திரு.வைகோ – ரங்கராஜ் பாண்டே… கேள்விக்கென்ன பதில்…சில புதிய தகவல்கள்….!!!


ஒரு உபயோகமுள்ள பேட்டி… ரங்கராஜ் பாண்டே நல்ல home work
செய்து விட்டு வந்திருக்கிறார்…
பல சமயங்களில் வைகோ திணறுவதும், சமாளிப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.

எப்போதும் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் வைத்தே முடிவிற்கு வந்து விடுவது தான் நம் மக்களின் வழக்கம்….இந்த பேட்டியின் மூலம் சில புதிய தகவல்கள் வெளிவருகின்றன… இந்த புதிய தகவல்களை ஜீரணிப்பது சிலருக்கு கடினமாக இருக்கும்.

பெட்டி வாங்கி விட்டார்(கள்..) என்று பாண்டே மீதும், தந்தி நிறுவனத்தின் மீதும் பழி வரும்….!

திமுகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டதால், வைகோ ஜெயலலிதா
அவர்களைப்பற்றி பேசும்போது தடம்புரள்வது எதிர்பார்க்காதது…சந்தர்ப்பவாதம்.

பேட்டி, திடு திப்பென்று முடிந்து விட்டது போல் தோன்றுகிறது.
முழுமையாக இல்லை. இன்னும் பல விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று நமக்கே தோன்றுகிறது. என்ன காரணமோ…?

நேரடியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியாத
நண்பர்களுக்காக, பேட்டி வீடியோவை கீழே பதிந்திருக்கிறேன். நண்பர்கள் பாரத்த பிறகு, தங்கள் கருத்தை கூறலாம்…. விவாதிப்போம்….

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

32 Responses to திரு.வைகோ – ரங்கராஜ் பாண்டே… கேள்விக்கென்ன பதில்…சில புதிய தகவல்கள்….!!!

 1. Pingback: திரு.வைகோ – ரங்கராஜ் பாண்டே… கேள்விக்கென்ன பதில்…சில புதிய தகவல்கள்….!!! – TamilBlogs

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   விவாதத்தை யாரும் திசை திருப்பி விடக்கூடாது என்பதால், முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

   இந்த விமரிசனம் தளத்தைப் பொருத்த வரையில் அது கீழ்க்கண்ட விஷயங்களில் உறுதியாக இருக்கிறது….

   – பல இடங்களில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டிருக்கிறது… அவர்களால் அப்பாவி பொதுமக்கள் பல இடங்களில் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

   – எப்பேற்பட்ட காரணங்களை முன் வைத்தாலும், 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதை – காவல்துறையோ, அரசோ, நியாயப்படுத்தி விட முடியாது…

   – மிக அதிக மக்கள் திரள்கிறார்கள் என்று முன்னரே தெரிந்திருந்தும் சம்பவ இடங்களில் பொறுப்புள்ள உயர் அதிகாரிகள் யாரும் இல்லாமல் போனது ஏன்…?

   ——————————–

   இந்த தளத்தில் சொல்லப்பட்ட இன்னொரு விஷயம், பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவி, வன்முறை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது.

   இதை சில நண்பர்கள் மறுத்தனர். அவர்களுக்காக கீழ்க்கண்ட குறிப்பு
   மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக உண்மையறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

   அதிலிருந்து ஒரு பகுதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது –

   ————————–

   //ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்ற ஒரே கோரிக்கைக்காக 22 ஆம் தேதியன்று கடற்கரை அருகிலிருந்து பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் என சகல பகுதி மக்களும் பாளையங்கோட்டை ரோடு வழியாக பேரணியாக சென்றனர். எந்த அமைப்பும் தங்களது கொடிகளை எடுத்து வரக்கூடாது என முடிவு எடுத்திருந்ததனால் யாருடைய கைகளிலும் கம்போ பைப்போ எதுவும் இல்லை.//

   —————————-

   உண்மையறியும் குழு – போராட்டத்தில் கலந்து கொள்ளும் எந்த அமைப்பும் தங்களது கொடிகளை எடுத்து வரக்கூடாது என முடிவு எடுத்திருந்ததனால், யாருடைய கைகளிலும் கம்போ, பைப்போ, எதுவும் இல்லை என்று கூறுகிறது.

   ஆனால் நிறைய வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. பல இளைஞர்கள் தடிகளுடன் அலைவதையும், அவர்கள் கார்களுக்கு சேதம் விளைவிப்பதும், தீ வைப்பதும் அந்த தடிகளால் போலீஸ்காரர்களை தாக்குவதும், வெகு தெளிவாகத் தெரிகிறது….

   பிரச்சினையே இந்த இளைஞர்கள் தான்… இவர்கள் யார்…?

   • Tamilian சொல்கிறார்:

    இந்த இளைஞர் கூட்டமதான வனமுறையிலும தீ வைப்பிலும கல்லெறிதலிலும ஈடுபட்டு துப்பாக்கி சூட்டிறகு காரணமாயிற்று. இது வேண்டுமென்று செய்யப்பட்ட கலவரமா என்பது விசாரிக்க பட வேண்டும்.

 2. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  இப்பொழுதெல்லாம், எதிர்த்து கேள்வி கேட்பதற்கே பயமாக இருக்கிறது. ஏனென்றால் anti-tamilan என்று முத்திரை குடுத்து விடுகிறார்கள்.
  சில நாட்களுக்கு முன் தமிழிசை சௌந்தர்ராஜனை பற்றி ஒரு தமிழ் பெண்மணி மிகவும் கீழ்த்தரமான,ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ஒரு விடியோவை வெளியிட்டு,கடைசியில் அந்த பெண்மணி காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்.
  அனால் அந்த பெண்மணிக்கு ஆதரவாக ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது.தமிழர்கள் நிலை பரிதாபம் தான்.யாரை சப்போர்ட் செய்ய வேண்டும் என்று குழம்பி போய் உள்ளனர்.

  • நெல்லை பழனி சொல்கிறார்:

   பெண் பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசிய எஸ் வி சேகரை இன்று வரை இந்த அரசு கைது செய்யவில்லை …பணமும் , அதிகாரமும் இருந்தால் கைது நடவடிக்கை கிடையாது …ஏழை பெண் எறால் உடனே தேடி பிடித்து கைதா ….என்ன சார் நியாயம்

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    நெல்லை பழனி,

    எஸ்.வி.சேகரை கைது செய்யாததற்கு காரணம் நீங்கள் நினைப்பது போல் பணமும், அதிகாரமும் இல்லை…

    எஸ்.வி.சேகர், மோடிஜிக்கு வேண்டியவர்…சட்டை பாக்கெட்டில் எப்போதும் மோடிஜி படம் வைத்திருப்பவர்… பாஜக பிரமுகர்…

    -அவ்வளவு தான்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. jksm raja சொல்கிறார்:

  ஐயா
  உங்களுடைய ஸ்டெர்லைட் சம்பந்தமான பழைய இடுக்கையையும் அதன் பின்னூட்டத்தையும் கவனித்து வந்தேன்.
  அதில் யாரும் வன்முறைக்கான இன்னுமொரு கோணத்தை அலசவில்லை.
  அதை இப்பொழுது வெளிக்கொண்டுவர முயற்சி நடக்கிறது

  போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லாரும் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்கள் ஆனால் ஆலையின் தரப்பு, ஆளும் கட்சியின் தரப்பு மற்றும் பி ஜே பி யின் மட்டும் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று ஆணித்தரமாக சொல்லி வந்தது.
  காரணம் அந்த சமூக விரோதிகளை ஏற்பாடு செய்ததே மேற்கூறியவர்கள்தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது.
  அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆளுந்தரப்பு உறுதியாக இருந்திருக்கிறது.
  அதனால்தான் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வெளியேறியிருக்கிறார்கள்.
  அவர்கள் யாரும் அடையாளப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு சி சி டி வி காட்சிகளை நன்றாக எடிட் செய்து பத்து நாட்களுக்கு பின்பு பொது மக்களை குற்றம் சொல்லி வெளிவிட்டு உள்ளது என்பதை உணரலாம்

  • indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

   நீங்கள் குறிப்பிடும் சி சி டி வி காட்சிகள் முன்னரே பி பி சி யினால் வெளியிட பட்டுள்ளன.ஆனால் அதை ஒளிபரப்ப மற்ற டிவி சேனல்கள் தயாரா இல்லை. நீங்கள் குறிப்பிடுவதை போல் அவை பத்து நாட்களுக்கு பின்னர் வெளியிட படவில்லை.அதற்க்கு முன்னரே வெளியிடப்பட்டன.

   • Tamilian சொல்கிறார்:

    பாலிமர சானல அன்று நடந்த போராட்டத்தை மணித்துளிகளில் வகைபடுத்தி வெளியிட்டு உள்ளது. அதில காணொளிகள் உள்ளன.

  • Tamilian சொல்கிறார்:

   இதைத்தான் வைகோ பாண்டேயின பேட்டியில் கூறினார். எல்லாமே போலிஸ்தாண்டா.

 4. jksm raja சொல்கிறார்:

  எஸ் வி சேகரை ஆதரிக்கலாம் நண்பரே. அவர், அவர்கள் குடும்பத்து பெண்கள் எல்லாரும் எப்படி உயர் பதவிகளை அடைந்தார்கள் என்பதை எவ்வளவு நன்றாக விளக்கியுள்ளார் , அப்படி விளக்க யாராலும் முடியுமா

 5. அறிவழகு சொல்கிறார்:

  இந்த நடிகர்களை யார் கூப்பிட்டா?

  இப்படி உளரி கொட்டுகிறார்கள். இவர்களை ஆதரிக்கவும் ஒரு அறிவு கெட்ட கூட்டம் ஒன்னு அவர்கள் பின்னால் அலைகிறது.

  ஏற்கனவே, ரஜினி தூத்துக்குடியில் பட்ட அவமானத்தால் சென்னையில் நிதானமிழந்தார். எல்லாரிடமும் வாங்கி கட்டிய பிறகு மன்னிப்பு கேட்டார்.

  இப்ப கமல்ஹாசன் காவிரியில் தன் அடி முட்டாள் தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து அதை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கைகள் ஏற்பாடாகி கொண்டிருக்கும் போது பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு என்று கர்நாடக முதல்வரை சந்தித்த பிறகு சொல்கிறார் என்றால் இவர் யார் இதை சொல்ல?

  இதனால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை புரிந்து தான் இவர் சொன்னாரா?

  அப்படியே கர்நாடகாவின் விருப்பத்தை சொல்கிறார் என்றால்….

  இவர் படம் அங்கு திரையிடப் படவேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

  ரஜினி கர்நாடகா சென்று ‘காலா’ திரைப்பட வெளியீடு சம்பந்தமாக ஒரு தீர்வும் எட்ட முடியவில்லை என்றான பின்
  கர்நாடகா மக்கள் முடிவு செய்வார்கள் என்று மக்களை தூண்டுகிறார்.

  எல்லாத்திற்கும் போராட்டம் என்று போனால் தமிழகம் சுடு காடாகிவிடும் என்று சொன்ன ரஜினி தன் படவெளியீட்டுக்கு கர்நாடக மக்களை போராட தூண்டுகிறார்.

  இவர்கள் எவ்வளவு பெரிய சுயநலவாதிகள்.

  இவர்களா வெற்றிடத்தை நிரப்ப வந்த மாற்று தலைவர்கள்…..!?

  • அறிவழகு சொல்கிறார்:

   ஜூன் 1லிருந்து நாடெங்கும்
   விவசாயிகள் போராட்டம்.

   தங்களது விளை பொருட்களுக்கு ஆதாயமான விலை கிடைக்கவும், விளை பொருள் கொள்முதலில் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவும், விவசாயக் கடனை ரத்து செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் போராடுகின்றனர்.

   இப்ப விளங்குகிறதா….!?

   ஏன் போராட்டம் கூடாது என்பதின் பின்னணி….?

   • BVS சொல்கிறார்:

    // இப்ப விளங்குகிறதா….!?
    ஏன் போராட்டம் கூடாது என்பதின் பின்னணி….? //

    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சு போடும் மகாபுத்திசாலித்தனம்:
    உளரலின் உச்ச கட்டம்.

 6. Raghuraman N சொல்கிறார்:

  What ever Kamal is trying to do now is atrocious.
  He is trying to demean the effort of past 20 years just like that.
  Raghu

 7. Selvarajan சொல்கிறார்:

  // “நீ எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை உன் எதிரி தான்
  தீர்மானிக்கிறான்…” என்பது ஒரு புகழ்பெற்ற வார்த்தை…!!! // …. இது தாங்கள் ஒரு இடுகையில் குறிப்பிட்டது … ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அந்த ” நீ ” என்பது சமூக விராேதிகளா ..? இல்லை ” எதிரி ” என்பது சமூக விராேதிகளா ….?

  கையில் எந்தவித கம்பாே , காெடியாே இல்லாமல் வந்த மக்களை தடிகளையும் , கற்களையும் ஏந்த தூண்டிய அந்த எதிரி யார் …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   //கையில் எந்தவித கம்பாே , காெடியாே இல்லாமல் வந்த மக்களை தடிகளையும் , கற்களையும் ஏந்த தூண்டிய அந்த எதிரி யார் …? //

   உங்கள் வார்த்தை சரியாக இல்லை… கம்போ, கொடியோ இல்லாமல் வந்த மக்கள் தடிகளையும், கற்களையும்
   ஏந்தினார்கள் என்பது தவறு…

   பொது மக்கள் வேறு… அவர்கள் கலகம் செய்யவில்லை.கற்களை தூக்கவில்லை… தடிகளையும் தூக்கவில்லை.

   இவர்கள் வேறு… வேண்டுமென்றே உள்ளே புகுந்த சமூக விரோதிகள்.
   அரசாங்கத்தின் வசம் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் பரிசீலனை செய்து, ஒவ்வொரு இடத்திலும்
   வன்முறையில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரம் செய்ய வேண்டும்… அவர்கள் யார் என்று
   பொது மக்கள் அடையாளம் காண வேண்டும்.. எந்த அரசியல் கட்சி…? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்கள்
   என்பதை அடையாளம் கண்டு, வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்…

   இந்த ஆவணங்கள், வீடியோக்கள் அரசின் வசமும் உள்ளன. தனியார் சிலரிடமும் இருக்கும்.. அனைத்தையும்
   சேகரிக்க வேண்டும்…

   இதற்குத்தான் ” Sitting Judge of the High Court ” மூலம் விசாரணை வேண்டுமென்று சொல்கிறேன்.
   ஆனால், எந்த எதிர்க்கட்சியும், எந்த அமைப்பும் – இதை கேட்கவோ, வலியுறுத்தவோ இல்லையே ஏன்…?

   • Selvarajan சொல்கிறார்:

    // பொது மக்கள் வேறு… அவர்கள் கலகம் செய்யவில்லை.கற்களை தூக்கவில்லை… தடிகளையும் தூக்கவில்லை. // நல்லது … என்னுடைய வார்த்தை சரியாகத்தான் இருக்கிறது …. ஆயுதத்தை எடுக்க தூண்டிய அந்த கயவர்கள் யார் என்பது நேரிடையானகேள்வி … ! உங்கள் கூற்றுப்படி // இவர்கள் வேறு… வேண்டுமென்றே உள்ளே புகுந்த சமூக விரோதிகள். // சரி … அவர்களை சுடாமல் தேடித் தேடி பாெது மக்களை சுட்டது ஏன் ..? நீங்கள் கூறியவாறு எல்லா உண்மைகளும் வெளியே வரும் …. வரும்….!!

    • Raghavendra சொல்கிறார்:

     பொதுமக்கள் கற்களையும், தடிகளையும் தூக்கினார்கள் என்று நீங்கள்
     சொல்வது தவறு தான். தீ வைத்த, கற்களால் அடித்த, தடிகளால் அடித்த
     அயோக்கியர்களை நீங்கள் எவ்வாறு பொதுமக்கள் என்று சொல்லலாம் ?

     • Selvarajan சொல்கிறார்:

      நீங்கள் தான் தவறாக கூறிக் காெண்டு இருக்கிறிர்கள் … நீங்களும் மற்றவர்களும் கூறுகிற அயாேக்கியர்களை தூண்டியது யார் என்பது தான் கேள்வி .. மக்கள் ஆயுதங்களை எடுத்தார்கள் என்று நான் எந்த இடத்தில் கூறியிருக்கிறேன் ..என்னுடைய திரு கா.மை அவர்களுக்கான மறு மாெழியில் கூட அவர் கூறியுள்ளதற்கு ..நல்லது என்றுதான் குறிப்பிட்டுளளேன் … பெரும்பாலும் மறு மாெழிகளை தவிர்ப்பவன் நான் … ஒரு தலைப்பட்சமாக வாதிடுவது எனக்கு பிடிப்தில்லை ..!! கயவர்கள் …கயவர்கள் என்ற கூறுகிறீர்களே ..அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதைப் பற்றி கூறப்பாேவது யார் ..? Judicial Enquiry with a Sitting High Court Judge வேண்டுமென்று ஏன் திரு ரஜினி அவர்கள் கூட கேட்கலாமே .. நாடு சுடுகாடாகி விடும் என்று கூற தெரிந்தவர் .. ஆணித்தரமா இதை கேடகலாமே …! யார் தடுக்கப் பாேகிறார்கள் … ? சுடப்பட்டு இறந்தவர்கள் தான் சமூக விராேதிகள் என்று கூறினாலும் யார் எதிர்த்து கேட்க முடியும் ..? கேட்டால் வேறு விதமான முத்திரை குத்த காத்திருக்கிறார்கள் … இனி என்னுடைய மறு மாெழி இது பற்றி வராது …!

   • Tamilian சொல்கிறார்:

    வைகோ கூற்றுப்படி அவர்கள் மாறுவேடமணிந்த போலீஸ் .

 8. Raghavendra சொல்கிறார்:

  பொதுமக்கள் வேறு; கலகம் செய்த கயவர்கள் வேறு என்று நீங்கள் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள் ?

 9. Raghavendra சொல்கிறார்:

  கே.எம்.சார் சொல்வதுபோல் a Judicial Enquiry with a Sitting High Court Judge வேண்டுமென்று யாரும் ஏன் வலியுறுத்துவதில்லை ? தங்கள் தவறும் சேர்ந்து
  வெளிப்பட்டு விடும் என்றா ?

  • Tamilian சொல்கிறார்:

   ஓய்வு பெற்றவருக்கும, பதவியில் உள்ளவருக்கும இருக்கும் வித்தியாசம் என்ன? ஓய்வு பெற்றவர் யாருக்கும் கடமைப்பட்டவர இல்லை. பதவியில் உள்ளவர் மேலும பதவிகள் பெறமுடியும் என்று பார்க்க மாட்டாரா?

  • Raghavendra சொல்கிறார்:

   Selvarajan :

   ” மக்கள் ஆயுதங்களை எடுத்தார்கள் என்று நான் எந்த இடத்தில் கூறியிருக்கிறேன்…?

   இந்த இடத்தில் கூறி இருக்கிறீர்கள்:
   ////கையில் எந்தவித கம்போ , கொடியோ இல்லாமல் வந்த மக்களை தடிகளையும் , கற்களையும் ஏந்த தூண்டிய //

   ” கயவர்கள் …கயவர்கள் என்ற கூறுகிறீர்களே ..அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை ”

   இதுவரை இல்லை என்பதற்காக இருக்காது என்று தீர்மானித்து விடுவீர்களா ?

   “Judicial Enquiry with a Sitting High Court Judge வேண்டுமென்று ஏன் திரு ரஜினி அவர்கள் கூட கேட்கலாமே .. ”

   நீங்கள் ஏன் கேட்கவில்லை; உங்களுக்கு பிடித்த கட்சியினர் ஏன் கேட்கவில்லை ? என்பது தான் கேள்வி: ரஜினி இங்கே எப்படி வருகிறார் ?

   “இனி என்னுடைய மறு மாமொழி இது பற்றி வராது ”

   மெத்த மகிழ்ச்சி. இங்கு யார் காத்துக் கிடக்கிறார்கள் ?

 10. Selvarajan சொல்கிறார்:

  ராகவேந்திரா
  திரு கா.மை காெடுத்து இருந்த மேற்காேளில் நீ …எதிரி ..என்பது யார் என்பது தான் எனது கேள்வியாக இருந்தது …? அப்ப இரண்டும் இல்லை என்றால் மூன்றாவதாக வந்த அயாேக்கியர்களை உள்ளே விட்டதும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் காெண்டதும் .. அப்பாவிகளை சுட்டதும் ஏன் எனபதற்கு பதில்கூற திறானியற்றவர்கள் ..இடுகின்ற மறு மாெழிக்கு தான் எல்லாேரும் காத்துக்கிட்டு இருக்கிறார்கள் …
  என்னை பற்றி எதுவுமாே அறிந்தில்லாமல் எனக்கு பிடித்த கட்சியினர் என்று நீங்கள கூறவதில் இருந்தும் ..ரஜினி இங்கே எப்படி வருகிறார் என்பதில் இருந்தும் நீங்கள் யாரென்று புரிகிறது ….!
  திரு க.மை.அவர்களிடம் விவாதிக்கும் பாேது நடுவில் புகுந்து அனைத்தும் அறிந்த அறிவுஜீவி பாேல நீங்கள் மறு மாெழி கூறியதே தவறு …! இன்னும் ஒரு ஆறுமாதம் கழித்து கயவர்கள் மீது நடவடிக்கை மிகவும் வேகமாக எடுப்பது கூட நல்லாத படும் ஒரு சிலருக்கு …?

  சம்பவம் நடந்ததில் இருந்து தினமும் “Judicial Enquiry with a Sitting High Court Judge வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் காெண்டே இருப்பது எனக்கு மட்டும் தெரியாமல் பாேய்விட்டது …! நீங்கள் கேட்டுமா அரசு இன்னும் அமைக்கவில்லை ஆச்சர்யாமா இருக்கு ..! எனக்கு பிடித்த கட்சியினர் யார் என்பதை அறிந்த ஒரே ஆள் தாங்கள்தான் …
  உங்களுடைய ஒரு தலைப்பட்சமான கருத்துக்கு மறு மாெழி இட நானும் ஒன்றும் காத்துக் கிடக்கவில்லை … !

 11. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  வை கோ சொன்னது – ஸ்டெர்லைட் மீடியாவிற்கு
  ஒரு விருந்து வைத்து கவனிப்பு செய்தது .This wasn’t reported .

  மாசுக்கட்டு வாரியம் , ஸ்டெர்லைட் கொடுத்ததைத்தான்
  ரிப்போர்ட் என்கிறது .
  NEERI சொல்வதை அவர் நம்பவில்லை என தெரிகின்றது .
  கோர்ட்டில் நீதி கிடைக்காது என்று தன் அனுபவத்தையும் சொல்கிறார் .

  பேட்டியின் போது பாண்டேவிடம் அவரே சொல்கிறார் –
  “நீங்கள் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக பேசுகிறீர்கள் .
  என்னால் உங்களை ‘கன்வின்ஸ் ‘ பண்ண முடியாது .”

  வை கோ ஒரு வக்கீல் , ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தவர் .

 12. புதியவன் சொல்கிறார்:

  இங்க பின்னூட்டத்துல யாரும், வை.கோ பேட்டியைக் கேட்டு அதற்கான விமரிசனம் செய்ததுபோல் தெரியலையே.

  வைகோ வெறும் அரசியல்வாதி. அவர் போராடுகிறார் என்றால், திமுகவைப் போல், ஏதாவது வேறு காரணம்தான் இருக்கும். (தனக்கு வரவு இல்லை என்பதாலும் இருக்கலாம்). சல்பர் டை ஆக்சைடினால் நுரையீரல் புற்றுநோய் மக்களுக்கு வந்துவிடுமே என்று கவலைப்படுபவர், ஏன் சிகரெட்டை மக்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்? வைகோ முதல்வராகணும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் நினைத்தது என்று சொல்லும் இவர், பிரபாகரன், இப்படிச் சொன்னதனாலேயே, ஆபத்தை (அதாவது ஸ்டாலினுக்கு ஆபத்து என்று) புரிந்துகொண்டு கருணாநிதி திமுகவை விட்டே துரத்திவிட்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறாரா?

  ஸ்டெர்லைட் மட்டுமல்ல, எல்லாத் தொழிற்சாலைகளும் (கொஞ்சம்கூட விலக்கு கிடையாது) சட்டத்துக்குப் புறம்பானவையாகத்தான் இருக்கின்றன. வைகோ, 10 கிலோமீட்டர் என்றெல்லாம் கணக்கு சொல்கிறாரே.. இதுபோல கடைபிடிக்கமுடியாத சட்டங்கள்தான் அனேகமா எல்லாத் தொழிற்சாலைகளுக்கும் இருக்கு. எல்லோரும் அதை மீறத்தான் செய்கிறார்கள். உதாரணமா (தொழிற்சாலைகள் பெயரைச் சொல்லி வம்பை விலைக்கு வாங்கப் போவதில்லை), சென்னை சில்க்ஸ், 4 மாடிக்கு மேல் கட்டக்கூடாது. ஆனால் அவர்கள் 6+ மாடி கட்டியிருந்தார்கள். இது எப்படி ஒரு அரசுத் துறைக்கும், கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்பிக்களுக்கும் தெரியாமல்போய்விட்டது? இன்றைக்கும் ஒவ்வொரு திநகர் வளாகங்களும் சட்டத்தை மீறியே கட்டப்பட்டுள்ளன. சட்டம் வேறு Practical வேறு. எந்தச் சட்டம், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், ஆற்றில் மாசைக் கலக்கவேண்டும் என்று சொல்கிறது? ஆனால் இது தொடர்ந்து நடக்கிறது. அதைக் கண்காணிப்பவர்கள் எப்படி பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

  250 மீட்டர் width என்று சட்டம் பேசும் வைகோ, ஒரு எம்.பி. தேர்தலுக்கு எம்.எல்.ஏ தேர்தலுக்கு என்ன செலவழிக்கலாம் என்று சட்டம் சொல்வதை அறிவாரா அதை எப்போதாவது ஃபாலோ செய்திருக்கிறாரா? பாண்டே சொல்லும் அரசு நிறுவனங்கள் வெளியேற்றும் சல்பர், ஸ்டெர்லைட்டைவிட அதிகம் என்று சொல்லும்போது, வைகோ முகம் வெளிறுவதைத்தான் நான் பார்க்கிறேன். அவர் ‘கான்சரை’ப் பற்றி கவலைப்படவில்லை. அரசே சிகரெட்டால்தான் கான்சர் போன்ற வியாதிகள் பெருகுகின்றன என்று சொல்லியும், ‘காசு வருகிறது’ என்பதற்காக அந்த வியாபாரத்தைச் செய்பவர்தானே இந்த வைகோ, துரைமுருகன் போன்ற பலப் பல அரசியல்வியாதிகள்.

  ‘எரித்தது போலீஸ்காரன்’ என்று வைகோ சொல்லும்போது, அவர் ஒரு அருவருப்பான அரசியல்வாதி என்று தனக்குத் தானே விளம்பரம் தேடிக்கொள்கிறார். பாண்டே has done a wonderful job as usual. வைகோ நிலைப்பாடு தவறு என்று சரியாகப் புரிய வைக்கிறார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி புதியவன்,

   Actually, நான் இந்த மாதிரி பின்னூட்டங்களைத் தான் எதிர்பார்த்தேன். அதற்காகத்தான் அந்த பேட்டியை இங்கு பதிவும் செய்தேன்…
   வைகோ-பாண்டே இடையிலான அந்த பேட்டியில், சொல்லாமலே பல விஷயங்கள் வெளிவந்திருக்க்கின்றன…
   நீங்கள் சொல்லும் சிலவும் அவற்றில் அடங்கும்….

   இன்னமும் கூட சில சங்கதிகள் உண்டு. வழக்கம் போல் இல்லாமல், முதல் தடவையாக “சகோதரி” அடைமொழி போடாமல் ஸ்டிரெயிட்டாக “ஜெயலலிதா” என்று வைகோ கூறுவதை கவனித்தீர்களா ?

   காலமும், சேரும் இடமும் மனிதர்களை எப்படி மாற்றி விடுகின்றன பாருங்கள்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 13. jksm raja சொல்கிறார்:

  நண்பர் புதியவன்
  நீங்கள் வைகோ மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றும் நச்சு புகையை மற்றவையுடன் ஒப்பிட்டு அது ஒன்றும் அபாயகரமானது இல்லை என்று வாதாடுகிறீர்கள்.
  நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் வைகோ சைண்டிஸ்ட்டோ அல்லது டெக்கனிக்கல் எஸ்பிஎர்டோ அல்ல .அவர் ஒரு வைக்கில் .
  அவருக்கு தெரிந்த அளவு விளக்குகிறார்.

  உலக அளவில் நான்கு வகையான தொழில்சாலைகள் இருக்கின்றது.
  அதில் தாமிர உருக்கு ஆலை என்பது மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கக்கூடாத சிவப்பு தொழில்சாலை.
  நீங்கள் குறிப்பிட்ட அனைத்திலும் தகுந்த தொழில் நுட்பத்தில் அதன் மாசுபடுத்தும் தன்மையை குறைக்க முடியும் .
  ஆனால் தாமிர உருக்கு ஆலையில் அது முடியாது .
  ரஜினியும் பி ஜே பியும் அ தி மு க உம் தி மு க உம் காங்கிரஸும் பணம் வாங்கிக்கொண்டு அது மாசு ஏற்படுத்தாது என்று சொல்லிவிட்டால் அது மாசு படுத்தாதா
  அதன் பாதிப்பை உணர்த்தவர்களால்தான் அதை புரிய முடியும் .
  ஏன் சார் இந்த உருக்கு ஆலையை ஆறு மாநிலங்களில் விரட்டி அடித்தார்கள் .
  கொஞ்சம் விளக்குங்களேன்

  நான் வைகோ வின் அரசியல் நிலை பாட்டில் ஒருபோதும் ஒத்து போனவன் இல்லை .
  ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒத்து போகிறேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   இங்கு ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்தி விட விரும்புகிறேன்….

   வைகோ அவர்களின் மீது எனக்கும் நிறைய விமரிசனங்கள் உண்டு.

   ஆனாலும், ஸ்டெரிலைட் ஆலையால் மக்களுக்கு பல விதங்களிலும் கேடு ஏற்பட்டது உண்மை.
   மற்ற ஆலைகளாலும் பாதிப்பு உண்டு என்பது இது செயல்பட ஒரு காரணம் ஆகி விட முடியாது.

   எந்த காரணத்தை முன்னிட்டும், ஸ்டெரிலைட் ஆலை இனி செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது
   என்கிற நிலையை 100 சதவீதம் நான் ஏற்கிறேன்….

   அதே போல், ஸ்டெரிலைட் நிர்வாகம் கடந்த காலங்களில், பணபலம் கொண்டு அத்தனை
   அரசியல்வாதிகளையும், கட்சிகளையும் அமைதியாக்கி வைத்திருந்தது.

   எதிர்காலத்திலும் அதே நிலை உருவாகக்கூடும்…இந்த விஷயத்தில் எந்த அரசியல்வாதியின் மீதும்,
   எந்த கட்சியின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மக்கள் தொடர்ந்து விழிப்புடன் தான்
   இருக்க வேண்டும்.

  • புதியவன் சொல்கிறார்:

   ராஜா – //ஆனால் தாமிர உருக்கு ஆலையில் அது முடியாது .// – இங்கு நான் ஸ்டெர்லைட் ஆலையை ஆதரித்துப்பேசவில்லை. ஆனால் வைகோ அவர்கள் இதைப் பெரிய விஷயமாகச் சொல்வது எனக்கு ஏற்புடையது அல்ல. ‘காசு கொடுத்தால் வேறு மாதிரி, காசு கிட்டலைனா நெகடிவ் மட்டும் பேசுவது’ என்ற ஸ்டாண்ட் எடுக்க நான் அரசியல்வாதி இல்லையே. அவருக்குத்தான் பாவம், ஸ்டாலினை முதலமைச்சராக ஆக்கியே தீர்வது என்ற தீர்மானம் எடுக்கவேண்டிய சூழ்நிலையைக் காலம் கொடுத்துள்ளது.

   ஸ்டெர்லைட் ஆலை எப்படி தமிழகத்தில் நுழைந்தது, எப்படி கேரள மருத்துவக் கழிவுகள் செக்போஸ்டைத் தாண்டி தமிழகத்தில், குறிப்பாக கோவைப் பகுதியில் கொட்டப்பட்கிறது? அனுமதி கொடுக்கவில்லையென்றால் ஏன் அந்தக் குழுமம் இவ்வளவு கோடிகளை முதலீடு செய்யப்போகிறது? அதற்கு யார் நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறார்கள்? ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுடன், அவர்கள் கொடுத்த டொனேஷன் வாங்கிய கட்சிகளை முற்றிலுமாகத் தடை செய்யவேண்டாமா? அனுமதி கொடுத்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டாமா?

   சாயப்பட்டறைகளும் எந்த வித சட்டங்களையும் மதிப்பதில்லை. இதற்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. லாபம் குறையும். இதைத்தான் பல கெமிக்கல் தொழிற்சாலைகள் செய்கின்றன. இந்த சப்ஜெக்டை இதற்குமேல் தொடவில்லை. சிமிண்ட் தொழிற்சாலைகளினால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படவில்லையா? கெமிக்கல் தொழிற்சாலையினால் நிலத்தடிநீர் மாசுபடவில்லையா? அனல் மின்சாரத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லையா? கோவை/திருப்பூரில் நீர்நிலைகள் பாழ்பட்டதற்கு தொழிற்சாலைகள் காரணமில்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.