ஸ்டெர்லைட் – இந்த கலவர வீடியோக்களில் இருப்பவர்கள் யார்…?


இந்த வீடியோவில்,
கார்களை, குடியிருப்பை –
நெருப்பு வைத்து கொளுத்துபவர்கள்…
தடிகளுடன் அலைபவர்கள்…
காவலர்களை அடிப்பவர்கள் …
இவர்கள் எல்லாம் யார்….?

படை பதைக்கும் வெய்யிலில். பெண்டாட்டி பிள்ளைகளுடன்,
10 கிலோமீட்டர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட
அந்த அப்பாவிப் பொதுமக்களா…?

அந்த அப்பாவிகள் அடிபடக் காரணமாக இருந்த,
அவர்களில் சிலர் செத்தும் போகக் காரணமாக இருந்த –
இந்த அயோக்கியர்கள், கயவர்கள் –
சமூக விரோதிகள் அல்லாமல் வேறு யார்…?

அப்பாவி மக்களின் போராட்டத்தில்,
சமூக விரோதிகள் உள்ளே புகுந்தார்கள் என்று
சொல்வதில் என்ன தவறு….?

கையாலாகாத அரசாங்கம், பொதுமக்களையும்,
கலவரம் செய்பவர்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல்
சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் துகைத்தது ….

( காவல் துறையும் நிச்சயமாக அத்துமீறியது…
அப்பாவி மக்களை, அடித்துப் போட்ட, சுட்டுக்கொன்ற
பாவத்திலிருந்து அது தப்பிக்க முடியாது …)

இன்னமும் ஒரு அரசியல்வாதி கூட வாயைத்திறக்கவில்லை –

சுயமாக விசாரித்து, தண்டிக்கும் அதிகாரங்களுடன் கூடிய ஒரு
Sitting Judge of the High Court -மூலம்
நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று…யாரும் கேட்கவில்லை.

ஏன்…? முழு உண்மைகளும் வெளிவருவதை யாருமே விரும்பவில்லை
என்பதால் தானே…?

இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை போராட்ட களத்துக்குள்
அனுமதித்த பாவத்திற்காக, அத்தனை இல்லல்களுக்கும் உள்ளான
அந்த அப்பாவி பொது மக்களுக்காக என் மனம் பரிதவிக்கிறது.

என்னை, என்ன சொல்லி அழைத்தாலும் பரவாயில்லை –
மனசாட்சியோடு சிந்திப்பவர்கள் இதை நிச்சயம் உணர்வர் என்று
நான் நம்புகிறேன்.

————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to ஸ்டெர்லைட் – இந்த கலவர வீடியோக்களில் இருப்பவர்கள் யார்…?

 1. Arun சொல்கிறார்:

  It takes 10 days after state massacre to spread such videos.. And they started to spread just after Mr. Rajinikanth visited Thoothukudi and unmasked by a student.. What a coincidence?

 2. பார்த்தஸாரதி சொல்கிறார்:

  ஒரு நாள் நடந்த ஒரு நிகழ்வில் ஒரு சின்ன விஷயத்தை மட்டும் எடுத்து மீண்டும் மீண்டும் பேசி எழுதி, அது மட்டுமே நடந்தது போல நிறுவ முயற்சிப்பது உண்மையற்றது எனத்தெரிந்தாலும் அது செய்யப்படுகிறது. இதற்க்குக் காரணம் துருவப்பட்டிருக்கும் (polarized) மனங்கள், எவ்வளவு வாசிப்பு இருந்தாலும் துருவப்பட்ட மனம் தன் நிலைக்கு மாறான ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள தயங்கும், நேரடியான தகவல்கள் இருந்தாலும் எப்படியாவது நியாயப்படுத்த முடியுமா என தவிப்பு இருக்கும். இன்றிருக்கும் நிலையில் இது ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது.

  காவேரி மைந்தன்,

  என்ன நடந்தது என்பதை இருபக்கத்திலும் இருந்து செய்தியாகச் சொல்லுங்கள் அது முக்கியம். அது சரியா தவறா என மக்கள் முடிவு செய்ய ஒரு வாய்ப்பும் இருக்கவேண்டும்.

  அதுசரி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? இப்போதெல்லாம் பெய்ட்நியூஸ் புரோக்கர்கள் இணையமெங்கும் இதுபோன்ற போலரைஸ்ட் கருத்துக்களை விதைக்கின்றனர்.

  • BVS சொல்கிறார்:

   Parthasarathy

   What have you to say about this –

   // கையாலாகாத அரசாங்கம், பொதுமக்களையும்,
   கலவரம் செய்பவர்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல்
   சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் துகைத்தது ….

   ( காவல் துறையும் நிச்சயமாக அத்துமீறியது…
   அப்பாவி மக்களை, அடித்துப் போட்ட, சுட்டுக்கொன்ற
   பாவத்திலிருந்து அது தப்பிக்க முடியாது …)

   இன்னமும் ஒரு அரசியல்வாதி கூட வாயைத்திறக்கவில்லை –

   சுயமாக விசாரித்து, தண்டிக்கும் அதிகாரங்களுடன் கூடிய ஒரு
   Sitting Judge of the High Court -மூலம்
   நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று…யாரும் கேட்கவில்லை.

   ஏன்…? முழு உண்மைகளும் வெளிவருவதை யாருமே விரும்பவில்லை
   என்பதால் தானே…? //

   SO – WHO IS YOUR BOSS ? dmk STALIN, VAIKO, VCK –
   Why are you silent on this point ?
   Has K.M.Sir not equally criticised State and Police authoritiies also.
   You conveniently choose to ignore only to cover up your Bosses. ?
   You HYPOCRITES.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   “பார்த்த” -சாரதிக்கு ஒரு விண்ணப்பம்….

   // அதுசரி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? இப்போதெல்லாம் பெய்ட்நியூஸ் புரோக்கர்கள் இணையமெங்கும் இதுபோன்ற போலரைஸ்ட் கருத்துக்களை விதைக்கின்றனர். //

   நானும் இத்தனை வருடங்களாக மாங்கு மாங்கென்று எழுதிக்கொண்டே இருக்கிறேன். ஐந்து பைசாவிற்கு பிரயோசனம் இல்லை…. நல்லவேளை இப்போது அனுபவசாலியான நீங்கள் கிடைத்தீர்கள்.. உங்கள் அனுபவம் எனக்கும் பயன்பட உதவுங்களேன்.

   இதற்கு எங்கே தொடர்பு கொள்ள வேண்டும்…? அல்லது என் சார்பாக நீங்களே “டீல்”-ஐ முடித்து விட்டாலும் சரி. உங்களுக்குரிய கமிஷனை எடுத்துக்கொண்டு
   மீதியை எனக்கு அனுப்பி வைத்தால் போதும். செய்வீர்களா புரோக்கர் அய்யா .

  • செந்தில், கோவை... சொல்கிறார்:

   கா.மை. பற்றி இப்படி சொல்லாதீர்கள்,

   //-அதுசரி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்-//

   இந்த விமர்சனம் தேவையற்றது… கண்டிக்கதக்கது….

 3. பார்த்தஸாரதி சொல்கிறார்:

  //Arun சொல்கிறார்:
  It takes 10 days after state massacre to spread such videos. And they started to spread just after Mr. Rajinikanth visited Thoothukudi and unmasked by a student. What a coincidence?
  //
  This is the logic which is cleverly masked by people like this blog writer. These fringe elements have one agenda, ALT-Rightism. Such extreme right writers, actors, political mindset people, who reject mainstream conservatism in favor of forms of conservatism and centralization of power that embrace implicit or explicit their so-called “supremacy” and greed of obsession.

  • BVS சொல்கிறார்:

   இந்த வலைத்தளத்தை தொடர்ந்து படித்து வரும் எவரும் காவிரிமைந்தனை
   rightist என்று கூற மாட்டார்கள். தொடர்ந்து பாஜகவை விமரிசித்து அதனாலேயே பல எதிர்ப்புகளை சம்பாதித்துவைத்திருப்பவர் அவர்.
   பொய் சொல்லத்தான் செய்கிறீர்கள். அதை பொருந்தவாவது சொல்லுங்கள்.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இன்று ஏகப்பட்ட பேர் “பொங்கி ” எழுந்து வந்திருக்கிறார்கள். என் இடுகைகளை இத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

  இதில் பலர் “பொங்கி” வழிகிறார்களே தவிர, நான் எழுதியதை உள்வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இதில் மிகப்பெரிய ஜோக்(கர்) திருவாளர் “பார்த்த ” – சாரதி; அல்லும் பகலும் பாஜகவை பழிக்கிறேன் என்று ஏகப்பட்ட நண்பர்கள் என்னை திட்டிவிட்டு, என் நட்பையே முறித்துக்கொண்டு போய் விட்ட லட்சணத்தில் இவர் என்னை
  ‘ரைட்டிஸ்ட் ‘என்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்பதாவது இவருக்கு தெரியுமா – தெரியவில்லை.

  நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த “பொங்கும்” நண்பர்கள் பதில் அளிக்கவில்லை..

  – அவர்கள் நோக்கில், நெருப்பு பந்தத்துடனும், கைத்தடியுடனும் அலையும் இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் அப்பாவிகளாஅல்லது சமூக விரோதிகளா ?

  – குடும்பத்துடனும், பிள்ளை குட்டிகளுடனும் பேரணியில் கலந்துகொள்ள வந்த அப்பாவி பொதுமக்களுக்கு இவர்கள் செய்தது துரோகமா இல்லையா …?

  – அப்பாவிகள் தடிஅடிபட்டதும், குண்டடிபட்டதும் – இவர்களால் தானே…?

  – Sitting High Court Judge ஒருவரைக்கொண்டு, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்களது so called தலைவர்கள் எவரும் வாயே திறக்கவில்லையே … ஏன்..?

  “பார்த்த”- சாரதி இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வாரா…? அவரது நண்பர் Arun…. ?

  • Arun சொல்கிறார்:

   First of all let me clarify that I am not a friend of Parthasarathy. I also laughed at his comments/comedies about righties and paid news.
   Answering your questions :
   1) They are not innocent.
   2) It is a betrayal unless they are police in civilian dress. I could not ignore this possibility after seeing videos of police setting fire in Jallikattu protest.
   3) I don’t agree with this. The people who were shot are targeted. But not many of them were not the one who attacked police or set fire. And also some were shot dead on the other day.
   4) I don’t understand who are those so called leaders you refer to. Except for Vaiko I don’t think any politician will qualify to comment on this.

   Hope I have answered your questions. I have one question for you. Have you come across these videos only after Rajini’s press meet. If not why have not you shared them before?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    1) அப்பாவிப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டதும் உண்மை.

    2) அத்துமீறி செயல்பட்ட காவல்துறையால், அப்பாவி பொதுமக்கள் அடிபட்டதும், உயிர் விட்டதும் உண்மை.

    3) Only an Enquiry by a Sitting Judge of High Court will bring out the Truth.

    இந்த நிலையில், இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடர நான் விரும்பவில்லை.

    • அறிவழகு சொல்கிறார்:

     நான் அப்படியே இதை வழிமொழிகிறேன்.

     அதேசமயம் சமூகவிரோதிகள் யார் என்று தனக்கு தெரியும் என்று சொன்ன ரஜினி அவர்கள் அந்த விபரங்களை காவல்துறையிடம் அளித்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

   • Mercy சொல்கிறார்:

    You are right Mr.Arun. These videos are released recently. But VIKATAN reporter Mr.Kalai did live video on the same day. In that we can see the arrogant behaviour of police on very young civilians. During operation police should be on their uniform and their name badge should be visible. But here some police were not in uniform [yellow shirt]. One of this police might have burnt the car.
    People are not ready to believe the police and politicians after Jallikattu. So it is time to update our police uniform like foreign countries. Uniform with camera attach.

 5. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  எல்லா செய்தி channel களும் இந்த விடீயோக்களை ஒளிபர வில்லை.காரணம் பயம் தான்.இது போன்ற வன்முறை கும்பல்களுக்கு வக்காலத்து வாங்குவது மிகவும் ஆபத்தானது மற்றும் துரதிருஷ்டமானது.இந்த வன்முறை கும்பல்கள் ஆதாயம் தேடுபவர்கள். இவர்கள் நோக்கம் நிச்சயம் ஸ்டெர்லிட் ஆலயம் பிரச்சினை அல்ல.
  sterlite குடியிருப்பில் வசிப்பவர்களும் தமிழர்கள் தான்.அவர்கள் உடைமைகளை தாக்குவதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
  ஒரு வேலை அந்த குடியிருப்பில் வசிப்பவர்களின் ஒருவராக நாம் இருந்திருந்தால் இந்த வன்முறையையும், வன்முறையாளர்களை நாம் இது போல் support செய்து கொண்டிருக்க மாட்டோம். அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் நிச்சயம் மரண பயத்தில் தான் அந்த நிமிடங்களை கடந்திருப்பார்கள்.ஏனெனில் இவர்களுக்கு பாத்து காப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை கூட அவர்கள் கண் முன்னே அடி வாங்கி கொண்டு அல்லவா இருந்தது.

 6. Pingback: ஸ்டெர்லைட் – இந்த கலவர வீடியோக்களில் இருப்பவர்கள் யார்…? – TamilBlogs

 7. இம்தியாஸ் அக்பர் - சுவன பிரியன் சொல்கிறார்:

  உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்
  காவல்துறையை படுகொலைக்கு தூண்டிய இந்த சமூக விரோத கறுப்பாடுகளும் இனங்கண்டு தண்டிக்க வேண்டும்
  காவல்துறைக்கு அனுமதி கொடுத்தவர் நிச்சயம் வட்டாச்சியார் அல்ல
  உண்மையாக சுட அனுமதி கொடுத்தவரை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 8. தோழர் வருண் கருத்து சொல்கிறார்:

  @பார்த்தஸாரதி என்னும் போலி பெயரில் உள்ளவருக்கு,

  காவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு? போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக! ஆமா நீ எப்படி? நீ யாருனு பாரு!

  இந்த வீடியோவில் போலிஸ் ஏன் சுட்டார்கள் என்பது தெளீவுபடுகிறது. போலிஸ தாக்கினால், 144, அப்புறம் துப்பாக்கி சூடு, அப்பாவிகள் பலி. இதுதான் நடக்கும்.

  நாங்க அப்பாவிகள், அமைதியாப் போராடினோம் என்பது பொய். சுட வச்சது நீங்கதான்.

  போலிஸ் பயந்து ஓடுமளவுக்கு கல்லால் தாக்கினால், கலக்டர் சூட்டிங் ஆர்டர் கொடுக்கத்தான் செய்வாங்க. சும்மா அப்பாவியை சுட்டுப் புட்டானுகனு நடிக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.

  உடனே நீ ஒரு தமிழின துரோகி, தாலினு சொல்லி ஒப்பாரி வைக்காதே! போலீஸ தாக்கினால், கலக்டர் உயிருக்கு ஆபத்து வருமென்கிற நிலைக்கு நீ கொண்டு சென்றால் துப்பாக்கி சூடு அமல்ப்படுத்தப் படும். அப்பாவி மக்கள் பலியாவார்கள்ணு உன் மர்மண்டையில் ஏற்றூ!

 9. புதியவன் சொல்கிறார்:

  கலவர வீடியோவில் இருப்பவர்கள் – ரவுடிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்தாம். போலீசை லத்தி கொண்டு தாக்குபவர்கள் தேச விரோதிகள்தாம். இந்த பயங்கரவாதிகளின் செய்கையினால், அப்பாவிகள் தாக்கப்பட்டனர். அவ்வளவுதான் விஷயம்.

  போலீசையும் அரசையும் குறை கூறுபவர்கள் எல்லோரும் இந்தப் பயங்கரவாதிகளையும் தேசவிரோத சக்திகளையும் பற்றி ஒன்றும் சொல்லாததே அவர்களது போலித்தனத்துக்குச் சான்று.

 10. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  என்ன நடந்தது என்பது பற்றி இன்னும் உண்மை வெளியாகவில்லை .

  காவேரி மைந்தன் எழுதியதை இப்போது பார்ப்போம் .

  1) அப்பாவிப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், சமூக விரோதிகள்
  நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டதும் உண்மை.

  2) அத்துமீறி செயல்பட்ட காவல்துறையால், அப்பாவி
  பொதுமக்கள் அடிபட்டதும், உயிர் விட்டதும் உண்மை.

  3) Sitting High Court Judge ஒருவரைக்கொண்டு, பாரபட்சமற்ற
  நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள்
  எவரும் வாயே திறக்கவில்லையே … ஏன்..?

  கா மை சார் இதை காசு வாங்கிக் கொண்டு எழுதவில்லை !

  இந்த போராட்டம் கட்சிகள் தலைமை ஏற்று நடக்கவில்லை .
  ஊர் மக்களே ஒன்று சேர்ந்து நடத்தியது .

  அரசியல் செய்பவர்களிடம் பணத்தால் அடிக்க முடியும் .
  மக்கள் இந்த ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள் .
  ஊரை அடித்து உலையில் போட முடியுமா ?

  போராட்டத்தை திசை திருப்ப கலவரம் ஒன்றே வழி .
  கலவரம் நிகழ்ந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் .
  அதற்கு பின்னால் யாரும் போராட வர மாட்டார்கள் .

  கலவரம் செய்ய வந்த சமூகவிரோதிகள் யார் ?
  காசு வாங்கிக் கொண்டு தொழில் செய்யும் அடியாட்கள் .
  இதற்கு நெறைய பணம் செலவாகி இருக்கும் .

  Cui Bono என்று லத்தீனில் சொல்வார்கள் – For whose benefit ?
  தமிழில் ‘யாருக்காக இது யாருக்காக ‘ என்று சொல்லலாம் .
  Now you know why , what happened did happen .

 11. Tamilian சொல்கிறார்:

  இந்த கலவரத்தை உணமை நிகழ்வுகளை பதிவு செய்ததில் மகிழ்ச்சி. கலவரம் கட்டு மீறியதால் துப்பாக்கி சூடு.நடத்த வேண்டிய கட்டாயம். தமிழகத்தில் எவ்வளவோ இப்படி நிகழ்ந்துள்ளது. IPL கலவரத்தில் போலீசை தாக்கியது திட்டமிட்டு. ஆனால அங்கே துப்பாக்கி உபயோகிக்கவில்லை. இங்கு கட்டு மீறி தாக்குதல் நடத்தியதால,வனமுறையாளரகள கூட்டம மிகுந்து தீவைத்து வண்டிகளையும் குடியிருப்புக்கள் மற்றும் அலுவலகங்கள் கொளுத்தப்பட்டதால துப்பாக்கி சூடு. கட்டாயமாகிவிட்டது. உலகெங்கும் கலவரங்கள் இப்படி இருந்தால் காவலதுறை இப்படித்தான் கையாளும். தீவைக்கும படச்சுருள் கண்டால் எவ்வளவு திடமாகவும் தெளிவாகவும் தீவைத்துவிட்டு போகிறார்கள். இவரகளதான பயிற்சி பெற்ற சமூக விரோதிகள். இவரகளை அழைத்துவந்தது யார? இவரகள பொதுமக்களா?

 12. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தூத்துக்குடியில் நடைபெற்றது ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் .
  அரசுக்கு எதிரானது அல்ல .
  இந்த போராட்டம் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது .
  பலன் ஒன்றும் இராது என தோன்றுகிறது .
  ஸ்டெர்லைட் என்ன செய்கிறது என்பது பற்றி யாரும் பேசவில்லை .

  ஆலை எதற்காக நடக்கிறது ? லாபம் ஈட்டத்தான் .
  1 சட்டத்துக்கு உட்பட்டு நடத்தலாம் .
  2 வெறுமனே பேப்பரில் மட்டும் காண்பித்து நடத்தலாம் .
  3 மாசு வாரியத்தை வேப்பிலை அடித்து நடத்தலாம் .
  4 சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் வைத்து நடத்தலாம் .

  மற்ற நாடுகளில் சட்டம் தன் கடமையை செய்யும் .
  அங்கே நடத்தினால் செலவு அதிகமாக ஆகும் – லாபம் குறையும் .

  நிர்வாகம் லாபம் சம்பாதிப்பதில் குறியாக இருக்கும் .
  1 படி நடத்தினால் ரூ 500 கோடி செலவாகலாம்
  மேற்சொன்ன 2 , 3 , 4 இல் செலவு ரூ 10 கோடி
  லாபம் ரூ 500 கோடி அதிகம் வரும் .

  ஸ்டெர்லைட் இந்த ஆலையை மூடாது .
  ஒரு மூன்று இல்லை அதிகமாய் ஆறு மாதத்தில் திறக்கும் .

  தூத்துக்குடியில் மாசு ஏற்படுவதற்கு இந்த ஆலைதான்
  காரணம் என்று ஒரு பேப்பரும் இல்லை .

  அப்பாவிகள் மேலே போடப்பட்ட கேஸ்கள் அப்படியே இருக்கும் !
  இரும்புக்கரம் கொண்டு அடக்கும் நடவடிக்கை மட்டும் இருக்கும் .
  போலீஸ் மேல் எந்த நடவடிக்கையும் இராது .

 13. நெல்லை பழனி சொல்கிறார்:

  அது முன்பே திட்டமிடப் பட்ட ஒரு போராட்டம் ….அதற்க்கு முன்பே போலிஸ் 144 தடை உத்திரவு போட்டது …பின் ஏன் மக்களை சர்ச்சில் கூடி சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வர விட்டார்கள் ..மக்கள் கலைக்டரை சந்தித்து மனு கொடுக்கத் தானே வந்தார்கள் …பின் ஏன் கலைக்டர் மக்களை சந்திக்காமல் கோவில்பட்டி சென்றார் …அவர் மட்டும் அன்று அங்கிருந்து மனுவை வாங்கி இருந்தால் கோசம் போட்டு விட்டு களைந்திருப்பார்கள் …அனால் வேண்டும் என்றே மக்களை சந்திக்காமல் சென்றதால் தான் மக்கள் கோபத்தில் கலைக்டர் ஆபிஸ் மீது கல்லை எறிந்தார்கள் .வேகாத வெயிலில் குழந்தை குட்டிகளுடன் ஆறு கிலோ மீட்டர் நடந்து வந்தாவர்களுக்கு எவ்வளவு கோபம் இருந்திருக்கும் …இதை தான் போலிசும் எதிர்பார்த்தது …கலவரத்தை அடக்குகிறேன் என துப்பாக்கி சூடும் நிகழ்த்தி விட்டார்கள் …சுட்டால் தான் மக்கள் அடங்குவார்கள் என அதிகாரவர்க்கத்தினர் தப்பு கணக்கு போட்டாத விளைவே தூத்துக்குடி சம்பவம் ….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.