எருமை மாட்டின் மீது எண்ணை மழை …


பதற்றத்துடனும், கவலையுடனும் அணுக வேண்டிய ஒரு விஷயத்தை,
எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்ததைப் போல், எந்தவித
பாதிப்போ, குற்ற உணர்வோ இன்றி, சர்வ சகஜமாக நேற்று ஒரு
செய்திக்குறிப்பு தமிழக அரசால்வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 சிறு, குறு தொழில்
நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும்,

இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை
இழந்துள்ளதாகவும் …

தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் நேற்று அந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புள்ளி விவரங்களின்படி –

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, மின் பொருட்கள், தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களும், பெரிய தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள் 40 % ஏற்றுமதி செய்கின்றன.

கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.
இதில், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பெரும்பாலான உற்பத்தி
பொருட்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

இரட்டை சுனாமிகளாக – 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு
உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை
செல்லாது என அறிவித்ததும்,

அடுத்த ஆண்டே கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டியும் தான் பல சிறு குறு தொழில் நிறுவனங்களும் பலத்த அடிவாங்க காரணமாக அமைந்தது என்பதே உண்மை….

சம்பந்தப்பட்ட கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினரும் இதையே உறுதிப்படுத்துகின்றனர்…..

செயல்பட்டு வந்த சிறு, குறு, தொழில்களின் வீழ்ச்சிக்கும்,
வேலையிழப்பிற்கும் 100 சதவீத காரணம் மத்திய அரசு தான்… அது கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொள்கைகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.

இருந்தாலும், செயலிழந்து மூடப்பட வேண்டிய நிலைக்கு வந்த அந்த சிறு தொழில் முனைவர்கள் மற்றும் அதனால் வேலையிழக்க நேர்ந்த சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் என்று குறைந்த பட்சம்
20 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தியை –

எப்படி எந்தவித பதற்றமோ, குற்ற உணர்வோ,
கவலையோ இன்றி,
தமிழக அரசால் வெளியிட முடிகிறது…?

இதற்கான மாற்று வழிகளை – மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை திரும்ப இயக்கச்செய்ய விசேஷ உதவிகளைச் செய்வது மாநில மற்றும் மத்திய அரசுகளின் பொறுப்பு இல்லையா….?

தமிழகம் என்கிற ஒரே ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு பெரிய இழப்புகள் என்றால்,

அகில இந்திய அளவில், அனைத்து மாநிலங்களையும் சேர்த்து பார்த்தால்
இன்னும் எவ்வளவு பெரிய வீழ்ச்சிகள் ஏற்பட்டிருக்கும்…. எப்பேற்பட்ட
பாதிப்புகள் நேர்ந்திருக்கும்… எவ்வளவு லட்சம் பேர் வேலையை இழந்திருப்பார்கள்….?

தகவல்கள் வெளியே வராதபடி
பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்
போலும்….!!!

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எருமை மாட்டின் மீது எண்ணை மழை …

 1. Pingback: எருமை மாட்டின் மீது எண்ணை மழை … – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  நேற்று இந்தச் செய்தியைப் படித்தேன். ‘காலா’ படச் செய்திகளின் ஊடே, சிறிய இடமும் இந்தச் செய்திக்கு இருந்தது. 5 லட்சம் பேர் வேலை இழப்பு. இவங்கள்லாம், மத்திய தர அல்லது அதற்குச் சற்றுக் கீழானவர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். சர்வ சாதாரணமா, 20 லட்சம் வயிறுகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவங்க சொல்றதே இவ்வளவுனா, உண்மை நிலவரம் இதற்கு மேலாக இருக்கும்.

  எங்கே போகிறோம் நாம்? இதன் இம்பாக்ட் மிக மோசமானதாக இருக்கும். ஸ்டெர்லைட் (உதாரணத்துக்கு) மூடப்பட்டால் 3000 மத்திய, மேல் மத்திய தர மக்கள், சில பணக்காரர்கள் பாதிக்கப்படுவர் (மொத்தமா 2000 பேர் இருக்கலாம்). அதில் பெரும்பாலானவர்கள் வேறு வேலை கிடைத்துத் தப்பித்துக்கொள்வர். சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டால், சமூகமே பாதிக்கப்படுவது போன்றது.

  நீங்களாவது இதனைப் பற்றி ஒரு இடுகை போட்டிருக்கிறீர்களே.

  ஆனாலும் இதற்கு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்பது முக்கியக் காரணமாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு வேறு முக்கியக் காரணங்கள் இருக்கக்கூடும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இதைவிட முக்கிய வேலைகள் இருக்கும் என நான் நம்பவில்லை. இதன் காரணத்தை அறிந்து வேலைவாய்ப்புக்கு வழிசெய்யவேண்டும். முக்கியமா, அரசுப் பணிச்சுமையைக் குறைத்து முடிந்த அளவு தனியார் மயமாக்கி அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

 3. Alathur Giri சொல்கிறார்:

  அவர்களுக்கு சம்பாதிக்கவே நேரம் இல்லை,இருக்கும் ஒரு ஆண்டில் சம்பாதித்தால்தான் உண்டு,அப்புறம் வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாதே.தமிழகம் எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன .

 4. Raman A V சொல்கிறார்:

  Country like India the economy is close to 50% on unorganized sector (tamil – marabu sara poruladharam) and these two Tsunami’s really hampered the common man, especially in the poverty or just above poverty line. Really worrying were we are leading to.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.