சொன்னேன் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் கா.மை. ஐயா விளக்கத்தையும் விளங்கிக் கொள்ளாமல்…

      காமெடி பன்னாதீரும்.

   • அறிவழகு சொல்கிறார்:

    முழுவதும் படித்து விட்டு தான் எழுதினேன் ஐயா.

    உங்கள் நேர்மையில் நான் கேள்வி கேட்கவில்லை. தங்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு அதில் கேள்வி வர வாய்ப்பு இல்லை.

    இல.கணேசன் மீது எனக்கு எந்த அபிப்பிராயமும் இருந்தது இல்லை. ஆனால், “என்றைக்கு நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும்” என்று சொன்னாரோ அன்றே அவர் மீது வெறுப்பு தான் வந்தது.

    எந்த சமயத்தில் அது சொல்லப் பட்டது? நெடுவாசல் பற்றி எரிந்து கொண்டிருந்த போது அது சம்பந்தமான கேள்விக்கு. தமிழகத்தை காவு கொடுத்தாலும் பரவாயில்லை தங்கள் காரியம் நடந்தால் சரி என்று சொல்பவர்கள் எம்மாதிரியானவரகள்.

    நீங்கள் சொல்வது ஒன்றாக இருக்கலாம். இவர் வெளிப்படுத்துவது வேறொன்றாக அல்லவா இருக்கிறது.

    இந்த பேட்டியில் கூட எடியூரப்பா என் நண்பர் என்கிறார். எடியூரப்பா நண்பர் என்றால் இவர்?

    இந்த இடுகையின் பின்னூட்டத்தில், புதியவன் இவரைப் பற்றி குறிப்பிடும் போது “சில புத்தகங்களில் படித்தது அவ்வளவு சிலாக்கியமாக இல்லை” என்கிறார். அது எந்த புத்தகம், என்ன தகவல்கள் சொல்கிறது என்று அவர் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

    இது எல்லாத்தையும் சேர்த்து தான் கற்பனையாக எழுதினேன்.

    மேலும், தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

 10. bandhu சொல்கிறார்:

  காவிரி ஆணையம் பற்றி எந்த அளவு தெளிவில்லாமல் குழப்பி அடிக்கிறார், இவர்! இந்த பேட்டியை கேட்பவர்கள் யாருக்கும் இவர் மேலோ பிஜேபி மேலோ அளவில்லாமல் கோபம் வரும்!

  ஒன்று தெரிகிறது. இவர் இந்த பேட்டியில் சரியாக கேட்பவரை மடக்கியிருந்தால், கட்சியில் இவர் நல்ல பெயர் எடுத்து இருப்பார். இப்போது கேவலமாக சொதப்பியதால், இவர் அரசியல் எதிர்காலம் இருண்டுவிட்டது !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.