” மதன சுந்தரி ” கதை….!!!


வெகு சுவாரஸ்யமான, சிந்தையைக் கிளறும் ஒரு விக்ரம்-வேதா
கதை….

துர்க்காபுரி என்று ஒரு நாடு. துர்க்காபுரியில் துர்க்கை அம்மனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்த அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

இவ்வாறு இருக்கையில், துர்க்கை அம்மனுக்கு நடக்கும் திருவிழாவில்,
சுந்தரத்தேவன் என்ற ஒரு இளைஞன் மதனசுந்தரி என்ற பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மயங்கிவிடுகிறான். அவளை மணந்தே ஆகவேண்டும் என்ற ஆசைப்படுகிறான்.

அவளைத் திருமணம் செய்யத் தனக்கு அருள் புரிந்தால், திருமணமான சில காலம் கழித்து, தன் தலையை காணிக்கையாகத் தருவதாக துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொள்கிறான்.

பிறகு, அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, அவள் தகப்பனாரிடம் சென்று அவளைத் தனக்கு மணம் செய்துகொடுக்குமாறு கேட்கிறான். சுந்தரத்தேவனைப் பற்றி விசாரித்து, அவன் தன் மகளுக்குத் தகுதியானவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் மதனசுந்தரியின் தகப்பனும் அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கிறார்.

மதனசுந்தரியைத் திருமணம் செய்துகொண்ட சுந்தரத்தேவன் சில காலம் மாமனார் வீட்டிலேயே மகிழ்ச்சியாக காலத்தைக் கழிக்கிறான்.
பிறகு, அம்மனிடம் தான் வேண்டிக்கொண்டது நினைவிற்கு வந்துவிடவே,

மாமனாரின் அனுமதி பெற்று மதனசுந்தரியோடு தன் ஊருக்குத் திரும்புகிறான். அவர்களுக்குத் துணையாக மதனசுந்தரியின் அண்ணன் தாருகனும் உடன் வருகிறான்.

ஊருக்குத் திரும்பியவுடன், சுந்தரத்தேவன், நேராக கோயிலுக்குச்
சென்று, மதனசுந்தரியையும் தாருகனையும் வெளியே நிற்கவைத்து
விட்டு, கோயிலுக்குள் சென்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டபடி, தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுவிடுகிறான்.

சுந்தரத்தேவன் கோயிலுக்குள் சென்று வெகுநேரமாகியும் திரும்பாததால்,
தாருகன் கோயிலுக்குள் செல்கிறான். அங்கே, தலை அறுந்துகிடக்கும்
சுந்தரத்தேவனைக் கண்டு, தன் தங்கையின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று பெரும் துக்கம் கொண்டு, அவனும் தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுபோகிறான்.

இருவருமே திரும்பிவராமல் போகவே மதனசுந்தரியும் கோயிலுக்கும் செல்கிறாள். இருவரும் இறந்துகிடப்பதைக் காண்கிறாள். இனி தான்
உயிர்வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணி அவளும் தன் தலையை
அறுத்துக்கொள்ளத் துணிகிறாள்.

அப்போது, அவள் மீது இரக்கப்பட்டு, துர்க்கை அம்மன் தோன்றி, அவளை
ஆசீர்வதித்து, ஒரு தீர்த்தத்தைக் கொடுத்து, இதை இறந்துகிடப்பவரின் உடலிலும் கழுத்திலும் தடவி பொருத்தினால் உயிர்பெற்று எழுவார்கள் என்று அருளி மறைகிறாள்.

மதனசுந்தரியும் இரண்டு உடல்களின் கழுத்திலும் உடலிலும் அம்மன் கொடுத்த தீர்த்தத்தைத் தடவி ஒட்டவைக்கிறாள்.

ஆனால் பாருங்கள், மகிழ்ச்சிப் பரவசத்தில் தலைகால் புரியாமல், சுந்தரத்தேவனின் உடலில் தன் அண்ணன் தாருகன் தலையையும், தாருகன் உடலில் கணவன் சுந்தரத்தேவனின் தலையையும் பொருத்தி விடுகிறாள்.

சுந்தரத்தேவன் உடலில் தாருகன் தலையும், தாருகன் உடலில் சுந்தரத்தேவன் தலையுமாக இருவரும் உயிர்பெற்று எழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது,

“கல்வி கேள்விகளிலும்,
ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும்,
வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவனாகிய மன்னா,
இவர்கள் இருவரில்
மதனசுந்தரிக்கு கணவன் யார்? தமையன் யார்?”

வழக்கம்போல, விக்கிரமாதித்தன் சரியான பதிலைச் சொல்லிவிட வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது.

அப்படி விக்கிரமதித்தன் சொன்ன பதில் தானென்ன…?

————-

( இந்த வெகு சுவாரஸ்யமான கதையைச் சொன்ன “வளர்மதி”க்கு
நமது மனமார்ந்த நன்றிகள்… இந்த கதை சொல்லப்பட்ட பின்னணியை
இதில் நான் தவிர்த்து விட்டேன்… அது தனியே பேசப்பட வேண்டிய
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்….!!! வாய்ப்பு அமைந்தால் பிறகு
தனியே பேசலாம்….)

.
இந்த கேள்விக்கு சரியான விடையை (பின்னூட்டம் மூலம்)
முதலில் தெரிவிக்கும் நண்பருக்கு என் அசையா சொத்தில்
பாதியை ……. 🙂 🙂 🙂

.
( ஒருவேளை அப்படி யாரும் சொல்லவில்லையென்றால் -முடிவு
தெரியாமல் தலை வெடிக்கும் நிலையில் இருப்பவர்களின்
நிம்மதிக்காக – சில மணித்துளிகள் கழித்து, பின்னூட்டத்தில் நானே
தெரிவிக்கிறேன்…!!! )

.
—————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ” மதன சுந்தரி ” கதை….!!!

 1. Raman A V சொல்கிறார்:

  Talai than kanakku. Yenenil mugam than oruvarin adayalam. Enave kanavanin talai porundiya udalai than aval Kanavanaka kola vendum. Sorry tamil font illai.

 2. Selvarajan சொல்கிறார்:

  எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம் ….!

 3. அறிவழகு சொல்கிறார்:

  தவறை உணர்ந்த மதனசுந்தரி காளியிடம் திரும்பவும் தீர்த்தம் தரச்சொல்லி வேண்டிக்கொள்ள மனமிறங்கிய தேவியும் கொடுத்து விட இந்த முறை சரியாக பொருத்தி தன் கணவனையே அடைகிறாள்.

  மாத்தி யோசித்தேன்.

  சரியாக இருந்தால்…!

  உங்கள் சொத்துக்கள் என்ன என்று ஏற்கனவே தெரியும் என்பதால் அதை நீங்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அறிவழகு,

   //உங்கள் சொத்துக்கள் என்ன என்று ஏற்கனவே தெரியும் என்பதால் அதை நீங்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கிறேன்.//

   உங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன் அறிவழகு…. 🙂 🙂

   .
   வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. newsigaram7 சொல்கிறார்:

  சிறப்பான பதிவு. ஆனா பாருங்க, நமக்கு பதில் தெரியலை. நீங்களே சொல்லிடுங்க.

  நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் – 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

 5. Pingback: ” மதன சுந்தரி ” கதை….!!! – TamilBlogs

 6. வையாபுரி சங்கர் சொல்கிறார்:

  சுந்தரத்தேவன் தலையை உடையயவனே மதனசுந்தரியின் கணவன்

 7. Avudaiappan Appan சொல்கிறார்:

  the head is more importent ..hence it is not any problem

 8. Senthilnathan சொல்கிறார்:

  அந்த இரண்டு உருவங்களில், எவன் அவளை மனைவியாக பார்க்கிறானோ அவன் தான் அவளின் கணவன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   கிட்டத்தட்ட அத்தனை பேரும் வெவ்வேறு வார்த்தைகளில் ஒரே பதிலைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று
   நினைக்கிறேன்…!!! வாழ்த்துகள்.

   இப்போது – கதையை எழுதியவரின் வார்த்தைகளில் –

   // விக்கிரமாதித்தன் சொன்ன பதிலாவது: “அந்த இரண்டு உருவங்களில் எவன் அவளைத் தன் மனைவி என்ற நினைப்பில் பார்க்கிறானோ அவன்தான் அவளுடைய கணவன்!” //

   செந்தில்நாதன், ஒரிஜினல் கதையை படித்து விட்டீர்களென்று நினைக்கிறேன்.. சரி தானே … 🙂

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 9. Karthik சொல்கிறார்:

  Reblogged this on Cherish the Memories and commented:
  Nice story

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.