டெல்லி அரசின் வரவேற்கத்தக்க ஒரு சட்டம்…திரு.அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு,
ஒரு உத்தேச வரைவு திட்டத்தை வெளியிட்டிருக்கிறது.
அதை சட்டமாக நிறைவேற்றும் முன் பொதுமக்களிடமிருந்து கருத்து, ஆலோசனைகளை வரவேற்றுள்ளது..

நோய்வாய்ப்பட்ட பொதுமக்களின், பலவீனத்தை பயன்படுத்திகொண்டு,
கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் மருத்துவ மனைகளின்
கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இதில் நிறைய
வழிவகைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமான பல மருந்துகளின் விலையை மத்திய அரசு நிர்ணயித்து,
ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளது — National List of Essential
Medicines, the prices of which are capped by the Union government
under Drug Price Control Order (DPCO).

ஆனால், மத்திய அரசால் விலை கட்டுப்பாடு செய்யப்படாத
மருத்துகளையே, (அதாவது, இந்த பட்டியலுக்குள் வராத மருந்துகளையே),

அதுவும் தங்கள் மருத்துவமனையின் மருந்துக்கடையிலேயே
வாங்கிப்பயன்படுத்த வேண்டும் என்று, நோயாளிகளை வற்புறுத்தும்
தனியார் மருத்துவமனைகள்,

அந்த மருந்துகளை பன்னிரெண்டு மடங்குக்கும் மேலாக
உயர்த்தி விற்பது குறித்த செய்திகள் வெளியாகி அண்மையில் பெரிய
கொந்தளிப்பை ஏற்படுத்தியது…

இதைக் கட்டுப்படுத்த உத்தேச சட்டத்தில் – மருந்துகளை
மருத்துவமனைகள், தாங்கள் வாங்கிய விலையை விட, 50 % -க்கு மேல்
அதிகமாக விலை வைத்து விற்கக்கூடாது என்று விதிகள்
உருவாக்கப்படுகின்றன…. ( அதுவே 50 % லாபம்…!!! )

மேலும், தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் பலவித
பரிசோதனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து ஆராய்ந்து
முடிவெடுக்க, ஒரு குழுவும் அமைக்க இந்த வரைவு நகலில்
வழிவகை செய்யப்படுகிறது.

எந்த ஒரு மருத்துவமனையும், எந்த நிலையில் கொண்டு வரப்படும்
நோயாளிகளையும், எந்தவித காரணத்திற்காகவும், அனுமதி
மறுக்கக்கூடாது என்றும் –

அப்படி கொண்டு வரப்படும் நோயாளி, 6 மணி நேரத்திற்குள் இறக்க
நேரிட்டால், வழக்கமான கட்டணத்தில் பாதி தான் வசூலிக்கப்பட
வேண்டுமென்றும்,

24 மணி நேரத்துக்குள் இறக்க நேரிட்டால், பில்’லில் 20 % தள்ளுபடி
அளிக்கப்பட வேண்டுமென்றும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் ‘பில்’ செட்டில் செய்யப்படவில்லை என்று
காரணம் காட்டி, இறந்துபோன எவருடைய உடலையும் கொடுக்க
மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது… என்பது இன்னொரு
முக்கியமான விதி.

-இப்படி, இன்னும் மக்கள் நலன்களை பாதுகாக்ககூடிய,
ஒரு நல்ல நகல் மசோதாவை டெல்லி அரசு வெளியிட்டிருக்கிறது.

வழக்கமாக, அர்விந்த் கெஜ்ரிவாலின் டெல்லி அரசுக்கும், மத்திய
அரசுக்கும் இடையில் நிலவி வரும் அரசியல் பிரச்சினைகள் எதுவும்
இதில் குறுக்கிடாமல், இந்த சட்டம், விரைவில் நிறைவேற டெல்லி
லெப்டினன்ட் கவர்னரும், மத்திய அரசும் – தடங்கல் எதையும்
ஏற்படுத்தாமல் ஒப்புதல் கொடுக்க வேண்டும்….

பின்னர், இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களும் இது போன்ற
சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்….

நடக்குமா…?

———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to டெல்லி அரசின் வரவேற்கத்தக்க ஒரு சட்டம்…

 1. புதியவன் சொல்கிறார்:

  அரசு என்பது இரண்டு முக்கியமான வேலைகளைச் செய்யணும். 1. மருத்துவக் கட்டணங்களைக் குறைப்பது (கொள்ளைகளைக் குறைப்பது. அதிலும் மருந்துகளின் கொள்ளைக் கட்டணத்தைக் குறைப்பது) 2. அனைவரும் கல்வி வசதி பெறச் செய்வது.

  இந்த இரண்டைச் செய்யாமல் எதைச் செய்தாலும் அதனால் மக்களுக்குப் பயன் இல்லை.

  கேஜ்ரிவால் செய்ய முனைந்திருப்பது மிகுந்த நல்ல செயல். குறைகள் இருந்தாலும், இதுவே மிகப்பெரிய ஸ்டெப். இது நிறைவேறவேண்டும்.

  பகிர்ந்த காமை சாருக்கு நன்றி. கேஜ்ரிவாலுக்குப் பாராட்டுகள்.

 2. Selvarajan சொல்கிறார்:

  நல்ல முடிவு நடை முறைக்கு வந்தால் …. வரனும் ..பகவான் கண் திறக்கனும் …! இதை சார்ந்த ஒரு சிறு செய்தி தங்களின் பார்வைக்கு … எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதறகு உதாரணம்

  // மருந்துகள் மற்றும் உபகரணங்கள் விற்பனை : 1737 % லாபம் ஈட்டும் மருத்துவமனைகள் //….. https://patrikai.com/private-hospitals-margin-is-1737-medicine-and-equipment-sales/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   மெனக்கெட்டு, பத்திரிகை தளத்திலிருந்து ஒரு பழைய செய்தியை தேடியெடுத்து நினைவுபடுத்தி இருக்கிறீர்களே… நானென்ன பாவம் செய்தேன்…

   நான் ஏற்கெனவே இந்த தளத்தில் எழுதிய கீழ்க்கண்ட இரண்டு இடுகைகளும் எப்படி உங்கள் நினைவிற்கு வராமல் போய் விட்டது…. 🙂 🙂 🙂

   1737 % லாபம் … கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிப்பு கம்பெனிகளும்…

   (பகுதி-2) – 1737 % கொள்ளை – செயல்பட்டதால் தூக்கியெறியப்பட்ட அதிகாரி …

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! நம் தளத்தில் வந்தது எனக்கு மறக்கவில்லை …அதை மீண்டும் நினைவு படுத்தினால் விரிவான பதிவுகள் அது பற்றியும் தெரியும் ..இருந்தாலும்…..ஒரு சிறு செய்தி என்று இதை குறிப்பிட்டதுக்கு காரணம். மேலாேட்டமாகவாவது படிப்பார்கள் என்கிற ஒரு ஆசை தான் ….! பழைய செய்தியாக இருந்தாலும் காெஞ்சமாவது விளக்கம் இருக்கிறதல்லவா … ” பெருச்சாளி கவர்னர ” மற்றும் எடியூரப்பா பற்றி இடுகைகள் நினைவு படுத்தியவனே அடியேன் தான் … தங்களுக்கு நன்றாக தெரியும்…!

   • Raghavendra சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    சில சமயம் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க;
    யாரை எங்கே வைப்பது என்று
    உங்களுக்கு தெரியல்லே
    அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
    பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

   • Selvarajan சொல்கிறார்:

    அய்யா…..! முட்டை இடக்கூட ஓசியில் இடம் தேடுகின்ற பறவையையே நீங்கள் நம்பு வேண்டும் என்று ஒன்று அயைாய் அலைகிறது .. பார்த்து ஏதாவது செய்யுங்கள் …!

 3. BVS சொல்கிறார்:

  சபாஷ் ராகவேந்திரா

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  விவாதங்களூடே, சிற்சில சமயங்களில்….. சண்டை, சச்சரவுகள் கூட சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன – எல்லை மீறாத வரையில்…!

  ஒரு விதத்தில், இவை எனக்கும் கூட என் பலம், பலவீனம் – இரண்டையும்
  உணர்த்துவதாகவும் அமைகின்றன.

  இருந்தாலும் ……….நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.


  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.