என்ன செய்யப்போகிறது இந்த யானை…? யானையா…..மனிதனா…..?


யானை .. விலங்குகளிலேயே மிகப்பெரியது… மிக அதிக பலமுடையது.
ஆனால், அது தனது பசிக்காகவோ, தனது பலத்தை, அதிகாரத்தை –
காட்டிக் கொள்ள வேண்டுமென்றோ – மனிதரையோ, மற்ற விலங்குகளையோ கொல்வது இல்லை…

தன்னை துன்புறுத்தாத வரையில், பிறருக்கு எந்த தீங்கும் செய்வதில்லை யானை….

ஆனால் மனிதன்….?

பரபரப்பைத் தூண்டும் ஒரு திகில் வீடியோ கீழே –

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to என்ன செய்யப்போகிறது இந்த யானை…? யானையா…..மனிதனா…..?

 1. புதியவன் சொல்கிறார்:

  இது ரொம்ப அதிசயம் கிடையாது கா.மை சார். தனியாக வரும் யானைதான் கொஞ்சம் மூர்க்கமானது. பொதுவாகவே விலங்குகள் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. சிறுத்தை, சிங்கம், புலி போன்றவைகூட. ஆனாலும் அவைகள், தங்களைத் தாக்குவதற்கு வருகிறானோ என்று சந்தேகப்படாத தொலைவில்தான் மனிதன் இருக்கவேண்டும். சில சமயம் வெகு அருகில்கூட சிங்கம், சிறுத்தை, செந்நாய், கழுதைப்புலி போன்றவை (அதாவது படமெடுக்கும் வண்டியை ஒட்டியே) நடப்பதை/இருப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். (ஒருவேளை உள்ளுணர்வு காரணமா என்று தெரியவில்லை).

  யானைகள், மற்ற விலங்குகளைப்போல் தங்கள்மீது அன்பு செலுத்துபவர்களை மறப்பதில்லை. இதற்கு முன்பு, இறந்த வனவிலங்கு (யானைகள்) ஆர்வலரைக் காண யானைக்கூட்டம் 2, அவர் வீட்டு அருகில் வரை இருந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும் காணொளியைப் பார்த்திருக்கிறேன்.

 2. புதியவன் சொல்கிறார்:

  எழுத மறந்தது….

  தனியாக வரும் யானை கொஞ்சம் ஆக்ரோஷமானது. மனிதர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்கணும். அதே சமயம், மனிதர்களில், தனியாக வருபவர்கள் பெரும்பாலும் கோழைகள், சாதுக்கள். அவர்களே கும்பலாக வரும்போது சர்வ சாதாரணமாக ஆக்ரோஷத்தைக் காண்பிப்பார்கள். இதை மாணவர்கள் ஸ்டிரைக் போன்ற கலவரங்களில் காணலாம்.

 3. Pingback: என்ன செய்யப்போகிறது இந்த யானை…? யானையா…..மனிதனா…..? – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.