பதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….


அவசியம் பார்க்க வேண்டிய மிகச்சிறப்பான ஒரு பேட்டி…..சின்னஞ்சிறிய பெண்ணின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், திணறுகிறார், மழுப்புகிறார், திசை திருப்புகிறார்…, தடுமாறுகிறார் – பாஜகவின் மூத்த தலைவர்
திரு.இல.கணேசன் அவர்கள்.

தந்தி டிவியின் சிறப்பு செய்தியாளர் அசோக வர்ஷினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அனுபவசாலியான, புத்திசாலியான, நல்ல மனிதரான – இல.கணேசன் அவர்கள் திண்டாடுவது ஏன் …?

தர்மம் இல்லையே,
நியாயம் இல்லையே,
நீதி இல்லையே,
நேர்மை இல்லையே –
– இந்த தடவை இவை எதுவுமே அவர் பக்கம் இல்லையே…! எவரெவரோ செய்யும் தவறுகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கும் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார் அவர்…..

தங்கள் தரப்பு பலவீனத்தை உணர்ந்து, இந்தப் பேட்டியை தவிர்த்திருக்க வேண்டும் திரு. இல.கணேசன் …

தர்மத்திற்கும், நியாயத்திற்கும் எதிராக செயல்படுபவர்களுடன் சேர்ந்து கொண்டு அதற்கு வக்காலத்து வாங்கும் இந்த பேட்டியால் அவரது மதிப்பும், மரியாதையும் படுபாதாளத்தில் வீழ்ந்தது தான் மிச்சம்………..

மனம் நிறைய பாராட்டுவோம் – இளம் செய்தியாளர் அசோக வர்ஷினி அவர்களை… மிகச்சிறப்பாகத் செயலாற்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவோம்…!

நேற்றிரவு (சனிக்கிழமை, மே -19 -ந்தேதி) ஒளிபரப்பான,
தந்தி டிவியின் – அந்த
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் வீடியோ கீழே –

….

—————————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….

  1. Pingback: பதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் …. – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.