உலகம் பூராவும் trend ஆகிய டச்சு பிரதமரின் செயல்….!!!


நேற்றைய வாஷிங்டன் போஸ்ட் தளம் இந்த செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டது தான் தாமதம், உலகம் பூராவும் பரவி, புகழ்பெற்று விட்டது இந்த ஒண்ணேகால் நிமிட வீடியோ…

நெதர்லாந்து மிகச்சிறிய தேசமாக இருந்தாலும் கூட, (1.7 கோடி மக்கள் தொகை ) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு.

பொதுவாகவே நெதர்லாந்து மக்கள் எளிமையானவர்கள்…

எப்போதும் தங்களைச் சுற்றி காமிராக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்த இதன் அரசியல் தலைவர்களோ இன்னமும் படு
ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.

நேற்றைய தினம், டச்சு பிரதமர் Mark Rutte, அரசு அலுவலக வளாகத்தினுள்ளேயே – ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கிறார்…

கையில் ஒரு காப்பி கப்புடன், உடனிருப்பவருடன் பேசிக்கொண்டே – இயல்பாக நடந்து சென்று கொண்டிருப்பவரின் கை எதன் மேலோ பட்டு இடறி, காப்பி கப் கீழே விழுந்து, காப்பி தரையில் கொட்டி விடுகிறது.

பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்களே வீடியோவில் பார்ப்பது தான் சுவாரஸ்யம் –

.
———————————————————–

இந்த பிரதமரை பொருத்த வரை இப்படி பப்ளிசிடி கிடைப்பது இது
முதல் தடவையல்ல… கடந்த அக்டோபர் 2017-ல், இவர் நெதர்லாந்தின்
அரசரை சந்திக்க, அவரது இருப்பிடத்திற்கு சென்றார் –
சைக்கிளை ஓட்டிக்கொண்டு…..!!!

அரண்மனை வாயிலில் சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு இவர்
சென்றதும், அது பெரிய அளவில் செய்தியாகி விட்டது….

———————————————————————————

பின் குறிப்பு –

இந்த செய்திகளுடன், நான் நமது பிரதமரையும்
இணைத்து-ஒப்பிட்டு, எதாவது எழுதுவேன் என்று
யாராவது நினைத்திருந்தால் –
அவர்களுக்கு ஒரு Big Sorry…. 🙂 🙂 🙂

இவர்கள் இருவரும் ஒப்பீடு செய்யப்படக்கூடியவர்கள் அல்ல.
தனித்தனி ரகம்….

நமது பிரதமரின் வழி – தனி வழி….!!!
அவர் பக்கத்தில் வேறு யாரும் நெருங்கக்கூட முடியாது ……!!!

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to உலகம் பூராவும் trend ஆகிய டச்சு பிரதமரின் செயல்….!!!

 1. Pingback: உலகம் பூராவும் trend ஆகிய டச்சு பிரதமரின் செயல்….!!! – TamilBlogs

 2. அறிவழகு சொல்கிறார்:

  ///நமது பிரதமரின் வழி – தனி வழி….!!!
  அவர் பக்கத்தில் வேறு யாரும் நெருங்கக்கூட முடியாது ……!!!///

  எதில்…?

  இயல்புக்கும் உண்மைக்கும் நேர் எதிராக இருப்பதிலா…?

  அதாவது, டச்சு பிரதமர் போல் இயல்பாக இல்லாமல் நடிப்பதில் தனி ரகம்…!

 3. தமிழன் சொல்கிறார்:

  மக்களைப் பொறுத்துதான் தலைவர்கள் வர இயலும்.

  50-60களில் பெரும்பாலான இந்தியர்கள் நல்லவர்களாகவும் நல்ல நோக்கம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அதற்கு ஏற்றமாதிரி தலைவர்கள் கிடைத்தனர். எப்போது கக்கன், ஜீவா, காமராசர் போன்றோரின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லையோ அப்போது அவர்களுக்கு கருணாநிதிதான் கிடைப்பார்.

  தமிழர்களும், பந்தா செய்யாத அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. அதனால் அரசியல்வாதிகள் ‘எதிக்ஸ்’ அல்லது ‘முன்மாதிரி’ பற்றிக் கவலைப்படுவதில்லை. பிரச்சனையின் வேர், மக்கள்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   தமிழன்,

   இதில் இரண்டு வகை உண்டு.

   மக்களுக்கேற்ற தலைவர்…. இவர், மக்களிலிருந்தே, மக்களாலேயே உருவாகிறார். எனவே, பெருவாரியான மக்களை பிரதிபலிப்பவராகவே இவர் இருப்பார்…

   இப்போதைய நம் தலைவர்களைப் போல…. 🙂 🙂 🙂

   இன்னொரு வகையும் உண்டு.

   “யதா ராஜா – ததா ப்ரஜா ” – மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி. என் 40 ஆண்டுக்கால அரசு எந்திரப் பணியில் பெற்ற அனுபவம் எனக்கு சொல்லித்தந்த பாடம்….”தலை” சரியாக இருந்தால்.. எல்லாமும் சரியாகி விடும்.
   அனைவரும் அதே வழிக்கு திரும்பி விடுவர்.

   ஒரு நல்ல தலைவன் கிடைத்தால் – நிலைமை சரியாகலாம்… எங்கேயிருந்து கிடைப்பான் ஒரு நல்ல தலைவன்…? அதுவும் நமக்கு… 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. அறிவழகு சொல்கிறார்:

  வேடதாரிகளை விரும்பாத மக்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

  அவர்களுக்கான தலைவன் இன்று இல்லாதிருக்கலாம். அவர்களில் இருந்தே நாளை ஒருவன் வருவான்.

  நம்பிக்கை தான் வாழ்க்கை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.